Thursday, 26 July 2018

சினிமா - 4 C + 1
1940 -1950 களில் முன்னணிக் கதாநாயகிகள்


Image result for meenakumari imagesImage result for meenakumari imagesமீனாகுமாரி – Queen of Tragedy

Image result for meenakumari images40 களில் அறிமுகமாகி 50 களில் முடிசூடா ராணிகளாக வடபுலத்து திரைவானில் வலம் வந்த நடிகையரென   மீனாகுமாரியையும் மதுபாலாவையும் நர்கீஸையும் குறிப்பிடலாம்.
ஏழ்மையான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த மீனாகுமாரி, குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய நிர்பந்தத்தால் சிறு வயதிலேயே திரையுலக நடிப்புக்குள் தள்ளப்பட்டவர். படிக்க விரும்பியும் படிக்க முடியாமற் போன ஒரு துர்பாக்கியசாலி அவர். வாழ்வில் அவர் அனுபவித்த துன்ப வடுக்கள் திரையுலகிலும் Queen of Tragedy  எனும் ஒரு பிம்பத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டன.
11.08.1933 இல் பிறந்த மீனாகுமாரி தனது ஆறாவது வயதில் 1939  இல் சிறுமியாக பி.ஜெயராஜ் நாயகனான நடித்த Stunt படமான Leather Face இல் அறிமுகமானார். பேபி மீனா அதன் பின் 1944 வரை நடித்த படங்கள் 12 . 13 வயதில் அவரைக் கதாநாயகியாக்கிய படம்  Bachchon Ka Khel (1946).அதன் பின்னர் பல மாயாஜால,புராணப் படங்களில் கதாநாயகியாகத் தோன்றிய அவருக்குத் திருப்புமுனையாக அமைந்த படம், பாரத்பூஷனுடன் அவர் நாயகியாக நடித்த இசைச் சித்திரமான Baiju Bawra (1952). சிறந்த நடிகைக்கான விருதை முதன்முறையாக அப்படம் அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.
Image result for meenakumari imagesஅசோக்குமாருடன் நடித்த [சரத் சந்திரரின்] Parineeta,[1953 வும்   ரஹ்மானுடன் நடித்த Sahib Bibi Aur Ghulam,[1962 மும் ராஜ்குமாருடன் நடித்த Kaajal[1965]   லும் சிறந்த நடிகைக்க்கான Filmfare விருதுகளை வென்றன. ராஜ்கபூருடன் நடித்த Sharada,[1957] வும் பிரதீப்குமாருடன் நடித்த Aarti,[1962] யும் ராஜ்குமாருடன் நடித்த Dil Ek Mandir[1963]ரும் வங்காள திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின்,சிறந்த நடிகைக்க்கான விருதுகளை வென்று கொடுத்தன.
பானுமதி நடித்த 'மலைக்கள்ளன்', பத்மினி நடித்த 'எதிர்பாராதது', சாவித்திரி நடித்த மிஸ்ஸியம்மா',   'புதிய பாதை', 'களத்தூர் கண்ணம்மா',தேவிகா நடித்த 'நெஞ்சில் ஓர் ஆலயம்' முதலான தமிழ்ப் படங்களைத் தழுவி ஹிந்தியில் வெளியான 'ஆசாத்',[1955] 'சாரதா'[1957], [ஜெமினியுடன்நடித்த]  'மிஸ் மேரி'[1957] ஏக் ஹி ரஸ்தா'[1956], [சுனில் தத்துடன் நடித்த] MainChupRahungi[1962] , தில் ஏக் மந்திர்'[1963] முதலான படங்களில் எல்லாம் மீனாகுமாரியே நடித்தார். தமிழ் முன்னணி நடிகையர்க்கு ஈடாக எப்பாத்திரத்தையும் ஏற்றுச் சிறப்புடன் நடிக்க வல்லவராக அந்நாளில் இருந்த ஒரே நடிகை மீனாகுமாரி மட்டுமே!
Image result for meenakumari images
  அவர் திலீப்குமாருடன் நடித்த Foot Path[1953]  மற்றும் பிமல்ராயின் ரோமானிய கால வரலாற்றுப் படமான Yahudi[1958] காதலும் நகைச்சுவையும் கலந்த ராஜா ராணிப் படமான Kohinoor[1960] என்பனவும் தமிழில் 'ஒளிவிளக்கு' ஆகச் சுடர்விட்ட Phool Aur Panthar [1966] மீனாகுமாரியின் காதல் கணவரான KamalAmrohi யின் காவிய படைப்புகளான  Daara[1953]  Dil Apna Aur Preet Parai1960] 16 வருடங்களின் பின்னர் 1972 இல் திரைக்கு வந்த அவர்களின் காதல் வாழ்க்கைச் சரிதமான Pakeezah 
முதலானவையும் மீனாகுமாரியின்
Image result for meenakumari images
குறிப்பிடத் தக்க சாதனைகள்.
அசோக்குமார் ·         திலீப்குமார், ராஜ்கபூர், தேவ் ஆனந்த்-[Baadbaan-1954] கிஷோர்குமார், மகிபால் [Aladdin Aur Jadui Chirag (1952)]
 முதலான ஐம்பதுகளின் முன்னணி நாயகர்களுட்பட பாரத் பூஷன்,   பால் ராஜ் சஹானி-[Bhabhi Ki Chudiyan,[1961], ரெஹ்மான்  ராஜ்குமார், ராஜேந்திரகுமார்-[Chirag Kahan Roshni Kahan,1959], சுனில் தத்-[ Main Chup Rahungi -1962]  தர்மேந்த்திரா-[Majhli Didi,-1967] , வினோத் கண்ணா-[ Mere Apne,-1971]   என அறுபதுகளில் பிரகாசித்த நாயகர்களுடனும் இணை சேர்ந்து நடித்த போதிலும் எந்த ஒரு  நடிகருடனும் 'இவர் தான் அவருக்குப் பொருத்தமான ஜோடி' என முத்திரை குத்துமளவுக்கு இணைப்பை ஏற்படுத்திக் கொண்டவரல்ல.
Image result for meenakumari imagesதனது 18 ஆவது வயதில் கார் விபத்தொன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாகுமாரி கதை வசனகர்த்தவும்  இயக்குனரும் தயாரிப்பாளருமான கமால் அரோஹியுடன் காதலில் விழுந்தார்.கதாநாயகி மீனாகுமாரியும்  தேவ் ஆனந்தும் கிஷோர் குமாரும் சேர்ந்து நடித்த ஒரே படமான Tamasha [1952]  படப்பிடிப்பின் போது அறிமுகமான கமால் ஏற்கெனவே திருமணமானவர். மீனாவும் 19 வயதில் 1952 இல் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கமாலைக் கரம் பற்றினார்.
Image result for meenakumari imagesபத்தாண்டுகளில் காதல் கசந்து போனது. கணவரின் கெடுபிடியான அதிகாரப் போக்கையும் கட்டுப்பாட்டையும் வெறுத்த மீனா தனியாகப் பிரிந்து சென்றுவிட்டார்.  வாழ்க்கை மீண்டும் சோகமயமானது.உடல் நலிவுக்கும் மனமுறிவுக்கும் மருந்தாக மது உதவியது. மருந்தான மது கொஞ்சம் கொஞ்சமாக ஈரலை இரை கொள்ள ஆரம்பித்தது. நாற்பதை எட்டு முன்னரே அந்த நடிகையர் திலகம் நமனை நாடிச் சென்று விட்டாள். [அவருடையதைப் போலவே வாழ்க்கைப் பின்னணி அமைந்த நமது நடிகையர் திலகம் சாவித்திரியும் அவரைப் போலவே குடியில் தஞ்சமடைந்து தனது முடிவைத் தேடித் கொண்டது விதியின் விந்தையான விளையாட்டுத் தான்!]  சிறு வயதில் ஒரு பின்னணிப் பாடகியாகத் திகழ்ந்த மீனாகுமாரி கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர். தனது 33 ஆண்டு காலத் திரையுலகப் பயணத்தில் 92 திரைப் படங்களில் நடித்த அவர் கதாநாயகியாக மட்டும் 80 படங்களில் வாழ்ந்துகாட்டியுள்ளார்.
மதுபாலா –The Venus of Indian  Cinema
Image result for madhubala images
மீனாகுமாரி பிறந்த அதே 1933 இல் அவருக்கு ஆறு மாதங்கள் முன்னதாக காதலர் தினமான பெப்ரவரி 14 இல் டெல்லியில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர் தான் மதுபாலா. காதலர் தினத்தில் பிறந்த அவர் ஹிந்தித் திரையுலகின் காதல் தேவதையாக –The Venus of Indian  Cinema ஆகக்கொண்டாடப்பட்டார்.
Image result for madhubala imagesமீனாகுமாரியைப் போலவே குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டி தனது 9 ஆவது வயதில் 1942 இல் Basant படமூலம் ChildArtist ஆக அறிமுகமானார்.தேவிகாராணியால் மும்தாஜ் என்ற அவரது இயற்பெயர் மதுபாலாவாக மாற்றமுற்றது. 1947 இல் 14 வயதில்   நடிகர் ராஜ்கபூரின் ஜோடியாக-கதாநாயகியாக NeelKamal இல் அறிமுகமாகும்  வரை பாலகி மும்தாஜின் Studio முற்றுகைகள் தொடர்ந்தன. ஆனாலும்       1942 முதல் 1946 வரையான இடைக்காலத்தில் சிறுமியாக அவர் பங்கேற்ற படங்களின் எண்ணிக்கை ஆறே ஆறுதான்!
Image result for madhubala imagesஅசோக்குமாருடன் இணைந்து நடித்த Mahaal [1949]பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில்   ஷியாமுடன் நடித்த Dulari (1949)   Ajit உடன் நடித்த Beqasoor (1950)திலீப்குமாருடன் நடித்தTarana (1951)   பிரேம்நாத்துடன் நடித்த Badal (1951).போன்ற திரைப்படங்களும் வெற்றிச் சித்திரங்களாக அமைந்தன.
Image result for madhubala imagesகிராமத்து மங்கையாகவும் நகரத்து நங்கையாகவும் பல்வேறு பாத்திரங்களிலும் சோபித்த அழகு தேவதை மதுபாலா திலீப்புடன் நடித்த Sangdil [1952] மற்றும் மெஹ்பூபின் Amar [1954] குருதத்துடன் நடித்த  Mr. &Mrs .55 [1955] என்பன எதிர்பார்த்தளவு வெற்றி பெறாத போதிலும் 50 களின் பிற்பாதியில் 1958 இல் அசோக்குமாருடன்  ஒரு cabaret பாடகராகத் தோன்றிய Howrah Bridgeபாரத் பூஷனுடன் நடித்த Phagun  தேவ் ஆனந்துடன் இணை சேர்ந்த  Kala Pani பின்னாளில் அவரது வாழ்க்கைத் துணைவராக மாறிய கிஷோர்குமாருடன் [அவரது சகோதரர்கள் அசோக்குமார், பிரதீப்குமார் குடும்பத்தினர் சேர்ந்து] நடித்த Chalti Ka Naam Gaadi மீண்டும் 1960 இல் பாரத் பூஷனுடன் பங்கேற்ற  Barsaat Ki Raat (1960) உட்பட முன்னாள் காதலரான திலீப்குமாருடன் வாழ்ந்து காட்டிய, காதல் இலக்கிய காவிய படைப்பான Mughal-E-Azam என்பன பெற்ற வெற்றி அவரை மீண்டும் முன்னணிக் கதாநாயகியாக மாற்றி விட்டது. 1953 இல் ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகளின் பின் 1960 இல் வெளியான போதிலும் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வசூலிலும் நீண்ட காலம் [15 ஆண்டுகள்] முறியடிக்க முடியாத சாதனையைக் கண்ட படம்தான் மொஹல்-ஏ -ஆஸம். மதுபாலாவின் திரை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட திரைக் காவியம். சிறந்த நடிகைக்கான Filmfare  விருதையும்  இப்படம்  அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.  1961 இல் தமிழில் 'அக்பர்'எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டும் அது வரவானது. 
Image result for madhubala images
தன்னைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக் கொண்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காது  வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும்   மதுபாலா இரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தார். ஆங்கில சினிமா இதழ்களின் முன்னட்டையை அவர் அழகுத் தோற்றம் பலமுறையும் அலங்கரித்ததுண்டு. ஹிந்தியில் 'வயது வந்தவர்களுக்கு 'எனும் 'A 'சான்றிதழைப் பெற்ற முதற் படமான "Hanste Aansoo" [1950] இன் கதாநாயகி மதுபாலாதான்!
Image result for madhubala images60 இல் உச்சத்தில் இருந்த நக்ஷத்திரம் அதன்பின் சரிவைச் சந்திக்க நேரிட்டது. காதலில் ஏற்பட்ட தோல்வியும் இதயத்தில் இருந்த துவாரத்தால் தோன்றிய சுகவீனமும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாமல் தடையை ஏற்படுத்த, அடுத்து வந்த ஒன்பது ஆண்டுகளில் ஆறு படங்களில் மட்டுமே அவரால் நடிக்க முடிந்தது. கிஷோர்குமார், பிரதீப்குமார், ஷம்மிகபூர் ஆகியோருடன் நடித்த அவர் கடைசியாக நடித்த படம் Jwala’[1971] . சுனில் தத்துடன் நடித்த அப்படம்தான் மதுபாலா நடித்த ஒரே வண்ணப்படம். அவர் மறைந்து இரண்டு ஆண்டுகளின் பின்னரே அது திரைக்கு வந்தது.
அறிமுகமான ஆரம்ப காலத்தில் 1947 - 48 இல் ராஜ்கபூரின் கதாநாயகியாக இருந்தவர் 50 -51 களில் அவரது திரையுலகப் போட்டியாளரான தேவ் ஆனந்தின் நாயகியாக மாறினார். ராஜ்கபூருடன் ஆறு  படங்களில் நடித்தவர் தேவுடன் எட்டுப் படங்களில் இணை சேர்ந்தார்.
ஆனால்  அவற்றுள் ஓரிரண்டு தவிர மற்றவை எதுவும் பெருமளவு வெற்றி பெறவில்லை. திலீப்குமாருடன் நான்கு படங்களே நடித்தார். ஆனால் அவை பேசப்பட்டன. திலீப்பின் தம்பி நசீர்கானுடனும் ராஜின் தம்பி ஷம்மிகபூருடனும் கூட நடித்தவர் கிஷோர்குமாருடனும் அவர் தம்பி பிரதீப்குமாருடனும் தலா ஐந்து படங்களில் பங்கேற்றார். அவர்களின் மூத்த சகோதரர்  அசோக்குமாருடன் நடித்த மூன்று படங்களும் பாராட்டப்பட்டன. பாரத் பூஷனுடன் மதுபாலா நடித்த நான்கு படங்களும் வெற்றிபெற்றன. சுரேந்திரா, மோதிலால், யாகூப். ஆகா, ஜெயராஜ்,ரெஹ்மான், ஷியாம், அஜித் என ஆரம்பகால நடிகர்களுடனும் நடித்தவர் ரஞ்சனுடன் ஒரு படத்திலும் குருதத்துடன் ஒன்றிலும்  சுனில்தத்துடன் இரு படங்களிலும் நடித்துள்ளார். சிறுமியாக நடித்த ஆறு படங்களுட்பட சுமார் 65 படங்கள் மட்டில் நடித்த அவர் தனது படங்களைத் தெரிவு செய்வதில் கோட்டை விட்டதால் வெற்றியீட்டியவை 15 மட்டுமே!
வைஜயந்திமாலா கதாநாயகியாக நடித்த [பாட்டாளியின் சபதம்] 'Naya  Dawr '[1957 ] இல் திலீப்புடன் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் மதுபாலாதான். தந்தையாரின் பிடிவாதத்தால் மதுபாலாவால் அதில் நடிக்க முடியாமற் போனது. அது சம்பந்தமாக மதுபாலாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் திலீப்பின் சாட்சியம் மதுபாலாவைக் குற்றவாளியாக்கியது. அது அவர்களின் காதல் காவியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் காரணியானது.
Image result for madhubala imagesImage result for madhubala images18 வயதுப் பருவ மங்கையாக 1951 இல் Tarana வில் நடிக்கும் போது அரும்பிய திலீப்-மதுபாலாவின் காதல் 1957 இல் கருகிப் போனது. தனது குடும்பத்தவரின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுபாலாவால் தந்தையின் எதிர்ப்பை மீற முடியவில்லை.Mughul-E-Azam படத்தில் அனார்கலி-சலீம் அமரகாதலர்களாக நடித்த வேளையில், படப்பிடிப்பின் போது இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமலேதான் நடித்தார்களாம்!
Image result for madhubala imagesதனது காதல் தோல்வியை ஜீரணிக்க முடியாத மதுபாலா பிரபல பாடகரும் நடிகரும் சகலகலா வல்லவருமான கிஷோர்குமாரின்பால் தனது காதலைத் திருப்பினார். ஏற்கெனவே திருமண மானவரான கிஷோர் தனது முதல் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு மதுபாலாவைக் கரம்பற்றினார். ஆனால் அவர்களது இல்வாழ்க்கை இனிமையானதாக அமையவில்லை. நோயின் தாக்கம் மதுபாலாவை ஒரு மன நோயாளி போல மாற்றி விட பின்னைய நாட்களை  அவர் தனிமையில் கழிக்கநேரிட்டது.  36 ஆவது வயதில் 1969 பெப்ரவரி 23 இல் அவ்வழகுப் பெட்டகம் சலவைக்கற் சமாதிக்குள் சங்கமமானது.

நர்கீஸ் 

Image result for nargis imagesந்துஸ்தானிய சாஸ்திரீய இசைப் பாடகியும் ஹிந்தி சினிமாவின் ஆரம்பகால நடிகையுமான ஜட்டான்பாயின் மகள்தான் நர்கீஸ். முஸ்லிமான அவருக்கும் மதம் மாறிய பஞ்சாபிய ஹிந்து பிராமணரும் அவரது மூன்றாவது கணவருமான அப்துல் ரஷீட்க்கும் கல்கத்தாவில் பிறந்த பார்த்திமா ரஷீட்தான் பின்னாளில் பிரபலமான நடிகை நர்கீஸ்.
04.06.1929 இல் பிறந்த நர்கீஸ் தனது ஏழாவது வயதில் அவரது தாயார் இயக்கி நடித்த Talashe Haq [1936] இல் சிறுமியாக அறிமுகமானார். அடுத்தடுத்த ஆண்டுகளில்  ஜட்டான்பாய் இயக்கி நடித்த மூன்று நான்கு படங்களில் பேபி நர்கீஸாக நடிப்பைத் தொடர்ந்தார். 14 வயதில் மோதிலாலுடன் அவர் நடித்த Taqdeer  [1943] அவரைக் கதாநாயகியாக்கியது. மோதிலால், பி.ஜெயராஜ், கரண் தேவன், ரெஹ்மான்  போன்ற மூத்த நடிகர்களுடன் தொடர்ந்து கதாநாயகியாக  நடித்த போதிலும் 1948 இல் திலீப்குமாருடன் நடித்த 'மேளா'வும் அதைத் தொடர்ந்து 1949 இல் வெளியான [திலீப்குமார்+ராஜ்கபூர் நடித்த] Andaz   ராஜ்கபூருடன் நடித்த Barsaat  என்பன பெற்ற மகத்தான வெற்றிகளின் பின்னரே அவரது நிலைமை உறுதியாயிற்று. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியான Awaara (1951), Deedar (1951), Shree 420 (1955), Chori Chori (1956). போன்ற வெற்றிச் சித்திரங்களால்  ராஜ்கபூர்-நர்கீஸ்
ஜோடியின் புகழ் வானளாவ உயர்ந்தது..
Image result for nargis old hindi actress imagesஆயினும் அவரது திரைப் பயணத்திலும் Bollywood வரலாற்றிலும் மைல் கல்லாக முத்திரை பதித்த ஒரு படமென்றால் அது Mother India தான். 1957 இல் வெளியான அப்படம் அவ்வாண்டின் மிகச் சிறந்த படத்துக்கான film fare விருதைச் சுவீகரித்ததுடன் மிகச் சிறந்த நடிகைக்கான விருதை நர்கீஸுக்கும் பெற்றுக் கொடுத்தது. சில படங்கள் தாம் காலத்தை வென்று நிலைத்து நின்று பொக்கிஷமாகப் பேணப்படக் கூடிய தகுதியைப் பெறும். அத்தகைய ஒருபடமாக- மெஹ்பூப்கானின் ஆதர்ச படைப்பாக- இந்தியாவின் ஆத்மாவைப் பிரதிபலிக்கும் வடிவமாக வந்த படம்தான் 'மதர் இந்தியா'. 1958 இல் கணவராக நர்கீஸ் வரித்துக் கொண்ட சுனில் ததைச் சந்தித்து அறிமுகம் கொண்டதும் காதல் வயப்பட்டதும் அப்படத்தின் மூலமே அவருக்குக் கிட்டின.
Image result for nargis old hindi actress images
'மதர் இந்தியா' வெளியான அதே ஆண்டில் அவர் கதாநாயகியாக நடித்த ' இந்திய-சோவியத் கூட்டுத் தயாரிப்பான 'Pardesi’ திரைப்படமும் வெளியானது. பிருதிவிராஜ் கபூர், பால் ராஜ் சஹானி, பாரத்பூஷன் போன்ற அனுபவம் முதிர்ந்த நடிகர்களும் பங்கேற்ற படமது. அவருக்குத்  திருமணமான 1958 இல் பால் ராஜ் சஹானியுடன் அவர் நடித்த Lajawanti ,   Ghar Sansar  என இரு படங்களும் பிரதீப் குமாருடன் நடித்த Adalat திரைப்படமும் வெளியாகின. திருமணத்தின் பின் நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்ட நர்கீஸ் அதன் பின் மூன்றே மூன்று படங்களில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டார். அவ்வாண்டின் சிறந்த படமென தேசிய விருது பெற்ற,  அவரது கணவரின் பரீட்சார்த்த முயற்சியாக தனியொரு ஆள் நடிப்பில் உருவான- 'Yaadein ' [1964 ] இல் தனது குரலால் மட்டும் அவர் பங்களிப்புச் செய்தார். 1967 இல் நடிகர் பிரதீப் குமாரின் மனைவியாகமாறுபட்ட மன நிலை கொண்டஉளச் சிதைவுற்ற ஒரு மன நோயாளியாக- சவாலான பாத்திரத்தில் Raat  Aur Din இல் வென்று காட்டினார். சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவரைத் தேடி வந்தது. இறுதியாக அவர் நடித்து 1968 இல் திரையிடப்பட்ட படம் Tosa oneira stous dromous.
Image result for saagar-1951 movie poster imagesதனது 51 ஆவது வயதில் காலமான நர்கீஸ் நடித்த மொத்தப் படங்களின் எண்ணிக்கையும் 51 தான்! அதில்  மூன்றில் ஒரு பங்கான - 17 படங்களில் ராஜ்கபூருடன்[1948 -1956 வரை] கைகோத்தார். அவற்றுள் பாதிப் படங்கள் மகத்தான  வெற்றியீட்டின. ஏழு படங்களில் திலீப் குமாருக்கு ஜோடியானார். ராஜ் கபூரின் திரையுலகப் போட்டியாளரான தேவ் ஆனந்துடன் ஒரே ஒரு படத்தில் [ Khel (1950)] மட்டும் நடித்தார். அசோக்குமார், பி.ஜெயராஜ், மோதிலால், கரண் தேவன், ரெஹ்மான், பால் ராஜ் சஹானி, பிரதீப் குமார்  போன்ற பண்பட்ட நடிகர்களுடன் மட்டுமன்றி  நர்கீஸ் - ஷியாம், நசீர்கான், திரிலோக் கபூர் போன்ற சாதாரண நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.
Image result for nargis imagesமதுபாலாவுடையத்தைப் போலவே நிறைவேறாத ஒரு காதல்  நாடகம் நர்கீஸின் சொந்த வாழ்விலும் அரங்கேறியது. அவருக்குப் பொருத்தமான ஜோடியென ரசிகர்களால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்ட நடிகர் ராஜ்கபூருடன் நர்கீஸ் காதல் கொண்டார். ஆனால் ஏற்கெனவே மணமான ராஜ்கபூர் தனது மனைவியை விவாகரத்துச் செய்ய இணங்கவில்லை. அதனால் அவருடனான காதலை முறித்துக் கொண்ட நர்கீஸ் Mother India வில் தனக்கு மகனாக நடித்த சுனில் தத்தைத் தனக்கான துணைவராகத் தெரிந்து கொண்டார். அவர்களின்  மூன்று பிள்ளைகளில் மகன் சஞ்சய்தத்தும் நர்கீஸின் மறைவின் பின்  80 களில் பிரபல நடிகரானார். மகள் பிரிய தத் அரசியலில் ஈடுபாடு காட்டினார். மற்றொரு மகளான நம்ரதா நடிகர் ராஜேந்திரகுமாரின் மகனும்  நடிகருமான குமார் கௌரவை  மணந்து கொண்டார்.
Image result for nargis old hindi actress imagesபின்னைய நாட்களில் சமூக சேவையில் ஈடுபட்ட நர்கீஸ் புற்று நோயின் தாக்கத்தால் 07051981 இல் தமது இன்னுயிரைத் துறந்தார். அவரது நினைவாக புற்று நோயாளருக்கான சிகிச்சைக்காக  Nargis Dutt Memorial Cancer Foundation எனும் அமையம் சுனில் தத்தால் நிறுவப்பட்டது. 1958 இல் பாரத அரசால்  பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட   முதல் நடிகை எனும் பெருமையை நர்கீஸ் பெற்றுள்ளார். திருமணத்தின் பின் நர்கீஸ் இந்துவாக மதம் மாறினார் என்பது பலரும் அறியாத ஒன்று.

மீனாகுமாரி - மதுபாலா - நர்கீஸ் - ஓர் ஒப்பீடு 
  
Image result for meenakumari imagesImage result for meenakumari imagesImage result for nargis old hindi actress images

பிறப்பால் முஸ்லிம்களான மூன்று நடிகையரும் ஏறத்தாழ சம வயதினர். மூவரும் சிறுமிகளாக இருக்கும் போதே திரையுலகில் கால் பதித்தவர்கள்.
மீனாகுமாரி 13  வயதிலும் மதுபாலாவும் நர்கீஸும் 14   வயதிலும் கதாநாயகியானவர்கள். நர்கீஸ் 1949 இல் Barsath, Andaz  படங்கள் மூலமும் மதுபாலா 1949   இல்Mahal படம் மூலமும் மீனாகுமாரி 1952  இல்  Baiju Bawra   படம் மூலமும் நட்ஷத்திர அந்தஸ்துப் பெற்றனர். நர்கிஸ் சக நடிகர் ராஜ் கபூரையும் மதுபாலா சக நடிகர் திலீப் குமாரையும் காதலித்துத் தோல்வியற்றனர். தயாரிப்பாளர் கமாலைக் காதலித்து வெற்றி கண்ட மீனாகுமாரி இல்லற வாழ்வில் தோல்வியுற்றார்.
மதுபாலா நடிகர் கிஷோர் குமாரையும்   நர்கீஸ் நடிகர் சுனில் தத்தையும்   மீண்டும் காதலித்து மணமும் புரிந்தனர். மதுபாலாவின் இல்லறவாழ்வு சிறக்கவில்லை.  நர்கீஸீன் வாழ்வில் வசந்தம் வீசியது. மீனாவும் மதுபாலாவும் இளம் வயதில் வறுமையில் வாடி அதை போக்க சினிமா உலகைத் தஞ்சம் புகுந்தவர்கள். தத்தமது குடும்பத்தினருக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்கள். தந்தையர்களது கட்டுப்பாட்டின் கீழ் அடங்கி நடந்தவர்கள். மூவரும்  நோயாரக்கனுக்கு இரையாகி இளவயதில் தமது இக வாழ்வை முடித்துக் கொண்டு விட்டவர்கள். நர்கீஸ் ராஜ்கபூருடன் நடித்த Aah  'அவன்' என்ற பெயரிலும் மதுபாலா பிரேம்நாத்துடன் நடித்த 'Badal  'புரட்சி வீரன்' எனும் தலைப்பிலும்   மதுபாலா திலீப்புடன் நடித்த Mughal-e-Azam  'அக்பர்' என்ற தலைப்பிலும் தமிழில் Dub ஆகி வெளிவந்தன. மீனாகுமாரியின் எப்படமும் மொழிமாற்றம் செய்யப்பட்டுத் தமிழில் வெளிவரவில்லை. ஆனால் தமிழில் இருந்து ஹிந்திக்குத் தழுவப்பட்ட பல படங்களிலும் மூவரில் மீனாகுமாரி மட்டுமே நடித்தார். நர்கீஸ் ரஹ்மானுடன் நடித்து 'நர்கீஸ்'[1946] என்றொரு படமும் மதுபாலா தேவ்ஆனந்துடன்  நடித்து 'மதுபாலா'[1950] என்றொரு படமும் வெளியாகின.
மதுபாலாவின் ஜோடியான தேவ் ஆனந்துடன் நர்கீஸ் 1950 இல் Khel என ஒரு படமும் மீனாகுமாரி 1952  இல் Tamasha என ஒரு படமும் 1954 இல் Baadbaan என ஒரு படமும் மட்டுமே நடித்துள்ளனர். மதுபாலாவின் கணவரான கிஷோர் குமாருடன் மீனாகுமாரி 1955 இலேயே [Rukshana] கதாநாயகியாக நடித்துவிட்டார். 1956  இலும் மற்றொரு படத்தில் [.Naya Andaz ]ஜோடி சேர்ந்தார். மதுபாலா 1956  இல் தான்  முதன்முறை கிஷோரின் கதாநாயகி யானார்.  நர்கீஸ் கிஷோருடன் ஒரு படத்திலும் நடிக்கவில்லை. நர்கீசின் கணவரான சுனில் தத்துடன் மதுபாலா இரு படங்களிலும் மீனாகுமாரி இரு படங்களிலும் இணையாக நடித்துள்ளார்கள். ஆனால் நர்கீஸ் அவரின் கதாநாயகியாக எப்படத்திலும் நடிக்கவில்லை. மதுபாலாவின் முதல் வெற்றிச் சித்திரமான ‘ Mahal’ஐ எழுதி நெறிப்படுத்தியவர் மீனாகுமாரியின் கணவரான       Kamal அம்ரோஹி.
முன்னணிக் கதாநாயகர்களான அசோக்குமார், திலீப் குமார், ராஜ் கபூர், தேவ் ஆனந்த் உட்பட பிரதீப் குமார், ரெஹ்மான், பி.ஜெயராஜ், திலீப்பின் தம்பியான நசீர்கான் போன்றோருடனும் மூவருமே கதாநாயகியராக நடித்துள்ளார்கள். இவ்வாறாக இவர்களுக்கு இடையேயான ஒற்றுமை வேற்றுமைகள் பலவிருப்பினும் இம்மூவரில் எந்த இருவருமே எந்த ஒரு படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை என்பது வியப்பானதே!

நிம்மி

Image result for nimmi old hindi actress imagesமீனாகுமாரியும் மதுபாலாவும் பிறந்த அதே 1933  இல் மதுபாலாவுக்கு நான்கு நாட்கள் இளையவராக 18.02.1933  இல் அவர்களை போலவே ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர்தான் நிம்மியும். ஒரு பாடகியும் நடிகையுமாக இருந்த தனது தாயைப் பதினொரு வயதில் அவர் இழக்க நேரிட்டது. திரையுலகினருடன் குறிப்பாக தயாரிப்பாளரும் இயக்குனருமான மெஹ்பூப்கானுடன் இருந்த அறிமுகத்தால் ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான Barsat  மூலம் திரையுலகில் நுழையும் வாய்ப்பு அவருக்கு 1949 இல்  கிட்டியது. அதில் இரண்டாவது நாயகியாக வில்லன் பிரேம்நாத்தின் காதலியாக அனுதாபத்துக்குரிய அழகு மங்கையாகத் தோன்றி இரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
ராஜ்கபூரும் நர்கீஸும் கதாநாயகர்களாக நடித்த அப்படத்தில் இடம் பெற்ற நிம்மிக்கான மூன்று பாடல்களும் மிகப் பிரபல்யமாயின. படத்தின் மகத்தான   வெற்றி ஒரே நாளில் நிம்மியைப் புகழின் உச்சிக்கு உயர்த்திவிட்டது. 1950 இல் தொடர்ந்து வெளியான சில தோல்விப் படங்களின் பின்  1951 இல் திலீப்குமார், நர்கீஸ் ஜோடியுடன் இரண்டாவது நாயகி யாக நடித்த Deedar பெற்ற வெற்றி அடுத்து சில திலீப்குமார்  படங்களில்  நிம்மியும் பங்குபெற வழி சமைத்தது. 1952 இல் திலீப்புடன் நிம்மி நடித்த 'ஆன்'-ஹிந்தியில் வெளியான முதல் வண்ணப் படம்- அவ்வாண்டின் மிகச் சிறந்த படமாக வசூலையும் வாரிக் குவித்தது. நௌஷாத் தின் இசையில் உருவான 'ஆன்' திரைப்படப் பாடல்கள் காலத்தால் அழியாது இன்றும் காதில் இனிப்பவை. 'ஆன்' அதே பெயரில் தமிழிலும் 'டப்செய்யப்பட்டு வெளியானது 
Image result for nimmi old hindi actress imagesஅதே ஆண்டில் அதே ஜோடி நடித்து வெளியான 'Daag’ கும் வெற்றிகரமாக ஓடி நான்காவது இடத்தைத் தக்க வைத்தது. அதுவும் பின்னர் தமிழில் 'புனர் ஜென்மம்' என 1961இல் மறு அவதாரம் எடுத்தது. 'ஆன்' ஐத் தொடர்ந்து மெஹ்பூப்கான் தயாரித்த 'Amar’[1954] இல் மதுபாலா தான் திலீப்பின் நாயகி. நிம்மி இரண்டாவது நாயகியான போதிலும் அவருக்கு வலுவான ஒரு பாத்திரம். நிம்மியின் நடிப்பின் உச்சமென அப்படத்தைச்  சிலர் சிலாகிப்பர். ஆயினும் அப்படம் வெற்றியீட்டவில்லை. திலீப்புடன் 1955 இல் நிம்மி இணைந்து நடித்த இறுதி படம் 'UranKhatola’  அதுவும் தமிழில் 'வானரதம்' ஆக மொழிமாறி வலம் வந்தது. நௌஷாத்தின் இசையில் பாடல்கள் வானலைகளை வாசப்படுத்தின. ‘UranKhatola’ வும் சுமாரான வெற்றியைப் பெற்ற போதிலும் வெற்றி நாயகனான திலீப் குமாருடன் அதற்குப் பின்னர் நிம்மி ஏனோ சேர்ந்து நடிக்கவில்லை!
ஒரு இசைக் கலைஞனின் மனைவியாக பாரத் பூஷனுடன் நிம்மி நடித்து 1956 இல் வெளியான Basant Bahar’  மீனாகுமாரி பாரத் பூஷனுடன் நடித்து வெற்றி பெற்ற Baiju Bawra[1952] வின் புதிய வார்ப்பெனச் சொல்லலாம். ஆயினும்Basant Bahar இல் நிம்மியின் நடிப்பும் பேசப்பட்டது. அதே ஆண்டில் கிஷோர் குமாருடன் நிம்மி நடித்த BhaiBhai’[1956] இல் தெருவில் ஆடிப் பிழைக்கும் துடுக்கான பெண்ணாக வித்தியாசமான வேடத்தில் ஆடி அசத்தினார் நிம்மி. சிறந்த நடிகையாக 'விமர்சகர்கள் குழு'வால் அவர் தெரியப்பட 'BhaiBhai துணை புரிந்தது.[ முதலில் 'ரத்த பாசம்' ஆகத் தமிழில்   இல் வெளியான படம்தான் BhaiBhai’.]
Image result for nimmi old hindi actress imagesஆதரவற்ற அபலைப் பெண்ணாக, அன்புக்காக ஏங்கும் ஏழைப் பெண்ணாக, பணம்  படைத்தவனால் ஏமாற்றப்படும்  அப்பாவிக் கிராமத்துக்கு கட்டழகுக் கன்னியாக - ரசிகர்களின் அனுதாபத்தைத் தேடித் தருவதாகக் கட்டமைக்கப்பட்ட அவரது Image அவரது வெற்றிக்குப் பெரும்பாலும் துணை நின்றது. மீனாகுமாரியும் கூட அத்தகைய பாத்திரங்களிலேயே முத்திரை பதித்துக் கொண்டிருந்தார். போதாக்குறைக்கு மீனாவைப் போலவே மந்திர தந்திர மாயாஜால மங்கையாகதேவதையாக  சில படங்களில் வேடமேற்று  நிம்மியும் போட்டி போட்டார். அவரை போலவே  இவரும் குறிப்பிட்ட எந்த ஒரு நடிகரின் ஜோடியாகவும் தன்னை வரித்துக் கொள்ளவில்லை. நிம்மியால் திரையுலகில் நீடித்து நிலைத்து நிற்க முடியாமல் போனமைக்கு இவையும் முக்கிய காரணிகளாயமைந்தன.
அழுது  வடியும் சோகப் பாத்திரங்களை விடுத்து வித்தியாசமான வேடங்களைத் தெரிவு செய்து நடிக்காத காரணத்தால் பத்தாண்டுகளின் பின் அறுபதுகளில் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.  Mere Mehboob [1963] இல் ராஜேந்திரகுமாருடன் கதாநாயகியாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பை சாதனாவிடம் கோட்டை விட்ட போதிலும் அப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகைக்கானFilm fare   விருதை அவரால் சுவீகரிக்க முடிந்ததமை  அவரது திறமைக்கான சான்றுதான்!
Image result for nimmi old hindi actress images
அசோக்குமார் மாலாசின்ஹாவுடன் அவர் நடித்த Pooja Ke Phool’[1964] அசோக்குமார், நந்தா,தர்மேந்திராவுடன் அவர் நடித்த ‘Akashdeep’ [1965] என்பன அவர் நடிப்பில்  சோடை போகவில்லை என்பதற்கு அத்தாட்சியான பின்னைய காலப்  படங்கள். Akashdeep அவர் நடித்த கடைசிப் படம். பிரான், சுனில் தத் ஆகியோருடன்   தாய்  மகள் என இரட்டை வேடமேற்று அவர் நடித்த படம்- Kundan’[1955]. சுனில் தத்துடன் 1956  இல் நடித்த மற்றொரு படம் -‘Rajdhani’. தானே சொந்தமாகத் தயாரித்து அவர் நடித்த படம்- Danka’[1954]. தாய், மாமன் என இசைப் பாரம்பரியத்தில் வந்த அவர் சொந்தக் குரலில் பாடி நடித்த படம்- கீதாபாலி நாயகியாக நடித்த Bedardi’[1951].   ராஜ்கபூரின் படத்தில் 1949 இல் அறிமுகமான அவர் பத்தாண்டுகளில் பின் ராஜ், மீனாவுடன் நடித்த Char Dil Char Rahen’[1959]  இல் ஷம்மிகபூரின் ஜோடியாக நடித்தார். ஏனோ அவருக்கு ராஜ்கபூரின் ஜோடியாக நடிக்கக் கிடைக்கவேயில்லை!  1951, 1952 இல்  தேவ் ஆனந்துடன் அவர் நடித்த படங்கள் Sazaa வும் Aandhiya னும்  வெற்றிபெறவில்லை. பாரத் பூஷனுடன்  1958 இல் இரண்டாவதாக  ஒரு படத்திலும் பின்னர் கௌதம புத்தரின் வாழ்க்கையைப் பகைப்புலனாகக் கொண்ட ‘Angulimaal’(1960) இலும் நடித்தார். இரண்டுமே தோல்வியைத் தழுவின.
Image result for nimmi old hindi actress images1949 இல் இருந்து 1965  வரையான 27 ஆண்டுகளில் சுமார் 40 படங்கள்  மட்டில் நடித்த நிம்மி அசோக்குமார், திலீப்குமார், தேவ் ஆனந்த், சுனில் தத், கிஷோர் குமார், ஷம்மிகபூர்பாரத் பூஷன், ராஜேந்திரகுமார், தர்மேந்திரா போன்ற முன்னணி நடிகர்களுடனும் பிரேம்நாத், ஜெயராஜ், கரண் தேவன், ரெஹ்மான்  போன்ற ஆரம்ப கால நடிகர்களுடனும் அமர்நாத், சீர்கான், Shehkar Altaf குல்தீப்கிஷோர் சாகு போன்ற மூன்றாந் தர நடிகர்களுடனும் எவ்வித வேறுபாடுமின்றி நடித்த நிம்மி- சுரையாநர்கீஸ், மதுபாலா, மீனாகுமாரி போன்ற முதலாந்தர நடிகையருடனும் நதீராகீதாபாலி, உஷா கிரண், கல்பனா கார்த்திக், சியாமா, சாதனா போன்ற அடுத்த கட்ட நடிகையருடனும் சேர்ந்து நடிக்கத் தயங்கவில்லை.
Image result for nimmi old hindi actress imagesதயாரிப்பாளர் ஆசிப்குருதத்தை கயஸாகவும் நிம்மியை லைலாவாகவும் நடிக்க வைத்து தயாரிக்க ஆரம்பித்த  ஆதர்சத்  திரைப்படம்  குருதத்தின் அகால மறைவினால் தடைப்பட்டு, பின் சஞ்சீவ் நாயகனாக நடிக்க வளர்ந்து உருவாகிப் பின் ஆசிப்பின் திடீர் மறைவினால் வெளிவராமல் முடங்கிப் போனது.  ஆசிப்பின் மனைவியின் முயற்சியால் 13 ஆண்டுகளின் பின் 1986 இல் அது ‘Kais Aur Laila’ ஆக   வெளியானது.
1965 இல் திரையுலகை விட்டு விலகிக் கொண்ட நிம்மி அவர் நடித்த  Uran Khatola, Barsaat, Deedar, Amar, Aan, Char Paise, Rajdhani, Shamma, Pooja Ke Phool, Mere Mehboob போன்றவை உட்பட  Andaz, Mother India, Reshma Aur Shera, Raja Jani  Dus Numbri.போன்ற படங்களுக்கும் உரையாடலை எழுதிய திரைக் கதாசிரியரான S. Ali Raza வை 1965 இல் மணம் புரிந்து2007 இல் அவரது இழப்பு வரை இணைபிரியாது இல்வாழ்வை   அவருடன் சுகித்தார்.

வைஜயந்திமாலா

Image result for vyjayanthimala images
13.08.1936
இல் சென்னையில் பிறந்த வைஜயந்தி மாலாவின் தாயாரான வசுந்தராதேவியும்    40 களில் முன்னணியில் திகழ்ந்த ஒரு தமிழ் நடிகைதான். தனது 13 ஆவது வயதில் 1949 இல் AVMமின்  'வாழ்க்கை' மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான மாலா இரண்டு ஆண்டுகளின் பின்[1951] அதே 'வாழ்க்கை' ஹிந்தியில்Bahar’  எனத் தயாராகி வெளியானபோது அதிலும் கதாநாயகியாகத் தோன்றி ஹிந்தித் திரையுலகில் பிரவேசித்தார். ஹிந்தித் திரையுலகு அவரைச் சிக்கெனைப் பிடித்துக் கொண்டுவிட்டது. அடுத்து  பாரத்பூஷன், கிஷோர்குமாருடன் அவர் நடித்து 1953 இல் வெளியான ‘Ladki’ [ 'அனார்கலி'க்கு அடுத்தபடியாக] அதிக வசூலைக் குவித்துச் சாதனை புரிந்தது. அதே  பின்னர் தமிழில் 1954 இல் வைஜயந்திமாலாவுடன் ஜெமினி, எஸ்.பாலச்சந்தர் நடிக்க  'பெண்’ணாக உருமாறியது.
Image result for vyjayanthimala imagesநடிகரும் ஓவியருமான சிவகுமார் விதந்து கூறியது போல பெண்ணுக்குரிய சகல  சாமுத்திரிகா இலட்க்ஷணங்களுடன் கூடிய கட்டழகுத் தோற்றமும் சாஸ்திரீய நடனத் திறனும் பயிற்சியும் ஒருங்கே அமையப் பெற்றவருமான வைஜயந்திமாலாவை ஹிந்தித் திரையுலகு செங்கம்பளம் விரித்து வரவேற்றதில் வியப்பேதுமில்லை. 1954 இல் பிரதீப்குமாருடன் அவர் நடித்து வெளியான கலைப்படைப்பான Nagin’ அவரது நடன ஆற்றலைப் பறைசாற்றும் வெற்றித் திரைப் படமாக அமைந்ததுமன்றி அவ்வாண்டு வசூலிலும் முதலிடத்தைப் பிடித்தது.
Image result for vyjayanthimala imagesதிலீப்குமார் கதாநாயகனாக நடித்த பிமல்ராயின் 'தேவதாஸ்1955 இல் வெளியாகி வியாபார ரீதியாகத் தோல்வியடைந்த ஒரு படம். அதில் விலைமாது சந்திரமுகியாக சவாலான பாத்திரத்தில் மாலா தோற்றினார்.அதற்காக சிறந்த துணை நடிகைக்கான Filmfare இன் விருதுக்கு அவர் தெரிவானார்.  ஆயினும் 'அஃதொரு 'துணை நடிகை' பாத்திரமல்ல' எனக் குறிப்பிட்டு அவ்விருதை ஏற்க மாலா மறுத்துவிட்டார்!
Image result for vyjayanthimala imagesதேவதாஸில் திலீப்பை ஒருதலையாய்க் காதலித்துத் தோல்வியுற்றுச் சோகராகம் இசைத்த மாலா அதே திலீப்பின் மனங் கவர்ந்த காதலியாக, கிராமத்து எழில் பொங்கும்   பருவ மங்கையாக, சுழன்று ஆடிப் பாடி மகிழ்வித்த படம் Naya Daur’. 1957 இல் வெளியாகி 'மதர் இந்தியா'வுக்கு அடுத்த படியாக அதிக வசூலைக் குவித்து வைஜயந்தியின் புகழை ஒங்கச் செய்தது. ['பாட்டாளியின் சபதம்' ஆக அது தமிழிலும் மொழிமாறி வெளியானது] மதுபாலாவுடனான காதல் தோல்வியால் துவண்டு போயிருந்த திலீப்புக்கு வைஜயந்தியின்  இணைவு புத்துயிரளித்தது. மறு ஆண்டிலும் பிமல் ராயின் மறுபிறப்புக் கதையான 'மதுமதி' மூலம் இருவரும் மறுபடியும் இணைந்தனர். அதிக வசூலை வாரி முதலாம் இடத்தை 'மதுமதி' பிடிக்க -காதல் தோல்வியால் மதுபாலா தளர, நர்கீஸ்  திரையுலகை விட்டு விலக, மீனாகுமாரி சோக நாயகியாக மாறிவிட-No.1  இடம் தானாக  வைஜயந்திமாலாவின் வாசல் தேடி வந்தது.
Image result for vyjayanthimala imagesமதுமதியின் வெற்றியைத் தொடர்ந்து ஜெமினி வாசனின் தயாரிப்பில் அடுத்த ஆண்டில் வெளியான Paigam [1959]   இலும் திலீப்-வைஜயந்தி ஜோடிதான்! அதுவும் மகத்தான வெற்றி பெற்று வசூலிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. வெற்றிபெற்ற Paigam  கதையை  வைஜயந்திமாலாவுடன் சிவாஜியைக் கதாநாயகனாக்கி  'இரும்புத்திரை' என 1960 இல் தமிழிலும் வெளியிட்டு வாசன் வாகை சூடினார்.
திலீப்குமார் தானே கதை எழுதி, 1961 இல் தயாரித்த Ganga Jamuna’  இலும் தனது கதாநாயகியாக வைஜயந்திமாலாவையே தெரிவு செய்தார். அதுவும் வசூலில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன் சிறந்த நடிகைக்கான Filmfare விருதையும் மாலாவுக்குப் பெற்றுக் கொடுத்தது. தனது பாத்திரத்தில்  இயல்பாகவும் யதார்த்தமாகவும் நடிக்க விரும்பிய மாலா அதற்காக ‘போஜ்புரி’  இனத்தவரின் பேச்சு வழக்கைச் சிரமமெடுத்துப்  பயின்று கொண்டார். அவரது வெற்றிக்குப் பின்னால் [சினிமாக்] கலை மீதுள்ள அவரது ஈடுபாடும் அக்கறையும் அர்ப்பணிப்பும்  நிதர்சனமாகத் தெரிகிறது.  1964 இல் திலீப்புடன் அவர் நடித்த சினிமாஸ்க்கோப் படமான  Leader தோல்வியைத் தழுவிய போதிலும் அதற்கான காரணம் வைஜயந்தியல்ல.
Image result for vyjayanthimala imagesஆனால் அதே ஆண்டில் ராஜ்கபூர், ராஜேந்திரகுமாருடன் அவர் நடித்த முக்கோணக் காதல் கதையான Sangam ['சங்கம்'] மாபெரும் வெற்றியீட்டியது. ஐரோப்பிய நாடுகளில் முதன்முறையாகப் படம் பிடிக்கப்பட்டு, வண்ணத்தில் குளித்து வந்த ராஜ்கபூரின் முதல்   தயாரிப்பாகநான்காண்டுகள் தயாரிப்பில் தவமிருந்து, அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படமாக இருந்தமை போன்ற புறக் காரணிகளும் அதன் வெற்றிக்குத் துணை நின்றன.
சிறந்த நடிகைக்கான   விருதை அது மீண்டும் அவருக்குப் பெற்றுத் தந்தது. வசூலில் நான்காவது இடத்தில் நின்ற போதிலும் ஒரு சிறந்த படமாகக் கணிக்கப்பட்ட படம் 'Sadhna’ . ஒரு விலைமாதின் வேடத்தில் சுனில்தத்துடன் அவர் நடித்த அப்படம் 'மதுமதி' வெற்றிகரமாக ஓடிய 1958  இல் வெளியாகி சிறந்த நடிகைக்கான விருதை முதன்முறை வாங்கித் தந்திருந்தது. ஆனால் அதே சுனில் தத்துடன் நான்காவது  தடவையாக -இறுதியாக அவர் இணைசேர்ந்த ‘Amrapali’ மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்து மீள முடியாத மணமுறிவை அவரிடத்தில் ஏற்படுத்தி விட்டது.
 Leader இன் தோல்விக்குப் பின் திலீப்புடன் முரண்பட்டிருந்த மாலா அவருடன் இறுதியாகச் சேர்ந்து நடித்த படம் Sunghursh’. 1968  இல் வெளியாகி மிகச் சாதாரண வெற்றியை அது பெற்ற போதிலும் வங்க எழுத்தாளர் சங்கத்தினரின் சிறந்த நடிகைக்கான விருதை இரண்டாவது முறையாக அவர் பெற அது துணை செய்தது. [முன்னதாக 'கங்கா ஜமுனா' வுக்காகவும் அச்சங்க விருதைப் பெற்றிருந்தார்.] திலீப்புடன் மொத்தமாக அவர் நடித்த ஏழு படங்களுள் 'Leader ஒன்று மட்டுமே தோல்விப் படம்.
வைஜயந்திமாலாவுடன் மிக அதிக படங்களில் சேர்ந்து நடித்தவர் பிரதீப்குமார். 1954 இல் இருந்து 1966 வரை எட்டுப் படங்களில் இருவருமாக நடித்த போதிலும் முதன்முதலாக இணைந்த Nagin   மட்டுமே வெற்றிபெற்றது. பிரபல நடிகர் அசோக்குமாருடன் நடித்த முதற்படம்  Sitaron Se Aage  1958 இல் வெளியானது. 1967 இல் அவருடன் நடித்த நான்காவது படமான Hatey Bazarey வங்காளப் படம் ஒன்றைத் தவிர ஏனையவை பெட்டிக்குள் சுருண்டு கொண்டுவிட்டன. ராஜ்கபூருடனும் இரு படங்களில்  தான் அவர்  சேர்ந்து நடித்தார்.1961  இல்  நடித்த Nazrana முதலுக்குப் பழுதின்றி ஓடியது. சங்கம்[1964] மட்டும் வசூலில் சாதனை படைத்தது. ராஜ்கபூரின் போட்டியாளரான தேவ் ஆனந்துடனும் இரு படங்களில்அவர் ஜோடி சேர்ந்தார். 1958 இல் Amar Deep’பும் அதற்குப்பின் பத்தாண்டுகள் கழித்து 'Duniya’[1968] வும். இரண்டும் சுமாராகவே ஓடின.
Image result for vyjayanthimala imagesமுதலில் ஒரு பின்னணிப் பாடகனாகவும் பின்னர் நகைச்சுவைக் கதாநாயகனாகவும் தன்னைத் தகவமைத்துக் கொண்டவர் கிஷோர்குமார். வைஜயந்திமாலா நடித்த 'Ladki’ [1953]யில்அவரும் நடித்தார். Miss Mala[1954] வுடன் ஆரம்பித்துRungoli’[1962] வரை ஐந்து படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.  1956 இல் கிஷோருடன் அவர் நடித்த New Delhi  இல் அவரது ‘பங்காரா' - பஞ்சாபிய நடனம் வியக்கப்பட்டது. இல் 1957வெளியான Asha’ இல் ராமச்சந்திராவின் இசை யில் உருவான 'ஈனா மீனா டீக்கா' உலக வலம் வந்தது. ‘Asha’ ‘அதிசய பெண்’ணாக தமிழில் மீளுருவாக்கம் பெற்று 1959 இல் பவனி வந்தது. அதில் நாகேஸ்வரராவ் நாயகனாக நடித்தார்.
ஷம்மி கபூருடன்1960  இல் College Girl, 1969  இல் Prince  என இரு படங்களில் வைஜயந்தி தான் நாயகி. College Girl, Prince  இருவருமே சோடை போகவில்லை!  சுனில் தத்தின் முதற் கதாநாயகி வைஜயந்திமாலாதான். 1956 இல் வெளியான Kismet Ka Khel  இருவரையும் இணைய வைத்தது. அடுத்து நடித்தSadhana [1958]  விருது வென்று கொடுத்தது. அடுத்த இரு படங்களும் [Joola-1962], Amrapali-1966] மண்கவ்வி மனம் வாட வைத்தன.
Image result for vyjayanthimala imagesவைஜயந்திமாலாவுடன் சேர்ந்து நடித்தவர்களுள் திலீப் குமாருக்கு அடுத்தபடியாக வெற்றி நாயகன் என ராஜேந்திரகுமாரைச் சொல்லலாம். இருவரும் 1957  இல் Ek Jhalak  இல் தொடங்கி 1969 வரை ஏழு படங்களில் இணைந்து நடித்தனர். மாலா கடைசியாக நடித்த ‘Ganwar’  பட நாயகனும் ராஜேந்திரகுமார்தான். Aas Ka Panchhi,[1961] Sangam,[1964] Zindagi,[1964] Suraj [1966] Saathi,[1968] Ganwar[1969]  என இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் யாவுமே நல்ல வெற்றியீட்டின.
இவர்களை விட  50 களில்  கரண்  தேவன், பிரேம்நாத், சுரேஷ், பால் ராஜ் சஹானி போன்றோருடனும் 60 களில் பாரத் பூஷன், மனோஜ் குமார், உத்தம் குமார், தர்மேந்திரா, ஜோய் முகர்ஜி போன்றோருடனும்  ஹிந்தியில் கதாநாயகியாக நடித்த வைஜயந்திமாலா 1969 க்குப் பின் திரைப்  பட நடிப்புக்குத் திரை போட்டுவிட்டார்.
1949 இல் தமிழில் 'வாழ்க்கை' மூலம் திரையுலகில் கால் பதித்த வைஜயந்திமாலா அதன்பின் ஹிந்தித் திரையுலகில் சங்கமித்துக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில் அவ்வப்போது தமிழிலும் தலை  காட்டி 1963 இல் ‘சித்தூர் ராணி பதமினி’ வரை பதினொரு படங்களில் கதாநாயகியாக நடித்தார். [கொசுறாக 'விஜயகுமாரி’-1949, ‘நாட்டியராணி'-1950-படங்களில் நடனம் மட்டும் ஆடினார்] 'வாழ்க்கை'[1949]யில் T.R. ராமச்சந்திரனுடனும் 'மர்ம வீர'னில்[1956] ஸ்ரீராமுடனும் 'அதிசயப்பெண்’ [1959]ணில் நாகேஸ்வரராவுடனும் 'பாக்தாத் திருட’னில்[1960] MGR உடனும் 'இரும்புத்திரை'[1960],’ராஜ பக்தி'[1960],சித்தூர் ராணி பத்மினி,'[1963] என மூன்று படங்களில் சிவாஜியுடனும் 'பெண்'[1954], 'வஞ்சிக் கோட்டை வாலிபன்'[1959]‘ பார்த்திபன் கனவு'[1960], 'தேன் நிலவு' [1961] என நான்கு படங்களில் ஜெமினியுடனும் கதாநாயகியாகத் தோன்றினார். இவற்றுள் 'மர்ம வீரன்' நேரடியாக 'டப்'பாகி Piya Milan  என்னு தலைப்பில் 1958  இல் ஹிந்தியில் வெளியானது. ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’, நாயகனாக ஜெமினியே நடிக்க Raj Tilak ஆக மீளுருவாக்கம் பெற்று 1958 இல் வெளியாகி வெற்றியீட்டத் தவறியது.
Image result for vyjayanthimala imagesவெற்றிபெற்ற சில தமிழ்ப் படங்கள் ஹிந்தியில் மீளுருவாக்கம் பெற்ற பொது அதில் வைஜந்திமாலாவும் நடித்தார். 'கணவனே கண் கண்ட தெய்வம்'[1955] Devata வாக1956 இல் வந்தது. தமிழில் லலிதா ஏற்ற வில்லி வேடத்தில் ஜெமினியுடன் வைஜயந்தி நடித்தார். ஜெமினி நடித்த 'கல்யாண பரிசு'[1959] - Nazrana [1961] ஆன போது ராஜ் கபூருடனும்  'கைராசி'1960] Joola [1962] ஆன போது சுனில் தத்துடனும் சிவாஜி நடித்த 'பாலும் பழமும்'[1961] 'Saathi [1968] ஆன போது ராஜேந்திர குமாருடனும் சரோஜாதேவி ஏற்ற வேடங்களில்  வைஜயந்தி நடித்தார். சிவாஜி நடித்த 'அமர தீபம்' [1956] Amar Deep [1958] ஆக வடிவெடுத்த போது சாவித்திரி நடித்த வேடத்தில் தேவ் ஆனந்துடன் மாலா நடித்தார்.
வைஜயந்தி நடித்த 14 படங்கள் ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியள்ளன. தனது திரையுலக வரலாற்றில் கதாநாயகியாக மட்டுமே நடித்தவர் அவர். ஹிந்தியில் 50 படங்களும் தமிழில் 11 படங்களும் தெலுங்கில் 02 படங்களும்  வங்காள கன்னட மொழிகளில் தலா ஒவ்வொரு படமுமென மொத்தமாக 65 படங்களில் நாயகியாக நடித்தவர். [நடனம் மட்டும் ஆடிய தமிழ்ப் படங்கள் இரண்டு]
Image result for vyjayanthimala imagesImage result for vyjayanthimala images1968 இல் பாரத அரசின் பத்மஸ்ரீ விருதும் 1979 இல் தமிழ் நாட்டரசின் கலைமாமணி விருதும் நடன அமைப்புகள்  பலவற்றின் விருதுகளும் அவரைத் தேடி வந்து அவர் திறமைக்கு அணி செய்தன.இந்திரா காங்கிரசின் சார்பில் தமிழ் நாடு-பொதுத் தேர்தலில் தென் சென்னையில்1984, 1989 தேர்தல்களில் வெற்றிவாகை சூடிய ஒரு நடிகை என்ற பெருமை அவருக்குண்டு. தனது 32 ஆவது வயதில் வட இந்தியரான Chamanlal பாலி யை மணந்து இல்லறம் புகுந்தார். அவரது ஒரே மகன் Suchindra Bali 'நினைத்தாலே'[2007] எனும் தமிழ்ப் படத்தில் கதாநாயகனாகத் தோன்றியுள்ளார். ஹிந்தித் திரையுலகில் நுழைந்து  தன் நிகரின்றித் திகழ்ந்த முதல் தமிழ் நடிகையான வைஜயந்திமாலாவுக்கு கலையுலக வரலாற்றில் நிச்சயமாக ஒரு தனியிடம் உண்டு.

நூடன்
Image result for nutan imagesImage result for nutan imagesபுகழ் பெற்ற நடிகை ஷோபனா சமத்தின் மூத்த மகள்தான் நூடன். மராத்தியரான அவர், வைஜந்திமாலா பிறந்த அதே 1936 இல் அவருக்கு இரண்டு மாதங்கள் முன்னதாக ஜூன் 04 இல் பிறந்தார். 1952 இல் பதினாறு வயது மங்கைப் பருவத்தில்  Miss India வாகத் தெரிவானவர் நூடன். தாயார் கதாநாயகியாக  நடித்துக் கொண்டிருந்த  போதே அவரது காதலரான நடிகர் மோதிலால் தயாரித்து இயக்கிய Hamari Beti [1950] படத்தில் அவர்களின் 15 வயது மகளாக நடித்தார். தொடர்ந்து Nagina [1951]இல் நசீர் கானுடன் கதாநாயகியாகி, பால் ராஜ்  சஹானி, பாரத் பூஷன், பிரேம்நாத், பிரதீப்குமார், Shekher போன்ற இரண்டாம் கட்ட நாயகர்களுடன்  அவர் சேர்ந்து நடித்த படங்கள் ஏதும் வெற்றியீட்ட வில்லை. Laila Majnu [1953] உட்பட ஷம்மி கபூருடன் நடித்த மூன்று படங்களும் அவ்வாறே. 1958 இல் கிஷோர்குமாருடன் நடித்த இரு படங்களுள் Dilli  Ka Thug நகைச்சுவைப் படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. 50, 60 களில் சுனில் தத், தேவ் ஆனந்த், ராஜ் கபூர், அசோக்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக  நடித்த படங்கள் பலவும்  வெற்றிக்கொடி நாட்டி, நூடனுக்கும் புகழைத் தேடித் தந்தன
Image result for old hindi actress nutan images
தேவ் ஆனந்துடன் நூடன் நடித்த  Paying Guest (1957), Baarish (1957), Manzil (1960Tere Ghar Ke Samne (1963) எனும் நான்கு படங்களும் இருவரையும் பொருத்தமான ஜோடியாகப் பார்க்க வைத்தன. ராஜ் கபூருடன் நடித்த நான்கு படங்களுள் Anari [1959] யும் Chhalia[1960] வும் பேசப்பட்டன.

Image result for nutan images
Image result for nutan imagesசுரேந்தருடன் சேர்ந்து நடித்த Seema [1955] முதன்முதலாக சிறந்த நடிகைக்கான Film fare விருதை அவரது 20 ஆவது வயதில் வென்று கொடுத்தது. தொடர்ந்து சுனில் தத்துடன் நடித்த Sujatha[1959]Milan [1967]அசோக்குமாருடன் பங்கேற்ற Bandini [1963]வினோத் கன்னாவுடன்  நடித்த Main Tulsi Tere Aangan Ki [1978] ஆகிய படங்களுக்காகவும் சிறந்த நடிகைக்கான Film fareவிருதுகளை வென்று Film fare விருதுகளை ஐந்து முறை வென்ற ஒரே நடிகையாக நூடன் சிறப்புப் பெறுகிறார்.                                    சிறந்த துணை நடிகைக்கான விருதையும் 1985 இல் Girish Karnad டுடன் நடித்த Meri Jung மூலம் பெற்றுக் கொண்டார். வங்காள திரைப்பட எழுத்தாளர் ஒன்றியம்சிறந்த நடிகையாக அவரைத் தெரிவு செய்ய  அமிதாப் பச்சனுடன் அவர் நடித்த Saudagar [1974] காரணியாயிற்று. அசோக் குமார், தர்மேந்திராவுடன் நடித்த பிமல் ராயின்  பந்தினி நூடனின் திரை வரலாற்றில் முத்திரை பதித்த ஒரு திரைப்படமாகக் கருதப்படுகிறது. அசோக் குமாரின் மருமகளாக அவர் நடித்த Anuraag [1973]ராஜ் கபூர், ரஹ்மானுடன் நடித்த Chhalia [1960], புதுமுக நடிகரான மனிஷுடன் நடித்த Saraswati Chandra[1968] என்பனனவும் குறிப்பிடத்தக்க அவரது படங்களுள் அடங்கும்.
Image result for nutan imagesImage result for nutan images60, 70 களில் சுனில் தத்துடனும் தர்மேந்திராவுடனும் அதிக படங்களில் நடித்த நூடன். ராஜ்குமார், மனோஜ்குமார், சஞ்சீவ்குமார், ராஜேந்திரகுமார் என அக்காலகட்ட முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து கதாநாயகியாக நடித்தவர். 80 இல் மிதுன் சக்கரவர்த்தியுடனும் 1986 இல் முதன்முதலாக திலீப்குமாருடனும் இணை சேர்ந்து நடித்தார். 1991 இல் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சாவைச் சந்திக்க நேர்ந்த நூடன் இறப்பதற்கு முன் இறுதியாக அவர் நடிப்பில் வெளிவந்த படம் - Kanoon Apna Apna  [1989] அதிலும் திலீப்குமாரே அவருடன் இணைசேர்ந்திருந்தார். 1974 இல் பாரத அரசின் பத்மஸ்ரீ  விருது அவருக்கு வழங்கப்பட்டது.


மாலாசின்ஹா


Image result for old hindi actress mala sinha images11.11.1936 இல் கல்கத்தாவில் நேப்பாளக் குடும்பத்தில் பிறந்த மாலாசின்ஹா வங்காளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பின்னர் 1954 இல் பிரதீப்குமாருடன் கதாநாயகியாக நடித்த Hamlet மூலம் ஹிந்திப் படவுலகில் காலடி பதித்தார்.
Image result for old hindi actress mala sinha images அறிமுகமான 50 களில் பிரதீப்குமாருடன் அதிக படங்களில் [ஒன்பது படங்களில்] கதாநாயகியாக நடித்த போதிலும் குருதத்துடன் நடித்த Pyassa [1957] ராஜ்கபூருடன் நடித்த Phir Subah Hogi [1958] ராஜேந்திரகுமாருடன்   நடித்த Dhool Ka Phool [1959] போன்ற படங்களே வரவேற்புப் பெற்று வசூலிலும் திருப்தியளித்தன. ஷம்மிகபூர், கிஷோர் குமார் உட்பட   கிஷோர் சாபு , மகிபால், திரிலோக் கபூர் சொஹ்ராப்மோடி, ரெஹ்மான், பால் ராஜ்  சஹானி, கிஷோர்குமார் போன்ற  இரண்டாம் தர நடிகர்களுடனும் நடித்த படங்கள் அவ்வளவாக  வெற்றி யீட்டவில்லை.
Image result for old hindi actress mala sinha images60 களில் பிஸ்வஜித்துடன் ஒன்பது படங்களில் நடித்த  மாலாசின்ஹா தேவ் ஆனந்த்,  பாரத் பூஷன், சுனில் தத், அஜித்கான்  உட்பட அக்காலகட்டத்தில் அறிமுகமாகி முன்னணி நாயகர்களான ராஜ்குமார், ராஜேந்திரகுமார், தர்மேந்திராமனோஜ்குமார், ஜிதேந்த்திரா, ஜோய் முகர்ஜி வினோத் மெஹ்ரா  போன்றோருடனும் 70 களில் ராஜேஷ்கன்னா, அமிதாப் பச்சன், சஞ்சீவ்குமார், சஞ்சய்கான் போன்றவர்களுடனும் கதாநாயகியாக பங்கேற்றார்.
60 களில் அவர் நடித்த படங்களுள் பாரத் பூஷனுடன் நடித்த Jehan Ara[1964], மனோஜ்குமாருடன் நடித்த Himalaya Ki God Mein [1965] இரண்டும் வங்காள திரைப்பட எழுத்தாளர் ஒன்றியத்தின் சிறந்த நடிகைக்கான விருதை மாலாசின்ஹா பெற வழிகோலின. குருதத்துடன் அவர் நடித்த Bahurani 1963] யும் பாராட்டுப் பெற்ற ஒரு படம். 70 களில் ராஜ்குமாருடன் அவர் நடித்த 36-Ghante [1974], Karmayogi [1978] என்பனவும் சஞ்சீவ்  குமாருடன் நடித்த Zindagi [1976]  யும் கவனத்துக்குள்ளாயின.
Image result for old hindi actress mala sinha images80 களில் ஷம்மி கபூருடன் அவர் நடித்த Harjaee[1981]  மற்றும் அவர் குணசித்திர வேடமேற்ற   Be-Reham (1980),  Yeh Rishta Na Tootay [1981],  Babu [1985],  Khel [1992]    என்பன குறிப்பிடத் தக்கன. இதில் 'ஓடையில் நின்னு ' என 1965 இல் மலையாளத்தில் வெளியாகி, பின் சிவாஜியின் நடிப்பில் 1971 இல் பாபு' எனத் தமிழிலும் சக்கை போடு போட்ட படம்தான் ஹிந்தியிலும் 'பாபு' எனும் பெயரில் 1985 இல் வெளியானது. தமிழில் சௌகார் ஜானகி ஏற்ற வேடத்தில் நவீனின் மனைவியாக மாலாசின்ஹா தோன்றினார்.
1954 இல் இருந்து 1994  வரையான நாற்பது ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹிந்திப் படங்களில் நடித்த மாலாசின்ஹா 1952 - 1977 வரையான காலப் பகுதியில் வங்காள நடிகர் உத்தம்குமாருடனும் கிஷோர்குமாருடனும் சில வங்காளப் படங்களிலும் கதாநாயகியாக நடித்தார். தாய்மொழியான நேப்பாளிப் படமொன்றிலும் நடித்த மாலா அதில் தன்னுடன் நடித்த நடிகர் Prasad Lohani 1968 இல் திருமணம் செய்து கொண்டார். 


சினிமா - 4 C +
காமினி கௌஸல்

Image result for old hindi actress kamini kaushal imagesஞ்சாப், லாகூர் பல்கலைக் கழக தாவரவியல் பேராசிரியராக இருந்த ஷிவ் ராம் காசியப்பின் மகள் உமா காசியப் ஒரு ஆங்கில இலக்கியப் பட்டதாரி. பொழுதுபோக்காக வானொலிமேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவரைத் தனது புதுமைப்  படைப்பான 'Neecha Nagar[1946]    இல்திரைக்காக காமினி கௌஸல் எனப் பெயர் சூட்டிக் கதாநாயகியாக அறிமுகம் செய்தார்- [நடிகர் தேவ் ஆனந்தின் தமையனாரான] நெறியாளர் சேட்டன் ஆனந்த்.
NeechaNagar முதல்  Cannes  சர்வதேசத் திரைப்பட விழாவில் [Grand Prix du Festival International du Film] தங்கத்தாமரை விருது வென்றது. 
Image result for old hindi actress kamini kaushal images1948 இல் ஒரு கார் விபத்தில் அவரது தமக்கை அகால மரணமடைய அவரது இரு மகள்மாரின் நலனுக்காக அவரது கணவரைக் கரம் பற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு காமினி ஆளானார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அவரைத் தேடி வரவும் திருமணத்தின் பின்னரும் காமினி நடிப்பைத் தொடர்ந்தார். திலீப் குமாருடன் அவர் நடித்த Shaheed [1948] அவ்வாண்டின் அதிக வசூலைக் குவித்த படமாக முதலிடம் பெற்றது.  திலீப்பின் ஜோடியாக அடுத்த சில ஆண்டுகள்    Shaheed (1948), Pugree, Nadiya Ke Paar (1949), Shabnam (1949), Arzoo (1950))  என  அவரின் திரைப்பயணம் தொடர்ந்தது. திலீப்பின் மனங் கவர்ந்த முதற் காதலியாக காமினி இருந்த போதிலும் காமினியால் திலீப்புக்காக தனது குடும்பத்தைத் துறக்க இயலவில்லை.
Image result for old hindi actress kamini kaushal images1946 இல் இருந்து 1963 வரை அவர் கதாநாயகியாக நடித்தனவற்றுள் அசோக்குமார் –Poonam[1952], Night Club [1958],  தேவ் ஆனந்த்Namoona [1947]  கிஷோர் குமார்Abroo [1950],  கிஷோர் சாபு - Bade Sarkar [1957], அஜித்- Bade Bhai [1957],  சொஹ்ராப் மோடி- Jailor [1958, ராஜ்குமார்- Godaan [1963] போன்றோருடன் நடித்த படங்களும் ரெஹ்மான், மதுபாலாவுடன் நடித்த Paras (1949),  படமும் குறிப்பிடத்தக்கன. Abhi Bhattacharya, வுடன் நடித்த பிமல் ராயின் Biraj Bahu படத்துக்காக  சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றார்.
Image result for old hindi actress kamini kaushal images1965 இல் Shaheed இல் மனோஜ்குமாரின் தாயாக நடிக்க ஆரம்பித்த காமினி [சிறந்த துணை நடிகைக்கான வங்க எழுத்தாளர் சங்க விருதையும் அதற்காகப் பெற்று] அதன் பின்  அமிதாப் பச்சன் உட்படப் பல முன்னணி நடிகர்களின் தாயாகவும் குணசித்திர வேடங்களிலும் இன்றுவரை தனது நடிப்பைத் தொடர்கிறார். நடனமுட்பட, நீச்சல், குதிரைச் சவாரி எனப் பல கலைகளிலும் திறமை பெற்றவரான காமினி பின்னைய நாட்களில் சிறுவர்களுக்கான கதைகள் எழுதுவதிலும் தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிப்பதிலும் தனது பொழுதை பயனுறக் கழித்த வண்ணமுள்ளார். 

பீனா ராய்

Image result for old hindi actress bina rai imagesஞ்சாப், பாகிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட  பீனா ராய் பிறந்தது 13.07.1932 இல்.   1951 இல் ஹிந்தித் திரையுலகில் கிஷோர் சாபுவுடன் கதாநாயகியாக Kali Ghata  மூலம் அறிமுகமானார். அவர் Samson and Delilah கதையான Aurat [1953] இல் நடித்த போது அதில் நாயகனாக உடன் நடித்த நடிகர் பிரேம்நாத்தில் காதல் கொண்டு இருவரும் 1952 இல் மனம் புரிந்து கொண்டனர். பிரதீப்குமாருடன் பீனாராய் நடித்த 'அனார்கலி'[1953] காதல் காவியத்தின் மகத்தான வெற்றி அவரை ரசிகர்களின் கனவுக் கன்னியாக்கியது.
Image result for old hindi actress bina rai images
Image result for old hindi actress swarnalatha in rattan movie imagesஅதே கதை மீண்டும் அதே கதாநாயகனுடன் நடித்து ஒரு தசாப்தத்தின் பின் Tajmahal என 1963 இல் வெளியான போதும் அதே வரவேற்பைப் பெற்றது. பிரதீப்குமாருடன் அவர் இணைந்து நடித்து 1960 இல் வெளியான ஜெமினி வாசனின் தயாரிப்பான  Ghunghat [1960] சிறந்த நடிகைக்கான Film fare  விருதை பெற்றுத் தந்தது. அனார்கலியின் வெற்றியைத் தொடர்ந்து பிரேம்நாத்-பீனாராய் தம்பதி சொந்தத் தயாரிப்பில் ஈடுபட்டது. இருவருமாக இணைந்து நடித்த எப்படமும் வெற்றியீட்டவில்லை. திலீப், தேவ் ஆனந்துடன் நடித்த Insaniyat [1955] அசோக்குமாருடன் நடித்த Sardar[1955] என்பன பீனாராய் நடித்தனவற்றுள் குறிப்பிடத் தக்கவை.

1967 இல்  வெளியான 'RamRajyaவில் சீதையாக பீனாராய் நடித்தார். Shekhar உடன்  நாயகியாக நடித்து 1968 இல் திரையிடப்பட்ட  Apna Ghar Apni Kahani யுடன் பீனாராய்  தனது திரையுலகப் பயணத்தை முடித்துக் கொண்டார். அவர்களின் மகன் பிரேம் கிஷன் ஒரு சில படங்களில் நடித்தார்.1992 இல் பிரேம்நாத்தும் 2009 இல் பீனாராயும் மீளாத துயிலில் ஆழ்ந்தனர்.


நிருபாராய் Queen of Misery



Image result for old hindi actress nirupa rai imagesImage result for old hindi actress nirupa rai images04.01.1931 இல் குஜராத்தில் பிறந்த நிருபா ராய் 15 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் 1946 இல் ஹிந்திப் படவுலகில் இடம் பிடித்தவர். திரிலோக் கபூர் கதாநாயகனாக நடித்த Amar Raj மூலம் அவர் அறிமுகமானார். புராண, சரித்திரப்பட நடிகையாக திரிலோக் கபூருடன் மட்டும் 18 படங்களில் இணை சேர்ந்து நடித்தார். பால் ராஜ்  சஹானியுடன் நடித்த சமூகப் படமான பிமல் ராயின்  Do Bigha Zameen[1953] னும் GaramCoat [1955]  டும் அசோக் குமாருடன் நடித்த Bhai Bhai [1956] யும் பாரத் பூஷனுடன் நடித்த Udhaar[1949],  Bhai  Behen [1950] என்பனவும்  கதாநாயகியாக அவர் நடித்த ஆரம்ப காலப் படங்களில் குறிப்பிடத்தக்கன.  60 களுக்குப் பின் பாசமுள்ள தாய் வேடங்களில் முத்திரை பதித்த நிருபா ராய் சோக நடிப்பில் சிகரம் தொட்டு Queen of Misery எனப் போற்றப்பட்டார். அமிதாப் பச்சனதும் சஷி கபூரினதும் தாயாக நடித்த Deewar[1975] படம் அவரது உருக்கமான நடிப்புக்காக இன்றும்கூட நினைவுகூரப்படுகிறது.
சிறந்த துணை நடிகைக்கான Film fare விருதை Munnimji [1956],  Chhaya[1961], பிஸ்வஜித்தின் தாயாக நடித்த Shehnaal [1964] ஆகிய திரைப்படங்களுக்காக மும்முறை வென்றுள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டதான அவரது திரையுலகப் பயணத்தில் 275 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துச் சாதனை புரிந்த அவர் ஹிந்தித் திரையுலகின் ஒப்பற்ற தாயாக ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கிறார்.

சுசித்ரா சென்

Image result for old hindi actress suchithra sen  imagesImage result for old hindi actress suchithra sen  images1931 இல் பிறந்த சுசித்ரா சென் அதிகமாக வங்காளத்திலும் ஒரு சில ஹிந்திப் படங்களிலும் நடித்தவர். 1952 - 1978 காலப் பகுதியில்  அவர் நடித்த 61 படங்களுள் வங்காள பிரபல  நடிகர் உத்தம்குமாருடன் மட்டும் 30 படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். 1952 இல் நடிக்க வந்த அவர் 'சப்தபதி' வங்காள படத்துக்காக  Moscow International Film Festival, இல்  சிறந்த நடிகைக்கான வெள்ளிப் பதக்கம் வென்றார். பாரத அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 1972 இல் பெற்றுக் கொண்ட அவர் முதன்முதலாக நடித்த இந்திப்படம் Devdas’ [1955]. திலீப்புடன் அவர் நடித்த அப்படம் வெற்றியீட்டவில்லை. திலீப், கிஷோருடன் நடித்த ‘Musafir’ [1957] பாரத்பூஷனுடன் நடித்த ‘Champakali’ [1957] தேவ் ஆனந்துடன் நடித்த ‘Bombai Ka Babu’ [1960], ‘Sarhad’ [1960] சஞ்சீவ்குமாருடன் நடித்த ‘Aandhi’ [1975] என்பன  அவர் நடித்த குறிப்பிடத்தக்க ஹிந்திப் படங்கள். நடிகைகள் Riya Sen, Raima Sen [ ரியா சென், ரெய்மா சென்] ஆகியோரின் தாயாரும் 80, 90 களில் முன்னணியில் திகழ்ந்த ஹிந்தி நடிகையுமான Moon Moon Sen [மூன் மூன் சென்] இவரது மகளாவார்.
1978 இல் திரையுலகை விட்டு விலகிக் கொண்ட அவர் திரையுலக மாயையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஞான மார்க்கத்தில் ஈடுபாடு காட்டலானார். தன்னைத் தேடி வந்த தாதாசாஹேப் பால்கி விருதையும் ஏற்க மறுத்துவிட்டார். 17.01.2014 இல் அவர் காலமான போது மேற்கு வங்காள அரசும் திரைப்படத் துறையினரும் உயர்வான மரியாதை செய்து அவரது உடலைத் தகனம் செய்தனர். 


கீதாபாலி 
Image result for old hindi actress geeta bali imagesபீனாராயைப் போலவே பஞ்சாப், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹரி கிரண் எனும் கீதாபாலி 12 வயதில் சினிமாவில்  நடிக்க ஆரம்பித்து 16 வயதில் Badnaami[1946] மூலம் கதாநாயகியானார்.
கீதாபாலி நடித்த படங்களு  பாரத் பூஷனுடன் Sohag Raat’[1948],   ராஜ் கபூருடன் ‘Baware Nain’[1950], தேவ் ஆனந்துடன் Baazi’[1951], ‘Jaal’[1952]பகவானுடன் ‘Albela’[1951], ‘Jhamela’[1953]ஷேய்க் முக்தாருடன் Ghayal’[1951] குரு தத்துடன் Bazz’[1953]ராஜேந்திரகுமாருடன் Vachan’[1955]   I.S.ஜோகருடன் ‘Mr.India’ [1961]பிரிதிவிராஜ் கபூர், பாரத் பூஷன், பிரதீப் குமார்  ஆகியோருடன் பங்கேற்ற Anand Math’[1952] போன்ற படங்கள் குறிப்பிடத் தக்கவை. Anand Math,  'ஆனந்த மடம்' ஆகத் தமிழில் மொழிமாற்றப்பட்டு  இல் வெளியானது.
 1942 இல் இருந்து 1963 வரையான 21 ஆண்டுகளில் சுமார் 70 படங்கள் மட்டில் நடித்த கீதாபாலி 1955  இல் ஷம்மி கபூருடன் இணைந்து Miss Coca Cola[1955]  படத்தில் நாயகியாக  நடித்தார். அப்போது இருவருக்குமிடையில் அரும்பிய காதல் கல்யாணத்தில் முடிந்தது. திருமணத்தின் பின்னரும் நடிப்பைத் தொடர்ந்த கீதாபாலி ஷம்மி கபூருடன் மட்டுமன்றி ஏனைய கதாநாயகர்களுடனும் சேர்ந்து நடித்தார். பிரதீப்குமாருடன் கதாநாயகியாக அவர் கடைசியாக நடித்த படம் Jab Se Tumko Dekha Hai  [1963]அதில் ஷம்மி கபூரும் கௌரவ வேடத்தில் தோன்றினார். அவர்களின் மகனான ஆதித்யா ராஜ்கபூரும் சில படங்களில் நடித்துள்ளார். நோய்க்கிரையாகி  கீதாபாலி    35 வயதிலேயே அகால மரணமடைய நேர்ந்தது.

ஷகிலா


Image result for old hindimovie begunah posterImage result for old hindi actress shakila images
 
மாயாஜால மந்திர தந்திரப் படங்களில் கதாநாயகியாகத் தோன்றி இரசிகர்களைக் வசீகரித்த  அழகுப் பதுமைதான் ஷகிலா. இல் பிறந்த ஷகிலாவுக்கு கரண் தேவனும் சுரையாவும் நடித்த Duniya [1949] தான் முதற் படம். 1949 இல் இருந்து 1963  வரையான 14 ஆண்டுகாலப் பகுதியில் சுமார் 50 படங்கள் மட்டில்பெரும்பாலும் கதாநாயகியாகவே நடித்து முடித்தவர் ஷகிலா. தேவ் ஆனந்துடன் இவர் நடித்த  அமோக வெற்றி பெற்று  CID [1956] அவ்வருடத்தில் வசூலில் முதலிடத்தைப் பெற்ற ஒரு  படம். குருதத்துடன் ஷியாமா நடித்த Arr-Paar [1954]  படத்தில் ஒரு நடன நங்கையாக வந்து அவராடிய ஆட்டம்  இரசிகர்களைக் கிறங்கடித்தது. சுனில் தத்துடன் ஷகிலா நடித்த Post Box [1958] ஷம்மி கபூருடன் நடித்த China Town [1962] ராஜ்கபூருடன் நடித்த Shriman Satyawadi [1960] அசோக்குமாருடன் நடித்த Ustadon Ke Ustad [1963] என்பன பெருவெற்றியீட்டாத போதிலும் ஷகீலா நடித்தனவற்றுள் குறிப்பிடத்தக்கன. அசோக் குமாருடன் இல்  நடித்த படமே அவர் நடித்த இறுதிப் படமாகவும் அமைந்தது. 
Image result for old hindi actress shakila imagesImage result for old hindi actress shakila images
Alibaba &
40 Chor[1954] உட்பட 13 படங்களில் மஹிபாலுடன் மட்டும் இணை சேர்ந்து நடித்துள்ள ஷகீலா பகவான், கிஷோர்குமார்,[Beguna-1957மெஹ்மூட் போன்றவர்களுடன் நகைச்சுவைப் படங்களிலும் மற்றும் பிரேம்நாத், அஜித், பிரதீப் குமார், ரஞ்சன், கரண் தேவன்,ஜெயராஜ்  முதலியோரின் படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளார். ஜெயராஜுடன் ஷகிலா நடித்த  Hatim Tai [1956]'மாயமோஹினி' என்ற பெயரில் அது ஹிந்தியில் வெளியான அதே 1956 இல் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.  1963இல் திருமணம் புரிந்து கொண்டு திரையுலகையும் தாய் நாட்டையும்  விட்டு விலகி UK யில் சென்று குடியேறிய ஷகிலா 2017 September  இல் காலமானார்.


ஷியாமா

Image result for old hindi actress shyama imagesImage result for old hindi actress shyama images 07.06.1935 இல் பஞ்சாப் லாகூரில் பிறந்தவர் ஷியாமா. பேபி குர்ஷித்தாக நூர்ஜஹான் நாயகியாக நடித்த Zeenat  மூலம்  1945 இல் திரைப் பிரவேசம் செய்தார். கதாநாயகியாக அதிகமாக நடிக்காத போதிலும்  நாயகனைத் தனது ஆடல் பாடல்களால் மயக்கி வசீகரிக்கும் காரிகையாக வில்லியாக துணைப் பாத்திரங்களில் 50, 60 களில் அசத்தியவர் ஷியாமா. ராஜ்கபூரும் மீனாகுமாரியும் பிரதான வேடங்களில் நடித்த Sharada 1957] சிறந்த துணை நடிகைக்கான  விருதை ஷியாமாவுக்குப் பெற்றுத் தந்தது. Aar Paar[1954] இல் குருதத்தின் நாயகி ஷியாமாதான். ராஜேந்திரகுமாருடன் நடித்த Do Behnen[1959] இல் நாயகி, வில்லி என இரட்டை வேடம் அவருக்கு. திலீப்,மதுபாலா நடித்த Tarana [1951] பால்ராஜ் சஹானி, நந்தா நடித்த Choti Behen [1959] பாரத் பூஷன், மதுபாலா நடித்தBarsat Ki Raat [1960]  அசோக்குமார், நிருபா ராய் நடித்த Bhai Bhai [1956] போன்றன ஷியாமா துணைப் பாத்திரமேற்று நடித்த படங்களுள் குறிப்பிடத் தக்கன.
Image result for old hindi actress shyama images
Image result for old hindi actress shyama images 50 களில் பால்ராஜ் சஹானி [Mai baap – 1951/ Majhoori -1954],  பாரத் பூஷன் [Maa -1952], ஷம்மி கபூர் [Th okar – 1953/ Mirza Sahirban – 1957],   மோதிலால் [Savadan – 1954], ஐ.எஸ்.ஜோகர் [Shart – 1954], ஜொனி வாக்கர்[Chhoo Mantar -1956/ Johnny Walker – 1957], மகிபால் [Tulsidas – 1954], பிரேம்நாத் [Dil-E-Nadan – 1953/ Bus Conductor – 1959], கரண் தேவன் [Laadia – 1954], ஆகா [Pipil Saheb – 1954],  Talat Mohamed  [Lala Rukh – 1958] சுரேஷ் [Char Chand – 1953] எனப் பலதரப்பட்ட நாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து கதாநாயகியாக நடித்த போதிலும் அவற்றுள் எதனாலும்  வெற்றிக் கோட்டைத் தொடமுடியவில்லை. குருதத்துடனும் ராஜேந்திர குமாருடனும் நடித்தவை[Aar-Paar, Do Behnen] மட்டும் விதிவிலக்கு. 60 களிலும் அதன் பின்னரும் அவர் நடித்தனவற்றுள் திலீப், வஹீதா ரஹ்மான்  நடித்து வெளியான Dil Diya Dard Liya  -[ 1966],   சுனில்தத், நூடன் ஜோடியுடன் நடித்த Milan  - [1967] ரேகா கதாநாயகியாக நடித்த Sawan Bhadon-[1970] போன்ற படங்களில் ஷியாமாவின் நடிப்பு பேசப்பட்டது. 1945 இல் இருந்து1989  வரையான 45 வருட காலப்பகுதியில் 147 படங்களில்  நடித்து முடித்துச் சாதனைபுரிந்த  ஷியாமா சஞ்சய் தத் கதாநாயகனாக நடித்து 1989 இல் வெளியான  Hathyar இல் தான் கடைசியாக நடித்தார். Cinematographer Fali Mistry ஐ  1953 இல் மணம்புரிந்த ஷியாமா திருமணத்தின் பின்னரும் - கணவர் 1979 இல் காலமான பின்னரும் கூட நடிப்பைக் கைவிடாது தொடர்ந்தமை குறிப்பிடாத தக்கது.


சசிகலா  shashikala 
Image result for old hindi actress shashikala images
Image result for old hindi actress shashikala imagesஷியாமாவைப் போலவேதான் சசிகலாவும் சிறுமியாகத் திரையுலகில் நுழைந்து களில் நாயகியாகச் சில படங்களில் நடித்துப் பின் வில்லியாக வெளுத்து வாங்கியவர். 1932  இல் பிறந்த மராத்தியரான சசிகலா குடும்ப வறுமை காரணமாக ஐந்து வயதுச் சிறுமியாக இருக்கும் போதே ஹிந்தித் திரையுலகைத் தஞ்சம் புகுந்தவர். 1936 இல் அவர் முகம்காட்டிய முதற்படம் வெளியானது. ஷியாமாவைப் போலவே தான் சசிகலாவுக்கும் நடிகை நூர்ஜஹான் மூலம் அவர் கதாநாயகியாக நடித்த Zeenat [1945] படத்தில் நடிக்கும் வாய்ப்புக்கிட்டியது. படிப்படியாக முன்னேறிய சசிகலாவுக்கு திலீப் நாயகனாகத் தோன்றிய Arzoo [1950]வில் 2 வது நாயகியாக  பாக்கியம் சித்தித்தது. அதற்கடுத்து அவரின்  21 ஆவது வயதிலேயே  சாந்தாராமின் Surang [1953] கும் Teena Baati [1953] யும் அவரைக் கதாநாயகி  அந்தஸ்துக்கு உயர்த்தி விட்டன.
Image result for old hindi actress shashikala imagesImage result for old hindi actress shashikala imagesஷம்மிகபூர், கிஷோர்குமார், பிரேம்நாத், தேவ் ஆனந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைசேர்ந்து நடித்த போதிலும் அப்படங்களால்  பெரிய வரவேற்பைப் பெற முடியவில்லை. 1959 இல் சுனில்தத், நூடன் நடித்த Sujatha வில் வில்லியாக மாறினார். அதன்பின்  1962 இல் பிரதீப்குமாரும் மீனாகுமாரியும் நடித்த Aarti யில் அவரேற்ற வில்லிப் பாத்திரம் சிறந்த துணை நடிகைக்கான Film fare விருதை அவருக்கு வென்று கொடுத்தது. அதற்கடுத்த ஆண்டிலும் அவ்விருது அவருக்குத்தான்! சுனில்தத்துடன் மாலாசின்ஹா நடித்த Gumrah[1963] மூலம் அதை வென்றார்.
தொடர்ந்து வில்லி வாய்ப்புகள் அவரைத் தேடிவந்து குவியலாயின. Filmfare  இன் சிறந்த துணை நடிகைக்காக எட்டுமுறை பரிந்துரைக்கப்பட்ட   சசிகலா பின்னைய நாட்களில் தாய், பாட்டியென வயதான வேடங்களில் தோன்றித் தன் திறமையை வெளிப்படுத்தினார்.   2007இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட போது சிலபல ஆண்டுகளின் முன்னரே தனக்கு அது வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனும் ஆதங்கத்தை வெளிப்படையாகவே கூறியவர் சசிகலா.

பத்மினி 
Image result for old hindi actress padmini imagesImage result for old hindi actress padmini images50 - 60 களில் தமிழ்த் திரைவானில் வெற்றிக்கொடி நாட்டிய நாட்டியப் பேரொளி பத்மினி ஹிந்தியிலும் மினக்கெட்டு 30 படங்கள் மட்டில் நடித்துள்ளார்.  12.06.1932 இல் கேரளாவில் பிறந்த பத்மினி நடிகை உஷா கிரணைப் போலவே நடனக் கலைஞர் பத்மபூஷன் உதய சங்கரின் 'கல்பனா' மூலம் 1948 இல் ஹிந்தித் திரையுலகுக்கு அறிமுகமானார். ஜெமினியின் 'மிஸ் மாலினி' [1947], Mr.Sampath [1952] ஆக ஹிந்தியில் உருமாறிய போது மோதி லாலுடன் கதாநாயகியாக பத்மினி நடித்தார்.1957 - 1970 வரையான காலப் பகுதியில் தமிழில் பத்மினி நடித்த  'ராஜாராணி'[1956],  Aai Phirse Bahar[1960] ஆகவும் 'உத்தம புத்திரன்', Sitamgar [1958] ஆகவும் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்', Raj Tilak [1958]  ஆகவும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, Amar Shaheed[1959] ஆகவும் ஹிந்தியில் 'டப்'பாகி திரை கடந்தன.
Image result for old hindi actress padmini imagesImage result for old hindi actress padmini imagesபத்மினி தேவ் ஆனந்துடன் நடித்த AmarDeep[1958],  சுனில் தத்துடன் நடித்த Payal [1957]பால் ராஜ் சஹானியுடன் நடித்த Bindya [1960], பிரானுடன் நடித்த Aurat [1967] என்பன முறையே தமிழில் அவர்  நடித்த  ‘அமர தீபம்’ [1956] 'மல்லிகா'[1957], தெய்வப்பிறவி’ [1959], 'சித்தி'[1966] என்பனவற்றின் மீளுருவாக்கங்கள். சுரேஷுடன் பத்மினி நடித்த Qaidi[1957]'மகுடம் காத்த மங்கை'[1957] எனத் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
Image result for old hindi actress padmini imagesபத்மினியின் ஹிந்தித் திரைப்பட வரலாற்றில் முத்திரை பதித்த ஒரு படம் ராஜ்கபூரின் தயாரிப்பில் அவருடன் இணை சேர்ந்து நடித்த Jis Desh Mein Ganga Behti Hai [1960]. சிறந்த நடிகைக்கான விருதை அப்படம் அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.  ராஜ் கபூரின் தம்பி ஷம்மி கபூருடன் பத்மினி நடித்த படம் 'Singapore’! அதே 1960 இல்  வெளியான 'கல்பனா' உட்பட மூன்று படங்களில்  அசோக் குமாருடன் நடித்த பத்மினி அவரது தம்பி கிஷோர்குமாருடன் நடித்த படம் 'ராகினி'! [1958]. இவர்களை விட பிரதீப்குமார், ராஜ்குமார், மெஹ்மூட், ஜீவன் போன்ற நடிகர்களுடனும் சேர்ந்து நடித்த பத்மினி 1970 க்குப் பின் ஹிந்தியில் நடிப்பதை ஏனோ நிறுத்திக் கொண்டுவிட்டார்.  ஆனால் 1986 வரை தமிழில் அவர் நடிப்புத் தொடர்ந்தது. இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான Pardesi [1957] யிலும் பத்மினிபங்கேற்றார்.

நடன நட்ஷத்திரங்கள் ஹெலன் / Cukoo /சந்தியா/Nigar Sultana/Ragini               
ஹெலன்
 
ஆங்கிலோ இந்திய தந்தைக்கும் பர்மிய தாய்க்கும் மகளாக பர்மாவில் 1938 இல் பிறந்த Helen Jairaj Richardson ஹெலன், இரண்டாம் உலகப் போரில் தந்தையைப் பறி கொடுத்துப் பின் அtanaகதியாகத் தாய்நாட்டில் தஞ்சம் புகுந்த ஒருவர்.
Image result for old hindi actress helan  imagesImage result for old hindi actress helan  imagesகுடும்ப பாரத்தைச் சுமக்கவென தனது 13 ஆவது வயதில் ஆடலழகி குக்கூவின் சிபாரிசால் ராஜ்கபூரின் Awara படத்தில் 1951இல்  நடன நங்கையரில் ஒருவராகக் கால்பதித்தார். நடனத்தில் அவருக்கிருந்த ஆர்வமும் ஆற்றலும் விரைவிலேயே1954, 1955  களில் தனி நடனமாடும் அளவுக்கு அவரை உயர்த்திவிட்டன. ஆயினும் Howarah  Bridge [1958] இல் அவர் ஆடிய அசத்தலான ஆட்டம்தான் அவருக்கான வாசலைத் திறந்து வைத்தது.
50 களில் தொடங்கி 60, 70 களில் கொடிகட்டிப் பறந்த  நடனத் தாரகையாக ஹெலன் முன்னணியில் திகழ்ந்தார். 700 படங்களைத் தொட்டுவிட்ட அவரது சாதனையில், பக்காத் திருடன்,  வணங்காமுடி[1958], உத்தம புத்திரன்[1958]], மாய மனிதன்[1958], நான் வளர்த்த தங்கை[1958], பெற்ற மகனை விற்ற அன்னை [1958],  நீலாவுக்கு நெறைஞ்ச மனசு[1958], பாக்தாத் திருடன்[1960] முதலான தமிழ்ப் படங்களும் அடங்கும்.
Image result for old hindi actress helan  imagesImage result for old hindi actress helan  imagesநடனம் மட்டுமே  ஆடிக் கொண்டிருந்த ஹெலன் 60 களின் பிற்பாதியில் ஆரம்பித்துச் சில படங்களில் துணைப் பாத்திரங்களிலும் நடிக்கலானார். அவ்வாறாக அவர் நடித்தனவற்றுள் சிலவற்றுக்காக சிறந்த துணை நடிகைக்கான Filmfare விருதுக்கு 1966, 1969, 1972, 1997 முதலிய ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டார். Lehu Ke Do Rank [1979] திரைப் படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான Filmfare விருது ஹெலனுக்கு வழங்கப்பட்டது. திரைக் கதாசிரியரான Salim Khan ஐக் கரம்பற்றி அவரது முதல் மனைவி பிள்ளைகளுடன் ஐக்கியமாகி அவர்களின் நலனுக்காக தன்னையும் தனது உழைப்பையும் அர்ப்பணித்து நிறைவான வாழ்வை வாழ்ந்து சுகித்தவர் ஹெலன் Jerry Pinto (2006). Helen: The Life and Times of an H-Bomb எனும்   நூல் அவரது வாழ்க்கைச் சரிதையின் ஒரு வெட்டுமுகம்.

Cukoo
Image result for old hindi actressnigar sultana  images
Image result for old hindi actress cuckoo imagesஹெலனின் திரைப் பிரவேசத்துக்குப் பாதை வகுத்த Cukoo Moray 40, 50 களில் முன்னணியில் திகழ்ந்த ஒரு நடனமணி. Cabret ['காபரே'] நடனத்தை Bollywood இல் அறிமுகம் செய்து வைத்தவரும் அவரேதான். 1946 இல்Arab Ka Sitare மூலம் கால் பதித்த குக்கூ நாயகியாக நடித்த படம் - Aahuti [1950] நர்கீசின் நண்பியாக Andaz இல் தோன்றினார். Basant [1950] லும் துணைப் பாத்திரமேற்றார்.  Anoki Ada[1948], Awara[1951], Aan [1952], Mr.&Mrs.55 [1955]  என்பன அவர் ஆட்டத்தில் கலக்கிய ஒருசில படங்கள்.

சந்தியா
Image result for old hindi actress sandhya shantaram images 1951 – 1972  காலப் பகுதியில் சாந்தாராமின் கலைப் படைப்புகளுக்கு உயிர் கொடுத்து பக்கபலமாக நின்றவர் தான் சந்தியா. மராத்தியரான சந்தியா   1951 இல் சாந்தாராமின் மராத்தி படமான Amar Bhoopali  [1951]மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சாந்தாராமின்  Teen Batti Char Raasta [1953]விலும் சிறந்த படமாக தேசிய விருது வென்ற அவரின் Jhanak Jhanak Payal Baaje [1955] யிலும் நாயகியாகவே பயணித்தார். அதில் கோபி கிருஷ்ணாவுடன் சந்தியாவின் நடனம் வியந்து பாராட்டப்பட்டது. நிஜ வாழ்வில், நடிகை ராஜஸ்ரீயின் தாயாரான ஜெயஸ்ரீயை விட்டு சாந்தாராம் பிரிந்த பின், அவரின்  3வது மனைவியாக இடம் பிடித்த சந்தியா 1958 இல் Do Aankhen Barah Haath இல் சந்தாராமின் மனைவியாக வாழ்ந்து காட்டினார். தொடர்ந்து சாந்தாராமின் Navrang [1959], Stree [1961], Sehra [1963], Ladki Sahyadri Ki [1966], Jal Bin Machhli Nritya Bin Bijli [1971] போன்ற படங்களில் மட்டுமே நடித்த சந்தியா இறுதியாகவும் நடித்தது [Pinjra-1972] ஒரு மராத்திப் படத்தில் தான்!

ராகினி 
Image result for old hindi actress padmini  imagesImage result for old hindi actress padmini  imagesகேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருவாங்கூர் சகோதரிகளில் இளையவரான ராகினி பிறந்தது 27.03.1937 இல். பெரும்பாலும் ஒரு நடன நடசத்திரமாக ஹிந்திப் படவுலகில் ஜொலித்த  ராகினி 1963 இல் மகிபாலுடன் CobraGirl அஜித்துடன் Shikar  சஷி கபூருடன்  Yeh Dil Kisco Doon என
 மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சகோதரி பத்மினி  நாயகியாக நடித்த Qaidi[1957], Payal[1957], Sitamgar[1958], Amar Deep[1958], Amar Shaheed[1959], Aaar Phirse Bahar[1960], Kalpana[1960],  Mujrim [1958]போன்ற  படங்களில் துணைப் பாத்திரங்களும் ஏற்றுள்ளார்.Aadhi Raat Ke Baad [1965] உட்பட அவர் பங்கேற்ற படங்களில் அவரது நளினமான நடனங்கள் தவறாது இடம் பெற்றுப் பாராட்டப்பட்டன.


1940, 1950 களில் மற்றும்  சில கதாநாயகிகள் & வில்லிகள்


உஷா கிரண்
Image result for old hindi actress usha kiran imagesமராத்திய  நாடக  நடிகையாக இருந்து உதய சங்கரின் நாட்டிய நாடகச்  சித்திரமான 'கல்பனா’ [1948] வில் பிரதான பாத்திரமேற்று அதன் மூலம் ஹிந்தித் திரையுலகில் இடம் பிடித்தவர்தான் உஷா கிரண். அசோக்குமார், திலீப்குமார், ராஜ்கபூர், தேவ் ஆனந்த், ராஜேந்திரகுமார் என முன்னணி நாயகர்கள் பலருடனும் நடித்த உஷா கிரண் மொத்தமாக நடித்த  படங்களுள் தேவ் ஆனந்துடன் நடித்த Patita[1953], பால் ராஜ் சஹானியுடன் நடித்தKabuliwala[1961],Bawarchi [1972] என்பனவும் அவர் துணைக் கதாநாயகியாக நடித்த Madhab [1951], Daag [1952], Bandbaan [1954], Nazra [1961], Milli[1975] என்பனவும் குறிப்பிடத் தக்க சில படங்கள்.

கல்பனா கார்த்திக் 
Image result for old hindi actress , kalpana karthik, images1931 இல் பிறந்த கல்பனா கார்த்திக் தேவ் ஆனந்தின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான Navketan Films ஆரம்பிக்கப் பட்டதில்  இருந்து அதனோடு தன்னை இணைத்துக் கொண்டவர். அந்நிறுவனம் 1951 இல் இருந்து  1957வரை தயாரித்த படங்களுள் ஆறில் மட்டும் அவர் நடித்தார். முதல் நான்கு படங்களில் இரண்டாவது மூன்றாவது கதாநாயகியாகவும் 1954 இல் வெளியான HouseNo44 இலும் 1957 இல் வெளியான Nau Do Gyarah இலும் தேவ் ஆனந்துடன் பிரதம கதாநாயகியாகவும் நடித்தார். நடிகை சுரையாவுடனான தேவ் ஆனந்தின் காதலுக்கு சாட்சியாகவும் உறுதுணையாகவும் இருந்த கல்பனா துரதிர்ஷ்டவசமாக அக்காதல் முறிவடைந்த பின் 1954 இல் தேவ் ஆனந்த்தைத் திருமணம் செய்துகொண்டார்.

                                                                                         


Image result for old hindi actress mumtaj shanthi  imagesமும்தாஜ் சாந்தி –Mumtaz Shanthi
  1942 இல்  அவ்வாண்டின் மிக அதிகமான வசூலைக் குவித்த படமான Basant  உடன் ஆரம்பித்து Biwi[1950]  உட்பட 1952 இல் சுரேஷுடன் நடித்த Zamane Ki Hawa (1952)
 வரையான [ பதினொரு ஆண்டுகளில்] ஒருசில குறிப்பிடத்தக்க படங்களில் கதாநாயகியாக மின்னி மறைந்து போனவர் மும்தாஜ் சாந்தி. ஹிந்தித் திரையுலக வரலாற்றையே புரட்டிப் போட்ட திரைச் சித்திரமான Kismet [1943] இல் அசோக்குமாரின் நாயகி மும்தாஜ்தான். அசோக்குமாருடன் அவர் நடித்து 1948  இல் வெளியான Padmini  திலீப்குமாருடன் நடித்த Ghar Ki Izzat (1948) மற்றும் மோதிலாலுடன்   BadaltiDuniya (1943]சுரேந்திராவுடன் Bhartruhari (1944) யாகூப்புடன் Putli (1950)  என அவர் நடித்த சில படங்கள் நினைவுகூரப் படுகின்றன. தனது திருமணத்தின் பின்னர் கணவருடன்மும்தாஜ் சாந்தி 50 களின் ஆரம்பத்தில்  பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்து விட்டார்.


Image result for old hindi actress munawar sultana   imagesமுனவர் சுல்தானா –Munawar Sultana
 08.11.1924 இல் பிறந்த பஞ்சாப் முஸ்லிமான முனவர் சுல்தானா 1941 - 1956 காலப் பகுதியில் சுரையா, நர்கிஸ் போன்றவர்களுக்குச் சமதையாகப் பேசப்பட்டவர். திலீப், நர்கீஸுடன் அவர் நடித்த முக்கோணக் காதல் சித்திரமான 'Babul’ [1050] அவ்வாண்டின் மிகச் சிறந்த படமாக [வசூலில் 'சமாதி'க்கு அடுத்தபடியாக] வரவேற்ப்புப் பெற்றது. 1941 இல் நடிக்க ஆரம்பித்த முனவர் கதாநாயகியாக  1945 இல் மோதிலாலுடன் நடித்த Pehli Nazar படத்துடன் அவரது திரைப் பயணம் துரிதமானது. சுரேந்திரா, ஷியாம், கரண் தேவன், ரெஹ்மான், தேவ் ஆனந்த், மகிபால், பகவான் எனப் பல 'ஹீரோ'க்களுடனும் அவர் சேர்ந்து நடித்தனவற்றுள், Dard (1947)   Elaan (1947) Kaneez (1947), Babul (1950) என்பன குறிப்பிடத்தக்கன. சுமார் 25 படங்கள் மட்டில் நடித்த அவர் தொழிலதிபர் ஒருவரை மணம் செய்து கொண்டு 1956 இல் திரையுலகில் இருந்து விலகிக் கொண்டார்.

சுவர்ணலதா
Image result for old hindi actress swarnalatha in rattan movie imagesபஞ்சாப் ராவல்பிண்டியில் 20.12.1924 இல் பிறந்த சீக்கியரான சுவர்ணலதா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது மேடை நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். 1942 இல் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. Awaaz [1942]க்குப்பின் 1944 இல் கரண் தேவனுடன் அவர் நடித்த Rattan[1944] நௌஷாத்தின் இசை மழையில் மகத்தான வெற்றியீட்டியது. திலீப்பின் நாயகியாக Pratima[1945] வில் பங்கேற்றார்.  தொடர்ந்து நசீர் அஹமத்கானுடன் அவர் நடித்த 'லைலா மஜ்னு' [1945]வும் Wamaq Azra (1946] வும் அவர்களுக்கிடையில் காதலை மலர்வித்தது. இயக்குனரும் நடிகருமான நசீரை மதம் மாறி மணமுடித்தார். 1947 க்குள் 22 படங்களை நடித்தவர் நாடு பிளவு பட்டதும் 1947 இல் கணவருடன் பாகிஸ்தானுக்குப் பறந்து விட்டார். அங்கும் திரைப்பட நடிகையாகி 1971 வரை உருது/பஞ்சாபிப் படங்களில் சுவர்ணலதா Saeeda Bano வாக மாறி  நடித்துக் கொண்டிருந்தார்.


ராகினி – [Shamshad Begum] 
Image result for old hindi actress shamshad begum[ragini]imagesImage result for old hindi actress shamshad begum[ragini]imagesலாகூரில் தயாரிக்கப்பட்ட ஹிந்தி, பஞ்சாபிப் படங்களில் 40 களின் ஆரம்பத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் ஷம்ஷாத் பேகம் எனும் இயற் பெயர் கொண்ட  ராகினி. பஞ்சாபி, ஹிந்தி என இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட படங்களில் 1940 - 1945 காலப் பகுதியில் நடித்துக் கொண்டிருந்த ராகினிக்கு புகழ் சேர்த்த ஒரு படம் யாகூப்புடன் அவர்நடித்த Nek Pervin(1946) பிரபல பாடக நடிகர் Saigal லுடன் 1946 இல் அவர் நடித்த வெற்றிச் சித்திரம் Shahjehan [1946] அதில் நடிப்பதற்காக அந்நாளில் மிக அதிக ஊதியம் [ஒரு இலட்சம் ரூபாய்] வாங்கிய  நடிகை அவர். 1947 இல் ஜெயராஜுடனும் இறுதியாக ஆகாவுடனும் நடித்த அவர் இந்திய-பாகிஸ்தானிய பிரிவின் பின் சுவர்ணலதாவைப் போலவே பாகிஸ்தான் சென்று 1971 வரை அந்நாட்டுப் படங்களில் நடிக்கலானார்.
Image result for old hindi actress veenakumari images



வீணாகுமாரி
 Tajour Sultana எனும் வீணாகுமாரி லாகூரில் 04.07.1926 இல் பிறந்தார். பஞ்சாப், உருதுப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த வீணா பின்னர்சுசில்குமாருடன் Swastik [1939] இல் கதாநாயகியாக நடித்து, அசோக்குமாருடன் Najma[1943], Humayun[1945] எனத் தொடர்ந்து ஜெயராஜ், சுரேந்திரா உட்படட சில நாயகர்களுடன் கதாநாயகியாகத் தோன்றி, பின்னர் துணைப் பாத்திரங்களை நாடலானார். வீணாகுமாரி 1983 வரையான 42  ஆண்டுகளில் சுமார் 70 படங்கள் மட்டில் நடித்துள்ளார். தாஜ்மகால் [1963] படம் மூலம் சிறந்த  துணை நடிகைக்கான Film fare விருதை வீணா வென்றார். நடிகர் அல் நசீரை 1947 இல் அவர்  திருமணம் செய்து கொண்டார்.

 ஜெயஸ்ரீ சாந்தாராம் Image result for old hindi actress jeyasri shantharam images

சாந்தாராமின் மனைவியும் அழகு நடிகை ராஜஸ்ரீயின் தாயாருமான ஜெயஸ்ரீ சாந்தாராம் தயாரித்து நெறிப்படுத்திய படங்களில் மட்டுமே நடித்தவர். சாந்தாராமின் Shakuntala வில் சந்திரமோஹனுடன் நாயகி சகுந்தலையாக அறிமுகமானார். தொடர்ந்து கணவர் சாந்தாராமுடன் அவர் நடித்த படம் -
Dr. Kotnis Ki Amar Kahani (1946) அடுத்து 1952 இலும் சாந்தாராமுடன் Parchhain (1952) படத்தில் கதாநாயகியாக நடித்தார், அப்படத்தில் அவருடன் இணைக் கதாநாயகியாக நடித்தவர் - சாந்தாராமின் மூன்றாவது மனைவியான சந்தியா! அதே ஆண்டில் பிரதீப்குமாருடன் Subah Ka Tara விலும் ஜெயஸ்ரீ நடித்தார். அப்படத்தில்  அவர்களது பத்து வயது மக்கள் ராஜஸ்ரீயும் நடித்தார்.

மீனா Shorey
Image result for old hindi actress meena shorey imagesImage result for old hindi actress meena shorey images 17.11.1921இல் பிறந்த குர்ஷித் ஜெகன் எனும் Meena Shorey சொஹ்ராப் மோடி மூலம் 1941 இல்  Sikandar இல் அறிமுகமானார். மோடியின் Prithvi Vallabh [1943]இல் துர்கா கோட்டேக்கு அடுத்தபடியான நல்ல வேடம் மீனாவுக்கு. மோதிலாலுடன் நடித்த Ek Thi Ladki [1949] யில்  அவருக்காக வினோத்தின் இசையில் லதா மங்கேஷ்க்கார் பாடிய ‘Laara Lappaa’ பாடலவரைப் பிரபலப் படுத்தியது.[தமிழிலும் அது ‘வாழ்க்கை’யில்  'உன் கண் உன்னை ஏமாற்றினால்..டடடா டாடாடாப்' பாடலானது]. மீனா பின்னர் திருமணம் செய்து கொண்ட  அப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான  Roop K. Shorey  ஐ சிறந்த நகைச்சுவைப் பட இயக்குனராக அப்படம் மாற்றிவிட்டது. தொடர்ந்து மோதிலால், கரண் தேவன், சுரேந்திரா, சுரேஷ், அஜித், யாகூப், அல் நசீர், திர்லோக் கபூர் போன்ற நடிகர்களுடன் அவர் நடித்த படங்களுள்Actress [1948], Dholak[1951], Ek Do Deen [1953] என்பன குறிப்பிடத் தக்கன. 1956 இல் பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்த மீனா அங்கும் தனது நடிப்பைத் தொடர்ந்தார்.

நிகர் சுல்தானா

 
Image result for old hindi actress nigar sultana images
Image result for old hindi actress nigar sultana   images1960இல்  திரைக்கு வந்த Mughal E Azam இல் அரசவை நர்தகியாகத் தோன்றியவர்தான் நிகர் சுல்தானா1946 இல் Rang Bhoomi இல் கதாநாயகியாக அறிமுகமான அவர் நடிகர் ஷியாமுடன் அடுத்தடுத்து Patanga [1948], Bazaar[1949] படங்களில் இணை சேர்ந்து நடித்தார்.Mirza Galib [1954]  இல் பாரத் பூஷணின் மனைவியாக வந்தவர் திலீப்குமாரின் Yagudi [1958] யிலும் பங்கேற்றார். தயாரிப்பாளரும் நெறியாளருமான K.S.Asif ஐ மணந்து கொண்டு 1986 வரை திரையுலகில் தொடர்ந்தும் பணியாற்றியவர் நிகர் சுல்தானா.

ரெஹானா


Image result for old hindi actress rehana   imagesSajan 1947.jpgSaigal  நடித்த Tadbir [1945] போன்ற படங்களில் 'துக்கடா' நடனங்கள் ஆடிக் கொண்டும் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டும் இருந்த இந்திய-பாகிஸ்தானிய நடிகையான ரெஹனாவுக்கு 1946 இல் தேவ் ஆனந்தின் முதற் படமான Hum Ek Hain (1946 ] மூலம் கதாநாயகியாக வாய்ப்புக் கிட்டியது.அதன்பின் தேவ் ஆனந்துடன் நடித்த  Sargam (1950 கிஷோருடன் நடித்த Sagai[1951] பெற்ற வெற்றி தொடர்ந்த ஐந்து ஆண்டுகளில் அவரை பெயர் சொல்லுமளவுக்கு உயர்த்திவிட்டன. ராஜ் கபூருடன் அவர் நடித்த படம் Actress [1948]. அசோக்குமார்,  Shekar , Prem Adib, ஷியாம், பிரேம் ஆனந்த் போன்ற நடிகர்களுடனும் நடித்த அவரின் திரைப் பயணத்தில் 1951 க்குப் பின் ஏற்பட்ட தொடர் சரிவுகளால் 1954 இல் அவர் பாகிஸ்தானுக்குக் குடி பெயர்ந்து அங்கு தனது நடிப்பைத் தொடரலானார். அவர்  Nigar Sultana வுடன் நடித்த  Sunehre Din (1949],  அவரது குளியல் காட்சி ஒன்று இடம்பெற்ற Dilruba [1950] படங்கள் சர்ச்சைக்குள்ளாயின. அவர் நடித்த Shin Sinaki Boobla Boo (1952) தடை செய்யப்பட்டதால் திரைக்கு வாராத படம்!

Begum Para

Image result for old hindi actress begum para  imagesImage result for old hindi actress begum para  imagesசித்தாராதேவி நாயகியாக நடித்த Chand [1944] மூலம் அறிமுகமான பேகம் பாரா 1946 இல் ஈஸ்வர்லாலுடன் கதாநாயகியாக நடித்த படம்- Sohni Mahiwal. பாரத் பூஷன், அஜித், ஆகா, ரஞ்சன் போன்றோருடன் நாயகியாக முறையே Suhaag Raat[1948], Meharbani [1950], Pagle [1950], Bagdad [1952] ஆகிய  படங்களில் நடித்தார். 1956 வரை ஹிந்தித் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக, பெரும்பாலும் துணைப் பாத்திரங்களில் நடித்த அவர் நடிகர் திலீப்குமாரின் தம்பியான நடிகர் நசீர்கானைத் திருமணம் செய்து கொண்டு 1956 இல் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

 நதீரா 

பாக்தாத் யூத இனத்தைச் சேர்ந்த நதீரா மெஹ்பூப்கானின் ‘ஆன்'1952] மூலம் வில்லியாக அறிமுகமானார்.  1932இல் பிறந்த Florence Ezekiel பெரும்பாலும் வில்லியாகவும்  சூனியக்காரியாகவும் நடித்து முத்திரை பதித்த நதீராவுக்கு சிறந்த துணை நடிகைக்கான Film fare   விருதைப் பெற்றுக் கொடுத்த படம் – Julie [1975]. அவர் நடித்த குறிப்பிடத்தக்க  படங்களுள்Shree 420 (1955), Pakeezah (1972) என்பனவும் அடங்கும். ஷாருக்கானும் ஐஸ்வர்யாராயும் நடித்த Josh அவர் நடித்த கடைசிப் படம். சொந்த வாழ்க்கையில் நடிகர் மோதிலாலுடன்சில காலம்  தன்னைப் பிணைத்துக் கொண்டவர் நதீரா.

மனோரமா & லலிதா பவார்
பஞ்சாப் லாகூரைப் பிறப்பிடமாகக் கொண்டEric Isaac Daniel என்னும்  மனோரமா 1926 இல். பத்து வயதில் Baby Iris  ஆக நடிக்க ஆரம்பித்தவர் 15 வயதில் கதாநாயகியாகச் சில படங்களில் நடித்துப் பின்னர் வில்லியாகவும் நகைச்சுவை வேடங்களிலும் 1983 வரை 160 படங்களில் நடித்தார். 1983 இல் அவர் நடித்த படம் Hadas நீண்ட இடைவெளியின் பின் 2005 இல் தனது 79 ஆவது வயதில்  அவர் நடித்த படம் Water Dus Lakh[1966]Jhanak Jhanak Payal Baaje[1955]Mujhe Jeene Do[1963]Mehboob ki Menhdi[1971],  Caravan[1971]Bombay to Goa[1971],  Lawaris1981]. Seeta Aur Geeta (1972), Ek Phool Do Maali (1969)Do Kaliyaan (1968) என்பன அவருக்குப் பெயரெடுத்துக் கொடுத்த சில படங்கள்.  லலிதா பவார்
1916 இல் பிறந்த லலிதா பவார் தனது 12 வயதில் மௌனப் படங்களில் நடிக்க ஆரம்பித்தவர். பின்னர் கதாநாயகியான அவர் தயாரிப்பாளராவும் உயர்ந்து 1938 இல் தயாரித்து நடித்த படம் Duniya Kya Hai. 1942 இல் ஒரு படப்பிடிப்பின் போது நடிகர் பகவான் அவரது கன்னத்தில் அறைந்த ஓர் அறையினால் ஒரு கண்ணும் பாதிக்கப்பட்டு முகவாதத்தாலும் பீடிக்கப்பட்டார். அதன்பின் குணசித்திர வேடங்களிலும் வில்லியாகவும் நடிக்க ஆரம்பித்து 1997 வரை ஹிந்தி, மராத்தி, குஜராத்தி எனப் பல்வேறு மொழிப் படங்களிலுமாக 700 படங்கள் வரை  நடித்துச் சாதனை புரிந்துள்ளார்.  Anari [1959], Professor [1962], Sampoorna Ramayana[1961]  Daag [1952], Sujatha [1959], Khandan [1966]போன்ற படங்கள் அவரது சிறப்பான நடிப்புக்குச் சான்றாக இலங்குவன.

மற்றும் சில நாயகியர்/நடிகையர்
.Saigal லுடன் நடித்த மொலினாதேவி, சுமித்ராதேவி, கிஷோர் சாபுவுடன் நடித்த சுசித்ராதேவி, சுரேந்திராவுடன் நடித்த அருணாதேவி என ஆரம்ப காலத்தில் ஹிந்தித் திரையுலகிலும் தேவி அவதாரமெடுத்த நடிகையர் பலர்.
Foot Path [1953] உட்பட1938  முதல் 2002 வரை 130 படங்களில் நடித்த Achala Sachdev,  1936 இல் தனது 13 ஆவது வயதில் கதாநாயகியாகி 1968 வரை நடித்த மஹாராஷ்ட்ர மராத்தியரான நடிகை Hansa Wadkar,  1944 இல் கதாநாயகியாக TaxiDriver இல் ஆரம்பித்து 1979 வரை Mayabazar[1958] உட்பட 250 படங்களில் நடித்த மராத்தியரான  சுலோசனா சட்டர்ஜி, - [ நசீர் ஹுசைனுடனும் அசோக்குமாருடனும் பெரும்பாலும் ஜோடியாக நடித்துள்ளார். 60 களின் பின் சுனில் தத், தேவ் ஆனந்த், ராஜேஷ் கன்னா போன்ற முன்னணி நடிகர்களின் தாயாக இவர் நடித்த படங்கள் குறிப்பிடத் தக்கன.]
-  1931 இல் sheik Mukdar மூலம் அறிமுகமாகி மோதிலால், Arjun உட்படச் சிலருடன் நாயகியாக நடித்து 70 களில் தாய், தமக்கை வேடங்களில் தஞ்சமடைந்து 200 படங்கள் மட்டில் நடித்த பம்பாயைச் சேர்ந்த பார்ஸி இன நடிகையான Shammi, -மோதிலாலுடனும் பிரேம் ஆதிப்புடனும் நாயகியாக நடித்த Maya Banarji,- மோதிலால், திரிலோக் கபூர் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்த மாதுரி - Saigal லுடன் Dushman –[1939]இல் நடித்த லீலாவதி ,- 1935-1955 க்கிடைப்பட்ட காலகட்டத்தில் Saigal லுடன் தேவதாஸ்[1936] இலும் கணவர் பாருவாவுடன் பல படங்களிலும் நடித்த வங்காள நடிகை ஜமுனா பாருவா, -  பிருதிவிராஜுடன் நடித்த கவர்ச்சித் தாரகை ராம் பியாரி, - தேவ் ஆனந்த், கிஷோர் சாபுவுடன் நடித்த Protima, -  கிஷோர் சாபுவுடன் நடித்த Romola, -  40, 50 களில் அஜித்துடன் நடித்த Vanamala, -கௌசல்யா, லீலாகுமாரி, கீதா போஸ், சுரேஷுடன் நாயகியராக நடித்த Minoo மும்தாஜ், விஜயா சௌத்ரி, Jabeen Jaleel  மற்றும் 30 களில் நடித்த ரத்னபிரபா, லலிதாதேவி, Zarina எனப் பலராலும் மறக்கப்பட்ட ஆயினும் நினைவுகூரப்பட வேண்டிய கதாநாயகி நடிகையரின் பட்டியல் மிகமிக நீ..நீ..நீ.. ளமானது.


Image result for 1960's hindi actress waheeda images