Wednesday, 1 June 2016


Image result for kumari kamala images   Image result for cartoon images of studio camerasசினிமாImage result for film roll images

சினிமா பற்றிச் சொல்வதற்கு எனக்கு நிறையவே சங்கதிகள் உண்டு. எனது சிறுவயது முதற்கொண்டு அதிலிருந்த ஈர்ப்பு இன்றுவரை மாறவேயில்லை. சினிமா பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் தீவிரமாக இருந்த காலத்திலேயே அதை நேசித்தவன் நான்.
                    சினிமாவின் பல்வேறு துறைகளையும் பற்றி ஆழமாகவே அறிந்து வைத்திருப்பவனாக  இருப்பினும் கூட  அதுப்பற்றி எழுத எண்ணும்போது பெருங் கடல் போன்ற அதன் விசாலப் பரப்பில் எத்துறையில் கால் வைத்து எங்கு கரை சேர்வதெனப் புரியாது மலைப்பாக உள்ளது.
                          அலை ஓயுமட்டும் தலை முழுகாமல் காத்திருக்க இனியும் இயலாது. இறங்கத் தீர்மானித்து விட்டேன். இன்றைய தமிழ் சினிமா பற்றி ஊடகங்களில் நிறையவே சுடச்சுட வந்து கொண்டிருக்கின்றன. அவைபற்றி எழுதி அரைத்த மாவையே அரைப்பதில் எனக்கு விருப்பமும் இல்லை; தேவையும் இல்லை.
  சரி, முதலில் சின்ன விஷயத்தில் துவங்குவோம். சின்னச்  சின்ன நடை நடந்து சிங்காரமாக வசீகரித்த குட்டி நட்சத்திரங்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோமா? 'தெறி' ('2016)யின் வெற்றிக்குப் பின்னால் தெறித்துப் பறக்கும் (மீனாவின் மகளான)  பேபி நயனிகாவின் பங்களிப்பு உள்ளமை தெரிந்த விடயம். இவ்வேளையில் இந்த ஆராய்வு பொருத்தமானதே. ((14+21-டிசம்பர் -2008 தினக்குரல் வாரமஞ்சரியில் வெளியான எனது கட்டுரையின் மீள் பதிவுடன் சில பிற்சேர்க்கைகளும்..)

தமிழ்த் திரையுலக மாஸ்டர்களும் பேபிகளும்

                                      
Image result for early  period tamil child artists  photos
Image result for baby sridevi photos பேசும்படங்கள்அறிமுகம்ஆகுமுன்னர்   இரசிகப் பெருமக்களின்   கலாரசனைக்குத் தீனி போட்டவை நாடகங்களும் தெருக்கூத்துகளுமே. அவற்றில் நடிக்கும் நடிகர்களைப் பயிற்றித் தயார்ப் படுத்தும் களமாக நாடக சபாக்கள் பலவும் இயங்கி வந்தன. குறிப்பாக பால வயதுச் சிறுவர்களைப்  பயிற்றவென பாலகான நாடக சபாக்கள் பல தமிழகத்தின் மதுரை, திருச்சி, சென்னை போன்ற பிரதான நகரங்களில் உருவாக்கப் பட்டிருந்தன.                                                                 அத்தகைய நாடகக் குழுக்களிற் பயற்சி பெற்றவர்கள்  (சின்னப்பா, சிவாஜி, எம்ஜியார், டி.கே.ஷண்முகம், எம்.கே.ராதா, டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர்.ராமசாமி, சகஸ்ரநாமம் உட்பட) பலரும், பின்நாளில் முன்னணி நட்சத்திரங்களாகத் திரையிலும் ஜொலித்தார்கள்.
சினிமா பேசத் தொடங்கியதும் நாடகங்களாக மேடையில் நடிக்கப் பட்டவையே பெரும்பாலும் திரையிலும் அரங்கேறின.பக்தி சார்ந்த புராண, இதிகாசக் கதைகளே அந்நாளைய நாடகன்கள்ற் பெரும்பாலானவை.
                                அத்தகைய கதைகள் திரைவடிவம் பெற்றபோது அவற்றில் பால கிருஷ்ண னாகவும், பாலமுருகனாகவும், பாலவள்ளியாகவும்; பிரகலாதனாகவும், லோகி தாசனாகவும், துருவனாகவும், பரசுராமனாகவும் நடிக்கச்  சிறுவர் சிறுமியர்தேவைப்பட்டனர்.
            அதனால் நாடகங்களில்' பாலபார்ட்'டில் அசத்திய 'மாஸ்டர்' களுக்குத்  திரையுலகிலும் பிரகாசமான எதிர்காலம் உருவாகி இருந்தது. நாடகக் குழுக்களில் சிறுமிகள் சேர்த்துக் கொள்ளப் பட்டிராத காரணத்தால் இசைத் தட்டுகளிற் பாடிப் பிரபல்யமான 'பேபி'களைத் திரையுலகு ஈர்த்துக் கொண்டது.
Image result for babysherly temple  images  அமெரிக்க Shirley  Temple (ஷேர்லி டெம்பிள்) என்ற ஆங்கில பேபியும் வாஸந்தி என்ற ஹிந்திச் சிறுமியும் நடித்த திரைப்படங்கள் ஓஹோவெனத் தமிழகத்திலும் ஓடிக் கலக்கிக் கொண்டிருந்த 30களில் அவர்களுக்கு இணையாகத் தமிழிலும் ஒரு குட்டிக் கதாநாயகியை உருவாக்க ஆர்வம் கொண்டார் முன்னோடி இயக்குனர் கே.சுப்பிரமணியம்.
                                குழந்தை நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர் எடுத்த திரைப்படம் 'பாலயோகினி'(1937). அப்படத்தில் பாலயோகினி சரசாவாக நடித்த பேபி பாலசரஸ்வதியைவிட அவளது  சிநேகிதியாக நடித்த பேபி சரோஜா நடிப்பில் முந்திக் கொண்டாள். 
             குளிர்பானம், சோப் போன்ற விற்பனைப் பொருட்களில் அமெரிக்காவில்  ஷேர்லியின்       பெயரைப் பயன்படுத்தியது போல சரோஜாவின்  புகழை முதலாக்கி வளையல், கைப்பை, நோட்புக், சவர்க்காரம் என வியாபார உலகம்  விற்பனை செய்து ஆதாயம் தேடிக் கொண்டது.                                                                 Shirley Temple
கே.சுப்பிரமணியத்தின் 'தியாக பூமி'(1939)யிலும்  சரோஜாவின் நடிப்பு வியக்கப்பட்டது. கே.சுப்ரமணியத்தின் சகோதரரான கே.விஸ்வநாத்தின் மகள்தான் இந்த சரோஜா. மகளின் புகழைத் தனக்குச் சாதகமாக்கி ஆதாயம் தேட விரும்பினார் விஸ்வநாதன். 'காமதேனு' (1941) என்னும் படத்தைத் தாமே தயாரித்து, இரட்டைவேடத்தில் அவளை நடிக்கவும் வைத்தார். 
ஆனால் அவர் எதிர்பார்த்தது போல 'காமதேனு' பணப்பாலைச்சுரக்கவில்லை.அத்தோடு பேபி சரோஜாவையும்               திரையுலகுகை  விட்டுவிட்டது. பொன் முட்டையிடும் வாதத்தைக் கொன்றவனின் கதை போல தந்தையின் பேராசையால் நல்லதொரு  குழந்தை நட்சத்திரத்தைத் தமிழ்த் திரையுலகு இழந்துவிட்டது.
                                    'பாலயோகினி'க்கு முன்னதாக கே. சுப்பிரமணியம் எடுத்த 'பக்த குசேலா'வில்(1936) அறிமுகமானவர் தான் பின்நாளில் பிரபல பாடகியாகப் பரிணமித்த ஆர்.பாலசரஸ்வதிதேவி.தனது எட்டாவது வயதில் பாலகிருஷ்ணனாக 'பக்த குசேலா'வில் தோன்றி நடித்தார். அதன்பின் 'துகாராம்'(38), திருநீலகண்டர்' (39), சதிமகானந்தா'(40), மனோன்மணி'(42) முதலான படங்களிலும் சிறுமி பாலசரஸ்வதி ஆடிப்பாடி நடித்தார்.
Image result for old tamil/telugu actress s.varalakshmi photosகே.சுப்பிரமணியத்தின் மற்றுமொரு கண்டுபிடிப்பான பேபி வரலக்ஷ்மி அறிமுகமானது அவரது 'சேவாசதனத்தில்'(1938). நாயகியான எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் தங்கையாக, தனது 11ஆவது வயதில் அவர் பாடி நடித்தார். பின்னர் 'சதிமுரளி'யில் (1941) பாலமுரளியாகவும் அதே ஆண்டில் 'பரசுராமரி'லும் நடித்தார். தனது 15ஆவது வயதில் 'ஆராய்ச்சிமணி'(1942)  கதாநாயகியாக  ஆன அவர் சொந்தக்குரலில் நீண்டகாலம்   பாடி நடித்த நடிகையருள் ஒருவராக, ப.பானுமதியுடன் தந்து பெயரையும் தக்கவைத்துக் கொண்டவர்.
                                 பின்னணிப் பாடகி டி.வி.ரத்னமும் பேபியாக அறிமுகமானவர்தான். கே.சுப்பிரமணியத்தின் 'பக்த சேதா'வில்தான் அவரும் தனது 11ஆவது வயதில்  முகங்காட்டினார். பின்னர் பாலகண்ணகியாக 1942இல் 'கண்ணகி'யிலும் தோன்றினார்.
மாபெரும் வெற்றிபெற்ற 'ஸ்ரீவள்ளி'(1945) திரைப்பட நாயகி ருக்மணியும்(நடிகை லக்ஷ்மியின் தாயார்)  தனது 7ஆவது வயதில் 'பாலயோகினி'யில்  நடித்தவர்தான். ஆனாலும் அவர் அறிமுகமானது அவரது  5வயதில். 1935இல் வெளியான 'அரிச்சந்திரா'வில் லோகிதாசனாக அவர் நடித்தார். பின்னர் 'மாயாபஜார்'(1935), வாலிபர் சங்கம்'(1938) உட்படப் பத்துப் படங்களுக்குக் குறையாமல் பேபியாகவே நடித்த பெருமை அவருக்குண்டு.
                                பின்நாளில் ஒரு பாடக நடிகையாக பேசப்பட்ட யூ.ஆர். ஜீவரத்தினத்தின் திரையுலகப் பிரவேசமும் சிறுமியாகதத்தான் ஆரம்பமானது.மொடேர்ன் தயாரிப்பான 'சதி அகல்யா'(1937)வில் ஒரு தேவலோகப் பெண்ணாகத தோன்றிய அவர் ''பக்த கௌரி'யில் 1941) கதாநாயகியாகஏற்றம்பெறுமுன்பு'மாணிக்கவாசகர்'(39),'சந்தனத்தேவன்'(39),சத்தியவாணி'(40)     உட்பட 'உத்தமபுத்திரன்'(40) வரை சுமார் 10 படங்களில் 'பாலபார்ட் 'நடிகையாகப் பவனி வந்தவர்.அவற்றுட் பெரும்பான்மையானவை modern theatres  தயாரிப்புகள்.

Image result for kumari kamala imagesபேபி கமலா/குமாரி கமலா

                     1938இல் தனது நாலாவது வயதிலேயே நடன அரங்கேற்றம் செய்தவர் பேபி கமலா. அவ்வண்டிலேயே 'தேசபக்தி' நாடகத்தில் தர்பார் சீனில் நடனமாடிய அச்சிறுமி 'வாலிபர் சங்கம்'(38) படத்திலும் ஆடிப்பாடினாள். அடுத்த ஆண்டில் அவள் பாடி நடித்த 'ராம நாம மகிமை'படப் பாடல்கள் இசைத் தட்டில் வெளியாகிப்  பிரபல்யமாக ஹிந்தித் திரையுலகம் அவளை ஈர்த்துக் கொண்டுவிட்டது. அதன்பின் ஓர் ஏழெட்டு ஆண்டுகள் ஹிந்தித் திரைவானில் கமலாவின் பாதங்கள் நர்த்தனமாடின. ஹிந்தி மூலம் தமிழுக்கு 'dub 'பாகி வந்த ''ராமராஜ்யம்'(47) திரைப்படத்திலும் கமலா களிநடம் புரிந்தார்.
                                  கதக், மணிப்புரி நடனங்களில் தேர்ச்சி பெற்றிருந்த  கமலா சென்னை வந்தபின் வழுவூர் ராமையாபிள்ளையிடம் பரதம் கற்றுக் கொண்டார்.அக்கால கட்டத்தில், ஜெமினியின் 'நந்தனார்'(42), பட்ஷிராஜாவின் 'ஜெகதலப் பிரதாபன்'(44), 'என் மகன்'(45),பாலகிருஷ்ணனாக 'மீரா'(45)பால ,வள்ளியாகவும் பால  முருகனாகவும் ஏவிஎம்மின் 'ஸ்ரீவள்ளி'(45), கடகம்(47), ஏகம்பவாணன்'(47), 'நாமிருவர்'(47) எனச்  சுமார் 10 தமிழ்ப் படங்களில் கமலாவின் பாட்டும் ஆட்டமும் ரசிகர்களைப் புளகாங்கிதமடையச் செய்தன.
                 'வாலிபர் சங்கத்தில்' பேபியாக அவருடன் சேர்ந்து நடித்த ருக்மணி குமாரியாகி 'ஸ்ரீவள்ளி'யில் கதாநாயகியாக, சின்ன வயது வள்ளியாக கமலா நடித்தார்.
   நாம் இருவரில் 'கருணாமூர்த்தி காந்தி மகாத்மா' என்றும் 'ஆஹா காந்தி மகானே' என்றும் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலில் ஒலித்த பாடல்களுக்கு அபிநயம் பிடித்து பேபி கமலா ஆடினார். டி.கே.பட்டம்மாள் பாடிய 'தாயின் மணிக்கொடி பாரீர்' பாரதி பாடலுக்கும் கமலாவின் நடனம் சிறப்புச் சேர்த்தது. அதன் பின்னர் குமாரி கமலாவாக மாறிய அவர் பல படங்களிலும் நடனமாடினார்.விளையாட்டு பொம்மை'(1954),'சிவகெங்கைச் சீமை'(1959),'பாவை விளக்கு'(1960)  ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார்..
                   சிறுவர்கள் மட்டுமே நடித்து 'விமோசனம்' என்றொரு தமிழ்த் திரைப்படம் 1940இல் வெளிவந்ததாகத் தெரிகிறது. அதன் பின்னர் பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பாக 'குழந்தைகள் கண்ட குடியரசு' என்ற படம் சிறுவர்களை மையமாக வைத்து 1960இல் வெளிவந்தது.

ஆரம்பகால மாஸ்டர்கள்

                 பின்நாளையப் பிரபல பின்னணிப் பாடகர் இசைச்சித்தர் சீ.எஸ்.ஜெயராமன் நாடக உலகில் இருந்து சிறுவனாகவே திரையில் காலடி வைத்தவர். ஐந்துதலை நாகத்தின் மீது நர்த்தனமாடிய படி 'கிருஷ்ணலீலா'வில் (1934) அறிமுகமானார் மாஸ்டர் ஜெயராமன். குழலூதும் கண்ணனாகத் தோன்றி பத்துக்கும் மேற்பட்ட பாடல்களையும் அப்படத்தில்  அவர் பாடினார். 'பக்த துருவா'விலும்[1935] துருவனாக வந்து 16 பாடல்களைப் பாடி நடித்தார்.
Image result for t.r.mahalingam images                                நாடக உலகில் இருந்து தனது 13ஆவது வயதில் AVM இன் 'நந்தகுமார்'(1938) மூலம்அறிமுகமானார் மாஸ்டர் டி.ஆர்.மகாலிங்கம். 'பக்தபிரகலாதா'('39) ,'பரசுராமர்'('40), சதிமுரளி'('40)  உட்பட 'பக்த ஹனுமான்' (1944)வரை ஒரு டசினுக்குக் குறையாத படங்களில் நடித்தபின் மீண்டும் AVM ஆல்  'ஸ்ரீவள்ளி'(1945) மூலம் நாயகனானார்.

     1950 -1960 களில் மாஸ்டர்களும் பேபிகளும்

                    50களில் அறிமுகமான குட்டி நட்சத்திரங்களுள் முத்திரை பதித்தவர் பேபி சச்சு. தனது நாலாவது வயதில் 1952இல்  'வீணை' எஸ்.பாலச்சந்தர் பானுமதியுடன் நாயகனாக நடித்த 'ராணி' படம் மூலம் முகங்காட்டினார். தொடர்ந்து அதே ஆண்டில் 'தர்மதேவதா', 'சியாமளா' படங்களிலும் நடித்தார்.
Image result for devadasu 1953 movie stills/imagesImage result for baby sachchu  images                       சீ.ஆர்.சுப்புராமன் இசையில் ஜிக்கியும் ஏ.பி.கோமளாவும் குரல் கொடுக்க குட்டிப் பத்மினியாக வந்து ' சின்னச் சின்ன வீடு கட்டி' பாடி ஆடி விளையாடினார் சச்சு என்கிற சரஸ்வதி - 'மருமகள்'(1953) திரைப்படத்தில். அதே ஆண்டிலேயே சீ.ஆர்.சுப்புராமனின் இசையில் கே.ராணியும் ஜமுனாராணியும் குரல் கொடுக்க மாஸ்டர் சுதாகருடன் ,'ஓ..தேவதாஸ்..படிப்பு இதானா..?' எனப் பாங்காகப பாடி ஆடியதை மறக்கத்தான் முடியுமா? தனது மழலைப் பேச்சாலும் குறுகுறுப்பான நடிப்பாலும் 'தேவதாஸ்'(1953) இல் குட்டி(சாவித்திரி )பார்வதியாகத் தோன்றி இரசிக இதயங்களைத் தட்டிப் பறித்தார்.
                     நீண்ட காலத் தயாரிப்பான ஜெமினியின் 'ஔவையார்'இலும்[1953] பால வயது ஔவை சச்சுதான். 1954இல் அண்ணாவின் 'சொர்க்கவாசல்'இல் பத்மினியின் தங்கையாக வந்து  நடிப்பிசைப்புலவருடன்   'நிலவேநிலவேஆடவா 'எனப்பாடிப் பரவசப்படுத்தினார். சீ.ஆர்.சுப்புராமனின் இசையில்  பேபி சச்சுவுக்குக் குரல் கொடுத்தவர் சூலமங்களம் ராஜலக்ஷ்மி.
'எதிர்பாராதது'(1954), 'கோடீஸ்வரன்'(1955), 'மாயாபஜார்'(1957), 'ராஜா தேசிங்கு'(1960) எனச சில படங்களில் இன்முகம் காட்டிய சச்சு 1962இல்  'வீரத்திருமகன்' ஆனந்தன்   'ரோஜாமலரே ராஜகுமாரி'' என( மெல்லிசை மன்னர்களின் இசையில் P B ஸ்ரீநிவாஸ் பி.சுசீலாவுடன்) கீதமிசைக்க புதுக்  கதாநாயகியாக புத்தம் புது மலராக மணம் பரப்ப வந்தார். அதே ஆண்டிலேயே ஏவிஎம்மின் 'அன்னை'யிலும் ராஜா என்ற புதுமுக நடிகருடன் இணை சேர்ந்து 'அழகிய மிதிலை நகரினிலே' இசைத் தேரேறிக் காருலா வந்தார். (ஆ.சுதர்சனத்தின் இசையில் பின்னணிக்குரல்கள்- ஸ்ரீநிவாஸ்+சுசீலா).  கதாநாயகியாகத் தொடர முடியாது போனாலும் நல்லதொரு நகைச்சுவை நடிகையாக இன்றுவரை தொடர்ந்து நிலைத்து நிற்பவர் சச்சு.
'அண்ணா ஒரு பைத்தியமா ஆயிடிச்சு அண்ணி மேலே சொக்கி சொக்கி'- அந்நாளில் பலராலும் முணுமுணுக்கப் பட்ட பாடல். '1950இல் வெளியான 'திகம்பர சாமியார்'இல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் மிக அரிதாகப்பாடிய கஜலக்ஷ்மியின் குரலில் ஒலித்த பாடல். அப்பாடல் காட்சியில் - நாயகன் நரசிம்மபாரதியின் தங்கையாக பேபி லலிதா நடித்தாள்.
                      1952 இல் வெளியான ரி.ஆர்.மகாலிங்கத்தின் 'மச்சரேகை' ஒரு தோல்விப்படம். னால் அதில்  நீரஜா என்ற பெயரில் சிறுமியாக அறிமுகமானவர் பின்நாளில் தெலுங்குப் படவுலகில் முன்னணியில் திகழ்ந்தார். 1968இல் 'பணமா பாசமா?'வில் 'எலந்தப்பழம்' விற்று மார்க்கெட்டைப் பிடித்த விஜயநிர்மலாதான் அவர்.
                     இயக்குனர் ரி.ஆர்.ராமண்ணாவின் சின்னம்மாவின் மகள்தான் ஜோதிலட்சுமி. அதனால் 'கூண்டுக்கிளி'(1954)யிலும் 'காத்தவராயன்'(1958)இலும் சிறுமியாக இருந்தபோதே  நடிக்கக் கிடைத்தது. ஜோசப் தளியத்தின் மல்லிகாவில் (1957) 'வருந்தாதே ஏழை மனமே' என பத்மினியுடன் சோககீதம் இசைத்தவர் பேபி ராஜகுமாரி.(குரல் கொடுத்தவர்கள் ஜிக்கி+மைதிலி - இசை -ரி.ஆர்.பாப்பா)
                                     சுட்டித்தனமான சிறுவர்களை இலகுவில் மறக்க முடியாது. சிறுமியாக
Image result for babydaisy irany  imagesஇருந்த போதிலும் சிறுவனாகவே நடித்து அசத்திய டெய்சி இரானி ஒன்றும் தமிழ்ச் சிறுமியல்ல. ஆனால் அவள் தமிழ் பேசினாள். ஹிந்திப் படமான ''Bandish '(1955) 'யார் பையன்?'ஆக  1957இல் தமிழ் வடிவம் கொண்டபோது அதில் நடித்த சிறுவனையும்(?)   

Image result for baby daisy irani imagesதமிழ்த் திரையுலகம் சிலகாலத்துக்கு இரவல் பெற்றுக் கொண்டுவிட்டது.'கண்ணாமூச்சி ஆட்டம் இல்லைடா ராஜா' சாவித்திரியுடன் டேய்சி இரானி+குழந்தைகள் சேர்ந்து படிக்கும் [!] ஓர் இனிய பாடல். எஸ்.தட்சணாமூர்த்தியின் இசையில் பாலசரஸ்வதியின் இன்குரல் குழைந்து ஒலித்தது.அதே படத்தில் 'அம்மா பொண்ணு ராமக்கா' என்று ஒரு பாடல்.-அவ்வளவாக வானொலியில் ஒலிக்காதது. டெய்சி இரானிக்காக கஸ்தூரி  பாடியது.
                'நான் வளர்த்த தங்கை'(1958), 'புதியபாதை'(1960) என ஓரிரு படங்களில் டெய்சியின்               துடியாட்டத்தை  ரசித்தோம். ஏவிஎம்மின் 'குலதெய்வம்(1956) '-Bhabi'யாகவும்(1957) ஜெமினியின்'வஞ்சிக்கோட்டை வாலிபன்''Rajthilak ' (1958) ஆகவும் ஹிந்திக்குப் போன போது டெய்சியும் கூடவே போனாள்.. Naya Daur '(1957)' பாட்டாளியின் சபதம்' ஆகத் தமிழில் 'டப்பாகி  வந்தபோது அவளை  அதிலும்  கண்டோம். 20க்குக் குறையாத ஹிந்திப்படங்களில் 1960க்குள் பேபி டெய்சி இரானிநடித்திருந்தாள் .அவளைத் தொடர்ந்து அவளது தங்கை  ஹனி இரானியும் 'நான் வளர்த்த தங்கை'யுட்படச் சில படங்களில் நடித்தாள்.
1955இல் 'குணசுந்தரி'யுடன் தமிழ் திரையுலகில் நுழைந்த பேபி உமா தொடர்ந்து 'நீலமலைத் திருடன்'(1957), அவன் அமரன்'(1958), நீலாவுக்கு நெறைஞ்ச மனசு'(1959), ) எனத் தளர்நடை போட்டாள் .'சின்னப்பாப்பா எங்க செல்லப்பாப்பா' என வண்ணக்கிளியில் Baby Uma-Neelavukku Neranja Manasu 1960-1(கே.வி.மகாதேவனின் இசையில் பி..சுசீலா குரல் கொடுக்க) குடிகார மனோகரின் மனைவியான பி.எஸ்.சரோஜா சீராட்டியது பேபி உமாவைத்தான்.
   'சிலசில ஆண்டுகள் முன்னம்என்று சேர்ந்து வாழ்ந்த இரு அன்னங்களின் கதையை உருவகமாக்கித் தனது  சொந்தக் கதையை - சோகக் கதையைப் பாட்டாக   மகளுக்குச் சொல்லுவார் அஞ்சலிதேவி. படம் - 'எங்கள் செல்வி-1960. பாடியவர் பி.சுசீலா. இசை- கே.வி.மகாதேவன். அதிலும் மகளாக நடித்தவர் பேபி உமாதான்.

'கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்' என வஞ்சகரின் வலை விரிக்கும் உலகத்தை பற்றி எச்சரித்து அறிவுறுத்தும் பாடல் ஒன்று 'வண்ணக்கிளி'யைப் பறக்கவிட்ட அதே Modern தயாரிப்பாக வெளிவந்த 'கைதி கண்ணாயிரம் '(1960) படத்தில் இடம்பெற்றது. (கே.வி.மகாதேவன்/மருதகாசி/பி.சுசீலா என்ற  கூட்டணியில்)  ராஜசுலோசனாவின்        அறிவுரைக்கு 'புயலைக் கண்டு நடுங்க மாட்டேன்; முயன்று நானே வெற்றி கொள்வேன்' எனப்            பதிலளித்து 'சபாஷ்' பெறும் சிறுமி பேபி சாவித்திரி.Baby Savithri as Selli-Aayiram Rupai 1964-                                             'அம்மா இல்லை அப்பா இல்லை' என்று நான்கு ஆண்டுகளின் பின்' ஆயிரம் ரூபாய்'க்காக  பிச்சைத் தட்டேந்தி சோகராகம் இசைத்த சிறுமியும் அவளேதான்.                                                                                    பழம்பெரும் நடிகை சுந்தரிபாயின் அக்கா மகள் பேபி காஞ்சனா.'வீரபாண்டிய கட்ட பொம்மன்' (1959) வரலாற்றுச் சித்திரத்தில் ஊமைத்துரையின்(OAK தேவரின்) மகளாக வந்து சிவாஜியிடம் 'சித்தப்பா' என அன்பைப் பொழிந்தவள், சக்தி கிருஷ்ணசாமியின் நல்ல தமிழ் வசனங்களை உணர்ச்சி பொங்க வெளிப்படுத்தியவள் - பின்னர் எங்கு சென்று மறைந்தாளோ தெரியவில்லை.
'இந்திரா என் செல்வம்' (1962) பண்டரிபாய் நடித்த திரைப்படம். அதில் பேபி சுமங்களா என்ற  சிறுமி இந்திராவாக நடித்தாள்.
                                                     இதே காலகட்டத்தில் தமிழ்த் திரையில் தோன்றிய மாஸ்டர்களில் மூத்தவன் சேது.  'மாந்தர் என்பார் இவர்தானா..?'என விரக்தியுடன் சோக கீதமிசைத்த பதின்ம வயதுப் பையன் அவன். தெலுங்கு மூலம் வந்த 'அண்ணி'(1951)யில் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் பி.நாகேஸ்வரராவ் குரல் கொடுத்தார்.

   வரப்போகும் அண்ணி பத்மினியைப் பற்றி
'கண்டு கொண்டேன் நான் கண்டுகொண்டேன்' எனக் களிதுள்ளப் பாடிய சிறுவனை 'மங்கையர் திலகம்' (1955) அறிமுகம் செய்கிறாள். குட்டி சிவாஜியாகத் தோன்றிய  மாஸ்டர்பாஜிக்கு  ரி.கமலாகுரல்கொடுத்தார்.எஸ்.தட்ஷணா மூர்த்தியின்   இசையில் 'வளையாபதி'(1952) படத்தில்ஒருபாடல். 'பள்ளிக்கூடம் பம் பம் பம் பம் '  என்று ஆரம்பமாகும். எஸ்.தட்ஷணாமூர்த்தியின் இசையில் பாடியவர் ஏ.எல்.ராகவன். அப்போது அவரும் மாஸ்டர்தான்! அவர் குரல் கொடுத்தது மாஸ்டர் சுதாகருக்கு                                     
Image result for devadasu 1953 movie stills/images
அடுத்த ஆண்டில் குட்டி தேவதாஸ் அவன் தான்.  சச்சுவுடன் 'ஓ..தேவதாஸ்..'பாடிய துடுக்கான அந்தச் சிறுவனுக்கு 'ஆண்டி பெற்ற செல்வம்'(1956) படத்தில் இரட்டை வேடம். ஆண்டியின் மகனும் அவன்தான்;இளவரசனும் அவன்தான். சொல்லப்போனால் 'நாடோடி மன்னன்' கதைதான். இரண்டு வருடம் முன்னதாகவே வந்துவிட்டது. டப்'படம் என்பதாலோ என்னவோ தமிழில் அவ்வளவாக வரவேற்புப் பெறவில்லை.
    பி.ஆர். பந்தலு சிறுவர்களை மையமாக வைத்துக் கன்னடத்தில் எடுத்த 'குழந்தைகள் கண்ட குடியரசு'(1960) படத்திலும் சுதாகர்தான் (குட்டிக்)கதாநாயகன்.
Image result for kaakkaa kaakkaa mai kondaa song image                                       'காக்கா காக்கா மை கொண்டா 'எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலில் ஒலித்த இனிமையான பாடல்களுள் ஒன்று. மெல்லிசை மன்னர்களின் இசையில் உருவான அப்பாடல் 'மகாதேவி'(1957)யில் இடம்பெற்றது. திரையில் சாவித்திரி மாஸ்டர் முரளியைத் தாக்காட்டப் பாடும் பாடலது. மாஸ்டர் முரளி முதன்முதலாக அறிமுகமானது ஏவிஎம்மின் 'குலதெய்வம்'[1956] மூலம்தான். சுருள்முடியும் சுட்டித்தனமுமாகத் தோன்றிய மாஸ்டர் முரளி 'வஞ்சிக் கோட்டை வாலிபன்'(1958) -பட 'வீரத்தாய்' நாடகத்தில் உணர்ச்சி பொங்க நடித்து உளங் கவர்ந்தான்.
'மனுஷனைப் பாத்துட்டு உன்னையும் பாத்தா மாத்தமில்லடா ராஜா' எனப் பட்டுக் கோட்டையாரின் பாடலைக் கொட்டி முழக்கியபடி (குரல்-கே.ஜமுனாராணி- இசை ரி.ஆர்.ராஜகோபால்) எருமை மாட்டில் சவாரி செய்யும் சிறுவனாக 'கண் திறந்தது'(1959)வில் வந்த மாஸ்டர் வியாசும் சோடை போகவில்லை. 'விஜயபுரி வீரன்'(1960) தந்த மாஸ்டர் கோபாலும் மிடுக்கான இளவரசனாகவே முத்திரை பதித்தான்.மாஸ்டர் கோபால் நடித்த மற்றொரு படம் 'துளசி மாடம்'(1963).


Image result for baby sridevi photos                 1960 - 1970 களில் குட்டீஸ்.......Image result for tamil child actress baby raji photos

                  60க்குள் நுழைந்தால் அங்கு முதலில் பட்டொளி வீசிப் பறப்பது மாஸ்டர் கமலஹாசனின் கொடிதான். 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பறந்து கொண்டிருக்கும் கொடி அது! எம்.எஸ்.ராஜேஸ்வரியின் மழலைக் குரலில் ஆர்.சுதர்சனத்தின் இசையில் 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' எனப் பாடியபடி, ஜெமினி-சாவித்திரி ஜோடியின் மகனாக அவனது வருகை அமோகமாக ஆரம்பமானது.
                                                                                                         
Image result for tamil  old child artists imagesதொடர்ந்து 'பார்த்தல் பசி தீரும்'(1962), பாத காணிக்கை'(1962), 'ஆனந்தஜோதி'(1963),' வானம்பாடி '(1965) என அந்நாளைய முன்னணி நட்சத்திரங்களான சிவாஜி,எம்ஜியார்  ,ஜெமினிஎஸ்எஸ் ஆர்,   முதலானோரின்  முகதாவில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தவும் பட்டைதீட்டவும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி (இதில்' பார்த்தால் பசி தீரும்' படத்தில் இரட்டை வேடம் வேறு!) தமிழ்த் திரையுலகை விழிவிரிய வைத்துவிட்டான் அந்த ஆறு வயதுச் சிறுவன். சண்முகம் அண்ணாச்சியின் நாடகப் பட்டறைப் பயிற்சியால்   'அப்பாவின் ஆசை' மேடையேறி  நாடக அனுபவமும் சித்தித்தது.

Image result for kutty padmini images                                                        இதே    காலகட்டத்தில், கவியரசரின் 'முத்தான முத்தல்லவோபாடல்வரிகளின் கருவானாற் போல வந்து சேர்ந்த முத்தாக ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம்'1962)  மூலம் அறிமுகமானாள்  குட்டி பத்மினி. 'நெஞ்சில் ஓர் ஆலயம்அடுத்த ஆண்டி லேயே'  'தில் ஏக் மந்திர்'ஆக  ஹிந்தியிலும் வெளி யானது.குட்டி பத்மினி அங்கும் பரிச்சயமானாள். ஸ்ரீதரின் 'நெஞ்சம் மறப்பதில்லை'(1963)யைத் தொடர்ந்து 'ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி' (லதா,ரமாமணியின் குரலில் மெல்லிசை மன்னர்களின் இசையில்) பாடியாடி விளையாடினாள்- 'வாழ்க்கை வாழ்வதற்கே'(1964)யில்.
ஏவிஎம்மின் 'குழந்தையும் தெய்வமும்' (1965 )படத்தில் குட்டிக்கு இரட்டை வேடம். 'கோழி  ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே' என (இசை-ஆர்.சுதர்சனம்) எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலில் மிழற்றினாள்.  இதற்கிடையே மலையாளக் காற்றடித்து ஒரு எட்டுப்பத்துப் படம் அங்கே. அக்கறை  அக்கரையில் போகவும் தமிழில் இடம் வெறுமையாயிற்று.  அறுவடை சுகமில்லை.ஏ.பி. நாகராஜனின் 'நவராத்திரி'(1966),'திருவருட்செல்வர்'(1967), 'நான்'(1967)   திருமால் பெருமை'(1968) என ஆண்டுகொன்றாகத்  தவழ்ந்து எம்ஜியாரின் 'நம் நாடு'(1969) உடன் நிறைவு கண்டது குட்டி பத்மினியின் 'பால காண்டம்'.                                                         விடலைப் பருவத்தில் 'விசிலடிச்சான் குஞ்சுகளா..'எனக் கமலஹாசனுடன் (மாணவன்-1970)                                     
Image result for kutty padmini images
 கிண்டலடித்துக்     கூத்தடித்த போதிலும் அவருடனோ வேறு எவருடனுமோ   கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவேயில்லை.    
Image result for kuladeivam 1956 tamil  movie stills/imagesகே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்    கண்டுபிடிப்பான பேபி ஷகீலாவின் வருகை குட்டி பத்மினியின் புகழை ஓரளவுக்கு மழுங்கடித்து விட்டது எனக் கூறலாம். 'அத்தை மடி மெத்தையடி' என ஆடி விளையாடிய அம் மழலையின் முறுவலும் குறும்பும் ரசிக உள்ளங்களைக் கொள்ளை கொண்டுவிட்டன.1963 இல் 'கற்பகம்' மூலம் களமிறங்கிய அவ்வற்புதம், 'எங்க வீட்டுப் பிள்ளை'(1965),'கன்னித்தாய்'(1965),' முகராசி' (1966) ,நாடோடி(1966)  என எம்ஜியார் வீட்டுப் பிள்ளையாகச் சிலகாலம் மாறிப் போனது.
            குட்டி பத்மினி இரட்டை வேடமிட்ட 'குழந்தையும் தெய்வமும்' இல் ஷகீலாவும் பங்கேற்றாள். 'குளிக்கக் காசு கேட்ட அந்த குவா குவா பாப்பா'வுக்கு              (இரு வல்லவர்கள்-1966-எம்.எஸ்.ராஜேஸ்வரி/வேதா) காக்கா நரியின் கதையை (ஏ.எல்.ராகவனின் குரலில்) வீரப்பன் கூறியது  அம்மா எங்கே?'(1964) எனத் தேடியபோது.                                        
'மகாதேவி'(1957)யில் சந்திரபாபுவின் ஜோடியாக நடித்த  சுசீலாவினதும் வசனகர்த்தா மா.லட்சுமணனதும் மகள் மஹாலக்ஷ்மி. சந்திரபாபு தனது  'தட்டுங்கள் திறக்கப்படும்' (1966)  மர்மக்கொலைப் படத்தில் ஹிட்ச்காக் பாணியில் திகிலைக் குழந்தையின் வாயிலாக ரசிகர்களிடம் தொற்ற வைக்க முயன்றார். மகாலக்ஷ்மிதான் அக்குழந்தை. மெல்லிசைமன்னர்களின் இசையில் 'கண்மணிப் பப்பாபாடலை அவர் பாடாமல்  பாடி (கதைப்படி அவர் ஊமை) ஆடியது  அச்சிறுமியை மகிழ்விக்கத்தான். [பின்நாளில் ஊர்வசி  விருது வென்றவரும், 50களில்  மலையாளத்திரையில் பிரபல நடிகையாக இருந்த பிரேமாவின் மகளுமான ஷோபாவே மகாலட்சுமி என்ற பெயரில் நடித்தவரென நடிகை ஷோபாவின்  wikipedia குறிப்புக் கூறுகிறது.]
குழந்தை நட்சத்திரத்துக்கான தேசியவிருது (16 ஆண்டுகளின் பின் ஆரம்பிக்கப்பட்டு) முதன்முறையாகத்  தமிழ்ப்படக் குழந்தை ஒன்றுக்கு வழங்கப்பட்டது  1967இல். அது பேபி ராணிக்குத்தான் கிடைத்தது. அவ்வாண்டில் அவள் நடித்து 'பேசும் தெய்வம்' திரைக்கு வந்தது.
Image result for tamil child artists images                               திருட்டுத் தொழில் புரியும் முரட்டு மனித இதயங்களிலும் ஈரம் இருக்கும் என்பதை உணர்த்த வரும் குழந்தையாக பேபி ராணியைக் கண்டார் பி.மாதவன். அவ்வாறு  உருவானது   'குழந்தைக்காக'(1968)        அப்படத்துக்காக .'தேவன் வந்தான்.....குழந்தை வடிவிலே' எனப்  பாடல் புனைந்த கவியரசருக்கு அப்பாடலால் கிடைத்த தேசியவிருது அகில இந்தியத் திரையுலக அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் பெற்றுக் கொடுத்தது.
1969இல் வெளியான 'சித்தி'யில் எம்.ஆர். ராதாவுக்கு விஜயநிர்மலா தொடக்கம் வரிசையாக ஏழெட்டுக் குழந்தைகள். அதில்  கடைக்குட்டியாக வந்து மனங் கவர்வாள் பேபி ராணி. பி.மாதவனின் 'கண்ணே பாப்பா'வும் பேபி ராணியின் நடிப்பில்  அதே ஆண்டிலே வெளியானது.     குழந்தையின் பெயரில் Lottery யில் பணம் கிடைக்கப்போய்  சதிகாரர்களிடமிருந்து குழந்தையையும் பணத்தையும் காப்பாற்ற  கட்புலனற்ற பிச்சைக்கார சந்திரபாபு நடத்தும் போராட்டம்தான் ' கண்ணே பாப்பா’வின் கதைக்கரு.மாநில அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதும்  அவ்வாண்டில் அவளுக்குக் கிடைத்தது.1972இல் பேபி ராணியின் நடிப்பில் வந்த படம்- 'ராணி யார் குழந்தை?' அதன்பின் அடுத்த சில ஆண்டுகள் அவள் ஹிந்திப் படவுலகில் ஐக்கியமாகி விட்டாள். 
28 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் ஒரு 'பக்த பிரஹலாதன்' 1967இல் தெலுங்கு மூலமாகத் தமிழுக்கு வந்தான். பிரஹலாதனாக நடிக்க அசாத்திய திறமை வேண்டும். வசன மழையில் குளிக்க வேண்டும். இம்முறை அச் சுமையைத் தனது சிறிய தலையில் தாங்கிக் கொண்ட சிறுவன் -அல்ல சிறுமி-பேபி ரோஜாரமணி. இரண்யனாகவே  மாறிவிட்ட  அனுபவ நடிகர் ரங்கராவுடன் நேர்நின்று அயராது  அட்சரம் பிசகாமல் துல்லியமாக வசனம் பேசும் தைரியமும் திறமையும் அவளுக்கிருந்தது. அத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியானது தமிழோடு களிதெலுங்குகவின் மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா எனப் பன்மொழி நடிகையாக அவளை மாற்றிவிட்டது. மலையாள வெற்றித் திரைப்படமான 'துலாபாரம்'(1967) தமிழில் உருவான போது பேபி ரோஜாரமணி அதிலும் நடித்தாள்.
Image result for roja ramani actress photos
'மகராஜா ஒரு மகராணி..இந்த இருவருக்கும் இவள் குட்டிராணி' என 'இரு மலர்களில்'(1967) (எம்.எஸ்.வியின் இசையில் பாப்பாவுக்காக ஷோபாவுடன் ரி.எம்.எஸ்.ஸும் சதனும்) பாட ஆரம்பித்து 'என் தம்பி'(1968), 'எங்க மாமா'(1970),எதிரொலி'(1970), 'தங்கைக்காக' (1971),  'பாபு'(1971), 'என் மகன்'(1974)எனத் தொடர்ச்சியாக நடிகர் திலகத்தின்  அபிமானத் தாரகையாகி அவர் படங்களில் இடம்பிடித்துக் கொண்டாள். மலையாளத்தில் ஷோபனா என்ற பெயரில் வெற்றிக் கொடி நாட்டிய பேபி ரோஜாரமணி தெலுங்கிலும் கலக்கத் தவறவில்லை. மலையாளத்தில் நடிகர் மதுவுடன் இணைசேர்ந்த 'செம்பருத்தி'(1972) பின்னர் 'பருவ காலம்'(1974) ஆகத் தமிழுருக் கொண்டபோது கமலின் நாயகியாகும்                                                                                                      வாய்ப்புப் பெற்றவர், 1972வரை   ஆறு மொழிகளில்  70 படங்கள் மட்டில் குட்டி நடிகையாகவே  வலம்வந்து விட்டார். பேபி ரோஜாரமணி நாயகி ஆனபின் தமிழுலகம் அவரைக் கண்டுகொள்ளாத போதிலும் மலையாளமும் ஆந்திராவும் அவரை வரவேற்றுக் கொண்டாடின. 50க்கு மேற்பட்ட விருதுகளும் அவரது புகழுக்குக் கட்டியங் கூறின.  
Image result for master prabhakar photosகுட்டிச் சுட்டிகளாகத் தமிழ்த் திரையில் தடம் பதித்தவர்களுள் மாஸ்டர் பிரபாகரை மறக்கமுடியுமா? 'காகித ஓடம்  கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்..'என்ற கலைஞரின் பாடலைத்தான் மறக்கமுடியுமா?(ரி.கே.ராமமூர்த்தியின் இசையில், பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது) ஆமாம். அப்பாடல் காட்சிதான் மாஸ்டர் பிரபாகரை எம்மனதில் பதிய வைத்தது. '1966இல்  'மறக்க முடியமா?'வெளிவந்தது.  (ஜீ.ஆர்.நாதனின் 'தேவாலயம்திரைப்படம் மூலமே மாஸ்டர் பிரபாகர்   அறிமுகமானதாக அவர் பற்றிய குறிப்புக் கூறினாலும் அப்படி ஒரு படம் வெளிவந்தததாகத் தெரியவில்லை!) 'மறக்க முடியுமா?'வைத் தொடர்ந்து அதே ஆண்டில்   'சாது மிரண்டால்இல் ரி.ஆர்.ராமச்சந்திரனின் மகனாக குட்டி பத்மினியுடன் அவனைச் சந்திக்கிறோம்.
எட்டுத் தம்பி தங்கையருடன் குடும்பத்தில் மூத்த புதல்வனாகப் பிறந்த மாஸ்டர் பிரபாகர் மொழியால் சௌராஷ்டிரன்.(TMS ஸும் நரசிம்மபாரதியும் அவ்வாறே). வறுமையில் செம்மை காணத்   திரைக்கு வந்தவன் பிரபாகர்.இயக்குனர்கள், நடிகர்கள் என்று பலருக்கும் அவனைப் பிடித்துக் கொண்டு விட்டது, அவர்களின் செல்லப்பிளையாகி விட்டான் அவன்.
                                 ரவிச்சந்திரன் நாயகனாக நடித்த 'எங்க பாப்பா'(1966)  'எங்களுக்கும் காலம் வரும்'(1967)  'தங்கத் தம்பி'(1967) 'வாலிப விருந்து'(1967)' மூன்றெழுத்து'(1968)எனப் பல படங்களிலும் பிரபாகரனும் இருந்தான்.  இயக்குனர் சிகரத்தின் 'பாமா விஜயம்'(1967) தாமரை நெஞ்சம்'(1968) 'இரு கோடுகள்'(1969) நான்கு சுவர்கள்'(1970), 'வெள்ளி விழா'(1972) என வரிசையாக அவர் படங்களில் அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தது.
Image result for master prabhakar photosஇயக்குனர் ஏ.பி.நாகராஜன் தமது 'திருவருட் செல்வர்' (1967) பக்தித் திரைப்படத்தில் திருஞான சம்பந்தராகப் பிரபாகரனை மாற்றியதோடு கேவி.மகாதேவனின் இசையில் மாஸ்டர் ரி.எல்.மகராஜனின் குரலில் 'காதலாகிக் கசிந்துருக'வும் வைத்தார். திருமால் பெருமையில்(1968) பாலகிருஷ்ணனாக்கி மகிழ்ந்தார். அடுத்த ஆண்டில் 'வா ராஜா வா'(1969) என அழைத்துக் குட்டிக் கதாநாயகனாக எழுப்பி விட்டார். 'திருமலை தென்குமரி '(1970), 'விளையாட்டுப் பிள்ளை'(1970) எனத தொடர்ந்தும் அவரது படங்களில் மாஸ்டர் பிரபாகர் பங்கேற்றான்.
  எம்ஜியாருடன் 'தேடி வந்த மாப்பிள்ளை'[1970],                                                         சிவாஜியுடன் 'தங்கைக்காக'(1970), ஜெமினியுடன் 'சாந்தி நிலையம்' ஜெய்சங்கருடன் 'நேர்வழி'[1968]. 'அன்பு வழி' (1968) என்று தொடர்ந்த  தனது கலைப் பயணத்தில், நாலைந்து ஆண்டுகளுக்குள் தமிழ் தெலுங்கு என நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து முடித்த அந்த மாஸ்டர் பிரபாகர்- மிஸ்டராக  மாறிய பின் மிஸ்ஸாகிப்போய்விட்டான்!
Thikku Theriyatha Kaattil Poster .jpgImage result for baby sumathi photosமாஸ்டர் பிரபாகரின் தங்கைதான் பேபி சுமதி. அண்ணனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவளும் தனது மூன்று வயதிலேயே  K.B. யின்  'இரு கோடுகள்'( 1967)இல் ஆரம்பித்து, அண்ணனுடன் இணைந்தே 
 ' வா ராஜா வா'(1969)
'திருமலை தென்குமரி'(1970)
'எங்க மாமா'(1970)
'சாந்தி நிலையம்'(1970)
'தங்கைக்காக' (1971)
'வெள்ளி விழா'(1972)      எனத் தொடர்ந்தவள் பின்னர் தனித்து  'திக்குத் தெரியாத காட்டில்' (1972)' விடப்பட்ட போதும்  'பூப் பூவாப் பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா..'எனக் கும்மாளமிட்டு உல்லாசமாக    (MSVயின்இசையில்எம்.எஸ்.ராஜேஸ்வரியின்குரலில்)  பாடி மகிழ்வித்தாள். தேவரின் 'பெண் தெய்வம்'(1970), 'கோமாதா என் குலமாதா'(1973),
ஏ.பி.நாகராஜனின் 'காரைக்கால் அம்மையார்'(1973)  போன்ற பக்திச் சித்திரங்களிலும்  'சிவப்புக்கல் மூக்குத்தி'(1972) போன்ற விலைப்படாத சில   உதிரிப் படங்களிலும் நடித்தாள்.
1969,1972, 1977 என மும்முறை மலையாளத்தில்    சிறந்த குட்டி நட்சத்திரமாகத் தெரிவானவளை பாக்யராஜின் 'சுவரில்லாத சித்திரங்கள்' 1979 இல் (சுதாகரின்) கதாநாயகியாகியது. ஆயினும் அந்த அத்தியாயம் தொடரவில்லை.தமிழில் வாய்ப்            பிழந்தவரை மலையாளம் கைகொடுத்துச் சிலகாலம் தக்க வைத்துக் கொண்டது.
Image result for master sekar photos

'குடியிருந்த  கோயில்'(1968) இல் ஆரம்பித்துக் குட்டி எம்ஜியார் ஆக 'அன்னமிட்ட கை' (1972)  இதய வீணை'(1973) எனத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட மாஸ்டர் சேகர் 'Oliver Twist இன் மோசமான தமிழ் வடிவமான 'அநாதை ஆனந்தன்'(1970) இலும், 'மணிப்பயல்'(1974) இலும் பிரதான வேடங்களில் (Title Roles ) சக்கை போடு போட்டான். 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை..; 'எனப் பக்தி ததும்பப் பாடியபடி (குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் ரி.கே.கலாவின் குரலில்) வரும் வருகையிலேயே மாஸ்டர் சேகரின் வெற்றி ஊர்ஜிதமாகி விடுகிறது -ஏ.பி.நாகராஜனின் 'அகத்தியர்'(1972) பக்தி சார் இலக்கியப் படைப்பில். அதில் நினைவில் பதியும் நல்லதொரு பாத்திரம் மாஸ்டருக்கு. அவரது 'திருமலை தெய்வத்'திலும் (1973) மாஸ்டர் முகம் காட்டினான். இரண்டும் கெட்டான் வயதுச் சிறுவனாக -கமலின் தம்பியாக- கே.பியின்
'சொல்லத்தான் நினைக்கிறேன்'(1973)இல்.
Image result for master sekar photosImage result for master sekar photos ஜெமினியுடன் 'கட்டிலா தொட்டிலா?' (1973), கோபாலகிருஷ்ணனின் 'வந்தாளே மகராசி' (1973), சிவாஜியுடன் 'வாணி ராணி' (1974), குகநாதனின் 'மஞ்சள் முகமே வருக' (1975) என்பனவும் மாஸ்டர் சேகர் கால்பதித்த சில  திரை முற்றங்கள்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நாலு  திராவிட மொழிகளிலுமாகச் சுமார் 50 படங்கள் மட்டில் நடித்த சேகர், ஸ்ரீதரால் 'ஓ மஞ்சு'(1976) திரைப்படத்தில் கதாநாயகனாகஅறிமுகப்படுத்தப் பட்ட போதிலும் நாயகனாகத்   தொடரக் கொடுத்து வைக்கவில்லை..
இதேவேளை 'அன்னமிட்ட கை'யில் குட்டி நம்பியாராகவும், 'இதய வீணை'யில் குட்டித் தேங்காய் (சீனிவாசன்) ஆகவும் அசத்தியவன் வேறு யாருமல்ல நம்ம பிரபாகர்தான்!       'சாந்தி நிலையம்', எங்க மாமா', இரண்டும்  ஒரளவுக்கு சிறுவர்களின் களத்தைப் பகைப்புலனாகக் கொண்டவை. இரண்டிலும் அந்நாளைய குட்டி நட்சத்திரங்களான பிரபாகர், சுமதி, சேகர், ரோஜாரமணி, கௌசல்யா என ஐவரும்  நீங்காது இடம்பெற்றனர்.
Image result for tamil  old child artists images                                               60களின் இறுதியில் வந்தாலும், பின்னாளில் கமலஹாசனுடன் சேர்ந்து புகழ்  பெற்ற ஒரு கதாநாயகியாகத் திகழ்ந்தவர் பேபி ஸ்ரீதேவி.  'நம் நாடு'(1969) என்ற தோட்டத்திலே மலர்ந்த புத்தம்புது முல்லையாக, 'நல்ல பேரை வாங்க வேணும் பிள்ளைகளே' என எம்ஜியாரிடம் அறிவுரை கேட்டு,    பாலமுருகனாக தேவரின் 'துணைவன்' (1969 ) இல் தனது மென்பாதங்களைப்  பதித்து வந்தவர்தான்  பேபி ஸ்ரீதேவி.[(1961இல்  வெளியான   'ஸ்ரீவள்ளி' யில் விஜயகுமாரும் அதற்கு முன்னமே 1953இல் வந்த   'ஔவையார்'இல் பாலாஜியும் பாலமுருகனாகத் தோன்றி முறுவல் புரிந்து விட்ட  குட்டி நடிகர்கள். பின்னால்  அவர்கள் பெரிய  நடிகர்களானது  தெரிந்த விஷயம்.)]
  'நம் நாட்டைக்' குட்டி பத்மியுடன் பகிர்ந்து கொண்டவள்  'பெண் தெய்வத்தை'(1970) பேபி சுமதியுடன் தரிசித்த பின் 'இதோ எந்தன் தெய்வம் ' என அடையாளப்படுத்தினார் நடிகர் திலகம்.('பாபு'-1970). அவரது 'வசந்த மாளிகையில்'(1973) அண்ணன் பாலாஜியின் மகளாக்கி  அழகு பார்த்தவர் 'ராஜபார்ட் ரங்கதுரை' (1973) யில் நாடகக் குறவள்ளியாக உலவவிட , அவளைத் தனது மகனாக்கிப்   'பிரார்த்தனை' (1973) புரிய அழைத்தார்  AVM ராஜன். தனது 'தெய்வக் குழந்தைகள்' (1973) இல் ஒன்றாக்கினார் குகநாதன். 'கனிமுத்துப் பாப்பா' (1872) எனக் கொண்டாடினார் ஜெயசங்கர் லக்ஷ்மியுடன் சேர்ந்து.
Image result for baby sridevi photos                                     தனது 100ஆவது படத்தில் 'திருமாங்கல்யம்' (1974) பூணுவதைக்காண அழைத்தார் செல்வி ஜெயலலிதா. தனது பாஞ்சாலி 'சபதம்'(1971) நாட்டிய நாடகத்தில் பாஞ்சாலி எல்.விஜயலக்ஷ்மியைக்  காக்க வந்த  பால கண்ணனாகத் தரிசித்தவளை 'எங்கள் குல தெய்வம்'(1974) என்றும் 'அவளுக்கு நிகர் அவளே'(1974) என்றும் தன் பங்குக்குக்  கொண்டாடி மகிழ்ந்த புன்னகை அரசி கடைசியில்  'திருடி'(1974) யாக்கியதுடன் நிறுத்திக்கொண்டார். இடையில்'யானை வளர்த்த வானம்பாடி மகன்'(1971) ஆகவும் ஒரு கோலம்  கொண்டாள்.
Image result for baby sridevi photos
     
                             பாலமுருகனாக மறுபடியும் தோன்றி (அகத்தியர்-1972) ஔவையுடன்.(கே.பி.சுந்தராம்பாள்) அலப்பறை புரிந்தவளை  'தசாவதாரம்'(1976) கண்ட ராமனின் சீதாதேவியாக்கி பேபி ஸ்ரீதேவியின் முதல் அத்தியாயத்தை இனிதே முற்றுப் பெறச் செய்தார் ஏபிஎன். ஆறு வயதில்  ஆரம்பித்து 13 வயதில் பக்குவப்பட்டுவிட்ட ஸ்ரீதேவி கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்தார். கே.பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு (1976) அவரது அடுத்த அத்தியாயத்துக்குப்        பிள்ளையார் சுழி போட்டது.
                
இதே காலகட்டத்தில் கே.பாலசந்தரின் 'பாமா விஜயம்'(1967)   'தாமரை நெஞ்சம்'(1968)  உட்பட சாந்தி நிலையம் (1969)' எங்க மாமா'(1970) ' மூன்று தெய்வங்கள்'  (1971) என ஆண்டுக்கொரு படமாகத் தத்தித் தத்தி வந்த பேபி ஜெயகௌசல்யா கும(மா)ரியான பின்னர் ஹிந்திப் படவுலகில் தஞ்சம் புகுந்து விட்டார்.
                     
 பிறந்த நாள் திருநாள் காணும் 'கட்டழகுத் தங்க மகளாக', ஜெயலலிதாவின் தங்கையாக 'காவல்காரன்'(1967 )இல் ஆடல்பாடலுடன் அறிமுகமான பேபி ராஜி அதன்பின் 'தெய்வீக உறவு'(1868), தாமரை நெஞ்சம்'(1968)  'அத்தைமகள்' (1969) என ஓரிரு படங்களுடன் ஓய்ந்து விட்டாள்.  'ஒளி விளக்கு'(1968) 'பாமா விஜயம்'(1969), 'வா ராஜா வா'(1969) போன்ற வெகு சில படங்களில் பேபி மைதிலி நடித்தாள். 'ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு' என 'மணியோசை'[1963]யில் [பின்னணிக்  குரல்-எல்.ஆர்.ஈஸ்வரி/இசை-விஸ்வநாதன்+ராமமூர்த்தி] கல்யாண்குமாரைக் கலாய்த்தவர் பேபி சந்திரகலா.


                                                               'அந்த நாள்' இயக்குனர் எஸ். பாலச்சந்தரால் 'அவனா இவன்?’மூலம்'(1962)அறிமுகமாகி அண்ணாவின் 'எதையும் தாங்கும் இதயம்'(1962)  கண்டு,
  இலக்கிய   வெளியீடான 'கர்ணன்'(1964) வாயிலாகக் காலூன்றி,'என்னதான் முடிவு?'(1965 )எனப் புறப்பட்டு ,'தெய்வீக உறவு'(1968) வரை தளராது முன்னேறி,
 நாகராஜனின் 'கந்தன் கருணை'(1967) யில் பால முருகனாக எழிற் கோலங் காட்டிய 
மாஸ்டர் ஸ்ரீதர்  'நான்'(1967) இல்  தொடர்ந்து பின்  நாயகனாக உயர்த்திவிட்ட              'அருட்பெருஞ்சோதி'  (1971) மற்றும்  கே.எஸ்.ஜியின் 'குறத்தி மகனுடன்'(1972) நிறுத்திக் கொண்டு விட்டதும் ஏனோ தெரியவில்லை!   (இளைஞனாக 'நல்லதொரு குடும்பம்(1979), 'நம்பினார் கெடுவதில்லை' (1986),' முப்பெருந் தேவியர்' (1987) என ஒருசில படங்களில் தலை காட்டினார்தான்.)

   ' ஒளி விளக்கு'(1968), மனசாட்சி(1969), 'ஏன்' (1974)படங்களில் நடித்தமாஸ்டர் ஆதிநாராயணன் 'பாமா விஜயம்' , இருகோடுகள்', நான்கு சுவர்கள்'(1971) என பாலசந்தர் படங்களிலும்    வந்தான். AVM இன் 'ராமு' படத்தில் மட்டும் நடித்த போதிலும் மாஸ்டர்  ராஜ் குமார் ரசிகர்களைக் கண் கலங்க வைத்த சிறப்பான நடிப்பால்  பசுமையாக நினைவில் நிற்கிறான். ''மெட்ராஸ் ரூ பாண்டிச்சேரியில்' (1966) அறிமுகமான பகோடா காதரின் நடிப்பில் நகைச்சுவை தூள் பரத்தியது. 'கந்தன் கருணை'(1967),   ' ஒளிவிளக்கு'(1968) உட்படப் பல படங்களில் அவன் சிரிக்க வைத்தான்.
Image result for tamil  old child artists images
இவ்வாறாக 60களில் பல குட்டி நடிகர்கள் இனங்காணப்பட்ட போதிலும் 70களில் குறிப்பிடத் தக்களவு நிலைமை இல்லை. பேபி இந்திரா ஒருத்தி மட்டும் முன்னணியில்.'அம்மாவும் அப்பாவும் வெள்ளப் பூனைகள்' என ஆர்.சுந்தரராஜன்+விஜயகுமாரி தம்பதியின் மகளாக வந்து  (MSV இசையில் புஷ்பலதா குரலில்) பாடி மாமா சிவாஜியின் 'அன்பைத்தேடி'(1974) அடியெடுத்து வைத்தவள்தான் பேபி  இந்திரா. 'மணிப்பயல்(1974)'  'கடவுள் மாமா' (1974)' டாக்டரம்மா'(1974),  ' பிஞ்சு மனம்' (1975) எனத் தொடர்ந்தவளின் காட்டில் 'வட்டத்துள் சதுரம்' (1978)  வரை அடைமழை கொட்டியது.                      
Image result for baby indira photosImage result for baby indira photos அன்பின் அலைகள்1977ஆம் ஆண்டுக்கான  சிறந்த குட்டி நட்சத்திரத்துக்கான தமிழக மாநில அரசின் விருதைப் பெற்றுக் கொடுத்தது.. பின்னர்  பாக்யராஜின் தங்கையாக 'டார்லிங் டார்லிங்..டார்லிங்.'.கில்(1982) கண்டோம்.தொடர்ந்து   குமாரி இந்திராவாகி கன்னட 'ஆஷா'வில் 1983இல் அர்ஜுனின் கதாநாயகியானார். தமிழிலும் 'வெள்ளி நிலா'   'நிலா நிலா ஓடிவாஎன ஓடாத நிலாக்களைக் கலைத்துப் பிடித்துக் கதாநாயகியானார். குட்டி நடிகனாக அறிமுகமாகிப் பின் ஒருபட நாயகனான (மாஸ்டர்) ஸ்ரீதரைத் தன வாழ்க்கைத் துணைவனாக்கிக் கொண்டார். இவரது தங்கை ராசியும் இவர் வழியிலேயே குட்டி நடிகையாகிச் சில  படங்களில் நடித்துக் காணாமற் போனார்.

1975இல் வெளியான 'நாளை நமதே' எம்ஜியாரின் மாபெரும் வெற்றிச் சித்திரம். அதில் குட்டி எம்ஜியாராக வந்து மிடுக்காக  கிற்றார் மீட்டியபடி அம்மா ராஜஸ்ரீ யுடன்  சேர்ந்து 'நாளை நமதே..' என் ரசனையுடன் பாடிய சிறுவன்  வேறு  யாருமல்ல.சின்னத்திரை 'வாணி -ராணி' நாடகத் தொடர் புகழ் பப்லூ பிருதிவிராஜ்தான் அவன்!Master Paplu-Naan Vazhavaippen 1979-2
          மாஸ்டர்  பப்லூ 1971இலேயே கே.பாலச்சந்தரின் 'நான்கு சுவர்கள்' ஊடாக  சினிமாவில் நுழைந்து விட்டான். தொடர்ந்து 'நீதி'(1972), 'பாரத விலாஸ்'(1973),'நாளை நமதே', இடையில் ஒரு தெலுங்குப் படம். 1979 இல் சிவாஜியின் தம்பியாக 'நான் வாழ வைப்பேன்'.(குட்டியாகக் கண்ட ராஜியையும் குமாரியாகக் காண முடிந்தது அப்படத்தில்).
              இப்படி நாலைந்து தமிழ்ப் படங்களில்  பாலகனாக நடித்த பப்லூ சில ஆண்டுகள் இடைவெளியின்  பின் ரி..ராஜேந்தரின் 'ஒரு தாயின் சபத'துடன் 1987இல் மறுபடியும் களமிறங்கினார். மீண்டும் பாலசந்தர் கைகொடுக்க 'வானமே எல்லை'(1992) என வைசாலி கண்ணதாசனுடன் கைகோத்து வலம் வந்தார். வில்லனாகவும் வீணனாகவும் ஆறாண்டுகளில் ஒரு பன்னிரண்டு திரைப்படங்கள்.1997இல் நடித்த ஒரு தெலுங்குப் படம் சிறந்த வில்லனுக்கான விருதைப் பெற்றுக்கொடுக்க அடுத்த பத்து ஆண்டுகளும் ஆந்திரப்பட வில்லனாக ஒரு முப்பது படங்கள். 40 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட படங்களை(ஹிந்தி,கன்னடம் உட்பட) நடித்து முடித்துவிட்ட போதிலும் பப்லுவுக்கு வெள்ளித்திரை கொடுக்காத வெளிச்சத்தை சின்னத்திரைதான்  பெறறுக் கொடுத்தது. 'ரமணி  Vs ரமணி' (இணையாக வாசுகி) நகைச்சுவைத் தொடர் உட்பட 'மர்ம தேசம்', 'அரசி, 'வாணி -ராணி' என அவர் நடித்த தொடர்கள் அவர் புகழைப் பறைசாற்றுகின்றன. பெரும்பாலான குட்டி நடிகர்களைப் போல காணாமற் போய்விடாமல் தொடர்ந்து தனது திறமையை எண்பித்து வரும் அவரைப் பாராட்டத்தானே வேண்டும்?
Varuvan Vadivelan Cover .jpg

'நம்ம குழந்தைகள்' (1970) என்றொரு படம். குழந்தை எழுத்தாளர் பூவண்ணனின் கதை. சிறுவர்களின் குண இயல்பை மையப்படுத்திய குடும்பக் கதை. அதில் பண்பட்ட நடிகர் ரி.எஸ்.பகவதியின் மகனாக நடித்த மாஸ்டர் கிருஷ்ணகுமாருக்கு சிறந்த குட்டி நட்சத்திரத்துக்கான மாநில அரசின் விருது கிடைத்தது. 1978இல் வெளியான 'வருவான் வடிவேலன்இல் நடித்த பேபி சுதாவுக்கு  அவ்வாண்டின்  சிறந்த குட்டி நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.  பேபி சுதா அடுத்த ஆண்டில்  ' ஞானக் குழந்தை' (1979)யில் ஞான சம்பந்தராகவும்  நடித்தாள்.   'ஸ்ரீ காஞ்சி காமாட்சி'[1978],  'வேலும் மயிலும்துணை' [1979], 'தாயில்லாமல் நானில்லை'[1979] போன்ற வேறு  சில படங்களிலும் பேபி சுதா நடித்தாள்.
                          'ஊருக்கு  உழைப்பவன் (1976) ' உழைக்கும் கரங்கள்'(1976)  படங்களில் பேபி ராஜகுமாரியும், 'மாந் தோப்புக் கிளியே'[1979], வேலும் மயிலும் துணை'[1979] படங்களில் பேபி துளசியும்,. 'கந்தன் கருணையில்[1967] பேபி செல்வியும், 'கண்ணா நலமா'(1972)   'கட்டிலா தொட்டிலா' (1973) 'தெய்வக் குழந்தைகள் '(1973)          ஆகிய    படங்களில் மாஸ்டர் ராமுவும்
  'தசாவதாரத்தில்(1976)' பிரகலாதனாக மாஸ்டர் ரகுராமும்,  'முருகன் அடிமை'(1977)யில் மாஸ்டர் ரகுவும்  'உத்தமனில்('கேளாய் மகனே..கேள் ஒரு வார்த்தை..')Master Titto
வும்,  ராஜபார்ட் ரங்கதுரை'(1973)யில் மாஸ்டர் பிரேம்குமார், மாஸ்டர் பூபதி, மாஸ்டர் தசரதனும் 70களில் நடித்த சிறுவர்களில் அவ்வளவாக கண்டுகொள்ளப் படாதவர்கள்.மாஸ்டர் தசரதன் 'வா ராஜா வா'[1969]இலும் நடித்தான்.
இவர்களைவிட எமது தேடலில் சிக்காமல் விடுபட்டவர்களும் இருக்கலாம். தெரிந்தால் அறியத்தாருங்கள்.சேர்த்துக்கொள்வோம்.

                                                                         ( 80களும் அதற்குப்பின்னும் ..தொடர்ந்து வரும்)

* இப்பதிவில் அன்பர் சகாதேவன் விஜயகுமாரின் -- 'antrukandamugam.wordpress.com'வலைப்பதிவில் இருந்து குட்டி நடிகர்களின் அரிய சில புகைப்படங்கள்  அவரது அனுமதியுடன் எடுத்தாளப் பட்டுள்ளன.நன்றி திரு.சகாதேவன் விஜயகுமார் அவர்களே.     

                                        


Image result for baby shamili and shalini childhood photos
Image result for cartoon images of studio cameras

                                
Image result for baby nainika photos 
Image result for baby sara photos  
Image result for baby nainika photos 
Image result for baby shamili and shalini childhood photos       
Image result for baby sara photosImage result for baby nainika photosImage result for babi shriya sarma wiki

                                                                                     


     சினிமா – 2                                        


Image result for film roll images
Image result for cartoon images of studio  filming cameras
தமிழ்த் திரையுலக மாஸ்டர்களும் பேபிகளும்
1980   களிலும் அதற்குப் பின்னும்
         
Image result for uthiri pookal movie stills   80களில் அஞ்சு, மீனா, ஷாமினி, ஷாலினி என்ற நான்கு குட்டி நட்சத்திரங்களின் வருகை தமிழ் திரையுலகை மீண்டும் மலரச் செய்தது. தனது நாலாவது வயதில் மகேந்திரனின் 'உதிரிப் பூக்கள்'ளில்(1981) பூத்த பேபி அஞ்சுவின் அரும்புச் சிரிப்பும் குறும்புச் செயல்களும், 'மீண்டும் கோகிலா'(1981) ' டார்லிங் டார்லிங் டார்லிங்'(1982)  'பூம் பூம் மாடு'(1982)  'வடிவங்கள்'(1982)'  'அபிராமி'(1982)  ஹிட்லர் உமாநாத்'(1982)  வில்லியனூர் மாதா'(1983) 'நீ தொடும் போது'(1984)என் செல்லமே'(1985)  'ஆயிரம் பூக்கள் மலரட்டும்'(1986)  என வசந்தின் 'கேளடி கண்மணி'(1990)யில் நாயகி ஆகும்வரை தொடர்ந்ததது. இவ்விடைக்காலத்தில் தமிழில் 14படங்களும் மலையாளத்தில் 17 படங்களுமாக மொத்தம் 31 திரைப் படங்களில் குட்டி நட்சத்திரமாகவே கோலோச்சி விட்டார் பேபி அஞ்சு. மலையாளத்தில் சிறந்த நடிகையாக 'ருக்மணி' என்ற திரைப் படத்தின் மூலம் 1989இல்  தெரிவான பின் மலையாளத் திரையுலகு அவரைப் பெரிதும் ஈர்த்துக் கொண்டுவிட்டது. நடிகர் OAK சுந்தரை அஞ்சு மணந்தது கொண்டார்.
Image result for tamil actress baby meena childhood  photosபேபி மீனா அறிமுகமானது  1982இல் சிவாஜியின் 'நெஞ்சங்கள்' மூலம்தான். அதே ஆண்டில் சிவகுமாரின் மகளாக 'தீர்ப்புகள் திருத்தப்படலாம்', ரஜனியின் 'எங்கேயோ கேட்ட குரல்'. தொடர்ந்து 'அன்புள்ள ரஜனிகாந்த்'(1983) சிவாஜியின் 'திருப்பம்'(1983) 'சுமங்கலி'(1983) லக்ஷ்மி வந்தாச்சு' (1985) நதியாவின் 'உயிரே உனக்காக'(1986), அமலாவுடன் 'பன்னீர் நதிகள்' (1986), வசந்தி'(1986) என (8 தெலுங்கு-02 மலையாளம் உட்பட) 45 படங்கள் மட்டில் குட்டி நட்சத்திரமாக நடித்துள்ளதாக அவரைப் பற்றிய விக்கிபீடியா  விளம்புகிறது.
Image result for tamil actress baby shalini childhood photos  தனது மூன்றாவது வயதில்  மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்த பேபி ஷாலினி இரண்டு ஆண்டுகளை 13 படங்களில் நடித்த பின் தமிழ்த் திரையுலகில் தனது மென் பாதங்களைப் பதித்தார்.1985இல் 'பந்தம்','விடுதலை', 'பிள்ளை நிலா', 1986இல் 'நிலவே மலரே' 'சங்கர் குரு', 'சிறைப் பறவை' 'ஆயிரம் கண்ணுடையாள்',. 1989இல் 'சின்ன ரோஜா' எனக் கிடுகிடு என நடை போட்டவர் மீண்டும் சொந்த பூமியான மலையாளக் கரையில் சிலகாலம் ஒதுங்கிப் பின் 'காதலுக்கு மரியாதை' நாயகியாக 1997இல் தமிழுக்குத் திரும்பினார். நடிகர் அஜித்தின் நிஜ நாயகியான பின் அவர் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டது தெரிந்த சங்கதி.
Image result for baby shamili and shalini childhood photos
அக்கா ஷாலினியைத் தொடர்ந்து அவரிலும் 7 வயது இளையவரான பேபி ஷாமிலி தனது  இரண்டாவது வயதில் 1989இல் 'ராஜநடை' பயில வந்தார்.  'அஞ்சலி'(1990) தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்து அவள் புகழுக்குக் கட்டியங் கூற, அதே 1990இல் 'துர்கா', 'செந்தூரதேவி', 'தைப்பூசம்', 'வாசலில் ஒரு வெண்ணிலா', அன்புச் சங்கிலி' முதலான படங்கள் உட்பட, தொடர்ந்து 'சின்னக் கண்ணம்மா'(1992), 'தேவர் வீட்டுப் பொண்ணு'(1992), 'சிவசங்கரி'(1993), 'தங்கப் பாப்பா'(1993) என ஒரு டசினுக்குக் குறையாத படங்களிலும்  நடித்துத் தமிழ்ப் படங்களை வெற்றிகரமாக ஓடவைக்கும் Box office நடிகையாக மாறிவிட்டார். 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' (2000) தான் குட்டி ஷாமிளியைக் கடைசியாகக் காணக் கிடைத்த படம்.
இயல்பிலேயே சுட்டித்தனமான குட்டி நடிகர்களை ரசிகர்கள் இலகுவில் மறந்து விடுவதில்லை. திரையுலகமும் பயன்படுத்தாமல் விட்டுவிடுவதில்லை. அவ்வாறாக மக்கள்  மனங்களைச் சிக்கெனப் பிடித்துக் கொண்ட ஒரு சிறுவன் மாஸ்டர் மகேந்திரன். குறும்பு கொப்பளிக்க மின்னும் அவன் விழிகளை-அவை சொன்ன கதைகளை மறக்கத்தான் முடியுமா? நகைச் சுவையில் கொடி நாட்டிய பெரிய நடிகர்களையே பின்னுக்குத் தள்ளிவிட்டுக் கலகலப்பூட்டிப் பிரமிக்க வைத்தவன் அந்த மாஸ்டர்  மகேந்திரன்.
                                     தமிழறியாத தெலுங்குக் குடும்பத்தில் பிறந்து, வறுமையோடு போராடிக் கொண்டிருந்தவனை கே.எஸ். ரவிக்குமார் கைதூக்கிவிட 'நாட்டாமை'(1994) அருளால் மூன்று வயதில் மழலை மொழிந்து குறுநடை புரிய ஆரம்பித்தவன் அடுத்த பத்தாண்டுகளுள் ஆறு மொழிகளில் நூறு படங்களை அனாயாசமாக  நடித்து முடித்து, பாராட்டுகளும் பரிசில்களுமாகப் பெற்று, ரசிகர்களை விழிவிரிய வைத்து விட்டான்
Image result for kumbakonam gopalu movie photosசிறந்த குட்டி நடிகனுக்கான  தமிழ் நாடு மாநில விருதை, 'தாய்க்குலமே தாய்க்குலமே'(1995)க்காக ஒரு முறையும், 'கும்பகோணம் கோபாலு'(1998) க்காக ஒருமுறையும் என இரு தடவைகள் பெற்ற மாஸ்டர் மகேந்திரன் தெலுங்கு தேச நந்தி விருதையும் 1999, 2001 ஆகிய ஈராண்டுகளிலும் சுவீகரித்துக் கொண்டான்.
 சின்ன சரத்குமாராக 'மகாபிரபு'(1996)   சின்னப்பிரபுவாக 'பரம்பரை'(1996)    குட்டிப் பார்த்திபனாக 'வாய்மையே வெல்லும்'(1997)  சின்ன  வயது அர்ஜுனாக 'சூர்யப்பறவை'(1999) வடிவேலுவின் மகனாக 'ஆளுக்கொரு ஆசை'(2003)  படங்களில் நடித்த மாஸ்டர் மகேந்திரனின் சாதனைப் பட்டியலில் 'ஆஹா'1997)   'மின்சாரக்  கண்ணா'(1999)திருப்பதி ஏழுமலை வெங்கடேசா'(1999) ' பாட்டாளி'(1999)  'நீ வருவாய் என'(1999)  'படையப்பா'(1999),        'சுதந்திரம்'(2000)  'மாயி(2000),  'முகவரி'(2001)போன்ற படங்கள் குறிப்பிடத் தக்கவை.
ஆளுக்கொரு ஆசை'யுடன் மகேந்திரனின் அந்தப் பாலப் பருவ சாதனைகள் நிறைவு கண்டன. பத்து ஆண்டுகளின் பின்னர் 2013இல் நாயகனாகக் களமிறங்கிய 'விழா' ஏனோ பெரிதாகக் கொண்டாடப் படவில்லை.
Image result for anjali  1990 movie  stills
Image result for thanga meengal movie stillsசிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது முதன் முறையாக 1968இல் பேபி ராணிக்குக் கிடைத்தது.பின்னர் 1990இல் 'அஞ்சலி'க்காக ஷாமிலி, தருண் குமார்,. சுருதி
  ஆகிய மூன்று சிறுவர்களுக்கும் கிடைத்தது.1998இல் சந்தோஷ் சிவனின்  'மல்லி' யில் நடித்த பேபி பி.சுவேதாவுக்குக்  கிடைத்தது. 2001இலும் பேபி சுவேதா இரண்டாம் முறையாக 'குட்டி' யில் சிறப்பாக நடித்தமைக்காக தேசிய விருதைத் தட்டிக் கொண்டாள். 'மனம் விரும்புதே' (1999) யிலும்  பேபி சுவேதா நடித்தாள்.2000 இல் உதயராஜும் ('நிலாக்காலம்') 2003இல் நடிகர் பார்த்திபனின் மகள் பேபி கீர்த்தனாவும்Image result for baby keerthana kannathil muthamittal - stills (மணிரத்தினத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்')-2009இல் மாஸ்டர் கிஷோருடன் மாஸ்டர் ஸ்ரீராமும்('பாண்டிராஜின் 'பசங்க') 2013இல் பேபி சாதனாவும் (ராமின் 'தங்க மீன்கள்') 2014இல் மாஸ்டர் ஜே.விக்னேஷுடன் ரமேஷும் (மணிகண்டனின் 'காக்கா மிட்டாய்') தேசிய விருது பெற்ற எமது தமிழ்ச் சிறார்கள்.
Image result for kaakkaa muddai movie  stillsதமிழிலும் மொழி மாறம் பெற்றுவந்த மலையாள  3டி   படமான 'மை டியர் குட்டிச்சாத்தான்'(1984) இல் நடித்த சிறுவர்கள் சுரேஷ், அரவிந்த்முகேஷ், சிறுமி சோனியா ஆகியோருக்கும் ஆண்டுக்கான விருது கிடைத்தது.
1990இக்குப்பின் தமிழ் நாடு மாநில அரசின் விருது பெற்ற குழந்தை நட்சத்திரங்கள் பற்றிய விபரம்-
பேபி மோனிக்கா           -       1994        -      என் ஆசை மச்சான்
பேபி Annie                                1996              ஔவை சண்முகி
பேபி ஜெனிபர்                      1997               நேருக்கு நேர் 
மாஸ்டர் விக்கி                      1999               ஒருவன்
மாஸ்டர் யுவகாந்த்                 2000               மாயி
மாஸ்டர் குறளரசன்               2001               சொன்னால் தான் காதலா?
மாஸ்டர் மதன்குமார்             2003
பேபி ஸ்ரீலட்சுமி                        2008              வண்ணத்துப்பூச்சி
பேபியாக 60-70களில் தமிழ்த் திரையிலும் பெயர் பதித்த  ரோஜாரமணியின் மகன்தான் 'அஞ்சலி'க்காக 1990இல் விருது வென்ற மாஸ்டர் தருண்குமார். 1990, 1991, 1992 எனத் தொடர்ச்சியாக மூவாண்டுகளிலும்  சிறந்த குட்டி நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை சுவீகரித்துக் கொண்ட மாஸ்டர் தருண் 'தளபதி'(1991) யிலும் 'மெற்றாசைச் சுற்றிப் பார்க்கப் போறேன்' என'மீரா'(1992) விலும் முகங் காட்டினான்.2003இல்  தனது 20ஆவது வயதில்- 'எனக்கு 20  உனக்கு 18'- என 20 வயது திரீஷாவுடன் ஜோடி சேர்ந்து நாயகனான போதிலும் சரிப்படாமல் தெலுங்கு தேசமே தஞ்சம் எனப் போய்விட்டார்.
Image result for simbu childhood stills                   லிட்டில் சுப்பர் ஸ்டார் சிலம்பரசன்  சிம்பு தனது 5ஆவது வயதிலேயே தந்தையின் தயவால் 'ஒரு தாயின் சபதம்' முடிக்க 1987இல் காலூன்றி 'எங்க வீட்டு வேலன்'(1992) உட்பட 13 வயது வரை 13 படங்களில் சிறுவனாக வலம் வந்தான்.          
Image result for vijay childhood stills
இளைய தளபதி விஜய்யும் தனது
10ஆவது வயதில் தந்தையின் துணையால்  'வெற்றி'(1984)யுடன் ஆரம்பித்து 'குடும்பம்'(1985), 'நான் சிகப்பு மனிதன்'(1985), 'வசந்த ராகம்'(1986), 'சட்டம் ஒரு விளையாட்டு'(1987), 'இது எங்கள் நீதி'(1988)என  ஐந்து ஆண்டுகளில் ஆறு படங்களைக் கடந்தார்.

மஞ்சுளா+விஜயகுமார்  நடிக தம்பதியின் கடைசி மகளான பேபி ஸ்ரீதேவியின் திரைப் பிரவேசம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அவளது ஆறாவது வயதில் 'ரிக்க்ஷாமாமா'[1992] வுடன் ஆரம்பமானது. அதே ஆண்டில் 'அம்மா வந்தாச்சு', 'டேவிட் அங்கிள்', 'தெய்வக் குழந்தை', 'சுகமான சுமைகள்' எனத் தொடர்ந்து நான்கு படங்கள். பத்தாண்டுகளின் பின்  16 வயதில்- 'அஞ்சலி'[1990]யில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவனும்  நடிகை ஷாலினியின் தமையனுமான ரிச்சர்ட்டின் கதாநாயகியாகி 'காதல் வைரஸ்' சுடன் [2002] மீள் பிரவேசம் செய்தார். எதிர்பார்த்த  வரவேற்புக்  கிட்டவில்லை.பின்னர் தெலுங்கில் பல படங்களும் தமிழில் சிலவுமாக அவரது திரைவாழ்வு சிலகாலம் தொடர்ந்தது.
Image result for poovizhi vasalile movie stills1983 ஜூலையில் பிறந்த பேபி சுஜிதா சிசுவாக' முந்தானை முடிச்சு' [1983] விலும்  'அப்பாஸ்'[1983]சிலும் தோன்றினாள்.  பின்னர்  'மந்திரப் புன்னகை'[1986] யைத்   தொடர்ந்து பாசிலின் 'பூவிழி வாசலிலே'[1987] யில் இரட்டை வேடமேற்றாள். 'காதல் பரிசு'[1987], முத்துக்கள் மூன்று'[1987], 'பாடாத தேனீக்கள்'[1988], 'அழகன்'[1991, 'தங்கமான தங்கச்சி'[1991],'நான் பேச நினைப்பதெல்லாம்'[1993] என்பன பேபி சுஜித்தா நடித்த தமிழ்ப் படங்களில் குறிப்பிடத் தக்கவை.
         மலையாளத்தைத்  தாய்மொழியாகக் கொண்ட சுஜிதா ஓரிரு தமிழ்ப்படங்களில் கதாநாயகியாக நடித்த  போதிலும்  அவ்வளவாகப் பிரகாசிக்க முடியவில்லை. வெள்ளித்திரை தராத வாய்ப்பைச் சின்னத்திரை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. வெற்றிகரமான   ஒரு கதாநாயகியாக 'கணவருக்காக', மருதாணி', 'மகாராணி' உட்பட ஆறேழு தமிழ் நாடகத் தொடர்களிலும்பத்துக்கும் மேற்பட்ட மலையாளத் தொடர்களிலும் நடித்துச் சின்னத்திரையில்   ஒரு மகாராணியாகக்     கோலோச்சி வருகிறார்.
                    
Image result for mundhanai mudichu movie stills
 1982 இல் கேரள அரசு விருதும் 1984இல் 'மை டியர் குட்டிச்சாத்தான்' க்காக தேசிய விருதும் வென்ற மாஸ்டர் சுரேஷ் பாக்யராஜின் 'டார்லிங் டார்லிங் டார்லிங் (1982), முந்தானை முடிச்சு' (1983) உட்படச் சில தமிழ்ப் படங்களில் பங்கேற்றான்.
Image result for my dear kuttichathan movie - stills   மலையாளத்தில் 'மை டியர் குட்டிச் சாத்தான்'(1984] இல் நடித்து விருது வென்ற பேபி சோனியா 'அன்புள்ள ரஜனிகாந்த்'(1984), ரேவதியின் தங்கையாக 'மௌனராகம்' (1986), 'மரகத வீணை'(1986), 'ராஜ மரியாதை' (1987) என ஒருசில தமிழ்ப் படங்களில் குட்டி நடிகையாகத் தோன்றிய போதிலும் பின்னாளில் வெள்ளித்திரையில் அவருக்குப் பெரிய வாய்ப்புகள் கிட்டவில்லை. அதனால் சின்னத்திரையில் அவர் கவனம் திரும்பிவிட்டது. அங்கு சந்தித்த நடிகர்  போஸ் வெங்கட்டை துணைவராகவும் வரித்துக் கொண்டுவிட்டார்.
                                   'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' (1988) மலையாளத்தில் வெற்றிபெற்ற படத்தின் தமிழுருவாக்கம். அதில்  சத்யராஜ் - சுஹாசினியின் வளர்ப்பு மகளாக நடித்தவள் சிறுமி கீது மோகன்தாஸ்(மலையாளத்தில் . பேபி ஷாலினி நடித்த வேடமது.) 1986இல் கேரள அரசின் சிறந்த குட்டி நடிகைக்கான விருதைப் பெற்ற பேபி கீது 2004இல் அவ்வரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றாள். தமிழில் 'நள தமயந்தி'(2003) யிலும் பின்னர் 'பொய்'(2006) யிலும் அவரைக் காண முடிந்தது.
                             2008இல் கேரள அரசின் சிறந்த குட்டி  நட்சத்திரத்துக்கான விருதைப் பெற்றவள் பேபி நிவேதா தாமஸ். 'குருவி'(2008), யில் விஜய்யின் தங்கையாக நடித்தவளை 'பாபநாசம்'(2015) பக்குவமடைந்த குமாரியாக மாற்றியிருந்தது.
Image result for uthiri pookal movie stills                      இவர்களைவிட 'சுவரில்லாத சித்திரங்கள்'(1979) இல் காஜாப் பையனாக அறிமுகமாகி 'அந்த 7 நாட்கள்' (1981) இல் பாக்கியராஜின் பக்கத்துணையாக வந்து பின்னர் 'உதிரிப்பூக்கள்'[1981] 'சம்சாரம் அது மின்சாரம்'(1986), 'தங்கக்கிளி'(1993) உட்படப் பல படங்களில் நகைச் சுவை விருந்தளித்த குட்டி பையன்  ஹாஜா ஷரீப் ,
 பாக்கியராஜின் அறிமுகங்களான, மாஸ்டர்  ஆனந்து ('மௌனகீதம்' -1981), 'தவக்களை' சிட்டிபாபு,(முந்தானை முடிச்சு'-1983), 'கிங்காங்'சங்கர் (அதிசயப்பிறவி-1990), மாஸ்டர்  ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி [மேமாதம்-1994, 'சதிலீலாவதி'-1995] , மாஸ்டர் பரத் ['போக்கிரி'-2007,  'உத்தம புத்திரன்'-2011]
                                                                                                                                                           கேபியின்  'விடுகதை '[ 1997 ] நாயகி பேபி நீனா (ராஜ மரியாதை'-1987, 'கேளடி               கண்மணி'-1990]
சின்னத்திரையில் சங்கமமாகிவிட்ட பேபி கல்யாணி ('அள்ளித் தந்த வானம்'-2001)
Image result for shriya sharma.பேபி  ரஞ்சினி ஹரிஹரன் ( 'நிலாக் காலம்'-2001,  'பாண்டவர் பூமி'-2001),
பேபி நான்சி ஜெனிபர்  ['கில்லி'-2004], பேபிஷ்ரேயா சர்மா ['சில்லுனு ஒரு காதல்'-2006, , 'எந்திரன்'-2010,      'நீ தானே  என் பொன் வசந்தம்'-2012]
2009இல் கேரள அரச விருது  வென்ற பேபி நிவேதிதா(அழகிய தமிழ் மகள்-2007),
குட்டி அனுஷ்காவாக 'அருந்ததி'(2009) யில் தோன்றிய திவ்யா நாகேஷ்
'தங்க மீன்கள்'(2013) இல் பேபி சாதனாவின்  தோழியாக வந்து மனங் கவர்ந்த சுபகுமார் ஷெல்லி,
Image result for esther anil stills2013இல் கேரள அரசின் விருது வென்ற பேபி அநிகா ('என்னை அறிந்தால்'-2015), 2010இல் இருந்து மலையாளப் படங்களில் மோகன்லால், மம்முட்டி எனப் பலருக்கும் மகளாகக்க் கலக்கி வருபவளும்   2015இல் 'பாபநாசம் மூலம் தமிழுக்கும்  அறிமுகமானாவளுமான எஸ்தர் அனில். போன்றோரையும் மறந்துவிடவோ புறக்கணித்து விடவோ முடியாது.
Image result for sara arjun stills'ஏ.எல்.விஜய்யின் 'தெய்வத் திருமகள்'(2011) ஆக வந்த பேபி சாரா அர்ஜுன்  'அழகே அழகு' என்று பாடி அசத்திய   ('சைவம்'-2014) அந்த அழகுத் தெய்வம் 'சித்திரையில் நிலாச் சோறு'(2013) இலும் இனிமை சேர்த்தது.
Image result for baby nainika stillsஇறுதியாக ஆனால் உறுதியாக   2016 இன் வெற்றித் திருமகள்- பேபியாக இருந்து  புகழ் பெற்ற நடிகையாக மாறிய நடிகை மீனாவின் அடுத்த வாரிசு பேபி நயனிகாவின் பிரவேசம் 'தெறி'யுடன் பிரகாசமாக  ஆரம்பமாகிவிட்டது.

ஹிந்தித் திரையுலகில் மீனாகுமாரி, குஷ்பு, ஹன்சிகா, ஷம்மி கபூர், சஷி கபூர், அமீர் கான், ஹிர்திக் ரோஷன் போன்ற  சில பிரபல் நடிகர்கள் குட்டி நட்சத்திரங்களாக  அறிமுகமானவர்கள்தாம்.
Image result for baby hansika  stillsபொதுவாக 3-5வயதுக்குள் திரையுலகில் நுழையும் குட்டி நடிகனோ நடிகையோ சுமார் 12, 13 வயது வரை நின்று பிடிக்கக் கூடும். பின்னர் ஒரு இடைவெளியின் பின் மீண்டும் நாயகனாக/நாயகியாக ஓரிரு படங்களில் தோன்றக்கூடும். ஆயினும் ஏனோ அவர்களால் நின்று  பிடிக்க முடிவதில்லை. கமலும்  ஸ்ரீதேவியும் விதிவிலக்காக இருவேறு பருவங்களிலும் கலக்கியவர்கள்.
      ஆரம்ப காலத்தில் கே.சுப்ரமணியமும் அவரைத் தொடர்ந்து modern ஏவிஎம், நிறுவனங்களும் எ.பி. நாகராஜனும் ஸ்ரீதர்,கோபாலகிருஷ்ணன், கே.பாலசந்தர், பாக்யராஜ் போன்ற முன்னணி நெறியாளர்களும் சிறுவர்களுக்கு முக்கியத்துவம் அளித்துத் தமிழ்த் திரைப்படங்களை

எடுத்ததுடன் புதிய  சிறுவர் சிறுமியரை  திரைக்கு அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளமை நிதர்சனமானது.
Image result for baby nainika stills
                                         

                                             Image result for images of film reels
                                                              


   









                                        
































































 iImage result for tamil child actress baby raji photosImage result for tamil child actress baby raji photosImage result for tamil child actress baby raji photosImage result for tamil child artist baby indira wiki

                                  

No comments:

Post a Comment