Sunday, 13 March 2016

 குடிமக்கள் காப்பியம் -03



குடியும்...நானும்...ஈழத்துக் கலைஞர்களும் ..
 ( சென்ற பதிவில் நான்  'நீயா நானா?' பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.            கோபிநாத்துக்கு மணத்து விட்டது போலும். சென்ற வாரம் (06.03.2016)                         அவரும் குடியில் கைவைத்துவிட்டார்!..ஹி..ஹி..)

                                                                                                                                                                        
அகராதியைப் புரட்டிப் பார்த்தால் அதில் 'ஈழம்' என்பதற்குக் கள் என்றொரு பொருள் இருப்பதைக்காணலாம். கள்ளைத் தரும் பனைக்கும்-யாழ்ப்பாணத் தமிழருக்கும் இடையே பல ஒற்றுமைக்கூறுகள் இருப்பதைச் சொல்லத்தான் வேண்டும். யாழ்மண்ணின்அடையாளம பனையாகத்தான் இருக்கிறது. பனையைப் போல உறுதியான, எதற்கும் வளைந்து கொடுக்காத -பிடிச்சிராவித்தனம் யாழவனின் பொதுப் பண்பு. அதனால் தானோ என்னவோ 'முறிந்த பனை'யாகிப் போனது அவன் தலையெழுத்து.
                   கேரளத்தில் தென்னைமரம் ஏறுவதைத் தொழிலாகக் கொண்டஈழவர் எனும் சாதியினர், உயர்சாதி நாயர்களால் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்து                     வந்துள்ளனர்.ஈழவர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையே உள்ள ஒற்றுமைகளையும், வரலாற்றுத்தொடர்புகளையும்பற்றி  ஒருசிலர் ஆராய்ந்துள்ளார்கள். ஆங்கிலேயரது           ஆட்சிக் காலத்தில்,கேரளத்தில் இருந்து மரமேறும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுத் தென்பகுதிக்கரையோரங்களிற் குடியமர்த்தப் பட்டதாகத் தெரிகிறது.
தமிழ் நாட்டில் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கன்னடா முதலான தென்னிந்திய
மாநிலங்களிலும் பரவலாக தென்னை, பனை மரங்களில் கள்ளுச் சீவி விற்கப்படு
கிறது. தங்களுக்குள் வேறு விடயங்களிற் பிரச்சனைப் பட்டுக் கொண்டாலும் கள்
என்றால் ஒருமித்த குரலில் 'கள்'ளென்றே நான்கு மொழியினரும்  வாய் மலர்வர்.
                     கோவாவில் கள்ளைச் ' சூர்' என்பர். யாழ்ப்பாணத்திலும் வெறி                       ஏறிவிடுவதை'நல்ல சூர்' எனக் குறிப்பிடுவதுண்டு. இந்தியாவின் அஸ்ஸாம், ஒடிஸ்ஸா,மராத்தி,மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் கள்ளுண்டு. கள்ளை அம்மாநிலங்களில்Tadi என வழங்குவர்.(ஆங்கில  அகராதிக்கு Toddy யை ஈந்தது அவர்கள்தாம்!)
              தென்னை செழிப்பாக வளரும் (கடலைச் சார்ந்த) தென்கிழக்காசிய           நாடுகளானதாய்லாந்து, மியன்மார், பிலிப்பின்ஸ், வியட்னாம், கம்போடியா,    கிழக்குத்திமோர்,பப்புவா நியூகினியா, போர்னியோ, சுமத்ரா , பாலி, இந்தோனேஷியா,              கிழக்கு  மலேஷியா,உட்பட பங்களாதேஷ்,மாலைதீவு முதலான நாடுகளிலும், ஈச்சை மரங்கள் செறிந்தஆபிரிக்க நாடுகளான கொங்கோ, நைஜீரியா,லிபியா, கென்யா,                  கானா,கம்பியா,கம்போடியா, அல்ஜீரியா, நமீபியா, ருநீஷியா, சியராலியோன், சீஷெல்ஸ், ஐவரி கோஸ்ட் ,தென்னாபிரிக்கா முதலான நாடுகளிலெல்லாம் கள்ளும் கவிபாடும். கலியாணம் முதல் கருமாதி வரையான சகல சடங்குகளிலும் கள்ளுப் பார்ட்டிதான்.
                                                     கூந்தற்பனை எனப்படுகின்ற கித்துள் மரத்துக்கள்                இலங்கையில்மலையகச் சிங்களவரிடையே  பிரபல்யம்.    கேரளாவிலும் கர்நாடகாவிலும் கூடக்கிடைக்கும். வெள்ளயப்பத்தைப் பொங்க வைப்பதற்கு yeast க்குப் பதிலாக, கேரளாவிலும்சரி ஈழத்திலும் சரி  கள்ளுத்தான் பங்களிப்புச் செய்கிறது.     மதுரை வீரன் போல சில'சாமி'களைக் காக்கா பிடிக்க 'கள்ளாபிஷேகமும்' நடப்பதுண்டு.
                                                        கள்ளு உற்பத்தியாகும் பொறிமுறை பற்றி, ' வளவு'            வலைத்தளத்தில்இராம.கி. எழுதியுள்ள தகவல் பயனுள்ளது. பாளையைக் கீறிவடியும்  பாலைச் சற்று நேரம்ஒரு ஏனத்தில் வைத்திருந்தால் காற்றில் இருக்கும் நுண்ணுயிர்கள் அதனுள்ளே புகுந்துதம் நொதிப் பொருள் (enzyme ) கொண்டு  பாற் சர்க்கரையை  மிக எளிதில்  வெறியம்(alcohol ) ஆக்கி விடும்.இப்படி அமைவதுதான் கள்.
                                                  சரியான அளவு நேரம் நொதிப்பு இருந்தால் குறைந்த               சர்க்கரையும்மிகுந்த வெறியமும் சேர்ந்த இளங் கள்ளாய் இருக்கும். இன்னும் கூட நேரம் நொதிப்புஅமையுமானால் வெறியத்தின் ஒரு பகுதி மேலும் வேதி மாற்றமடைந்து           சாலியக்காடியாக(acetic acid ) உருவாகி, மொத்தத்தில் அது கடுங் கள்ளாகும்.                  கடுந்தன்மைஉடையது காடி. தாளில் இருந்து கள் கிடைப்பதால் அது தாளி ஆயிற்று. அதுவேToddy யின் வேர்ச்சொல்.
                                               யாழ்ப்பாணத்தில் கள்ளுக் corporation கள் உருவாகக்              காரணமானவர்N M .பெரேரா. இடதுசாரிச் சிந்தனையுடைய அவரது துணிகரமான நடவடிக்கைகளால்ஏராளமான வடபகுதிச் சீவல் தொழிலாளர்கள் பயனடைந்தார்கள்.           வெள்ளாளர்களின்பிடியில்     இருந்து ஓரளவிற்கு விடுதலை பெற்றுத் தமது சொந்தக் காலில்  அவர்கள் நிற்கஅது வழி சமைத்தது.       அந்த 70களுக்கு முன்னர் சீவல் தொழிலாளிகளின்       வீடுகளில் தான் கள்ளு விற்கப்பட்டது. வீட்டின் ஒரு  பகுதி கொட்டிலாக மாறியிருக்கும்.  
                                            அவ்வாறாக அந்நாளில் யாழ்ப்பாணத் தலைநகரில் இருந்த              ஒருகொட்டில். அதில் வசிக்கும் சீவல்காரர் அப்புச்சியதும்  அவரது மனைவி      பிள்ளைகளதும்இயல்பான வாழ்வும், அங்கு குடிக்க வந்து போகும்  ஒரு சிங்கள வாடிக்கையாளரினால்ஏற்படும் சிக்கலும் பற்றிய ஒரு கதை 'ஆண்மை'.  யாழ்ப்பாணத்தில் மரத் தளபாடக்கடைவைத்திருக்கும்  அந்த சிங்கள 'பாஸ்' குடித்துவிட்டுச் செய்யும் அடாவடியும், அதனால்ஆத்திரமுறும்  அப்புச்சி ஓரடியில் அவனை அடித்துச் சாய்த்து விட்டுப் பின் மனமிளகிஅவன் மீது காட்டும் பரிவும் மனிதாபிமானமும் தாம் கதையின் முடிச்சுகள்.
எஸ்.பொ.வால் மிக நேர்த்தியாகப் பின்னப்பட்ட ஒரு கதை.
                                       தலைகீழாக நின்று தண்ணியடிச்சாலும் கூட அதுமாதிரி  ஒரு                                                 கதைய   என்னைப்போல ஒராளால எழுதீர முடியாது. அதில்                     பயிலப்பட்ட யாழ் மொழிநடை,கதையின் பகைப்புலம், அது புனையப்பட்டுள்ள இலாவகம். எல்லாமே மிக அருமை;அற்புதம்.அக்கதை என்னை மிகவும் ஈர்த்த காரணத்தால், அதை நான் நாடக வடிவமாக்கினேன். அது இலங்கை வானொலியில் 27.12.1997இல் ஒலிபரப்பானது. சிறுகதைஎழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை  எழுதிய 'ஆண்மை' சிறுகதையின் நாடக        வடிவம் எனஒலிபரப்பின் போது குறிப்பிட்ட போதிலும்,    அதற்கான முறையான அனுமதியைஅவரிடமிருந்து நாம் பெற்றிருக்கவில்லை.
                            'சானாநாடகத் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் அவரே பல
நாடகங்களை எழுதியிருந்தார். 'மட்டக்களப்பு மாப்பிள்ளை' என்ற அவரது              பிரபலமான நாடகம்  கூடஅந்நாளில்ஒலிபரப்பானது.  நான் 1972இல்கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியில் ஆசிரியனாகப் பணியாற்றிய போது அவரும் அங்கு கற்பித்துக்கொண்டிருந்தார்.
எஸ்.பொ.வின் எழுத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவனாக நான்              இருந்தபோதிலும் கூட நான் அதை அவரிடம் வெளிக்காட்டியதோ அவரது இலக்கிய வெளிப்பாடுகள் பற்றி அவருடன் உரையாடியதோ இல்லை.  எஸ்.பொ.என்றில்லை, எந்த ஒருஎழுத்தாளனுடனும் அவர்களது ஆக்கங்கள் பற்றி,  சகஜமாக நேரில் கலந்துரையாட என்னால்முடிவதில்லை.  மிகக் குறுகிய காலமே  எஸ்.பொ.வின் அண்மை எனக்குச் சித்தித்தது. ஒருசில நாட்களிலேயே 'கரிக்குலம்' எனப்பட்ட பாடவிதான சபைக்குள் அவர் ஐக்கியமாகிவிட்டார்.
                                      அவர்  வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதுபோல                அவர் குடிபயின்ற 'பார்'களில் நானும் நடமாடியுள்ளேன்  என்பதைத் தவிர  'தொட்டுக்கொள்ளஊறுகாயைப் போல தன்னும்' அவருடன் சேர்ந்து குடிக்கக் கொடுத்து  வைக்கவில்லைஎனக்கு. பல்கலை வேந்தர் சில்லயூர் செல்வராசனுக்கும் மேற்படிகூற்றுப் பொருந்தும்.
          ஊறுகாய்க்கும் சாராயத்துக்கும் என்ன combination   னோ தெரியவில்லை                          தமிழகத்தில்பெரும்பாலும்தண்ணிபோடுபவர்கள் தொட்டுக்   கொள்ள ஊறுகாயைத் தேடுகிறார்கள்.  போதாக் குறைக்குஎவர்சில்வர் டம்ளரில் வேறு குடித்துத் தொலைக்கிறார்கள்.
                           நானும் ஒருமுறை இப்படித்தான் KS .ராஜாவுடன் (ஆமாம் 'வீட்டுக்கு                   வீடுவானொலிப் பெட்டிக்கருகே ' அழைத்துக்களைத்த அதே ராஜா தான்) ஒரு     நிகழ்ச்சிக்காக கிளிநொச்சிக்கு பஸ்ஸில் பயணப்பட்ட போது வேறு வழியில்லாமல்  அவருடன்சேர்ந்து எவர்சில்வர் டம்ளரில் குடிக்க நேர்ந்தது.  ம்ஹூம்.அனுபவிக்கவே முடியவில்லை.குடியை அனுபவிக்கவும் துணைக் காரணிகள் சரியாக அமைய வேண்டும்  என்பதைஎனக்கு உணர வைத்த அனுபவம் அது.  பாவம் குடியே நம்ம ராஜாவை மண்கவ்வ
வைத்த கதை பலரும் அறிந்தததே.    ஆனால் அவரைக் குடிகாரனாக்கியத்தில் என்
பங்கு ஏதுமில்லை. அவருடன் நான் சேர்ந்து குடித்தது அந்த ஒரே ஒரு நாளில்              மட்டுமே.அப்போது கொஞ்சமும் வாய் நனைக்காத 'சுத்தமான'சூசைப்பிள்ளைகளாக 'எம்முடன்பயணித்த பாலசிங்கம் பிரபாகரனும்(ஆஸ்திரேலியா) SS .நாதனும்(SLBC ) தான் சாட்சி. 
                                                     கலைஞர்கள் என்றால் குடித்தே ஆகவேண்டும் என்பது          எழுதப்படாத  விதிபோலும். நானறிந்த நம் நாட்டுக் கலைஞர்கள் பலரும் குடியில் கலை/கரை கண்டவர்கள். ஜோர்ஜ் சந்திரசேகரனை எனது ஆரம்பகால friend -philosopher  & guide என்று குறிப்பிட்டால் அதில் பிழையில்லை. போத்தலும் கிளாசும் போல நீண்ட காலம் தொடர்ந்த நட்பு/நல்லுறவுஎங்களுடையது. இலக்கியம், சினிமா என்று இருவருக்கும் பொதுவான எத்தனையோ விஷயங்களை வாயலுக்கக் கதைத்தும்  கால்கடுக்க நின்றும் தீராமல் தொடர்ந்த நாட்கள்-ஆண்டுகள் பலப்பல. குடிமகள் சாட்சியாக எமது கூத்து இரவு 12 மணியையும் தாண்டித் தொடர்வதுசர்வசாதாரணம்.
                                                  அவரது நட்பால் நான் கற்றதும் பெற்றதும் எத்தனையோ.         ஜீ.கிருஷ்ணமூர்த்தியை எனது 25ஆவது வயதிலேயே  எனக்கு அறிய வைத்தவர் அவர்தான். நல்ல வாசகர்;நல்ல ரசிகர்; நல்ல எழுத்தாளர். அப்படிப்பட்ட ஒருவரின் நட்பும் அண்மையும் கிடைக்கக்கொடுத்து வைத்திருக்க வேண்டாமோ? குடி பற்றிய வானொலி உரைச்சித்திரம் ஒன்றுக்காகஒலிப்பதிவுக் கருவியுடன் சென்று குடிமக்களை Bar களில் நேரடியாகவே அவர்   சந்தித்து செவ்விகண்டு ஒலிபரப்பியது அந்நாளில் (90களில்)      துணிச்சலான ஒரு சாதனையே!
                               வானொலிக் கலைஞர்களாக இருந்த நம்மிற் சிலர் கூட்டுச் சேர்ந்து,                 நடிப்புக்குக் கிடைக்கும் சன்மானத் தொகையை  தண்ணியில் கரைத்து விடுவது வழக்கம். நடிப்பதில் கிடைக்கும் ஒரு ஆத்ம திருப்தியும், அதைக் கொண்டாட வேண்டும் எனும்      மனோநிலையும், சிரமப்படாமற் கிடைக்கும் மேலதிக வரும்படியும் இதற்கான                  காரணங்கள்ஆக இருக்கலாம்.
                                 முகத்தார் யேசுரட்னமும், PNR .அமிர்தவாசகமும், திருமலை                    T .மயில்வாகனமும், றோச் அருளப்புவும்  முதன்மைப் பங்காளிகள். யாழ்ப்பாண          வட்டார வழகைப் பேச்சிலும் எழுத்திலும் வாலாயப் படுத்திய யேசுரட்னமும் ஒரு                   நல்ல நாடகஎழுத்தாளர்; நடிகர். யாழ்ப்பாண  மொழிநடையைக் கையாள்வதில்                 அவரை நான்ஆதர்சமாகக் கொண்டேன் என்றும் கொள்ளலாம். ஆனாலும்            ஜோர்ஜுடன் வழிப்போனஅளவுக்கு என்னுடன் அவர் ஒட்டவில்லை. வயது          வித்தியாசம் தடையாக இருந்ததோதெரியவில்லை.
                                   தமிழக எழுத்தாளர்களின் பாதிப்புடன் எழுதிய போதிலும்,              நகைச்சுவை எழுத்தில் இலங்கை வானொலியின் ஆரம்ப காலத்தில் 60-70களில்    கொடிகட்டிப்பறந்தவர் சீ.சண்முகம். வானொலி நடிகனாக நான் வலம் வந்த காலத்தில் அவரதுஅறிமுகம் எனக்குக் கிட்டியது. அவருக்குள்ளிருந்த நல்ல மனிதரை இனங்    காட்டியதில்Double R க்கு இரட்டிப்புப் பங்குண்டு.
       'சானா' வில் இருந்து (சண்முகத்தின் மகனான) சந்திரகாந்தன் வரை பலரும்                வயது வித்தியாசமில்லாமல் மதுவின் சந்நிதியில் மனந் திறந்திருக்கிறோம்.                               கொழும்பில்எங்கள் வீட்டுக்கு முன் வீட்டிலிருந்த மாடியில்தான்                          'வரணியூரான்'     SS .கணேசபிள்ளைகுடியிருந்தார். நான் முதன் முதலாக மேடையேற்றிய 'முசுப்பாத்திதான்' நாடகத்தின்மூலம் கொழும்பு மேடையில் அறிமுகமான KS .பாலச்சந்திரன், இரண்டாவதாக நான்'சதுரங்கம்' நாடகத்தை மேடையேற்றத் தயாரான போது அதில் நடிப்பதற்காக  கணேசபிள்ளையை கூட்டி வந்து சேர்த்தார். இது 1970இல்.
                                 ஆனால் அதற்கு சில ஆண்டுகள் முன்னரே, 'சானா' வின் 'லண்டன்          கந்தையா'தொடர் நாடகத்தில் எதிர்பாராது இடைநடுவே நானும் நடிக்க நேரிட்டபோது, அதில் நடித்துக்  கொண்டிருந்த கணேசபிள்ளை அறிமுகமானார். ஆனால் அந்நாளில் அவருடனானநெருக்கம் பெரிதாக ஏற்பட்டிருக்கவில்லை.
                                               சதுரங்கம் மேடையேறிய பின்னர், லீவு நாட்களில் அவர்              தண்ணியடிக்கும்போது சில வேளைகளில்  என்னையும் company  சேர்த்துக் கொள்வார். அப்படியான ஒருசந்தர்ப்பத்தில் ஒரு நாள் அவருடன் 'சானா'வும் கூட இருந்தார்.  வயதில்கூடியவர்களுடன்  அல்லதுஎல்லாம்தெரிந்தவர்களாகத் தம்மை நினைத்துக் கொள்பவர்களுடன் சேர்ந்து குடிப்பதில்   ஒருவில்லங்கம் உண்டு. அவர்கள்கூறுவதைஎல்லாம்நாம்மறுப்பேதுமின்றிக்  கேட்டுத்                                    தொலைக்க வேண்டியிருக்கும். தோழமை இல்லாத Boozing ,  side dish இல்லாத   குடிமாதிரித்தான்                                                                                                                                                                                                                                                                              இலகுவில் யாருடனும் நெருக்கம் வைத்துக்கொள்ளாததானும்தன்பாடுமாக                         இருக்கும் ஒரு மூத்த அறிவிப்பாளர்  சரா.இம்மானுவேல். 'மணிமலர்எனும் ஒரு சிறுவர்
நிகழ்ச்சியை அவர் நடாத்திய காலத்தில் அவருடனான பழக்கம் எனக்கேற்பட்டது.
பின்னொரு நாளில் ஒரே ஒருமுறை அவர் என்னை அழைத்துச் சென்று 'குடியோம்பினார்'.
சண்முகத்தாரைப்  போல தோளிலே கைபோட்டு உறவாடாவிட்டாலும்  கூட          என்மட்டில்அவருக்கொரு  நட்புணர்வு இருந்தததை உணர முடிந்ததது.
                        ஜோக்கிம் பெனாண்டோ, உபாலி செல்வசேகரன், SS .நாதன்,           சீதாராமன்,விக்னேஸ்வரன், வாசுதேவன், ராஜகோபால் என  நடிகர்கள், அறிவிப்பாளர்களான பலரோடும் குடியிலும் நான் கூட்டுச் சேர்ந்திருக்கிறேன். நெடுகிலும் என்றில்லை.எப்போதாவதுதான்.(இதில் யாருடைய பெயராவது விடுபட்டுப் போயிருந்தால் -sorry ).
                                           ஏனோ தெரியாது காரணமில்லாமலே சிலரை நமக்குப்                  பிடிப்பதில்லை.முன் அறிமுகம் ஏதும்இல்லாமலே  KM.வாசகர்மீதுஎனக்கிருந்த மனப்பான்மையும்அப்படித்தான். 1981இல் அறிவிப்பாளனாகநான்தெரிவான போது எமக்குப் பயிற்சியாளராக வாசகர்தான் வந்தார். அப்போதுதான் அவர் பற்றிய எனது தவறான        கண்ணோட்டம் தகர்ந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்னமே அவரோடு நட்புப்             பூண்டிருக்கலாமே என்று மனம் மறுகியது. நாடகத் தயாரிப்பாளராக அவர்                        இருந்த காலத்தில்அவரோடு ஒட்டி உறவாடி ஆதாயம் பெற்றவர்கள் எல்லாரும் 'அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள் போல' அவரைக் கைவிட்டு அகன்றுவிட்ட காலமது.
                   வாசகரைப் பிரியப் படுத்துவதற்காக SS நாதனும் நானுமாக கையில்                     ஒருபோத்தலுடன் அவர் குடியிருப்புக்குப் போனோம். அவரை நானும், என்னை              அவரும்முறையாக  விளங்கிக் கோண்டது அன்றுதான்.
                                     நான் சேர்ந்து குடித்த கலைஞர்கள் வரிசையில் சுஹேர்           ஹமீட்டைச்சேர்க்காவிட்டால் பொச்சம் தீராது. 'பொம்மலாட்டம்' என்றொரு நவீன நாடகம். ஆங்கிலநாடகமொன்றின் தழுவல்தான். 'லயனல்வென்ற்அரங்கில் தற்செயலாகப்       பார்க்கக்கிடைத்தது.பிரமித்துப் போய்விட்டேன். அப்படி ஒரு நாடகத்தை அதுகாலவரை  நான்பார்த்தே இருக்கவில்லை. அதுவும் தமிழில்! நடிகவேளின் பாணியைப் பிரதி         பண்ணுபவர் என அறியப்பட்ட லடிஸ் வீரமணியின் மற்றொரு பரிமாணத்தை அன்றுதான்
பார்க்க முடிந்தது.
                                 அந்நாடகத்தின்  நெறியாளர் தான்  சுஹேர் ஹமீட். அவரது நண்பர்            பெளசுல் அமீர் எழுதி சுஹேர் நெறியாள்கை செய்த 'வாடகைக்கு அறை' நாடகத்தில்நடிக்கப் போனபோதுதான் சுஹேர் எனக்குப்  பழக்கமானார். அப்பழக்கம் நல்ல நட்பாகி, தினமும் சேர்ந்து தண்ணியடிக்கும் அளவுக்கு நெருங்கிவிட்டது.   மது அருந்துவதை இஸ்லாம் ஏற்றுக்         கொள்வதில்லை. ஆனாலும் அதுபற்றிய குற்ற உணர்வேதும் இல்லாத முஸ்லிம்அவர்.         பரஸ்பரம் நம்பிக்கையும் உரிமையும் உள்ளவர்களுடன் தான் நாம் நெருக்கமாகலாம்.  அத்தகைய வெகுசிலரில் முதன்மையானவர் சுஹேர். அவர் ஒரு நல்ல கலைஞர்  மட்டுமல்ல நல்ல மனிதரும்கூட. அவரது நட்புக் கிடைக்கப் பெற்றது எனது பாக்கியம். அவருடன் பழகிய நாட்கள் எனது நினைவுப் பேழையில் தங்கிவிட்ட அழியாச் சுவடுகள்.
                                   கொட்டாஞ்சேனை முதல் கறுவாக்காடு வரை கொச்சிக்கடை               ஆமர்வீதிமருதானை, கோட்டை, பொறளை என்று கொழும்பின் மூலை முடுக்குகளில்            இருந்தபார்கள் எல்லாமே எங்களுக்கு அத்துப்படி.  புதுப்புது joints களைக்          கண்டுபிடிப்பதும்அவ்விடத்து சாராயத்தின் தரத்தை மதிப்பிடுவதும், 'பச்சைத்தண்ணி', ' கலப்படம்','வேலையிலை' என்று நிராகரிப்பதும் பொதுவான நிகழ்வுகள். (பேசாமல்        மதுவரித்திணைக்களத்தில் வேலை கேட்டுப் பார்த்திருக்கலாம்...ஹி..ஹி..)
                                            இப்போது போல variety யாக எல்லாம் அப்போ சாராயம்                 கிடையாது.இருந்திருந்தாலும் வாங்க எமது pocket இடம்தந்திராது. கறுத்தான் என்றும்  வெட்டிரும்புஎன்றும் Double R என்றும் (Arrack கில் இரண்டு R இருப்பதால் அவ்வாறு) செல்லமாககுறிப்பிடப்படும் 'சீல்' சாராயம் தான் மலிவான ஒரே சரக்கு. கருப்பஞ்சாற்றில் இருந்துவடிக்கப்படும் 'மொலாசஸ்'ஸும் தென்னம் சாராயமும் கூடக் கிடைக்கும். தம்மை
மேட்டுக் குடிமக்கள் என எண்ணிக் கொள்பவர்களும் சாராய நாற்றம்                   பிடிக்காதவர்களும்நன்றாக  ஏறிப் பின் தடுமாறி விடுவோமோ என அஞ்சும் புதுக்குடிகாரர்களும்தான் பியரைத் தஞ்சமடைவர்.
                  என்னோடு உடன் கற்பித்த  ஒரு ஆசிரியரது வீட்டில்- நீர்கொழும்பில்        ஒருபோதுஅசல் தென்னம் வடி சாராயம்  கிடைத்தது. நிறக்கலப்பற்றுத் தண்ணீர் போலத்தெளிவாகஇருந்தாலும் 'காப்'போத்தலே கரைகாண வைத்து விட்டது. அதே போலவே செறிவு கூடியஉரும்பிராய் வடி சாராயம் பற்றியும் விதந்து கூறப்படுவதுண்டு. நான் பருகியதில்லை.ஜின்னும் கூட அப்படித்தான்.  ஆனால் காத்தடிக்கச் சும்மா கூத்துக்காட்டும்.
                                               கேகாலைக்கருகில் அம்பன்பிட்டியா என்ற இடத்தில் மிகக்           குறுகிய காலம்நான் தொழில் புரிய நேர்ந்தபோது அங்கு மூலிகையில்  இருந்து வடித்த                    சாராயம்தான்பருகக் கிடைத்தது. விக்கினமேதும் செய்யவில்லை. ஆசிரியப்பணி காரணமாக மலையக எட்டியாந்தோட்டையில் ஏழாண்டுகள் கழித்த போதிலும் அங்கு 'கித்துள்மரத்துக்கள்ளு குடிக்கக் கிடைக்கவில்லை.
                    போத்தலில் அடைக்கப்பட்ட  தென்னங்கள்ளும் உண்டு. வீரியமிழந்த            பழங்கள்ளுப்போல  அது சப்பென்றிருக்கும். ' உசார்' ஏற்றாது. கண்ணைத்தான்        அயர்த்தும்.அழுகிய அன்னாசிப்பழம் முதல்  பழைய 'பற்றரி',  சீமேந்து,கறள் பிடித்த இரும்புக்கம்பி ,பழஞ் சோறு என்று இன்னோரன்ன கழிவுப் பொருட்களில் இருந்து முறைதலையின்றித்
Related imageதயாரிக்கப்படும் உயிர்கொல்லியான 'கசிப்பு'வையும்     கூட விட்டுவைக்காமல்    'ஆத்திகேட்டு'க்கு ஊத்தித் தொலைத்ததுண்டு. தப்பினது தம்பிரான் புண்ணியம்     என இப்போநினைக்கத் தோன்றுகிறது.
                                                

                                                  

             
குடிகாரக் கூத்து விடியும்வரை.. தொடரும்...)               

No comments:

Post a Comment