Thursday, 18 July 2019



சினிமா  - 4D

ஹிந்தி இசையமைப்பாளர்கள்




கோடம்பாக்கத்தை மையமாகக் கொண்டதால்  Kollywood எனப்படும் தமிழ்த் திரையுலகில் Tollywood, Mollywood, Sandalwood  எனப்படும்  ஆந்திரா  [தெலுங்கு], கேரளா  [மலையாள], கர்நாடகா [கன்னட] எனச் சூழவுள்ள  திராவிடப் பிரதேச [இதில் கொங்கணி, துளுவும் அடங்கும்] திரையுலக நடிகர்கள், இசையமைப்பாளர்கள், நெறியாளர்கள், தயாரிப்பாளர்கள் போன்றவர்களின் ஊடுருவலும் தாக்கமும் தவிர்க்கப்பட முடியாது ஒன்றி  விட்டாற் போல -
 அன்றைய Bombay யைக் கேந்திரமாகக் கொண்டதால் Bollywood  எனப்படும் ஹிந்தித் திரையுலகிலும் Bengali [மேற்கு  வங்காள], Maharashtra [மராத்தி], Punjab [பஞ்சாபி],  Gujarat [குஜராத்தி],  எனச் சூழவுள்ள மாநிலத் திரையுலகினரின் [இதில் ஓடிய (Odisha), அஸ்ஸாமிய (Assam), போஜ்புரி(Beehar),   என்பனவும் அடங்கும்] பங்களிப்பும் தாக்கமும் இருந்து வருகின்றமையும் நிதர்சனமானதே.
Hollywood இல் தயாரான முதல் பேசும் படமான Jazz Singer [06.10.1927] வெளியாகி சுமார் மூன்றரை ஆண்டுகளின் பின்  ஹிந்தியில் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா' 14.03.1931 இல் வெளியானது.
தமிழில் போலவே ஆரம்பகால ஹிந்திப் படங்களும் Studio முதலாளிமார்களின் கைகளிலேயே தங்கியிருந்தன. Cinema Company யில் மாத ஊதியம் பெற்று வேலை பார்த்த நிரந்தர இசை யமைப்பாளர்களே இசையமைத்தனர். சுமாராகப் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே பிரதான நடிகர்களாக முடிந்தது. 1939 வரை பின்னணியில்  பாடும்  முறை அறிமுகமாகாத காரணத் தால் பிரிதிவிராஜ் கபூர், அசோக் குமார் போன்ற திறமையான நடிகர்களே பாடிச் சமாளிக்க வேண்டி யும் இருந்தது. அதனால் அவர்களைப் போன்றவர்களுக்குப்  பாடற் பயிற்சியளிக்க வேண்டிய பொறுப்பும் இசையமைப்பாளர்களுக்கானது.
இன்ன பிற காரணங்களால்30, 40 களில் பாடவும் நடிக்கவும் தெரிந்த அழகிய நடிகைகளான தேவிகாராணியும் நூர்ஜஹானுவும்  சுரையாவும் பிரபலம் பெற்றனர். நடிகர்களுள் S.L. சைகால் தனது குரல் வளத்தால் பலரையும் ஈர்த்தார். 40 களின் பிற்பாதியில் வசீகர நாயகனாக திரையுலகில் நுழைந்த Talat Mehmood பின்னாளில் ஒரு பின்னணிப் பாடகராக மாறிய பின்னரே பெயரெடுத்தார். ஒரு பின்னணிப் பாடகராகவும் நாயக நடிகராகவும் சம காலத்தில் பயணித்தவர் கிஷோர் குமார்.  
ஆரம்பகால ஹிந்திப் படங்களின் வெற்றிக்கு இசையமைப்பாளர்களின் பங்களிப்பு உறுதுணையாக நின்றுதவியமை நிதர்சனமானது. 60 களுக்குள் 30 க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் நின்று நிலைத்துப் புகழீட்டிய போதிலும் அவர்களைப் பற்றிய பதிவுகள் அவ்வளவாக [ஆங்கிலத்தில்] காணப்படுவதாக இல்லை. தமிழில் சொல்லத் தேவையில்லை. அக்குறை யைக் கொஞ்சமேனும் நிறைவு செய்ய விழைகிறது எனது இத்தேடல்.
முதல் முப்பதாண்டுகளில் பொலிவூட் திரையுலகின்  இசைச் சக்கரவர்த்திகளாகத் திகழ்ந்தவர் கள் S.D. பர்மன், நௌஷாத் அலி, C.ராமச்சந்திரா, O.P. நய்யார் மற்றும் ஷங்கர்-ஜெய்கிஷன் ஆகியோர். இவர்களை பற்றிப் பார்ப்பதற்கு முன் முப்பதுகளில் திரையிசையின் முன்னோடி களாகத் திகழ்ந்த  ஐவரைப் பற்றி அறிந்து கொள்வோம்.
[01]ரிச்சர்ட் போரல் [Richard Boral] Raichand Boral 2013 stamp of India.jpg
ந்தியத் திரையிசையின் தந்தை எனப் போற்றப்படுபவர் ரிச்சர்ட் போரல். பிரபல பாடக நடிகர் சைகால் பாடி நடித்த Vidyapathy [1937], Street Singer [1938], Lagan [1941] படங்க ளுட்பட முப்பதுகளில் தொடங்கி ஐம்பதுகள் வரை [1932-1957]   சுமார் 70-75  வங்காளஹிந்தித்  திரைப் படங்களுக்கு தனது சாஸ்திரீய இசையால் வளம் சேர்த்தவர் ரிச்சர்ட். 1978 இல் பாரத அரசு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி அவரைக் கௌரவித்தது.
[02]பங்கஜ் முல்லிக்[Pankaj Mullik]




சையமைப்பாளரும் ஆரம்பகாலப் பாடக நடிகருமான பங்கஜ் முல்லிக்1931-1955 காலப் பகுதியில் பாடக நடிகர் சைகல் [K.L.Saigal] நடித்த 'தேவதாஸ்' [1936] உட்பட சுமார் 35  வங்காளஹிந்திப் படங்களுக்கு இசையமைத்த முன்னோடிகளுள் ஒருவர். பர்மன்[ Burman] ஹேமந்த முகர்ஜி[Hemanta Mukherjee] போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் இவரது இசையமைப்பில் பாடியுள்ளார்கள். ரிச்சர்ட் போரலுடன்[Richard Boral] இணைந்தும் ஒரு படத்துக்கு[Karotpati-1936] இவர் இசையமைத்தார் . 1935 இல் நிதின் போஸ்[Nithin Bose] இயக்கிய’Bakya Chakra’  திரைப்படத்தில் முதன்முதலாக பின்னணியில் பாடும்-Playback Singing- முறையை அறிமுகப்படுத்தியவரும்  இவர்தான். 1970 இல் பத்மஸ்ரீ விருதும் 1972 இல் தாதா சாஹேப் பால்கே விருதும்   இவரைத் தேடி வந்தன.

Saraswati Devi Music Director.jpg [03]சரஸ்வதிதேவி  Saraswati Devi
வெளியரங்கமாகப் பெண்கள் பாடுவதைக் கடுமையாக எதிர்க்கும் ஓரினமான பார்ஸிச் சமூகத்தில் பிறந்தவரான குர்ஷித்  All India Radio  ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஒரு வானொலிப்    பாடகியாக அறிமுகமானார்.  சரஸ்வதிதேவி என்ற பெயருக்குள் தன்னை ஒளித்துக் கொண்டார்.  நடிகை  தேவிகாரணியின் கணவரான ஹிமான்சு ராய் [Himanshu Rai] தமது Bombay Talkies திரைப்பட நிறுவனத்தை நிறுவிய போது அதன் பிரதம இசையமைப்பாளராகப் பணியாற்ற சரஸ்வதிதேவிக்கு அழைப்பு  விடுத்தார். 1935 இல் வெளியான, தேவிகாரணி நடித்த  ‘ஜவானி கி ஹவா’ [Jawani Ki Hawa] படத்துக்கு   இசையமைத்ததன் மூலம் முதல் பெண்   இசையமைப்பாளர் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டார்.
Talashe Haq’ [1935] ஹிந்தித் திரைப்படம்  மூலம் அறிமுகமான [நடிகை நர்கீசின் தாயாரான] ஜட்டான்பாய் அப்படத்துக்கும் அதைத் தொடர்ந்து அவர் தயாரித்து நடித்த மேலும் மூன்று படங்களுக்கும் இசையமைத்தார். அவரையே முதற் பெண் இசையமைப்பாளர் எனக் கருது வோரும் உளர்.]
தொடர்ந்து வெற்றிப்பட ஜோடிகளெனப்  பெயர் பெற்ற அசோக்குமாரும் தேவிகாராணியும் நடித்த 'அச்சுட் கன்யா'[Achut Kanya’[1936], 'ஜென்மபூமி' [Janma Bhoomi’[1936], ‘Jeevan Naiya’[1936], Izzat[1937], Savitri [1937], Nirmala [1938] மற்றும் தேவிகாரணி கிஷோர் சாபுவுடன் நடித்த Jeevan Prabhat [1937], அசோக் குமார் விமலாதேவியுடன் நடித்த           Prem Kahani [1937] முதலான படங்களும் அவரது இசையமைப்பால் மெருகுபெற்றன.                                   
Jeevan Prabhat (1937).jpgSong book cover with title in three languages showing the key crew of the film
1935-1950 வரையான காலப்பகுதியில் சுமார் முப்பது படங்கள் மட்டில் இசையமைத்த சரஸ்வதிதேவி அசோக்குமார்தேவிகாரணியுட்பட     அத்திரைப்படங்களில்  நடித்த நடிகர்கள் பலருக்கும் பாடுவதற்கான பயிற்சி அளிப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டார்.
தனது உதவி இசையமைப்பாளராக இருந்த  திருப்பதி [S.N.Tripathi]யுடன் இணைந்து 1955 இல் 'இனாம்'[Inaam’] என்ற படத்துக்கு இசையமைத்த சரஸ்வதிதேவி இறுதியாக இசையமைத்த படம் Babasa Ri Laadi’[1960].  தனது 68 ஆவது வயதில் 1980  இல் அவர் மரணத்தைத் தழுவிக் கொண்ட போது திரையுலகம் அவரை மறந்தே போனது.

 Anil Biswas.jpg
[04]அனில் பிஸ்வாஸ்
 30 களின் ஆரம்பத்தில் Hindustan Recording Company இல் பாடகராவும் இசையமைப் பாள ராகவும் பணியாற்றி, பின்னர் திரையுலகில் பின்னணிப்   பாடகராகஉதவி இசை யமைப் பாளராகத் தொடர்ந்து, அதன் பின்னர் ஒரு டசின் ‘ஸ்டண்ட்’ படங்களுக்கு இசையமை த்து அந்த அனுபவத்துடன் பிரபலமான மெஹ்பூப்கானின் Jagirdar[1937], Watan[1938], Aurat [1940], Alibaba[1940]  போன்ற பிரமாண்டமான படங்களுக்கு  இசையமைத்து  வெற்றி வாகை சூடியவர்தான் அனில் பிஸ்வாஸ்.                                                                                 
மற்றும் Pooja[1940],
Alibaba (1940).jpgKismet-1943-movie-poster.jpg
மற்றும் Pooja[1940]அசோக் குமாரின் வெற்றிச் சித்திரமான ‘Kismet’[1943]திலீப் குமாரின் முதற் படமான ‘Milan’[1946]மற்றும் திலீப்பின் ‘Tarana’[1951],'Arzoo’[1950],K.A.அப்பாஸின்  

Arzoo film poster, 1950.jpgTarana (1951).jpgJourney Beyond Three Seas foreign poster.jpg

கலைப் படைப்புகளான ‘Pardesi’[1957], ‘Char Dil Char Rahen’[1959]  என பிஸ்வாஸின் இசையில் உருவாகி முத்திரை பதித்த சித்திரங்கள் எத்தனை எத்தனையோ. 1963 க்குப்  பின் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்று All India Radio வைச் சரணடைந்த பிஸ்வாஸ்  பின்னாளில் Doordarshan ஐயும் தனது இசைப் பங்களிப்பால் பரிமளிக்க வைத்தார்.

[05] Keshavarao Vaman  Bhole
புகழ் பெற்ற நெறியாளர்  V.சாந்தாராமின் Prabhat Film Company க்காக 1934-1944 கால கட்டத்தில் அவரின் நெறியாள்கையில் உருவான சில  ஹிந்தி, மராத்திப் படங்களுக்கு இசை யமைத்த மராத்தியரான கேசவராவ் போலேயும் நினைவுகூரப்பட வேண்டிய ஒரு மூத்த இசை யமைப்பாளரே.இவரது இசையமைப்பில் உருவான படங்களுள் சாந்தா ஆப்தே கதாநாயகி யாக நடித்த  Amrit Manthan [1934], Kunku [1937]ஆகிய படங்கள் குறிப்பிடத் தக்கன.

Natya Manvanthra    என்ற நாட்டிய அரங்கை 1933  இல் நிறுவியதுடன் தேர்ந்த கலை விமர்சகராகவும் செயற்பட்டவர் போலே.



சினிமா  - 4D + 1
Naushadsaab1.jpg [06]நௌஷாத் அலி
40 களில்  ஆரம்பித்து தொடர்ச்சியாக 30 ஆண்டு காலம் ஹிந்தி இசைத்துறையில் வெற்றிக்கொடி நாட்டி, பரதகண்டம்  முழுமையையும் தனது மந்திர இசையால் கட்டிப்போட்ட முதன்மை இசையமைப்பாளர்தான் நௌஷாத் அலி.
மௌனப் படங்களால்  திரையரங்குகள் ஆக்ரமிக்கப் பட்டிருந்த 1920 களில் அரங்க உரிமையாளர்கள் ரசிகர்களை ஈர்ப்பதற்காக, தனிப்பட்ட ஒரு இசைக்குழுவினரைக் கொண்டு - அவர்களைத் திரைக்கு முன்புறமாக அமர வைத்து - படக் கதையோட்டத்துக்கு இசைவாக, ஹார்மோனியம், சித்தார், வயலின், தபேலா போன்ற இசைக்கருவிகளை வாசிக்க வைப்பது வழக்கம்.
அவ்விடத்து Junior Theatrical  Club இல் தன்னை இணைத்துக் கொண்டிருந்த சிறுவன் நௌஷாத்தும் அக்கலைஞர்களின் வாசிப்புகளை அவதானித்து, பின்னணி இசைச் சேர்ப்புக்கான நுணுக்கங்களை அவ்விள வயதிலேயே கிரகித்துக் கொண்டுவிட்டான்.
இறுக்கமான முஸ்லீம் கலாசாரப் பின்னணியில்  Laknow இல் பிறந்து  வளர்ந்த நௌஷாத், இசையார்வம் பிடர்  பிடித்துந்த, அதற்கு அவரது வீடு  இடமளிக்காது எனப் புரிந்து   கொண்ட காரணத்தால்வீட்டை விட்டுப் புறப்பட்டு, தனது 18 ஆவது வயதில் - 1937 இல் மும்பையில் தனது தேடலை ஆரம்பித்தார்.
Anmol Ghadi, 1946 film.jpgRattan-1944.jpgசில போராட்டங்களின் பின் நௌஷாத் தனித்து இசையமைத்த படம் Prem Nagar 1940 இல் வெளியானது.அவரது நான்காவது படமான Nai Duniya வெள்ளிவிழாக் கொண்டாடியது. சிறுமியாக சில படங்களில் நடித்துக் கொண்டிருந்த சுரையாதனது 13 ஆவது வயதில்  ஒரு பின்னணிப் பாடகியாக அறிமுகமாகி  நௌஷாத்துடன் இணைந்து முதன்முதலாப் பாடியது அப்படத்தில்தான். ஆயினும் நௌஷாத்தின் வெற்றிப் பாதையை உறுதிப் படுத்திய படம் - 13 ஆவதாக அவர் இசையமைத்து 1944 இல் வெளியான  Rattan இசைச் சித்திரம்தான். தயாரிப்புச் செலவில் 1/3 பங்கை இசையமைப்பாளருக்கு ஊதியமாக வழங்கிய படத் தயாரிப்பாளர், அதன் கிராமபோன் இசைத்தட்டு விற்பனையால் மட்டும் 4 மடங்கு பணத்தை அவ்வாண்டில் ஈட்டினாராம். வைரவிழாக் கொண்டாடிய அப்படத்தைத் தொடர்ந்து அவரது இசையில்- பாடக நடிகையர் நூர்ஜகானும் சுரையாவும் இணைக் கதாநாயகியராக நடித்து 1946 இல் வெளியான Anmol Ghadi யும் வைரவிழாக் கண்டது. தமது 86 ஆவது வயதில் 2006 இல் காலமான நௌஷாத்,அந்த முதுமைப் பருவத்திலும்தாம் இறப்பதற்கு .ஆறு மாதங் களுக்கு முன்னரே வெளியான வரலாற்றுத் திரைக்  காவியமான ‘தாஜ்மஹால்’ [Tajmahal- An Eternal Love Story -2006 ] திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.அவரது  66 ஆண்டுகால  இசைப்பயணத்தில் 66 திரைப்படங்கள் மட்டிலுமே அவர் இசையமைத்த போதிலும் அதில் சரிபாதி படங்கள் வெற்றிபெற்று  வெள்ளிவிழாக் கொண்டாடின.அவற்றுள் ஒன்பது படங்கள் பொன் விழாக்கண்டன. வைர விழாவை  எட்டிய படங்கள் ஐந்து.  

A film poster showing a lady with a wooden plough on her right shoulderBaiju Bawra, 1952 poster.jpgTheatrical poster showing Prince Salim hugging Anarkali

முன்னரே குறிப்பிட்ட Rattan , AnmolGhadi தவிர பாரத் பூஷன், மீனாகுமாரி நடிப்பில் மெருகேறிய Baiju Bawara [1952] நர்கிஸ், சுனில்தத்தின் அழியா ஓவியமான Mother India [1957], திலீப்குமார், மதுபாலாவின் அமர காவியமான Mughal-e-Azam [1960] என்பவும் வைரவிழாக் கண்டனவற்றுள் அடங்கும். Filmfare விருதுகள் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே  - 1954 இல்- சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை  Baiju Bawan இசைக்காக நௌஷாத்துக்கு அளித்துக் கௌரவித்தனர்.


Uran Khatola poster.jpg
Babul1950.jpgஹிந்தித் திரையுலகின் முன்னணிக் கதாநாயகனான  திலீப்குமாரின் அபிமான இசையமைப் பாளராகத் திகழ்ந்த நௌஷாத் அவரது திரைப்படங்கள் பலவற்றுக்கும் தனது மேன்மையான இசையை வழங்கி அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்று உதவியுள்ளார். திலீப் நாயகனாக நடித்து நௌஷாத் இசையமைத்த Mela [1948], Andaz [1949], Deedar [1951], Aan [1952], Kohinoor [1960], Gunga Jumna [1961], Ram Aur Shyam [1967], Pakeeza [1971] முதலான 8 படங்களும் பொன்விழாக் கொண்டாடின. நௌஷாட் இசையில் உருவாகி பொன்விழாக் கண்ட மற்றொரு படம் சுரேந்திராவும் நஸீம் பானுவும் இணைந்து நடித்த Anoka Ada [1948].  
Aan 1952 film poster.jpgதிலீப் நடிப்பில் வெளியான Babul [1950], Uran  Khatola [1955] என்பன வெள்ளிவிழாக் கண்டன. பாடகியும் நடிகையுமான சுரையாவின் சில படங்கள் வெற்றியீட்ட நௌஷாத்தின் இசையே பிரதான காரணமாயிற்று. அவ்வாறாக Dard [1947], Natak [1947], Dillagi [1949], Dastan [1950], Deewana [1952] முதலான படங்கள் வெள்ளிவிழாக் கண்டன.
Babul [1950], Uran Khatola [1955],   Maalik [1958]என்பன நௌஷாத்தின் சொந்தத் தயாரிப்புகள்.பாடக நடிகர்கள்  Talat Mahmood,  சுரையா நடித்த Maalik  திரைப்  படத்திற்கு இசையமைத்தவர் குலாம் மொஹமட். Uran khatola மொழி மாற்றம் பெற்று 'வானரதம்'[1956] எனும் தலைப்பில் தமிழிலும் வெளியானது.Mughal-e-Azam ‘அக்பர்’[1961] எனும் மகுடத்துடன் தமிழுக்கு Dub ஆகி வந்தது. 'ஆன்’ [1952] முதல் Technicolor வண்ணத் திரைப் படமாக அதே தலைப்புடன் தமிழ்த் திரையரங்குகளையும் தரிசித்தது.நௌஷாத்தின் இன்னிசை அருவி தமிழிலும் பெருகிப் பாய்ந்தது. அதன் பேறாக நௌஷாத் அலி என்ற இசை மேதையின் சங்கீத சாகரத்தில் நாமும் சிறிதளவு முழுக கிடைத்தது.

சாஸ்திரீய இசையையும் நாட்டுப்புற இசையையும் ஆதாரமாகக் கொண்டு திரையிசை படைத்த நௌஷாத், சுரையா, மொஹமட் ராபி, உமாதேவி,அமீர்கான், படே குலாம் அலிகான் போன்ற பாடகர்களை அறிமுகம் செய்து வெளிச்சதுக்குக் கொண்டு வந்தார். பாரதத்தின் உயர் விருதான தாதா சாஹேப் பால்கே விருதை  1982 இலும் பத்மபூஷன் விருதை  1992 இலும்  நௌஷாதுக்கு வழங்கி இந்திய அரசு அவரைக் கௌரவித்தது.

[07]எஸ்.டி.பர்மன்  S.D.BurmanSachin Dev Burman 2007 stamp of India.jpg
ரம்பகால திரையிசை வரலாற்றில் தனக்கெனத் தனியிடம் பெற்றுக் கொண்டவர்தான் சச்சின் தேவ் பர்மன்[Sachin Dev Burman] எனும் எஸ்.டி.பர்மன். பழைய பாடல் ரசிகர்களால் இன்றும் வியந்து போற்றப்படும் பெருமைக்குரியவர்  பர்மன். 20 களில் ஒரு வானொலிப் பாடகனாகக் கல்கத்தாவில் வலம் வந்தவருக்கு வங்காளத் திரையுலகு 1935 இல் வாய்ப்பளித்து வழி சமைத்தது. இசையமைப்பாளராக 1937 இல் ஆரம்பித்து, ஹிந்தித் திரைவானில் அசோக் குமார் நடித்த Shikari  யுடன் 1946இல் கால் பதித்து1975 ஒக்டொபர் 31 இல் காலன் அவரது இன்னுயிரைக் கவரும்வரை அவரது இன்னிசை மழை ஓயவே இல்லை; பொழிந்து கொண்டே இருந்தது.
20 வங்காளப் படங்கள் 89  ஹிந்திப் படங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை யமைத்த பர்மனின் இசைப் பயணத்தில் அவர் பெற்ற விருதுகளுக்குப் பஞ்சமேயில்லை.
Teen Devian.jpgTaxi Driver (1954).jpgGuide 1965 film poster.jpgTaxi  Driver[1954], Abhiman[1973] திரைப்படங்கள் பிலிம்பெயார் விருதையும் Teen Devian[1965], Ardahana[1969] திரைப்படங்கள் வங்கத் திரைப்பட எழுத்தாளர் சங்க[BFJA] விருதையும் Zindagi Zindagi [1974]திரைப்படம் இந்தியத் தேசிய விருதையும் சுவீகரித்தன. ஒரு பின்னணிப் பாடகராகவும் வங்காள, ஹிந்தித் திரையரங்கில் பர்மன் தன்னை [14 படங்களில்] நிலை நிறுத்தியுள்ளார். அதற்கான அங்கீகாரமாக, சிறந்த பாடகருக்கான தேசிய விருது1970 இல் Aradhana[1969]  திரைப்படம் மூலமும் BFJA விருது  1966 இல் Guide[1965] திரைப்படம் மூலமும் அவருக்குக் கிடைத்தன.
தயாரிப்பாளரும் நடிகருமான  தேவ் ஆனந்தினது ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கிய பர்மன்  Afsar[1951], House No.44 [1955], Funtoosh [1956], Paying Guest [1957], Kala Pani[1958], Teen Devian [1965], Guide [1965],  Jewel Thief [1967]  உட்படப் பல திரைப் படங்களின் வெற்றிக்குத் தனது உன்னதமான இசைப் பங்களிப்பால்  உறுதுணையாகநின்றார்.  
Sujata (1959 film).jpgDevdas 1955 film poster.jpgBandini(1963film).jpgபுதுமைப் பட இயக்குனர் பிமல் ராயின் தேவதாஸ்,[Devdas 1955], சுஜாதா [Sujatha1959]பந்தினி [Bandini1963] முதலான வெற்றிப்  படைப்புகளிலும் தனது கை வண்ணத்தைக் காட்டினார். தயாரிப்பாள நடிகர் குருதத்தின் மாறுபட்ட திரைச் சித்திரங்கள் சிலவற்றுக்கும் [Baazi -1951], Jaal -1952, Pyassa1957, Kagaze Ke Phool1959] தனது பங்களிப்பை வழங்கினார்

Paying Guest.jpgJaal the Net.jpg
Kalapaniposter.jpgBaazi (1951).jpgJewel Thief poster.jpg
Chalti ka Naam Gaadi.jpg
தேவ் ஆனந்தின் பின்னணிக்கு குரலாக நடிகர் கிஷோர்குமாருக்குப் பாட வாய்ப்பளித்த பர்மன் பின்னாளில் அவரது படங்கள் பலவற்றுக்கு இசையமைத்ததுடன் அவரைத் தனது இரண் டாவது மகனாகவும்  ஏற்றுக் கொண்டார். அசோக் குமார் - கிஷோர் குமார் சகோதரர்களின் குடும்பத் தயாரிப்பான Chalti Ka Naam Gaadi [1958]  படத்துக்கும் இசையமைத்தவர்  பர்மன் தான். பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கரின் பாட்டனார் அவரது இசையின் மீது கொண்ட  அபிமானத்தால் தனது பேரனுக்கு சச்சின் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தாராம். பாரத அரசு 1969 இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.

                                                                            [07]ஆர்.டி.பர்மன் [R.D.Burman]
இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மனின் ஒரே மகனான ஆர்.டி.பர்மனும்[ராகுல் தேவ் பர்மன்] தந்தையார் இசையமைத்துக் கொண்டிருந்த காலத்திலேயே, -- 60 களின் ஆரம்பத்திலேயே இசையமைப்பாளர் ஆகிவிட்டார். 1961 இல் இருந்து அவர் இறுதி உயிர்மூச்சுப் பிரியும்   வரையான 33 ஆண்டுகளில் அவர் இசையமைத்த 331 திரைப்படங்களில் ஹிந்தி[292] தவிர தெலுங்கு, மராத்தி, ஒரியா படங்களுடன்  'பூ மழை பொழியுது' [1987 ], 'உலகம் பிறந்தது எனக்காக'[1990 ] எனும்  இரண்டு தமிழ்ப் படங்களும் அடங்கும்.
1983, 1984, 1995 ஆம் ஆண்டுகளில் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம் பெயார் விருதை வென்ற R.D. பர்மன்  1980 இல் தன்னிலும் ஆறு வயது மூத்தவரான பிரபலபின்னணிப் பாடகி ஆஷா போஸ்லேயைத் திருமணம் செய்து கொண்டார்.
 [08]ஷங்கர் + ஜெய்கிஷன்
Shankar Jaikishan 2013 stamp of India.jpgமுதல் இரட்டை இசையமைப்பாளர்களான ஹன்ஸ்லால்-பகத்ராம் சகோதரர்களிடம் உதவியாளராக  இருந்தவர் ஷங்கர். Harmonist ஆன ஜெய்கிஷனை நடிகர் ப்ருதிவிராஜின் பிரிதிவி தியேட்டர்ஸில் பணியாற்றிய போது அவர் சந்தித்தார். அடிக்கடி சந்திக்க நேர்ந்ததால் அவர்களுக்கிடையே நட்பு  மலர்ந்தது.  இருவருமாக இணைந்து இசையமைக்க முடிவு செய்த னர். நடிகர் ராஜ்கபூரின் இரண்டாவது தயாரிப்பான  Aag [1949] அவ்வாய்ப்பை அவர்களுக்கு நல்கியது. அதைத் தொடர்ந்து 1971 வரையான 22 ஆண்டுகளில் அவரது சொந்தத் தயாரிப் பான 10 படங்களுட்பட  ராஜ்கபூர் நடித்த 20 படங்களுக்கு ஷங்கர்+ஜெய்கிஷன் இரட்டையர் களே இசையமைத்தனர்.

Chori Chori 1956 film poster.jpgProfessor Shammi Kapoor.jpgSuraj poster.jpg

சிறந்த இசையமைப்பாளருக்கான Film fare விருதுகளை ஒன்பது தடவைகள் பெற்று இரட்டை யர்கள் படைத்த  சாதனை பத்துத் தடவைகள் பெற்ற A.R. ரஹ்மானால் பின்னர் முறியடிக்கப் பட்டது.  ராஜ்கபூர் நர்கீஸுடன் நடித்த Chori Chori [1956], நூட்டனுடன் நடித்த Anari[1959], பத்மினி யுடன் நடித்த Mere Nam Joker [1970]

Brahmachari.jpgJis Desh Mein Ganga Behti Hai poster.jpgMera Naam Joker poster.jpg
Dil Apna Aur Preet Parai.jpg
மற்றும் மீனாகுமாரி நடித்த Dil Apna Aur Preet Parai[1960], ஷம்மிகபூர் நடித்த Professor[1962], Brahmachari [1968] மனோஜ்குமார் நடித்த Pehchaan[1970], Be-Imaan [1972], வைஜயந்திமாலா நடித்த Suraj [1966] என்பனவும் Film fare விருதுகள் வென் றன.
ராஜ்கபூரின் திரைப்படங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பின்புலமாக நின்று இயங்கி யவர்கள் ஷங்கரும் ஜெய்கிஷனும் என்றால் அது மிகையல்ல. 

Shree420Poster.jpgAah film.jpgAwaara poster.jpg
SangamRaj.jpgBarsaat (1949) film poster.jpgராஜ்கபூர் நர்கீஸுடன் நடித்த அவரது ஆரம்பகால இசைச் சித்திரங்களான Barsaat [1949], Awara [1951],Aah [1953], Shree 420 [1955], என்பனவும் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட[பத்மினியுடன் நடித்த]  Jis Desh Mein Ganga Behti Hai [1961], [வைஜயந்திமாலாவுடன்]   Sangam[1964] [சைராபானு வுடன்]   Diwana [1967]  என்பனவும் இசையும் நடிப்பும் கைகோத்து நடை பயின்று தடம் பதித்த வெற்றி வெளியீடுகள்.
ராஜ்கபூரின் Aah [1953] மொழிமாற்றமுற்றுத் தமிழில் 'அவன்' [1953] ஆக அதே ஆண்டில் வெளி யான போது இரட்டையர்களின் இசையில்  A.M. ராஜா, ஜிக்கியின் குரலினணவில் கசிந் துரு கிய பாடல்கள் அத்தனையும் தேன்பாகாக நம் தமிழ் இரசிகர்களின் செவிகளைக் சென்றடை ந்து குளிர்வித்தனவே.



Filmchhotibahen.jpegArzoo 1965 film poster.jpg
Yahudi.jpgராஜ்கபூரின் திரைப் படங்களுக்கப்பால் திலீப், மீனாகுமாரி நடித்த Yahudi  [1958], பால்ராஜ் சஹானி, நந்தா நடிப்பில் வெளியான 'என் தங்கை'[1952] யின் தழுவலான  Chhoti Bahen [1959], ராஜேந்திரகுமார், மீனாகுமாரி நடிப்பில் 'நெஞ்சில் ஓர் ஆலயம்'[1962]] இன்  Remake ஆன Dil Ek Mandir [1963], ராஜேந்திரகுமார் சாதனாவுடன்  நடித்த Arzoo [1965], ஷம்மிகபூர், ஹேமமாலினி நடித்த Andaz [1971], தர்மேந்திரா,சைராபானு நடித்த Resham Ki Dori [1974], மனோஜ்குமார், ஹேமமாலினி நடித்த Sanyasi [1975] என்பனவும் சிறந்த இசையமைப்புக்காக Film fare விருது களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஏனைய சில படங்கள்.

Ramchandra Narhar Chitalkar.jpg[09]
Chitalkar Ramchandra -                       C .ராமச்சந்திரா

BhagwaanDada 1949.jpgVanamohini1941.jpgமகாராஷ்ட்ரத்தைச் சேர்ந்த சிட்டால்கர் எனும் 24 வயது இளம்  பாடகர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்  கானக்குயில் கே.தவமணிதேவி யுடன் சேர்ந்து இருகுரலிசைக் கீதமிசைத்தார் - 'வனமோகினி'க்காக, 1942இல்.அவர் வேறு யாருமல்ல. அவர்தான் Bollywood  திரையுலகின் உன்னத இசையமைப்பாளர் சி. ராமச்சந்திரா. நண்பனும் நகைச் சுவை நாயகனுமான பகவானுடன் சேர்ந்துஒரு இசையமைப்பாளனாக அவர் கால் பதித்தது தமிழகத்தில்தான்.பகவானின் தயாரிப்பில் வெளியான 'ஜெயக்கொடி'[1940] யும்  வனமோகினி' [1942]யும் தான் அவரது இசைப்பயணத்தின் கால்கோள்கள்
எஸ்.டி.பர்மன் [தேவ் ஆனந்த்], நௌஷாத்[திலீப்குமார்], ஷங்கர்-ஜெய்கிஷன்[ராஜ்கபூர்] போன்று மிகப்பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டுமே இசையமைக்காது இரண்டாம் தர நடிகர்களின் சிறிய Budget படங்களுக்கு அதிகமாக இசையமைத்த காரணத்தாலோ என்னவோ விருதுக் குழுவினரின் கணிப்பில் இடம்பெறாது தவிர்க்கப்பட்ட போதிலும்கூட அந்த இசை ஜாம்பவான்களுக்கு இணையாக இசை ரசிகர்களின் இதயங்களை ஈர்த்துக் கொண்டவர்தான் ராமச்சந்திராவும்.
Samadhi50.jpgSubah Ka Tara.jpgYasmin 1955.jpgAnarkalli.jpgNastik (1954).jpgAlbela51.jpg





Patanga [1949], Samadhi [1950], Sargam [1950], Nirala [1950], Albela [1951], Shin Shinaki Babla Boo [1952], Anarkali [1953], Nastik [1954], Suba Ka Tara [1954], Azad [1955], Insaniyat [1955], Yasmin [1955], Pehli Jhalak [1955] Devta [1956], Asha [1957],Talash [1957], 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' [1958], Amardeep [1958], Navrang [1959], Aanchl [1960], Stree [1961] Bahu Rani [1963] என 50 களில் தொடர்ச்சியாக ஒவ்வோராண்டும் தனது பெயரை நிலை நிறுத்தி வந்த ராமச்சந்திரா 1962 உடன் இந்தித்  திரையுலகில் இருந்து விலகிக் கொண்டுவிட்டார்.
அவரது வெற்றிச் சித்திரங்களில் Samadhi [1950] யும் Sargam[1950] மும் அசோக்குமார்- நளினி ஜெயவந்துடன் நடித்தவை.
Asha Hindi film 1957.jpgPaigham (1959 movie poster).jpgNavrang.jpg

Azad[1955], Insaniyat[1955], Paigham[1959] என்பன திலீப்குமார் நடித்த ஜெமினி தயாரிப்புகள். வைஜயந்திமாலா- கிஷோர்குமாருடன் நடித்த Pehli Jalak[1954], Asha[1957]   மற்றும்  சுரேஷுடன் நடித்த Yasmin[1955], தேவ் ஆனந்துடன் நடித்த Amardeep[1958], ஜெமினியுடன் நடித்த Raj Tilak [1958] என்பனவும்யதார்த்தப்பட இயக்குனர் சாந்தாராமின், Subah Ka Tara [1954], Navrang[1959], Stree[1961]  என்பனவும்  குறிப்பிடத்  தக்கன.  தமிழில் வெளியாகிப் பின் ஹிந்தியில் தழுவப்பட்ட பல படங்களுக்கும் இசையமைத்தவர் ராமச்சந்திராதான்.

Devta poster.jpgRAJ TILAK 1958.jpgAmarDeep - film poster.jpg
Azaad55.jpg
அவ்வாறாக, ‘மலைக்கள்ளன்’ [1954],  'ஆசாத்'- Azad [1955] ஆகவும்  'கணவனே கண் கண்ட தெய்வம்' [1955] Devta [1956] வாகவும் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' [1958], Raj Tilak [1958] ஆகவும் 'அமர தீபம்' [1958] Amardeep [1958] ஆகவும் 'இரும்புத்திரை'[1960] Paigham [1959] ஆகவும் ஹிந்தியில் உருமாறிய போது ராமச்சந்திராவின் இசையைச் சுவீகரித்தன.
பகவானின் Albela 'நல்ல பிள்ளை' [1953] ஆக மொழிமாற்றம் பெற்றது. Nastik [1954] திரைப்படம் தமிழில் 'மடாதிபதியின் மகள்' ஆக 1962 இல் வெளியானது. அதனது பாடல் இசைத்தட்டுகள் தமிழில் 'நாஸ்திகன்' எனும் தலைப்பில் வேளைக்கே வெளிவந்து விட்டன. கிஷோரின் Asha,  இசையையும் வைஜயந்திமாலாவையும் தத்தெடுத்துக் கொண்டு 'அதிசயப் பெண்'[ [1959]ணாகத் தமிழில்தரிசனம் தந்தது.
பீனாராய் நடித்த Anarkali [1953] அஞ்சலிதேவியின் தயாரிப்பாகத் தமிழுக்கு உருமாறிய போது இசை மெட்டுக்கள் மட்டும் கடன் வாங்கப்பட்டன. தமிழில் இரு படங்களிலுமே இசையமைப்பாளர் ராமச்சந்திராவின் பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. சுப்பையா நாயுடுவும் ஆதி நாராயண ராவும் புகழைத் தமதாக்கினார்.
பகவானின் Albela 'நல்லபிள்ளையான போது 'மை  விழி மேல் பாய்ந்து ஓடியே வந்து' நம் செவிகளைக் குளிர் வித்தது. 'அனார்கலி'யின்  மதுர கானங்களை இன்னாரது என அறியாமலே நாமும் மாந்தி மகிழ்ந்தோம். 'அதிசய பெண் தமிழில் துள்ளு நடை போட்டபோது 'ஈனா மீனா டீக்கா' என நாமும் துள்ளிசை பயின்றோம். 'சந்தானம்' தந்த 'சந்தோஷமே தான் சங்கீதமாக பொங்கிப் பொழிகின்ற மகிழ்ச்சி வேளை' யிலும் சரி  'ஓர் இரவி'ல் வந்த  'ஐயாசாமியும் ஆவோஜிசாமியும்' நம் மனதை அருட்டிய வேளையிலும் சரி அதன் காரணகர்த்தா இன்னார்   எனப் புரிந்த கொள்ளாமலே நாம் பூரித்துப் போயிருக்கிறோம்.
இவ்வாறாக இன்னும் பல தமிழ்ப்பட  இசையமைப்பாளர்கள் ராமச்சந்திராவின் மெட்டுக் களைக் 'கேட்டுக் கேள்வியில்லாமல்' சகட்டுமேனிக்கு 'காப்பி'யடித்திருக்கிறார்கள்.

Vanasundari (1951).jpg

Kalavathi1951.jpgஇலங்கை வானொலி அதன் வர்த்தக சேவையை ஆரம்பித்த போது 'நமஸ்தே நமஸ்தே' எனும் பாடலுடன்தான் ஆரம்பித்ததாம். கலாவதி [1951] படத்துக்காக A.P. கோமளா குழுவினர் பாடிய பாடலது.  'கலாவதி'க்கு இசையமைத்தவர் எம்.எஸ்.ஞானமணி. அதே மெட்டில் அதே ஆண்டில் வெளியான 'வனசுந்தரி' படத்திலும் ஒரு பாடல். அதுவும் 'நமஸ்தே நமஸ்தே ' என்றே ஆரம்பம். P.U. சின்னப்பாவும் T.R. ராஜகுமாரியும் பாடியது. 'வனசுந்தரி'க்கு இசையமைத்தவர் களோ இரு  ஜாம்பவான்கள்.சுப்புராமனும்  வெங்கடராமனும்.  இந்தப் பாடலுக்கு எவர் இசை இரவல் பெற்றார் எனத் தெரியவில்லை.

Digambara Samiyar.jpgவேடிக்கை என்னவென்றால் ஹிந்திப் பாடலும் கூட 'நமஸ்தே' என்றே ஆரம்பிக்கிறது. 1949 இல் வெளியான Patanga வுக்காக சி.ராமச்சந்திரா போட்ட மெட்டு. லதாஜி, ஷம்ஷாத் பேகம் , முஹமட் ராபியுடன் ராமச்சந்திராவும் இணைந்து பாடிய ஒரு குழுப்  பாடல். அதே வனசுந்தரி யில் மற்றொரு பாடல், 'பூவோ பூவு'. .லலிதாவுக்காக P..A.பெரியநாயகி குரல் கொடுத்த அப் பாடலின் மூலமும் அதே Patanga தான். ஆடலழகி குக்கூவுக்காக ஷம்ஷாத்  பேகம் பாடிய 'Gori Gori' என  ஆரம்பிக்கும் பாடல்தான் அது.
 'ஊசிப் பட்டாசே வேடிக்கையாத் தீ வச்சாலே வெடி டபார் டபார் ' அந்நாளில் மிகப் பிரபல மான ஒரு பாடல்.SM  சுப்பையா நாயுடுவின் இசையில் சிறுமி லலிதாவுக்காக கஜலக்ஷ்மியும் ராஜகோபாலனும் பாடிய  'திகம்பரசாமியார்'[1950] திரைப்படப் பாடல். அதன் தோற்றுவாயும் அதே Patanga தான். நிகர் சுல்தானாவுக்காக ஷம்ஷாத் பேகம் C.ராமச் சந்திராவுடன் பாடிய ' Oh Dilvaalo Dil Ka  Laganna' என ஆரம்பமாகும் பாடல்தானது. 


1949 இல் வெளிவந்த 'வாழ்க்கை' படத்தில் ஒரு பாடல் - 'ஆசை கொள்ளும் மீசையுள்ள ஆம்பிளையைப் பாத்தியா?' என்று. வைஜயந்திமாலாவுக்காக எம்.எஸ்.ராஜேஸ்வரியும் தோழிக்காக ரத்னமாலாவும் பாடியது. இசை சுதர்சனம். அந்தப் பாடல் இசையின் பிறப்பிடமும் 
Vaazhkai 1949 poster.jpgகூட அதே Patanga தான். நிகர் சுல்தானா, மோகனாவுக்காக லதாவும் ஷம்ஷாத் பேஹமும் பாடிய  Pyaar Ke Jahaan Kee ..'பாடல் ட்டில் உருவானது தானது. ஒரே படப் பாடல்களையே இத்தனை பேர் பிய்த்துப் பிடுங்கினால்...? மற்றைய பாடல்களின் கதி? உள்ளதை ஆராயப்  புறப்பட்டால் அவ்வளவுதான். நம்மவரின் பொட்டுக்கேடுகள் வெட்டவெளிச்சமாகி மானம் கப்பலேறுவதுதான் மிச்சம்.
ஹிந்தி தவிர மராத்தி, போஜ்புரி, தெலுங்கு, தமிழ் என நான்கு மொழிகளிலும் சில படங்களுக்கு இசையமைத்த ராமச்சந்திரா ஹிந்தியில் மூன்று பட்டங்களை 50களில் தயாரித்தார். 1966 இலும் 1970இலும் மராத்தியில் இரு படங்களைத் தயாரித்ததுடன் இசையமைத்து நடிக்கவும் செய்தார். The Symphony of my Life -மராத்தியில் அவர் எழுதிய தனது  சுயசரிதை. 1982இல் அவர் மெய்யுடலை விட்டுப் பிரிந்த போது அவரது வயது-64.

[10]O.P.Nayyar – O.P. நய்யார்
OP Nayyar 2013 stamp of India.jpg16 ஜனவரி 1926 இல் லாகூரில் பிறந்து தனது 11 வயதுப்  பாலப்  பருவத்தில் Al lIndia Radio வில் பியானோ வாசித்த ஒரு சிறுவன் தனது 23 ஆவது வயதில் 1949 இல் ஹிந்தித் திரை வானில் காலடி பதித்து எட்டாண்டுகளில் திரையிசையில் சிகரம் தொட்டான்.  அவன் முதன் முதலாக இசையமைத்த படம்  அவனது 26 வயதில்  1952 இல் வெளியானது. அவனது இசையில் இளமை துள்ளி விளையாடியது.பின்னாளில் 'துள்ளிசை வேந்தன்' [RhythmKing ] என விதந்துரைக்கப்பட்டவரான O.P. நய்யார் [Omkar.Prasad.Nayyar ] அச்சாதனையாளன்.
         
Guru Dutt dans Mr and Mrs 55 (1955).jpgBaaz (1953).jpgAarpaar.jpg
Mr. & Mrs. '55 poster.jpgC I D. (1956 movie poster).jpgஅவர் மூன்றாவதாக இசையமைத்த Baaz [1953] படம் மூலம் நடிகரும் நெறியாளருமான குருதத்துடன் கைகோத்தார்.Aar Paar [1954] Mr &Mrs 55[1955] எனத் தொடர்ந்த அவர்களின் பிணைப்பு C.I.D [1956] யில் உச்சம் பெற்றது.1956 இல் வெளியான C.I.D அவ்வாண்டில் வெளியான,  [ஷங்கர்-ஜெய்கிஷனின் இசையில் உருவான ] Chori Chori உட்பட அனைத்துப் படங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு வசூலில் முதலிடம் பிடித்துச் சாதனை படைத்தது.
1957 நய்யாருக்குக் கொண்டாட்டமான ஓராண்டு. Bollywood Super star திலீப்குமாருக்கு அவர் இசையமைத்த ஒரே படமான Naya Daurஅவ்வாண்டில்தான் வெளிவந்தது. சிறந்த இசையமைப்பாளருக்கான Film fare விருதையும் அது அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.
Nayadaur2.jpgThe film poster which features face of Ameeta on right and film title on the left, in the foreground. In background are two men fighting and clouds spread over whole poster.கீதாபாலியுடன் நடித்த Miss Coca Cola [1955],  நளினி  ஜெயவந்துடன் நடித்த Hum Sab Chor Hain [1956] என ஷம்மி கபூரின் ஓரிரு படங்களுக்கு ஏற்கெனவே  இசையமைத்திருந்த நய்யார் 1957 இல் இசையமைத்த படம்தான் Tumsa Nahin  Dekha. புதுமுக நடிகை  Ameeta வுடன் ஷம்மி நடித்த அப் படத்தின் வெற்றிதான் ஷம்மிகபூரின் இருப்பை ஊர்ஜிதம் செய்து அவரது நடிப்பின் திசையை மாற்றிய திருப்புமுனையாக அமைந்தது. Mujrim [1958] ஷம்மிகபூர் கீதாபாலியைத் திருமணம் செய்த பின் சேர்ந்து நடித்த ஒரு படம். அதற்கும் இசையமைத்தவர் நையார்தான்.ஷம்மிகபூர் ஷர்மிளா தாகூருடன்  நடித்து 1964 இல் வெளியான கலாட்டாப்  படமான Kashmir Ki Kali யும் சுமாரான வெற்றி பெற்றது. ஆயினும் அவர்களின் இணைவு ஏனோ தொடரவில்லை.
Naya Daur பின்னர் மொழிமாற்றம் பெற்றுத்  தமிழில் பாட்டாளியின் சபதம் '[1958] ஆகி வரவேற்புப் பெற்றது. நய்யரின் இசையில் உருவாகி  சுரேஷ், பதமினி, ஹெலன் ஆகியோர் நடிப்பில்  தமிழில் மொழிமாற்றமுற்று 'மகுடம் காத்த மங்கை' 1957] என மகுடம்  புனைந்து  வந்த மற்றொரு  படம் Quadi [1957].   படம் வெற்றி பெறாவிட்டாலும் கூட நய்யாரின் மெட்டுக் கள்  'ஆஹா என்னைப் பார் மன்னா' என்றும்  ' ஓ மோஹனச் செந்தாமரை'என்றும் 'குறும்பாய் என்னைப் பார்க்காதே' என்றும்  T.A. மோதியினதும்  ஜிக்கியினதும் குரலில் இன்னிசை மழை பொழிந்தன.
 நய்யார் இயல்பில் ஒரு சுய மரியாதைக்காரர். வாய்ப்புக்காக நடிகர்களின் பின்னால் செல்பவ ரல்ல. அவருக்கு திலீப் பட வாய்ப்புக் கிடைத்ததன் பின்னால் ஒரு கதையுண்டு. நௌஷாத்தும் திலீப்பும் சம வயதுக்காரர். ஒத்த  உணர்வு கொண்ட இருவரது இணைவும் பல வெற்றிப் படங்களின் உருவாக்கத்துக்குக் காரணமாயின.ஆனால் மதுபாலாவுடனான திலீப்பின் காதலுக்கு ஆதரவுக் கரம் நீட்டாது முட்டுக்கட்டை போட்டு அவர்களின் காதல் முறிவுக்கு ஒரு காரணராகநௌஷாத்  இருந்தமையால் 1955 இல் அவர்களுக்கிடையே ஒரு விரிசல் தோன்றி யது. அது 60 வரை நீடித்தது. அந்த இடைக் காலத்தில் சி.ராமச்சந்திரா, சலீல் சௌத்ரி உட்பட ஷங்கர்-ஜெய்கிஷனும் கூட திலீப்பின்  படங்களுக்கு இசையமைத்தனர். அவ்வாறாக நய்யா ருக்குக் கிடைத்த வாய்ப்புத் தான் அது. ஆயினும் அதற்குப் பின்னரும் நய்யார் திலீப்பைத் தேடித் போகவில்லை. அவ்வாறே ராஜ்கபூர் நடித்த ஒரே  ஒரு படத்துக்கு - Do Ustad [1959] க்கு மட்டுமே நய்யார் இசையமைத்தார். ஆனால் மதுபாலா நடித்த சில படங்கள் அவரைத் தேடி வந்தன.
ஒரு club பாடகியாக மதுபாலா அசோக்குமாருடன் நடித்தHowra Bridge[1958], நய்யாரின் ஆர்ப்பாட்டமான இசையில் அதிர்ந்தது. அப்படம்  மதுபாலாவை No .1 நாயகியாக்கி இரசிகர் களின் கனவுக்கன்னியாக மாற்றி விட நௌஷாத்தின் இசை iமுக்கிய பங்காற்றியது. ஆஷா போஸ்லேயின் கிளுகிளுப்பூட்டும் குரல் அம்மாயத்தைச் செய்தது. தொடர்ந்து மதுபாலாவுடன்  பாரத்பூஷன் நடித்த  Phagun [1958], ராஜ்கபூர் நடித்த Do Ustad [1959], தேவ் ஆனந்த் நடித்த Jaali Note [1960]படங்களில்எல்லாம் ஆஷாபோஸ்லேதான். நய்யாரின் இசையில் மதுபாலா விற்காகப்பின்னணி பாடி அவரது குரலாக மாறிப்போனார்.
 நய்யாரின் எழுச்சியிலும் வீழ்ச்சி யிலும் ஆஷா போஸ்லேயுக்கு முக்கிய பங்குண்டு. சொந்தக் சகோதரி என்ற போதிலும் ஆஷாவின் திரையுலக எதிரி லதாதான். 1948  இலேயே ஹெய்டரின் இசையில் தனக்கான பாதையைத் தெரிந்து  கொண்டவர் லதா. ஷம்ஷாத் பேகம், கீதாதத், லதா போன்றவர்களால் நிராகரிக்கப்பட்ட  பாடல்களை - சிறிய பட்ஜெட் படங்களில் கவர்ச்சி வேடம் புனைந்த மூன்றாந் தர நடிகையர்களுக்கான பாடல்களைப்- பாடி விடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் ஆஷா.

ஏனைய இசையமைப்பாளர்கள் எல்லோருமே லதாவை முற்றுகையிட்ட காலத்தில் தனது இசையமைப்பில் லதாவுக்கு எந்த ஒரு படத்திலும் வாய்ப்பளிப்பதில்லை எனும் உறுதியில் தளராதிருந்தவர் நய்யார். 1955 இல் Miss Coca Cola வில் கீதாபாலிக்காக அனைத்துப் பாடல்களையும்  ஆஷாவைப் பாட வைத்த நய்யாருக்கும் ஆஷாவுக்குமான புரிந்துணர்வும் நெருக்கமும் 1972 வரை தொடர்ந்தது. Baap Re Baap [1955],  CID [1956],  Dhake Ki Malma [1956], Hum Sab Chor Hain [1956], சுரையா நாயகியாக நடித்த Mr.Lumbu [1956], [Mr. Lumbu படத்தில் மட்டும் லதா மங்கேஷ்கர் தனியாகப்  பாடிய ஒரே ஒரு பாடல்  எவ்வாறோ இடம் பெற்று விட்டது.] Tumsa Nahin Dekha [1957], Ouadi [1957]என நய்யாரின் இசையில் படிப் படியாக முன்னேறிய ஆஷாவைப் புகழின் உச்சியில்  ஏற்றிவிட்டது வைஜயந்திமாலாவுக்காக அவர் பின்னணி பாடிய Naya Daur [1957].
1958இல்மதுபாலாவுக்காகஅவர் பின்னணி பாடிய Howra Bridge ஆஷாவுக்கு மற்றுமொரு ஏணிப்படியானது. மதுபாலா, வைஜயந்திமாலா,  பத்மினி க்கு மட்டுமன்றி ஆஷா ப்ரேக் [Phir Wohi Dil Loya Hoon -1963], ஷர்மிளா தாகூர்[ Kasmir Ki Kali -1964], சாதனா [Ek Musafir Ek Hasina -1962] மும்தாஜ் [Mere Sanam -1965], ராஜ்ஸ்ரீ [ Mohabbat Zindagi Hai (1966)] மாலா சின்ஹா [Humsaya -1968], ]பபிதா [Kismet-1968] என அறுபதுகளில் முன்னணியில் திகழ்ந்த கதாநாயகி யர் பலருக்கும் நய்யாரின் இசையில் ஆஷா போஸ்லேயே பின்னணி பாடினார். 
Phagun, 1958 film.jpgKashmir Ki Kali 1964 film poster.jpgEk Musafir Ek Hasina.jpg

ஆஷா போஸ்லே நய்யாரின் இசையில் கடைசியாகப் பாடியது 1972 இல். Pran Jaya  Per  Vachan Na Jaya என்னும்  படத்துக்காக. அப்படம் 1973 இல் வெளியாகி சிறந்த பாடகிக்கான பிலிம் பெயார்  விருதை 1974 இல் அவருக்குப்  பெற்றுக்  கொடுத்தது. .அவர்களது பிரிவின் பின் 1995 வரையான 12 ஆண்டுகளில் ஒரு தெலுங்குப் படமுட்பட பத்தே பத்துப் படங் களுக்கே நய்யார் இசையமைத்தார். சலீல் சௌத்ரி , ரவி, ரோஷன், மதன்மோகன், ஹேமந்த் குமார், R.D.பர்மன் , மொஹமட் கையூம், லக்ஷ்மிகாந்த்- பியாரிலால் எனப் பல புதிய இசை யமைப்பாளர்களின் திரை யிசையுலகப்  பிரவேசமும்  ஷங்கர்-ஜெய்கிஷன், நௌஷாத் போன்ற ஜாம்பவான்களுடனான நீடித்த போட்டியும் நய்யாரின் தளர்ச்சிக்கும் பின்னடைவுக்குமான பிரதான காரணிகளாக இருக்கலாம்.  
  நய்யாரின் 76 ஆவது வயதில் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியில் ஆஷா போஸ்லே பற்றி, தான் சந்தித்த மனிதர்களுள் மிகச் சிறந்த மனிதர் அவர்தான் என்றும் தனது வாழ்க்கைப் பாதையில் மிக முக்கியமான நபர் அவரென்றும் நயந்து கூறியிருந்தார். ஆனால் தனது முதற் கணவரை விவாகரத்துச் செய்துவிட்டுத் தன்னிலும் ஆறு வயது இளையவரான இசையமைப்பாளர் ஆர்.டி..பர்மனை தனது 47 ஆவது வயதில் மறு மணம் முடித்தவரான ஆஷாவோ, 'எந்த இசை யமைப்பாளரும் எனக்கு உதவி புரியும் பொருட்டு வாய்ப்பளிக்கவில்லை. எனது குரலமைவு அவர்களது இசைக்கு இசைவாக இருந்தமையால் சந்தர்ப்பமளித்தார்கள்'.  என மேம் போக்காகக் குறிப்பிட்டவர் தனது உயர்வுக்கு வழி காட்டியவர் எனும் தகைமையை  'நயாதௌர்'  படத் தயாரிப்பாளர் B.R.சோப்ராவுக்கு  உரித்தாக்கினார். [தகவல்:- ஆஷா போஸ்லேயின்  விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்டது]
நய்யார் இசையமைத்த பாடல்கள் பலவற்றின் தொனிப்பொருள் Too Trendy ஆக இருப்பதாகக் கூறி All India Radio அவற்றைத் தமது  வானொலியில் ஒலிபரப்பத் தடை விதித்தது. 1995 இல் திரைப்படத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற நய்யார் அதற்குப் பின்னதான பன்னிரு ஆண்டு களைத் தனிமையில் கழித்து 2007 இல் தமது 81ஆவது வயதில் காலமானார்.

நய்யாரின் இசையில் நம்மவரின்  நைஸான கைவரிசை

40, 50 களில் நமது தமிழ் இசையமைப்பாளர்கள் பலரும் ஹிந்தி இசையமைப்பாளர்களின் இனிய  இசையில் ருசி கண்டு தமதாக்கி 'இரவல் சீலையில் இது நல்ல கொய்யகமாம்' என அற்ப மகிழ்வு கொண்டு மயங்கியுள்ளனர். அவ்வாறாக நய்யாரின் இசையில் நம்மவரின் கைவரிசைகள் சில வருமாறு-
AVM  படமென்றால் சொல்லத்  தேவையில்லை. முடிந்த மட்டில் ஹிந்தியில் இருந்து உருவித் தள்ளிவிடுவார்கள். அவர்களின் தயாரிப்பாக 1955 இல் வந்து படு தோல்வியடைந்த ஒரு படம் தான் 'செல்லப்பிள்ளை’. சுதர்சனத்தின் இசையில்[?] அப்படத்தில்   சாவித்திரிக்காக ஜிக்கி பாடிய  ஒரு பாடல் 'ஓ..நிகரில்லாத நிலையில்லாத ஸ்டாராகுவேன்'. Aar Paar-1954 இல் ஹிந்தி யில் மகத்தான  வெற்றிச் சித்திரம். அதில் நடனத்  தாரகை ஷகீலாவுக்காக கீதாத்தின் குரலில் ஒலித்த பிரபலமான ஒரு பாடல்தான் ' Babuji  Dheera Chaina...'  நய்யாரின் நிகரில்லாத மெட்டு.

Chella Pillai poster.jpgAaravalli film poster.jpgAnbu Enge.jpg

Modern Theatres T.R. சுந்தரத்துக்கு பக்கத்துவீட்டு மாம்பழத்தில் பிரியம் அதிகமுண்டு. பாவம். அதற்குப் பலியாகுபவர் நம் இசைமேதை ராமநாதன்தான். 1957 இல் வெளியான  Naya Daur 'பாட்டாளியின் சபதமாக அடுத்த ஆண்டில்[1958 இல்] வரப் போவது தெரியாமல்  'ஆரவல்லி' யில் ரீட்டா, லக்ஷ்மிராஜ்யம் - இருவரும் ஆடும் ஒரு நடனக்  காட்சிக்காக ஜமுனாராணியும் T.V. ரத்தினமும் பாடிய பாடல் ' இள  மீசையுள்ள ஆம்பிளைங்க வாருங்க'. ஆயினும் அப்பாடல் ஏனோ எடுபடவில்லை. பாட்டாளியின் சபதத்தில் TMS , சுசீலா குரலில் வந்த  'உந்து முகில் சுருள் எனுமுன் கூந்தல்..' - கம்பதாசனின் கவி வரிகள் கொஞ்சம் நெருடலாக இருந்த போதி லும் கூட குத்தாட்டம்போட வைத்தது.
அதே Naya Daur இல் இருந்து மற்றொரு பாடல் மெட்டில்  விஷயம் தெரியாமல் கைவைத்து மாட்டிக் கொண்டவர் வேதாசலம் என்கிற வேதாதான். 1958 இல் வெளியான 'அன்பு எங்கே? யில் ஒரு பாடல் – ‘அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா' –S.S.R. ருடன் ரம்மியமான ரீட்டா பங்கு பெறும் பாடல் காட்சிக்காக, TMS ,பி.லீலாவின் குரலிணைவில் குளித்து வந்த இனிமையான பாடல். அதன் Original தமிழில் வந்த போது  பி.சுசீலா, T.V. ரத்தினத்தின் குரலில் 'அங்கியோடு நிஜாரணிந்து  வந்தாயே' எனக் கம்பதாசன் இட்டுக்கட்டிய பாடல் வரிகள் பிசிறடித்தன. பாடலும் எடுபடவில்லை. தஞ்சையாரின் தயவால் பிந்தியது பிரபலமாகி  முந்தி விட்டாலும் நிலைப்பவர் நய்யார் தானே.
Parthiban Kanavu (1960).jpgவேதாவின் இசையில் வெளியான அதே 'அன்பு எங்கே?யில் மற்றுமொரு பாடல் 'பூவில் வண்டு  போதை கொண்டு தாவும் நிலை  தாளேன் ஐயா '- பாலாஜி சூர்யகலாவுடனான காதற் காட்சிக்காக A.M. ராஜா ஜமுனாராணியுடன் பாடிய பாடலது.  அதே 1958 இல் ஹிந்தியில்  வெளியான படம்தான் Mujrim. அதில்  ஷம்மி கபூர் ராகினி பங்கு பெறும் [ஆஷா போஸ்லே முஹமட் ராபி பாடிய] ஒரு பாடற் காட்சிக்காக நய்யார் போட்ட மெட்டின் அப்பட்டமான 'காப்பி' தான் அது.
  1955 இல் ஹிந்தியில் வெளியான ஒரு வெற்றிச் சித்திரம் Mr.&Mrs.55.. அதில் மதுபாலா தோழியருடன் பாடும் ஒரு பாடல் –Thandi Hawa -கீதா தத், ஷம்ஷாத் பேகம் குழுவினர் பாடிய பாடல். நீண்ட காலத் தயாரிப்பில் இருந்து 1960 இல் ஆறுதலாக வந்து  தோல்வியைத் தழுவிய ஒரு தமிழ்ப் படம் 'பார்த்திபன் கனவு'. அதற்கும் இசை வேதாதான். அதில் ஜமுனாராணி குழுவினர் பாடும் ஒரு பாடல்தான் 'மல்லிகைப்பூ மரிக்கொழுந்து'. நய்யாரின் நயமான இசையின் புதிய வார்ப்புதான் வேதாவினது.

சினிமா  - 4D + 2
40, 50 களில்  Bollywood இசையுலகில் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த நௌஷாத் அலி, எஸ்.டி.பர்மன், ஷங்கர்-ஜெய்கிஷன், சி.ராமச்சந்திரா, O.P.நய்யார் எனும் அறுவரை விட அவ்வப்போது மின்னிச் சுடர்விட்ட இசையமைப்பாளர்கள் பலர். அவர்களுள் நினைவு கூரப்பட வேண்டிய ஒருசிலரைப் பற்றியும் அறிந்து கொள்ளலாமே.

[11]சலீல் சௌத்ரிImage of Salil Chowdhury

Do Bigha Zamin.jpg. 19.11.1925 இல் வங்காளத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த சலீல் சௌத்ரி  1949 இல் வங்காளத் திரையுலகில் காலடி பதித்தார். 1995 வரை ஹிந்தி [75], வங்காளம் [41], மலை யாளம் [27], தமிழ் [04] உட்பட 13 மொழிகளில் சுமார்  150  படங்களுக்கு இசையமைத்தவர். இளையராஜா இவரின் இசைக்குழுவில் ஒரு Guitarist ஆகப் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்  தக்கது.. இசையமைப்பாளராக மட்டுமின்றி ஒரு கவிஞராகவும் கதாசிரியராகவும் திகழ்ந்த சௌத்ரி அடிப்படையில் ஒரு பொது உடைமைவாதி -கம்யூனிஸ்ட்.
பிரபல ஹிந்தி நெறியாளர் பிமல் ராயின் Do Bigha Zamin [1953] ஹிந்தித் திரையுலகுக்கு அவரை அறிமுகப் படுத்தியது. அப்படத்தின் கதாசிரியரும் அவரே. சிறந்த படத்துக்கான Film fare விருதையும்  தேசிய விருதையும்  பெற்றதுடன் 7th Cannes Film Festival [1954] இல் சிறந்த இந்தியத் திரைப்  படத்துக்கான சர்வதேச விருதையும் முதன்  முதலில்  பெற்றதும் அத்திரைப் படமே.
Madhumati.jpgChemmeen.JPGKokila 1977.jpg

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட யதார்த்தமான கலைப் படைப்புகளில் சௌத்ரியின் பங்களிப்பு முதன்மை பெற்றது. ராமு கரியத்தின் 'செம்மீன்' [1965], 'நெல்லு'[1974] பாலு மகேந்திராவின்  ' கோகிலா' [1977] போன்ற மலையாள, கன்னட கலைப் படைப்புகளிலும் இசை மூலம்  தன கைவண்ணத்தைப் பதித்தார். 1958 இல் வெளியான பிமல் ராயின் வெற்றிப் படைப்பான 'மதுமதி' சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம் பெயார் விருதை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.

AzhiyadhaKolangal.jpgபாலு மகேந்திராவின் 'அழியாத கோலங்கள்'[1979] உட்பட ‘உயிர்’ [1971], கரும்பு’ [1973], ‘தூரத்து இடி  முழக்கம்’ [1980] முதலிய தமிழ்ப் படங்களும் அவர் இசையமைத்தவற்றினுள் அடங்கும்.தனது மன இயல்புக்கேற்ப கவிதையாகவோ  சிறுகதையாகவோ இசையாகவோ தனது வெளிப்பாடு அமைவதாகக் குறிப்பிடும்  சௌத்ரி மேலைத்தேயத்தினதும் கீழைத் தேயத்தினத்தினதும் பாரம்பரிய இசைக்கிடைப்பட்டதான  ஒரு   பாணியைத் தமதிசையில்  உருவாக்க முயல்வதாகவும் தெரிவித்தார். மீனாகுமாரியுடன் பால்ராஜ் சஹானி நடித்த  Pinjre Ke Panchhi [1966]  எனும் ஹிந்திப் படத்தின் தயாரிப்பாளராகவும் இலங்கிய சௌத்ரி தனது 69 ஆவது வயதில் 1995 இல் காலமாகும் வரை அவரது இசைப்பணியைத் திரையுலகில்  தொடர்ந்தார்.
Hemant Kumar 2016 stamp of India.jpg
[12]Hemant Kumar

Nagin 1954.jpg16.06.1920 இல் வாரணாசியில் பிறந்து  கொலம்பியா கிராமபோன் இசைத்தட்டுப் பாடகராக தனது 17 வயதில் அறிமுகமாகி, வங்கத் திரையுலகில் ஒரு பாடகராக 1944 இல் கால் பதித்து 1947 இல் இசையமைப்பாளராகி 1952 இல் ஹிந்தித் திரையுலகில் நுழைந்தவர் தான் ஹேமந்த் முகர்ஜி எனும் ஹேமந்த்குமார். அவர் இசையமைத்த முதற் படம் Anand Math  1952 இல் வெளியானது. அடுத்த ஆண்டில் அது மொழிமாற்றமுற்று 'ஆனந்த மடம்'[1953] ஆகத்  தமிழிலும் தலை காட்டியது.
வைஜந்திமாலா பிரதீப் குமாருடன் நடித்த வெற்றிச் சித்திரம் Nagin[1954]. அத்திரைப்பட இசைக்காக Filmfare விருது பெற்றவர் ஹேமந்த் குமார். பாடகராகவும் வங்கத்தில் புகழ் பெற்றவர்  ஹேமந்த் குமார். Aanand Math [1952],  Samrat[1954], Jagriti [1954], Ek Hi Rasta [1956], Bees Sal Baat[1962], Sahib Bibi Aur Gulam [1962] எனப் பல படங்களில்  அவரது இசையமைப்புப் பேசப்பட்டது.
The poster features face of an Indian saint in the upper-half portion while in the right side of remaining half, one begger-woman with sitar and on left the film title: ANAND MATH appears, below which there is crowd of people.Ek Hi Raasta 1956.jpgJagriti.jpg
பாடகராக இசையமைப்பாளராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் திகழ்ந்த ஹேமந்குமார் ஹிந்தியில் தயாரித்த படங்களுள் பிஸ்வஜித், வஹிதா ரஹ்மான் நடித்த  Bees Saal Baad [1962], ராஜேஷ்கண்ணா,வஹிதா ரஹ்மான் நடித்த  Khamoshi [1970] என்பன வசூலிலும் வெற்றியீட்டின..Bees Saal Baad  திரைப்படம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை அவருக்கும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான Film fare விருதை லதாவுக்கும் 
பெற்றுக்  கொடுத்தது.1979 வரை ஹிந்தித் திரைப்படங்களுக்கு இசையமைத்தஹேமந்த்குமார்    வங்கத்தில்1989 வரை தனதுபணியைத் தொடர்ந்தார் .வங்கத்தில் அவரது பங்களிப்பும் அதிகமானது  அதற்கான பாராட்டும் அதிகமாகவே கிடைக்கப் பெற்றது. 138 வங்காளத் திரைப்படங்களுக்கும் சுமார் 55 ஹிந்தித் திரைப்படங் களுக்கும் இசையமைத்த ஹேமந்த்குமார் சசிகபூர் நாயகனாக நடித்த Hollywood வரலாற்று ஆவணத் திரைப்படமான Siddhartha [1972] ஆங்கிலத் திரைப்படத்துக்கும் இசையமைத்துள்ளார்.
Sahib Bibi Aur Ghulam poster.jpgBees Saal Baad Poster.jpgKhamoshi, 1969 film.jpg
Kanavaney Kankanda Deivam.jpgநடிகை அஞ்சலிதேவியின் தெலுங்கு+தமிழ்+ஹிந்தி - மும்மொழிச் சமகாலத் தயாரிப்பான ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ [1955] தமிழ் ரசிகர்களும் அவரின் இசை ஜாலத்தை அனுபவித்து நுகரச் செய்தது. 'உன்னைக் கண் தேடுதே'[P. சுசீலா] யையும் 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ?' [சுசீலா] வையும் மறக்கத்தான் முடியுமா? ஒரு பின்னணிப் பாடகராக தேவ் ஆனந்துக்கு எஸ்.டி.பர்மனின் இசையமைப்பில் பாடியவர் பின்னாட்களில் தாமிசையமைத்த படங்களில் சுனில் தத், பிரதீப்குமார், பிஸ்வஜித், தர்மேந்திரா போன்ற கதாநாயகர்களுக்காகவும் பின்னணி பாடினார். 1971, 1986 ஆகிய ஆண்டுகளில் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதையும் ஹேமந்த்குமார் சுவீகரித்தார்.

Ghulam Mohammad composer.jpg
[13]Gulam mohammed

Mirza Ghalib poster.jpgஇசையமைப்பாளர்கள் நௌஷாத் அலியிடமும் அனில் பிஸ்வாஸிடமும் உதவியாளராகத் திரையிசைத் துறையில் 1937 இல் அறிமுகமானவர் குலாம் மொஹமட். அவர் இசையமைத்த Mirza Galib[1954] மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார். 
அவரது திரையிசை வரலாற்றில் ராஜ்கபூர், நர்கிஸ் நடித்த Amber (1952) நர்கிஸ், சஜ்ஜான் நடித்த Sheesha (1952) தலாத் மொஹமட், சியாமா நடித்த Dil-e-Naadan (1953) ஷம்மிகபூர், நூடன் நடித்த லைலா மஜ்னு [1953 ], சுனில்தத், நிம்மி நடித்த Kundan (1955), பிரதீப்குமார், வைஜயந்திமாலா நடித்த Sitara (1955), சுரையா, நிம்மி நடித்த Shama (1961) என்பனவும் நினைவுகூரப் படுவன. 

Amber 1952.jpgPakeezah.jpgKundan 1955.jpg

  
Pran.jpgமீனாகுமாரியின் நடிப்பில் நீண்டகாலத் தயாரிப்பில் இருந்து குலாம் மொஹமட்டின் மறைவின் பின் நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான Pakeezah [1972]  அவரது இசையமைப்பில் ஒரு கொடுமுடி. இப்படத்துக்காக குலாம் மொஹமட்டுக்கு சிறந்த இசை யமைப்பாளருக்கான விருதை Film fare வழங்கத் தவறியதால் தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் பிரான் ஏற்க மறுத்துவிட்டார்.

[14]மாஸ்டர் குலாம் ஹெய்டர்  Master Gulam Heider
PosterHumayun (1945).jpgDVD coverதாம் இசையமைத்த Khazannchi [1941]  திரைப்படத்தில் ஷம்ஷாத் பேகத்துடன் இணைந்து பாடிய ஒரு பாடல் மூலம் 40 களில் ஹிந்தித் திரையுலகில் புதிய அலையைத் தோற்றுவித்தவர் மாஸ்டர் குலாம் ஹெய்டர்.      

 பாடக நடிகை நூர்ஜெஹான் பிரதான பாத்திரமேற்று நடித்த முதற் படமான Khandan [1942]லதா மங்கேஷ்கருக்கு விடிவேற்படுத்திய Majboor [1948], மற்றும்   Humayun [1945] , முனவர் சுல்தானா நடித்த Kaneez [1949] போன்ற படங்களுக்கு இசையமைத்தகுலாம் ஹெய்டர் 1947 இல் தமது தாயகமான பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்துவிட்டார்.

[15]வசந்த் தேசாய்

40, 50 களில் சாந்தாராமின் ஆஸ்தான இசையமைப்பாளராக, அவரது கலைப் படைப்புகளுக்குக் களையூட்டிய இசையமைப்பாளர் வசந்த் தேசாய். மராத்திப் பாடகரும் நடிகருமான தேசாய் பெரும்பாலும் மராத்திப் படங்களுக்கே இசையமைத்தார். சாந்தாராமின் 'சகுந்தலா' [1953]வில் ஆரம்பித்து, Dr.Kotnis Ki Amar Kahani [1946], Dahej [1950],   Do Aankhen Barath Haath[1953], Janak Janak Payal Baaje [1955]  என அவரது ஐந்து ஹிந்திப்  படங்களுக்கு இசையமைத்தார். சாந்தாராமின் Janak Janak Payal Baaje [1955]  இசைச் சித்திரமாக வந்து அந்நாளில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது. நடிகர் சுனில் தத்தின்  பரீட்சாத்தப் படமான Yadein [1964] க்கும் இசையமைத்தவர் தேசாய்தான்.
Shakuntala 1943.jpgJhanak Jhanak Payal Baaje.jpgDo Aankhen Barah Haath (1957).jpg

[16]Husnlal - Bhagatram
40 களில் ஹிந்திப்பட இசையமைப்பாளராக இருந்த பண்டிட் அமர்நாத்தின் சகோதரர்களான Husnlal –Bnagatram  சகோதரர்கள் தான் முதன்முதலாக ஒன்று சேர்ந்து இசையமைத்த இரட்டையர்கள். ஷங்கர்-ஜெய்கிஷன், லக்ஷ்மிகாந்த் [பியாரிலால்],   மொஹமட்  கயூம் போன்ற பின்னாளில் பிரபலமான இசையமைப்பாளர்களின் வழிகாட்டிகளாகப்  போற்றப் படும் அவர்கள் 1944 இல் இருந்து 60 களின் இறுதி வரை 
Amar Kahani 1949.jpgBalam 1949.jpgBaribehenmovie.jpg

இணைந்தே  இசை யமைத்தனர். அவர்கள் இசையமைத்தனவற்றுள் பிரபல பாடகி+ நடிகை சுரையா நடித்த -  Aaj Ki Raat [1948], Pyaar Ki Jeet [1948], Bari Behen [1949], Balam[1949]   Amar Kahani [1949] என்பன குறிப்பிடத் தக்கன.
 

[17] S.N. திருப்பதி

டிகர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நெறியாளர் எனப் பலமுகம் கொண்டவர் S.N. திருப்பதி. 1936 முதல் 1987 வரை சுமார் 50 ஆண்டுகள் நடிகராக 27 படங்களிலும் 1941 இல் இருந்து 1962 வரை சுமார் 20 ஆண்டுகள் இசையமைப்பாளராக 75 படங்களிலும் பின்னாளில் 1957 முதல் 1976 வரை சுமார் 20 ஆண்டுகள் நெறியாளராக 18 படங்களிலும்  தனது பன்முக ஆற்றலையும் வெளிப்படுத்தியவர்தான் எஸ்.என்.திருப்பதி.
Aladdin Aur Jadui Chirag.jpgபுராண, இதிகாச, மாயாஜாலப் படங்களுக்குப் பெரும்பாலும் இசையமைத்ததுடன் அவற்றில் நடிக்கவும் செய்த திருப்பதிக்கு அனுமன் வேடம் கச்சிதமாகப் பொருந்தியதால், அனுமனைப் பிரதானப்படுத்தி வந்த, ஸ்ரீ ராமபக்த ஹனுமான், [1948], ஹனுமான் பாதாள விஜயம் [1951], ராம ஹனுமான் யுத்தம் [1957/1975]  போன்ற படங்களில் எல்லாம் அவரே நாயகர்.Hatim Tai [1956]  Aladdin Aur Jadui Chirag (1952) Rani Roopmati [1957], Kavi Kalidas [1959], Sangeet Samrat Tansen [1962] போன்ற படங்கள் அவரது சிறப்பான இசையமைப்புக்காகவும் நெறியாள்கைக்காகவும் பாராட்டப்பட்டன.
Hatim Tai (1956).jpgமூத்த இசையமைப்பாளர் சரஸ்வதிதேவியிடம் 1935 இல் இருந்து உதவியாளராகப்  பணியாற்றிப் பெற்ற அனுபவம் அவரது இசையில் பிரதிபலித்தது. சக இசையமைப்பாளர் சித்ரகுப்தாவுடன் சேர்ந்து அவர் இசையமைத்த Alibaba Aur Chaalis Chor[1952] திரைப்படப் பாடல்களும் தமிழ் இரசிகர்களின் செவிகளிலும் தேனாகப் பாய்ந்து இனிமை சேர்த்தன. Hatim Tai  'ஹாதிம்தாய்' [1956] என்ற மாயாஜாலப்படம் ஜெயராஜ்ஷகிலா நடிப்பில்  உருவானது. 'மாய மோகினி'  ஆக 1956 இல் அது தமிழில் தரிசனம் தந்தது.S.N. திருப்பதியின் இசைக்கு இசைவாக தஞ்சை ராமையாதாசும் புரட்சிதாசனும் பாடல்களைப்புனைந்திருந்தனர்.. ராஜா-ஜிக்கி இணைவில் 'வான்மதியாகியே நாமுலாவலாம்' இருகுரல் கீதமும் T.M.S.பாடிய மறவேனே எந்த நாளும்'நாகூரான் துதிப்பாடலும் நினைவில் நிற்பவை


 [18] சித்ரகுப்தா

16-11-1917 இல் பீகாரில் பிறந்த சித்ரகுப்தா 1946 இல் திரையுலகில் கால் பதிக்குமுன் ஒரு கல்லூரி  விரிவுரையாளர். ஆரம்ப காலத்தில் Fearless Nadiya வின்  Toofan Queen [1946], lady Robinhood [1946], Tigress [1948], Circuswaala [1950]சண்டைப் படங்களில் தனது சாதுரியத் தைக் காட்டியவர் பின்னர் திருப்பதியைப் போலவே மாயாஜாலப் படங்களிலும் ராஜாராணிப் புனைவுகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார்.
Zimbo 1958.jpgZabak 1961.jpgசித்ரகுப்தாவின் இசையில் உருவான சில ஹிந்திப்படங்கள் மொழிமாற்றம் பெற்று தமிழில் உலா வந்த போது அவரது இசை தமிழ் ரசிகர்களுக்கும் உவப்பானதாகி மகிழ்வித்தது. அவ்வாறாக   Zimbo [1958]-ஜிம்போ [1958],Zimbo Comes To Town[1960] -  ‘நகரத்தில் ஜிம்போ’[1961] Maya Bazaar[1958] –வீர கடோத் கஜன்'[1959],  Zabak[1961] - 'அரபு நாட்டழகி' [1961] எனச்  சில படங்கள் வெளியாகின. சித்ரா - ஆசாத் நடிப்பில் 1958 இல் வெளியான டார்ஸான் வகையறாப் படம்  ' Zimbo  ' அதே பெயரில் தமிழிலும் அதே ஆண்டில் வெளியானது. சித்ரகுப்தாவின் இசையில் [தமிழில் விஜயபாஸ்கர்] பி.சுசிலா பாடிய 'அவர் நினைவும் என் நினைவும்', 'என் நெஞ்சம் உன்னை அகலாது', பாடல்கள் நெஞ்சை விடடகலாதவை.'நம்மாசை என்ற நல்ரோஜா' P.B.S. இன் குரலில் ஒலித்த ஆரம்பகாலத் தேன்துளி. பாடலாக்கம் குயிலன்.
                     ஜிம்போவின் வெற்றியைத் தொடர்ந்து அதே கூட்டணி 1960 இல் எடுத்த படம்Zimbo comes to town’[1960]. ‘ நகரத்தில் ஜிம்போ'வாக  1961 இல் அது தமிழில் பிரவேசமசெய்தது .கே.ஜமுனாராணியின் தேன் குரலில் 'மோகம் பிறந்திடாதா', வும்  'நெஞ்சில் நிறைந்த வீரா'வுமசித்ரகுப்தாவின் துள்ளிசைத் தூறல்கள். மஹிபால் -ஷகிலா ஜோடியாக நடித்த  'Zabak'-'பக்'[1961] தமிழில் 'அரபு நாட்டு அழகி'யாக மாறி 1961 இல் வெளியானது. 'உன் அன்பைத் தேடுகின்றேன் மாது எந்தன் மாரன் வா வா', 'கண்ணீர் துளியால் நெஞ்சம்' AMR/PS   குரலில் குளித்து வந்த குளிர்ச்சியான பாடல்கள். சித்ரகுப்தாவின்இசை: தமிழில் விஜயபாஸ்கர்.
மகிபால், அனிதா குகா நடித்த Maya Bazaar[1958]புராணப்படம் 'வீர கடோத்கஜன்’ ஆக தமிழில் 1959 இல் விஜயம் செய்தது. சித்ரகுப்தாவின் இசையில் ராஜா-பி.சுசிலாவின் குரல் இணைவில் 'எழில் பொங்குமே பார்த்தாலே', 'எழில் ஓவியம் பார்த்தேனோ' -இரு பாடல்க ளுமே தென்றலின் குளுமை. 'கொஞ்சிக் கொஞ்சி குலாவலாகுதே '[ஸ்ரீனிவாஸ்/ஜமுனா ராணி]  பாடல் சுவைத்தேன்

Bhabhi 1957.jpgMain Chup Rahungi.jpgBarkha (1960).jpg

AVM  நிறுவனம் தாம் தயாரித்த சில  தமிழ்ப்படங்களை ஹிந்தியில் மீளுருவாக்கம் செய்த போது அவற்றின் இசையமைப்புக்கு சித்ரகுப்தா பொறுப்பானார். அவ்வாறாக, பால்றாஜ் சஹானி, நந்தா நடிப்பில் Bhabi [1957]  என ‘குலதெய்வ’ [1956]மும் சுனில்தத், மீனாகுமாரி, மாஸ்டர் பப்லூவின் நடிப்பில்  Main Chup Rahungi [1962] எனக் 'களத்தூர் கண்ணம்மா' [1960] வும்  ரங்காராவ், மீனாகுமாரி நடிப்பில் Main Bhi Ladki Hoon [1964]  என 'நானும் ஒரு பெண்' -[1963] ணும் அசோக்குமார், கே.ஆர்.விஜயா நடிப்பில் Oonche Log [1965] என ‘மேஜர் சந்திர காந்த்’ [1966] தும் வெளியான போது சித்ரகுப்தாவின் இசையும் பேசப்பட்டது. தமிழில் ஏ.கே.வேலன் தயாரித்த 'தை  பிறந்தால் வழி பிறக்கும்' [1958] படத்தை ஹிந்தியில் ஜெகதீப், நந்தா நடிப்பில் Barkha [1959] என AVM தயாரித்த போதும் இசைக்கு சித்ரகுப்தாவே கைகொடுத்தார்.
சித்ரகுப்தாவும் எஸ்.என்.திருப்பதியும் இணைந்து இசையமைத்த Alibaba Aur Chaalis Chor[1952]  ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ [1954] எனத் தமிழில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட போது அதில் ஒலித்த சில பாடல்களின் இசையும் உள்வாங்கப்பட்டது.

Opera House (1961).jpgஷகீலா, சந்திரசேகர் நடித்த Kali Top Lal Rumaal [1960] சரோஜாதேவி அஜித்துடன் நடித்த Opera House [1961]தர்மேந்திராவும் சாவித்திரியும் நடித்த Ganga Ki Lahren [1964]பத்மினி ராஜ்குமாருடன் நடித்த Vaasana [1968]தாராசிங்கும் அமீதாவும் நடித்த Kabhi Dhoop Kabhi Chhaon  [1971]தனுஜா நடித்த Ghar Dwaar [1985]மற்றும் 1988 இல் வெளியான Insaaf Ki Manzil [1988] உட்படப் பல திரைப்படங்களிலும் சித்ரகுப்தாவின் இசையில் உருவான பாடல்கள் பலவும் ரசிகர்களின் மனங் கவர்ந்து  இன்றுவரை நீங்காதிடம் பிடித்துள்ளன.

1946 - 1998 வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக  Bollywood திரையுலகில் நிலைத்து நின்று  150 க்கும் கூடுதலான படங்களுக்கு இசையமைத்த சித்ரகுப்தாவின் வாரிசுகளான ஆனந்த்-மிலிந்த் இரட்டையர்களும் இசையமைப்பாளர்களாகப் பின்னாட்களில் பிரபலமாகி 1989 இல் Filmfare விருதும் வென்றுள்ளார்கள். 


[19]ரவி [சங்கர்சர்மா]Bombay-ravi.jpg


றுமைக் கோட்டுக்குக்கீழ் பிறந்து நடைபாதையில் படுத்துறங்கிய ஒருவர் பின்னர் தனது சுயமுயற்சியால் முன்னேறி ஹிந்தித் திரையிசை உலகில் முத்திரை பதித்தார். 1962, 1966 ஆம் ஆண்டுகளில் filmfare விருதுகள் வென்ற ரவி என்கிற ரவிசங்கர்சர்மாவே அச்சாதனையாளர். ஒரு Electrician  ஆக ஆரம்பத்தில்  வாழ்க்கையைத் தொடங்கிய ரவி சினிமாவுலகில் நுழைந்தது ஒரு கோரஸ் பாடகனாக. அந்த அறிமுகம் இசையமைப்பாளர் ஹேமந்குமாரால் 1952 இல் கிடைத்தது.
எவ்வித இசைப் பின்புலமோ பயிற்சியோ இல்லாமல் சுயமாக ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக் கொண்டி ருந்த ரவிக்கு திரைப்படத்தில் இசையமைக்கும் முதல் வாய்ப்பு 1955 இல் கீதாபாலி நடித்த Vachan  [1955] மூலம் சித்தித்தது. அதே ஆண்டில் ரவியின் இசையமைப்பில் கீதாபாலி நடிப்பில் Albeli  யும் வெளியானதுGharana (1961)  Khandan (1965).ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான Filmfare  விருதுகளை இருமுறை வென்ற ரவி இசையமைத்த Chaudhvin Ka Chand (1960), Do Badan (1966), Hamraaz (1967), Ankhen (1968)Nikaah (1982). முதலான படங்களும் விருதுக்காகப் பரிந்துரை செய்யப் பட்டன.
Albeli (1955).jpgGharana gemini.jpgKhandaan.jpg

Nikaah.JPGGumraah[1963],  Waqt[1965], Neel Kamal [1968] என்பனவும் அவரது இசையில் உருவான படங்களுள் குறிப்பிடத் தக்கன. சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதை சல்மா ஆகாவுக்கு ரவி இசையமைத்த Nikaah [1982] பெற்றுக்  கொடுத்தது. 
Mehrban poster.jpgவெற்றி பெற்ற பீம்சிங்கின்  ''வரிசைப் படங்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டு ஹிந்தியில் வெளியான போது அவற்றிற்கு ரவியே இசையமைத்தார். அவ்வாறாக சுனில் தத், நூடன் நடிப்பில்  'பாகப் பிரிவினை'[1959], Khandan [1965] ஆகவும் 'படிக்காத மேதை'[1960] Mehrban [1967] ஆகவும் வெளியாகின. 'பாசமலர்' [1961], அசோக்குமார், வஹீதா ரஹ்மான் நடிக்க Rakhi [1962] ஆனது. ஸ்ரீதரின் 'கல்யாண பரிசு'[1959],  ராஜ்கபூர், வைஜயந்திமாலாவின் நடிப்பில் Nazrana [1961]எனப் புதிய கோலம் கொண்டது பிஸ்வஜித் மாலா சின்ஹா நடித்த Do Kaliyan [1968],  ஏவிஎம்மின் 'குழந்தையும் தெய்வமும்' [1965]பெற்ற புதிய வார்ப்பு. 

Nazrana 1961.jpgRakhi 1962.jpgDo Kaliyan.jpg

Chirag Kahan Roshni Kahen [1959] பின்னர் தெலுங்கு மூலமாக 'அன்பு மகன்'[1961] ஆகித் தமிழையும் தரிசித்தது. ஷம்மிகபூர், ஷகிலா நடித்து ரவியின் இசையமைப்பில் வெளியான, China Town [1962] தமிழில் குடியிருந்த கோயில்’ [1968] ஆக வடிவம் கொண்டது.  ரவியின் இசையமைப்பில் வெளியான Phool Aur Panthar [1966]  பின்னர் தமிழில்   'ஒளி விளக்கு’ [1968] ஆகப் பிரகாசித்தது. ஜெமினி தயாரிப்பாக வந்த Ghanghat [1960] டும் அதன் இனிய இசைக்காகப் பேசப்பட்டது. வஹிதாவுடன் குருதத் நடித்த - Chaudhvin Ka Chand (1960) அவருக்குப் புனர் வாழ்வளித்த படம் ரவியின் இசையால் உயிர்பெற்றது

Ghunghat 1960.jpgPhoolAurPatthar.jpgChaudhvin ka chand.jpg


கிஷோர்குமார், நூடன் நடிப்பில் வெளியான நகைச்சுவைச் சித்திரம் Dilli Ka thug [1958].
Dilli Ka Thug poster.jpgஅதில் ரவி போட்ட "Cat Mane Billi" பாடலின் மெட்டு தமிழில் திலகம்’ [1960] படத்தில் B-O-Y boy எனும் நகைச்சுவைப் பாடலுக்குப் பயன்படுத்தப் பட்டது.[திலகம் இசை-சுதர்சனம்.]

 பாடகர் மகேந்திர கபூரைப் பிரபல மாக்கியத்துடன் பாடகி ஆஷா போஸ்லேயின் இசைப்பாதையை செப்பனிட்டு வழிகாட்டிய  சிறப்பும் ரவியைச் சாரும். 1955 இல் இருந்து 1987 வரையான 32 ஆண்டுகளில் சுமார் 90 ஹிந்திப் படங்களுக்கு இசை யமைத்த ரவி 1987க்குப் பின் மலையாளத்து திரையுலகுடன் சங்கமித்து விட்டார். 1986 இல் இருந்து 2005 வரை மலையாளத் திரையுலகில் பணி யாற்றிய ரவி அக்காலகட்டத்தில் சிறந்த இசையமைப்பாளருக்கான  [1992, 1995 ஆண்டு களில்]  இரு தேசிய விருதுகளையும், 1986, 1992 ஆண்டுகளில்  இரு கேரள அரசு விருது களையும்  வென்றார்.


[20] மொஹமட் கயூம்                     
                                                                               Mohammed Zahur Khayyam   

Umrao Jaan movie poster.jpg18.02.1927 இல் பஞ்சாபில்  பிறந்த கயூம் பண்டிட் அமர்நாத்திடம் தனது ஆரம்ப இசைப் பயிற்சியைப் பெற்று 50 களின் ஆரம்பத்தில் ஹிந்தித் திரையுலகில் இசையமைப்பாளரானார்.  அவரது முதற் படம், திலீப்குமார் மீனாகுமாரியுடன் நடித்த Foot Path [1953]. ராஜ்கபூர் மாலா  சின்ஹாவுடன் நடித்த Phir Subha Hogi (1958) அவர் பெயரைப் பரவலாக அறியச் செய்தது. அமிதாப் பச்சனுடன் வஹீதா ரஹ்மான் நடித்த Kabhi Kabhie [1976], ரேகா நாயகியாக நடித்த கலைப்படைப்பான  Umrao Jaan [1981] எனும் இரு படங்களும் சிறந்த இசையமைப்பாளருக் கான விருதுகளைப் பெற்றுக் கொடுத்தன. 2011 இல் கயூம் பத்மபூஷண்  விருது  வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.


Foot Path film.jpgPhir Subah Hogi.jpgKabhi Kabhie film poster.jpg

[21]ரொஷான் லால் [Roshan lal]
Taj Mahal 1963.jpg14.07.1917 இல் பஞ்சாபில் பிறந்தவர் ரோஷன் லால். 1949 இல் இசையமைக்க ஆரம்பித்த ரொஷான் 50 களில் இசையமைத்த படங்கள் வர்த்தகரீதியாக அவ்வளவாக வெற்றியீட்ட வில்லை. ஆனால் 60 களில் அவரது இசை திக்கெட்டும் பரவி ரொஷானும் கொடிகட்டிப் பறந்தார்.  Barsaat Ki Raat[1960], Aarti [1961], எனத் தொடர்ந்த அவரது வெற்றிப் படிக்கட்டு 'தாஜ்மஹாலில் உச்சம் பெற்றது.  'அனார்க்கலி' [1953] வெற்றிப்பட ஜோடியான பிரதீப் குமாரும் பீனாராயும் 10 ஆண்டுகளின் பின் மீண்டும் இணைந்து நடித்த காதற் காவியமான 'தாஜ்மஹால்'[1963] கண்ட வெற்றிக்குக் காரணமாயமைந்த ரொஷானின் இசைக்கு Filmfare ரும்   விருதளித்துக் கௌரவித்தது. அதற்குப் பின்னரும் Chitralekha [1964], Devar [1966], Mamta [1966], Ano Ki Raat [1968]  என அவரது இசை அலை அவரது இறப்புக்குப் பின்னும்  தொடர்ந்தது.1967 நவம்பர் 16 இல் தமது 50 ஆவது வயதில் மாரடைப்பால் அவர் மரணிக்க நேரிட்டது.
 BarsaatKiRaat FilmPoster.jpg   Aarti62.jpg     Chitralekha (1964) poster.jpg

இவரது இளைய மகன் ராஜேஷ் ரோஷனும் தந்தையைப் போலவே ஹிந்தித் திரையுலகில் ஓர் இசையமைப்பாளராகி 1975, 2000 ஆம் ஆண்டுகளில் தாமிசையமைத்த படங்களுக்காக 
Rajesh Roshan.jpgJulie 1975 film poster.jpgKaho Naa Pyaar Hai Poster.jpg

 Film fare விருதுகளும் வென்றார்.மூத்த மகனான ராகேஷ்  ரோஷன் ஒரு  நடிகராகவும் நெறியாளராக வும் புகழ்பெற்றார். அவரது மகனும் ரொஷான்லாலின் பேரனுமான ஹிருத்திக் ரோஷன் மிகப் புகழ் பெற்ற முன்னணி நடிகராகத் திகழ்கிறார்.
[22]மதன்மோகன்Composer Madan Mohan 2013 stamp of India.jpg

7 வயது வரை மத்திய கிழக்கில் ஈராக் மண்ணில் பாலகனாக, சிறுவனாக; 11 வயதில் All India Radio வில் சிறுவர் நிகழ்ச்சிப் பாடகனாக ; 19 வயதில் போர்முனையில்  இராணுவத் தளபதியாக; 21 வயதில் All India Radio வில் இசைக்கட்டுப்பாட்டாளராக; 23 வயதில் ஒரு [Ghazal] கஸல் பாடகராகi; 24 வயதில் இசையமைப்பாளர் குலாம்ஹெய்டரின் Shaheed [1948] படத்தில்  லதாவுடன் பின்னணிப் பாடகராக; 25 வயதில் S.D.  பர்மனிடமும் ஷியாம் சுந்தரிட மும் உதவியாளராக எனப் பல அவதாரங்கள் எடுத்த மதன்மோகன் ஒரு திரைப்பட இசை யமைப்பாளராக மாறியது 1950 இல் அவரது 25 ஆவது வயதில். Aankhen (1950 ) தான் அவரது முதற் படம்.
Adalat 1958.jpgAnpadh.jpgMausam1975.jpg
அவரது இசையமைப்பில் உருவாகி சஞ்சீவ் குமாரும் ரெஹானா சுல்தானும் நடித்து 1970 இல் வெளியான   Destak சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை அவருக்குப் பெற்றுக்  கொடுத்ததுடன் அவ்வாண்டின் சிறந்த நடிகராக சஞ்சீவ் குமாரையும் சிறந்த நடிகையாக ரெஹானாவையும்  தெரிய வைத்தது.
நர்கீஸும் பிரதீப் குமாரும் நடித்த திரைப்படம் Adalat [1958]மெல்லிசைக் கோலமாக அவரது இசையில் உருவான கஸல் வகைப் பாடல்களுக்காகப் பேசப்பட்டது, அதுவும் - மாலா சின்ஹா, பால்றாஜ் சஹானி நடித்த Anpadh [1962], ['யார் நீ?' எனப் பின்னர் தமிழில் வடிவம் கொண்ட]- மனோஜ்குமார், சாதனா நடித்த Who Kaun Thi?  [1964], அவரது இறப்பின் பின் அதே ஆண்டின் இறுதியில் ஷர்மிளா டாகூரின் நடிப்பில்  வெளியான Mausam [1975] என்பனவும்  விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட அவ்ரது குறிப்பிடத் தக்க படங்கள். தமிழில் வெற்றிபெற்ற ஸ்ரீதரின் 'ரத்த பாசம்’ [1954] கிஷோர்குமார், நிம்மி, ஷியாமா நடிப்பில் Bhai Bhai [1956] எனவும் K.S. கோபாலகிருஷ்ணனின் 'குமுதம்'[1961] தர்மேந்திரா, மாலா சின்ஹா நடிப்பில் Pooja Ke Phool [1964] எனவும் ஹிந்தியில் AVM தயாரிப்புகளாக  வெளியான போது மதன்மோகனின் இசையே அவற்றிற்கு இசை வலுவூட்டத் தேவைப்பட்டது.
Bhai-Bhai (1956).jpgThe poster is a hand-drawn portrait featuring random objects, buildings and faces from the film. The title appears on top-left.Pooja-Ke-Phool.jpg
Veer-Zaara.jpgகுடியின் கோரப்  பசிக்கு இளம் வயதில் [51] இரையாக்கப்பட்ட உன்னத கலைஞரான மதன்மோகனின் இறப்பின் பின் Mausam [1975]  உட்பட அவர் இசையமைத்த 7 படங்கள் வெளியாகின. அவர் மறைந்தாலும் மறையாத அவரது இசைக்கோர்ப்புகளை 29 ஆண்டுகளின் பின் ஷாருக்கானும்  ப்ரீத்தி ஸிந்தாவும் நடித்த காதற் சித்திரமான Veer-Zaara [2004] இல் அவரது மகன் பயன்படுத்தினார். அதற்காக அவருக்கு IIFA விருது வழங்கப்பட்டது.
அவரது இசையில் உருவாகி, தமிழில் வேதாவின் இசை அனுசரணையுடன் பி.சுசீலாவின் குரலில் ஒலித்த 'நானே வருவேன்' எனும்  சாகா வரம் பெற்ற மந்திர கீதம் தமிழ்த் திரையிசை ரசிகர்களுக்கும் அவர் நினைவை மீட்டிக் கொண்டிருக்கும்.

[23] வினோத்
VinodER.gifEric Robert எனும் இயற்பெயர் கொண்ட வினோத் 50 களில் பிரபலமாகி மின்னலைப் போல் மறைந்து விட்ட ஒரு ஹிந்திப்பட இசையமைப்பாளர். பெரும்பாலான இசையமைப்பாளர் களைப் போலவே பஞ்சாப் [லாகூர்] தான் வினோத்தின் பிறப்பிடமும். 1946 இல் அவரது 24 ஆவது வயதில் முதற்பட வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. 1949 இல்  நடிகை மீனா ஷோரேக்காக Ek Thi Ladki படத்தில் அவர் போட்ட’ Laara  Lappa Laara Lappa’ மெட்டு ஒரே நாளில் அவர் புகழை வானளாவ உயர்த்தி விட்டது. அதற்குப் பின் 1959 இல் அவர் அகால மரணமடையும் வரையான காலகட்டத்தில் 30 ஹிந்திப் படங்களுக்கும் 06 வங்காளப் படங்களுக்கும் என 36 படங்களுக்கு அவர் இசையமைத்தார். அதில் Anmol Rattan [1950], Ek Do Teen [1953], Aag Ka Dariya [1953]  என மீனா ஷோரே நடித்த  03 படங்களும் அடக்கம்.

Anmol Rattan (1950).jpgMeena Shorey (1949).jpgVaazhkai 1949 poster.jpg

அவரது லாரா லப்பா மெட்டை வைத்துத்த்தான் எங்கள் சுதர்சனம் அய்யாவும்  'உன் கண் உன்னை ஏமாற்றினால் ...' என  வைஜயந்தி மாலா க்காக வாழ்க்கை [1949] தமிழ்ப்படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரியைப் பாடவைத்தார்.
'விட்டேனா பார் ' எனத்  தனது  பங்குக்கு எஸ்.எம்.எஸ்ஸும் தனது 'திகம்பர சாமியார்'ரில் 'பாருடப்பா பாரு டப்பா'   பி.எஸ்.சுப்பையா பாடத் தாளம் போட்டார்.

[24] அருண்குமார் முகர்ஜி

1945 -1953 க்கிடைப்பட்ட குறுகிய காலப் பகுதியில் ஒருசில ஹிந்திப் படங்களுக்கு இங்கித மாக இசையமைத்த அருண்குமார் முகர்ஜியும் நினைவுகூரப்பட வேண்டிய ஒருவர். 1953 இல் இவர் இசையமைத்த படம்தான் Parineeta. சரத்சந்திரரின் நாவல் பிமல்ராயின் நெறியாள்கை யில் அசோக்குமார் மீனாகுமாரியின் நடிப்பில் வெளிவந்தது. அதில் பல பாடல்களும் நெஞ்சம் கவர்ந்தன. அந்த வெற்றிச் சித்திரம் தமிழில் நடிகர் ஸ்ரீராமின் தயாரிப்பில்  மீளுருவாக்கம் செய்யப்பட்டு 'மணமாலை'யாக 1958 இல் சமர்ப்பணமானது.அதே வேளை ஹிந்திப்பட பாடல் மெட்டுக்களும் வேதாவின் இசை அனுசரணையில் உள்வாங்கப்பட்டன.
அவ்வாறாக 'நெஞ்சம் அலை மோதவே..'.[பி.பி.ஸ்ரீனிவாஸ்], 'சின்னஞ்சிறு பெண்ணான செந்தாழம் பூவே..'[பி.லீலா குழு] போன்ற பாடல்கள் நம் செவி  சேர்ந்து இனிமை பயத்தன.Parineeta 1953.jpgPratima (1945).jpg
திலீப்குமாரும் ஸ்வர்ணலதாவும் நடித்த Pratima [1945], பாரத்பூஷனும் நிருபராயும் நடித்த Teen Bhai [1955] என்பனவும் அருண்குமாரின் இசையில் உருவான சிறப்பான படங்கள்.

[25] ஷியாம் சுந்தர்

ஷியாம் சுந்தரும் பஞ்சாப் லாகூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்தான். ஹிந்தித் திரையுலகில் 1939 இல் இருந்து 1953 வரை பணியாற்றிய அவர் 20 ஹிந்திப் படங்கள் 04 பஞ்சாபிப் படங்கள் என  குறிப்பிடத்  தக்க சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். நூர்ஜஹான் நடித்த Village Girl [1945], நர்கிஸ் கரண் தேவனுடன் நடித்த Lahore [1949], நிகர் சுல்தானா ஷியாமுடன்  நடித்த Bazar [1949], மீனா ஷோரே நடித்த Dholak[1951], நிம்மி நாயகியாக நடித்த Alif Laila [1953] என்பன அவற்றுட் சில.

[26] Kemchand Prakash-கேமசந்த் பிரகாஷ்Khemchand Prakash.jpgMahal 1949 film poster.jpgZiddi (1948) - Indian Hindi-language film poster.jpg

40 களில் மிகச் சிறந்த இசையமைப்பாளராகத் திகழ்ந்து 1949 இல் தனது 41 ஆவது வயதில் மறைந்து விட்ட கேமசந்த் பிரகாஷ் சைகலில்  ஆரம்பித்து  லதாவின் ஆரம்பகாலம் வரை இசையமைத்த படங்களுள் சைகால் நடித்த Tansen  [1943], தேவ் ஆனந்த் காமினி கௌசலுடன் நடித்த Ziddi  [1948], அசோக் குமார் மதுபாலாவுடன் நடித்த Mahal [1949]என்பன அடங்கும்.





இந்துஸ்தானிய இசைப் பாடகராகவும் விளங்கிய கேமசந்த் லதாவைப் பிரபலப் படுத்திய வராகவும் கிஷோரை முன்னணிப் பாடகனாகியவராகவும் கருதப்படுகிறார்.இசையமைப்பாளர் கமலதாஸ் குப்தா அவரது ஆளுமையை வியக்கிறார். அவரது சகோதரர் வசந்த் பிரகாஷும் ஒரு இசையமைப்பாளரே. கேமசந்திடம் உதவியாளராக  இருந்து பின்னர் இசையமைப் பாளரான கமலதாஸ் குப்தாவும் அதே 40 களில் Arabian Nights [1946], Krishna Leelaa [1946], Manmani [1947] உட்பட 12 படங்களுக்கு இசையமைத்தவர். கிராமிய இசைக் கலைஞரான அவர் தமிழிலும் பாடியுள்ளார்.




[27] Gyan Dutt
Bhakta Surdas.jpg40 களில் சைகாலின் Bhakta Surdas  [1942] படத்துக்கு இசையமைத்தவர் Gyan Dutt. அவர் 1939 இல் இசையமைத்த படம்  Thokar [Kick]. மோதிலால் சித்தாராதேவி நடித்த Achhut [1940],  குர்ஷீத் பானோ நடித்த Chhoti Maa எனும் Nurse  [1943] ராஜ்கபூர் ரெஹானா, நிகர் சுல்தானாவுடன் நடித்த Sunehre Din[1949],  தேவ் ஆனந்த் ரெஹானாவுடன் நடித்த Dilruba [1950] ஷேக் முக்தாரும் கீதாபாலியும் நடித்த Ghayal [1951], Gul E Bahavali [1956]  போன்ற படங்களுக்கும் இசையமைத்த தத் 1937 இல் இருந்து 1956 வரை இசைப் பணியாற்றினார்.
Sunehre Din.jpgThokar 1939.jpg

[28] Pandit Shankarrav Ganesh Viyas

File:Ram Rajya (1943).webmமகாத்மா காந்தியால் பார்த்துப்பாராட்டப்பட்ட  ஒரே திரைப்படமான ராம் ராஜ்யா வுக்கு [Ram Rajya – 1943] இசையமைத்தமையால் கவனமீர்த்தவர் சங்கர்ராவ் வியாஸ். 1937 - 1954 காலப்பகுதியில் 32 ஹிந்திப் படங்கள்  05 மராத்திப் படங்கள்  03 குஜாராத்திப் படங்கள் என மொத்தம் 40 படங்களுக்கு தனது சாஸ்திரீய இசையால் செழுமையூட்டிய வியாஸின்  இசை யில் உருவானவற்றுள் Mr.X [1938],  Narsi Bhagat [1940], Bharat Milap [1942],  Valmiki [1945], Vikramadhithya [1945], Bhakta Dhruva [1947], Poornima,  என்பனவும் குறிப்பிடத்  தக்கன.

                       [29] [29] Ghulam Mustafa Durrani - G.M. துரானி
 பாடகனாக அறிமுகமாகிப் பின் வானொலி நடிகனாகப் பெயர்பெற்று 1939-40 களில் திரையிசைத் துறையில் பின்னணி பாடும் முறை உருவானபோது கிஷோர் சாபுவுக்காக Bahurani [1940] இல் முதன் முதலாக பின்னணி பாடி, பின்னணிப் பாடகனாகவும் புகழ் பெற்று,   உப நடிகனாகப் பல படங்களில் [1938 முதல் 1978 வரை] நடித்து சில படங்களுக்கு இசையமைத்துப் பல்துறை  மேதையாக  ஹிந்தித் திரையுலகில் வலம்வந்தவர்தான் துரானி.
G. M. Durraniஇசையமைப்பாளர் நௌஷாத்தின் நண்பராக மாறிச்  சிலகாலம் அவரது உதவியாளராகவும் விளங்கிய துரானி இசையமைப்பாளராகத் தனித்து   இசையமைத்தனவற்றுள் Nai Dunya [1942], Vijayalakshmi [1943], Angoori [1943], Bhakya Laxmi [1944], Dhadkan [1946] என்பன குறிப்பிடத்  தக்கன. நடிகர், இசை யமைப்பாளர் என்பதை விட ஒரு பின்னணிப் பாடகராகவே துரானி பெரிதும் அறியப்படுகிறார். 40-60 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சைகால், சுரீந்தர், கான் மஸ்தானா போன்ற- 40 களில் பிரபலமான பாடகர்களுக்குச் சமதை யாகப் பின்னணி பாடிக் கொண்டிருந்தவர் துரானி. S.D. பர்மன், நௌஷாத், சங்கர்ராவ் வியாஸ், A.R. குறைஷி, ஷியாம் சுந்தர் உட்பட அந்நாளில் பிரபலமாயிருந்த பல இசையமைப் பாளர்களுடன் பணியாற்றியவர் துரானி. முகமட் ராபியுட்படப் பல புதிய பாடகர்களுக்கு ஆதர்சமாகத் துராணியிருந்துள்ளார்..நூர்ஜெஹான், ஷம்ஷாத் பேகம், கீதா தத், ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்க்கார் என துரானியுடன் இணைந்து பாடியவர்களின் பட்டியலோ நீளமானது.
 [30]ஜெயதேவ் வர்மா

ஒரு சினிமா நடிகனாக வேண்டும் எனும் ஆசை பிடர் பிடித்து உந்த பம்பாய்க்கு ஓடிப் போன சிறுவன் 1933 -1935 இல்  எட்டுப் படங்களில் நடித்தான். ஹிந்துஸ்தானிய இசை மேதை அலி அஃபர் கான் இசையமைத்த ஒரே ஹிந்திப் படமான Aandhiyan [1952] இல் அவருக்கு உதவி யாளனாகப் பணியாற்றினான். பின்னர் சிலகாலம் பிரபல இசையமைப்பாளர் S.D. பர்மனிடம் உதவியாளனானான். அந்தச் சிறுவன்தான் பின்னாளில் 70 களில் சிறந்த இசையமைப்பாள ருக்காக மும்முறை தேசிய விருது வென்ற ஜெயதேவ் வர்மா.
Reshma Aur Shera.jpgPoster Gaman 1978.jpgMujhe Jeene Do, 1963 Hindi film.jpg

ஜெயதேவ் இசையமைத்த  Reshma Aur Shera (1971), Gaman (1979)  Ankahee (1985). என்பன அவருக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்தவை. Hum Dono (1961),  Mujhe Jeene Do (1963), Prem Parbat (1973) Gharonda (1977).என்பனவும் அவரது சிறப்பான இசைக்காகப் பேசப் பட்டவை
Joru Ka Bhai [1955] இல் ஆரம்பித்து Aatish [1979] வரை சுமார் 25  ஆண்டுகளில் 40 மட்டிலான ஹிந்திப் படங்களுக் குத் தனது சாஸ்திரீய இசையால் வலுவூட்டியவர் ஜெயதேவ்.

 [31] Bulo C Rani

Jogan1950.jpg1939 இல் தமது 19 ஆவது வயதில் ஹிந்தித் திரையுலகில் நுழைந்து மிகுந்த இடர்ப்பாடுகளின் மத்தியில் Khemchand Prakash, Gyan Dutt போன்றவர்களிடம் உதவியாளராகப் பணியாற்றி, ஒரு பாடகனாகவும் இசையமைப்பாளனாகவும் 40, 50 களில்  தன்னைத் தக்க வைத்துக் கொண்ட வர் தான் Bulo C.Rani. கேமசந்த் பிரகாஷின் இசையில் முதற் பாடலை அவர் பாடிய அதே 1944 இல் தான் அவருக்கு Caravan படத்தில் இசையமைக்கும் வாய்ப்பும் கிட்டியது.
50 களின் ஆரம்பத்தில் உத்வேகத்துடன் செயற்பட்ட Bulo 1966 வரை தனது பணியைத் தொடர்ந்தார். அவர் கடைசியாக இசையமைத்த திரைப்படம் Bijlee - 1972 இல் வெளியானது. அவ்விடைக்காலத்தில் 71 படங்களுக்கு அவர் இசையமைத்தார். அவற்றுள் Rajputani (1946) Anjuman (1948). திலீப், நர்கீஸ் நடித்த- Jogan (1950), Wafa (1950), சுரையா, C.H. ஆத்மா நடித்த  Bilwamangal (1954).என்பன குறிப்பிடத் தக்கன.
பின்னுரை
ஹிந்தித் திரையுலகின் ஆரம்ப கால இசையமைப்பாளர்களில் முதன்மையாக விளங்கிய 31 இசையமைப்பாளர்கள் பற்றிய அறிமுகமான இப்பதிவில் ஒரு சிலர் விடுபட்டிருக்கலாம். பிரபல இந்துஸ்தானிய இசை மேதை அலி அஃபர்  கான்,  தேவ் ஆனந்தின் Aandhiyan [1952] படத்துக்கும் சத்யஜித் ரேயின் Devi [1960] வங்காளத் திரைப்படத்துக்கும் இசையமைத்தார். பிரபல பின்னணிப்  பாடகர் மன்னா டே- Ttamanna [1942]Shiv Kanya [1954] உட்பட மற்றும் சில படங்களுக்கும் Parneeta [1953] வில் நான்கு பாடல்களுக்கும் இசையமைத்தார். பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் 60 இன் பின்னர் 90 வரை   தான்  தயாரித்த பத்துப் படங்களுக்கும் தானே இசையமைத்தார். ஆயினும் இசையமைப்பாளர்களாக அவர்கள் எவரும் பெயர் பதிக்கவில்லை. A.R.Kuraishi,  K.Dutta, Vasant Pawar & Ram,  S.K.Pal, Sanmukh Babu, Nissar Bazmi, B.N. Bali, Sushanta Banerjee,  Nirmal Kumar, Bipin Dutta, Rabin Banerjee, Sapan Jagmohan என 50, 60 களில் அவ்வப்போது  அருந்தலாக இசையமைத்த சிலரும்  விடுபட்டுள்ளனர்.

60 களுக்குப் பின்-----                                                                                                                                                                    Laxmikant–Pyarelal (1965),(1968),(1970), (1978), (1979), (1980), (1981)  Kalyanji Anandji (1975) Rajesh Roshan (1976),(2001)  Bappi Lahiri (1985) Ravindra Jain (1986)  Anand–Milind (1989) Raamlaxman (1990) Nadeem–Shravan (1991)  (1992), (1993), {1997} Anu Malik (1994), (2005) A. R. Rahman (1996),(1999) ,(2000),(2002)  (2003),(2007) ,(2008)  (2009)  (2010), (2012) Uttam        Singh (1998) Shankar–Ehsaan–Loy (2004), (2006), (2008),  (2009), (2010), (2015) Sajid–Wajid and Lalit Pandit (2011)  Pritam (2013),(2017), (2018)   Ankit Tiwari, Jeet Ganguly and Mithoon (2014) Amaal Mallik, Ankit Tiwari and Meet Bros Anjjan (2016) Sanjay Leela B  hansali (2019)
எனப்  பல இசையமைப்பாளர்கள் Film fare விருதுகள் பல பெற்றுப் புகழுடன் விளங்கு கிறார் கள். அதனால் பரவலாக அறியப்பட்டுமுள்ளார்கள். அவர்களைப்பற்றியும், மற்றும் Film fare விருது ஏதும் பெறாது போயினும்,  
தேசிய விருது பெற்ற ஹிந்தி இசையமைப்பாளர்களான –
Vishal Bhardwaj [1999], [2010], [2014] – Hridaynath Mangeshkar [1991], - Rajat Dholakla [1993], -Ismail Darbar [1999], - Amit Trivedi [2009] - போன்றவர்கள் பற்றியும்- Film fare விருதுக்காக பத்து முறை பரிந்துரைக்கப்பட்ட இசை இரட்டையர்களாக Jatin +Lalit சகோதரர்கள் பற்றியும் , அதே காலகட்டத்தில் கவனமீர்த்த  இசையமைப்பாளராக வலம் வந்த Nikhil + Viney இசை இரட்டையர்கள்  பற்றியும்  இப்பதிவில் ஆராயப் படவில்லை.