Monday, 4 January 2016


''கிளிக்''

(பொக்கைவாயனின்-

மொக்கைக் ( வி) தை })





    













சிரிக்கத் தெரியாதவனைச் 
செகத்தில்  விலங்கினத்தோடும் 
சிலநேரம்  பிணத்தோடும்
சேர்த்தேதாம்  எண்ணிடுவார்

சிரிப்பதற்கு  உண்டெமக்குச்
சங்கதிகள்  எத்தனையோ
விரித்து நான் விபரித்தால்
வில்லங்கம்-விடுவமதை.

ஓரட்டமத்துச்  சனிநாளில்
எட்டுப்பேர்  நாம்கூடி
வெட்டிக்கதை  பேசி
வெடிச்  சிரிப்பும்
சிரித்திருக்க
சுரிதாரில் ஒரு சிற்பம்
சரசரென நெருங்கிவர

சிரிப்பலையும்  அடங்கிவிட



'sorry  கொஞ்சம் சிரியுங்கள்
ப்ளீஸ்'   என்று
கொஞ்சுகிற கிளியொன்று
கிட்டத்தில் கிசுகிசுக்க
குரலுக்குரியவளைக்
கண் கவ்வ  மெய் மறக்கக்
காணாமற் போனதுமென் 
குறுநகையும்  மறுகணமே

சீரியசாய்  என்முகமும்
சிறுபோதில் ஆகிவிட
சிரியாத மூஞ்சிகளைச்
சிரிக்க  வைக்கும்  மந்திரமாம்
'சொல்லுங்கோ cheese என்று'
சிங்காரமாக அவள்
சொல்லிப் புன்னகைக்கின்றாள்
சிந்துதையோ முத்துக்களே

 சொக்கிப்போய்ச் சொழிவடிய
சிரித்துத் தொலைப்பமென்றால்
சொல்கேளா மூதேசி
சோப்பிளாங்கி அழுமூஞ்சி
சொறிச்செட்டை காட்டுதிது
சண்டித்தனமாகவுமே

கன்னியவள் கைக்கமெராக்
கடைக் கண்ணின் பார்வைபட
'கப்'பென்று வாய் மூடிக்
கோணிச் சென்றொரு பக்கம்
சொண்டிழுத்துக் கொண்டுவிட
சொக்கைகளும் பக்கிளடிக்க
சோகாப்பர் ஆகிவிட்டேன்

frame க்குள் எனை மடக்கிப்
புகைப்படமாய்  ஆக்கிவிடப்
பிரயத்தனமும் மிகப்
படுகின்றாள் -பாவமவள்
பூரணமாய் ஒத்துழைக்கப்
பாவிமனம் தவிக்கிறது

cheese எண்டு cheese  எண்டு
சொல்லத்தான் நான் முந்த
மின்னாமல் முழங்காமல்
வருகின்ற பேய்மழை  போல்
(கூண்டை விட்டு)
சொல்லாமல் கொள்ளாமல்
வெளிப் பறந்த பைங்கிளி போல்
. தான்முந்திப்  போய்விழுந்து
பல்லிளித்துக்  காட்டுதுபார்
'பளிச்'சென்றென் 'பல் செட்டு'
வடிவா விழுந்திருக்கு
போட்டோ வில்  இனி என்ன
'கொல்' லென்றெல்லோரும்
நல்லாச்  சிரிக்கிறதை
நாலுபடம்  எடுத்து விடும்
நாசமாப் போகட்டும்                       
        
பி.கு.இது எனது கதையல்ல. யாவும் கற்பனையே! 
                             

கி.மு.விலும் சரி
கி.பி.யிலும் சரி (கிறுக்கு முன்னும்
பின்னும்) நான் யாரிடமும் பல்லுக்
காட்டியதில்லை. sorry அரவொன்று
ஊடு புகுந்து இளிக்க வைத்து விட்டது.ஹி...ஹி ..

No comments:

Post a Comment