சினிமா -4C
ஹிந்தித் திரையுலகம்-முன்னணி நடிகையர்
ஹிந்தித் திரையுலகின்
முதல் கதாநாயகியாகப் போற்றப்படுபவர் தேவிகாராணி. ரவீந்திரநாத் தாகூரின்
வழித் தோன்றலாக உயர்குடியிற் பிறந்த தேவிகாராணி லண்டனில் கழித்த ஆரம்ப காலத்தில்
நாடக மேடையில் அறிமுகமான Himanshu
Rai ஐ மணந்து கொண்டு
அவர் நாயகனாக நடித்த ஆங்கில-இந்தி[ய] கூட்டுத் தயாரிப்பான 'கர்மா' படத்தில் 1933 இல் தனது 25 ஆவது வயதில் நாயகியாக அறிமுகமானார்.
15 படங்கள் மட்டில் நாயகியாக நடித்த தேவிகாராணி
பங்காளிகளுடன் ஏற்பட்ட பிணக்கினால் மனமுடைந்து தனது திரையுலக வாழ்வுக்கு
முழுக்குப் போட்டுவிட்டார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது 1958 இல் அவரைத் தேடி வந்தது. தாதா சாஹேப் பால்கே விருது 1969 இல் வழங்கப்பட்டு அதைப் பெற்ற முதல் நடிகையாக அவர்
மதிக்கப்பட்டார்.
நூர்ஜஹான் – Queen of Melody
கல்கத்தாவில்
உருவாகி வந்த பஞ்சாபித் திரைப் படங்களில் 1935 இல் தனது 10 ஆவது வயதில் இருந்து பாடி நடிக்க ஆரம்பித்த
பஞ்சாபி முஸ்லிமான நூர்ஜஹான் இந்தித் திரைவானின் மிகச் சிறந்த பாடகநடிகையாக
இன்றுவரை போற்றப் படுபவர். பின் நாளைய வில்லன் நடிகர் Pran னுடன் 1942 இல் ‘Khandaan’ படத்தில் நாயகியாக அறிமுகமான பின் 1947 வரையான ஆறு ஆண்டுகளும் அவரது வாழ்வில் ஏறுமுகம்தான்.


தேவ் ஆனந்துடன் நடித்த Rahi (1953
, Munimji (1955), திலீப்புடன் நடித்த Shikast (1953), ஷம்மி கபூருடன் நடித்த Mehbooba [1954] Hum
Sab Chor Hain (1956). மற்றும் சுனில் தத்துடன் நடித்த அவரது முதற்படமான Railway
Platform (1955)) என்பன 50 களில் நளினி ஜெயவந் நடித்தனவற்றுள் குறிப்பிடத் தக்கவை. பிருதிவிராஜ்
கபூருடன் 1961 இல் Senapathi எனும் படத்திலும் கதாநாயகியாக நடித்தவர் அக்காலகட்ட முன்னணி ஹீரோவான
ராஜ்கபூருடன் மட்டும் நடிக்காதது ஏனோ தெரியவில்லை!
குஜராத் முஸ்லிமான மெஹ்டாப்பும்
மௌனப்பட நடிகையாக இருந்து 1931 முதல் 1946 வரை பல படங்களில் நாயகியாக நடித்தவர். இவர் முதன்முதலாக கதாநாயகியாக
அறிமுகமான வரலாற்றுப் பின்னணித் திரைச் சித்திரமான 'வீர்
குணால்'[1932] தான் 1941 இல்
தமிழில் 'அசோக் குமார்' ஆனது. 1944 இல் வெளியான Parakh மூலம் சிறந்த நடிகையாகத்
தெரியப்பட்ட இவருக்காக Sharda (1942), Kanoon (1943), Sanjog (1942–43) முதலான படங்களில்
நௌஷாத்தின் இசையில் பிரபலமான பாடகியும்
நடிகையுமான சுரையாபின்னணி பாடினார். இவரது கணவரான Sohrab Modi இன்தயாரிப்பான
Jhansi
Ki Rani யில்1953 இல் ஜான்சிராணியாக நடித்தார்
ஒரு நாடக நடிகையாக இருந்து 'Alam Ara
' [1931] வெளியான அதே 1931 இல் திரைப்பட
நடிகையாகி 1983 வரை 200 க்கும்
மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக, தாயாக, பாட்டியாக பல்வேறு பாத்திரங்களிலும் வாழ்ந்து காட்டியவர்
துர்கா கோட்டே. கொங்கணி மொழி பேசும் மராத்திக் குடும்பத்தில் பிறந்து 26 வயதிலேயே இளம் விதவையாகி விட்டவர் துர்கா. சீதா மீரா போன்ற
புராண இலக்கிய பக்தைகளின் பாத்திரங்களில் முத்திரை பதித்த, முதல் மராத்திப்பட [1932] நாயகியான துர்க்கா
குஜராத்தியப் படங்களிலும் நடித்துள்ளார். இரு பட நிறுவனங் களின் உரிமையாளரான
அவருக்கு 1942 இல் Charmon Ki Dasi
படத்துக்காகவும் 1943 இல் Bharat
Milap படத்துக்காகவும் வங்கத்து
திரை எழுத்தாளர் சங்கம் சிறந்த நடிகைக்கான விருது வழங்கியது. 1983 இல் பாரத
அரசின் உயர் விருதான தாதாசாஹேப் பால்கே
விருது சித்தித்தது. அதைப் பெற்ற
மூன்றாவது நடிகை துர்க்கா கோட்டேதான்.
Ester Victoria Abraham
எனும் இயற்பெயர் கொண்ட பிரமிளா கொல்கொத்தாவில் பிறந்த
பாக்தாத் யூத இனத்தவர். fearless நாடியாவுக்குப் போட்டியாக, ஒரு Stunt நடிகையாக 1935 இல் இருந்து 1960 வரை 30 படங்கள்
மட்டில் நடித்த அவர் Nadiya வின் ஜோடியான John Kawas சுடன் நடித்த Jungle King [1939], ஜெயராஜுடன் நடித்தBijli [1939] மற்றும்Ulti Ganga [1942], Basant [1942] முதலான படங்கள் குறிப்பிடத் தக்கவை. 16 படங்கள் மட்டில் தயாரித்த முதல் பெண் தயாரிப்பாளர் என்ற
பெருமைக்கும் உரித்தானவர் பிரமிளா. ஒரு பல்கலை வல்லுநராகத் திகழ்ந்த பிரமிளா ஒரு Cambridge பட்டதாரியும்கூட. ஆசிரியராகவும் பணியாற்றிய அவர்தான் முதல் Miss India வாகத் தெரிவான
ஆரணங்கு. 1947 இல் அவரது 31 ஆவது வயதில் அப்பட்டத்தை வென்றார்! இவரது மகளும் 1967 Miss India பட்டம் வென்றதால் கூடுதல் புகழ் பெற்றனர்.
பிரபல நடிகை ஷோபனா
சமத்தின் தாயாரும் மராத்தியப் பாடகியும் நடிகையுமான ரத்தன்பாய் தனது 42 ஆவது வயதில் 1932 இல் திரைப்
பிரவேசம் செய்தார்.நல்ல குரல் வளம்
உள்ளவராக இருந்ததால் பாடக நடிகர் K.L.Saigal லுடன்1932 இல் அடுத்தடுத்து ‘Zinda Lash', ‘Subah
Ka Sitara’, ‘Yahudi Ki Ladki’ என மூன்று படங்களில் கதாநாயகியானார். 1934, 1935 இல் அவருடன் ‘Mohabbat
Ki Kasauti’, Karwan –E-Hayat என இரு
படங்கள் நடித்தார். 1935 இல் மகள் ஷோபனா நடிக்க ஆரம்பித்த போதிலும்
ரத்தன்பாயும் தொடர்ந்து 1958 வரை நடித்தார்.
பிரபல நடிகை நர்கீசின் தாயாரும் ஹிந்தித்
திரையுலகின் முதற் பெண் இசையமைப்பாளரும்
பாடகியும் நடிகையும் தயாரிப்பாளருமான ஜட்டன்பாய் 1935 இல் Talash-E- Haq திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அப்படத்தை இசையமைத்து இயக்கியதுடன்
தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் மூன்று படங்களில் பாடி நடித்து
இசையமைத்து இயக்கியுள்ளார்
மௌனப்படங்களில் நடிக்க ஆரம்பித்து Bibbo வைப் போலவே 1933 - 1947 காலப்பகுதியில் 15 படங்களில் நாயகியாக மோதிலால் [ அவருடன் மட்டும் ஏழு படங்களில் ], சுரேந்திரா உட்பட பிருதிவிராஜுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர்- இந்திய யூத இனத்தவரான Iris Gasper எனும் சபிதாதேவி. இவர் 'பக்த துளசிதாஸ்' [1937 ] எனும் தமிழ்ப் படத்திலும் தமிழ் பேசி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
தனக்கு கிடைத்த 'பத்மபூஷன்'விருதைத் தூக்கி எறிந்தவர் பாடகியும் நடிகையுமான சித்தாராதேவி!
[Sitara Devi]. 'கதக்' நடன விற்பன்னரான அவர் Watan[1938] மூலம்
கதாநாயகியானார். அவர் நடித்த படங்களுள்
குறிப்பிடத் தக்கவை-Holi [1940], Pagal [1940], Pooja [1940], Roti
[1942],Babroo[1943], & Phool
[1944] என்பன. 1931 இல் இருந்து 1957வரை ஹிந்தித்
திரையுலகில் அவரது காலம். அவர் 1940 இல் K.L.Saigal லுடன் நடித்த படம் ‘Zindagi’.
வங்காளப் பாடகியும் நடிகையுமான கண்ணன்தேவியும் இசைமேதை நடிகர் K.L.Saigal லுடன் பாடி நடித்த ஒருவர்தான்.மௌனப்படக் காலத்தில் ஆரம்பித்து 1959 வரை நடித்த அவர் நடிகர் K.L.Saigal லுடன் Sathi[1938], ’Street Singer’[1938], Lagan [1941] படங்களிலும் Pahari Sanyal லுடன் ‘Vidyavathi’[1937], ‘Sapera’[1939] படங்களிலும் கதாநாயகியாக நடித்தார். கரண் தேவனும் Talat Mehmood டும் அவருடன் கதாநாயகர்களாக நடித்த மேலுமிருவர். Jawaab, Duniya yeh
duniya, Toofan mail என்பனவும் அவர் நடித்த வெற்றிச் சித்திரங்கள். அசோக்குமாருடன் அவர் 1948 இல்
சுரேந்திரா, சந்திரமோகன், கரண் தேவன், யாகூப் போன்ற நடிகர்களுடன் அவர் நடித்த இசைச்
சித்திரங்கள் வசூலை வாரிக் குவித்தன. 1947 இல் திலீகுமாருடன்
அவர் நடித்த ‘Jugnu’ வெற்றிச் சித்திரமாக அமைந்து திலீப்பின் திரை
வாழ்வில் திருப்புமுனை ஆகவும் மாறியது.
1947 இல்
ஜின்னாவின் தலைமையில் பாகிஸ்தான் எனும் நாடு உதயமான போது நூர்ஜஹான் எனும்
இசைக் குயிலும் கூட்டை விட்டுப் பறந்து செல்ல நேர்ந்தது. கஸல்- காவலி--இந்துஸ்தானி
இசை என இசைத்துறையில் கரைகண்ட இசை மேதையைப் பாரதம் இழந்துவிட்டது.
புகலிடம் தேடித் சென்ற நூர்ஜஹான் 1951 இல்
உருவாக்கப்பட்ட பாகிஸ்தானிய சினிமாவின் முதற் கதாநாயகியாக முடி சூட்டப்பட்டார்.
1961 வரையான ஒரு தசாப்த காலம் நடிகையாக மட்டுமின்றி இசையமைப்பாளராக நெறியாளராக
பின்னணிப் பாடகியாக தனது பங்களிப்பை வழங்கிப் புகழீட்டினார்.
சுரையா-Queen of Beauty-Melody & Acting
நூர்ஜஹானைத் தொடர்ந்து
பாடக நடிகையாக முத்திரை பதித்த மற்றொருவர் சுரையா. பின்னாளில் பிரபல
நடிகனாகத் திகழ்ந்த ராஜ்கபூர் சுரையாவின் இளமைக்கால அயலக நண்பன். ராஜ்கபூரின்
பரிந்துரையால் All India Radio வில் சிறுவர் நிகழ்ச்சியில்ஆறு வயதில் பாடிய சுரையா பின்னர் நடிகை நர்கீசின் தாயாரான Jaddan Bai, நடித்து நெறிப்படுத்திய Madam Fashion இல் தனது சம வயதினளான நர்கீசின் தோழியாக வேடமேற்று 1936 இல் தனது ஏழாவது வயதில் ஹிந்தித் திரையில் கால் பதித்தார். 1943 வரை அவரது பால பருவ வேடங்கள் தொடர்ந்தன.1945 இல் பிரபல பாடக நடிகர் 'தேவதாஸ்'புகழ் K.L.Saigal உடன் ‘Tadbir’ படத்தில் நாயகியாக அறிமுகமானார்.தொடர்ந்து
1946 லும் நாயகியாக மேலுமிரு படங்களில்
அவருடன் நடித்தார்.
AnmolGhadi[1946] Dard[1947], Dillagi[1949],
Dastan[1950] என நௌஷாத்தின் இசையில் உருவான திரைப் படங்கள் Musical
Hits ஆகித் தொடர் வெற்றிகளை அவரது திரைப் பயணத்தில் கொண்டு
சேர்த்தன. Anmol Ghadi யில் நூர்ஜஹானுடன்
இணைக் கதாநாயகியாக நடித்தார். 1945 இல் பிருதிவிராஜ்
கபூருடன் ‘Phool’ இல் நாயகியாக நடித்த சுரையா 1950 இல் அவரது மகன் ராஜ்கபூருடன் ‘Dastan’ இல் நாயகியானார்.ராஜ்கபூரின் சகோதரர் ஷம்மிகபூருடன் 'Shama
Parwana’ வில் 1954 இல் ஜோடி
சேர்ந்தார். அதே ஆண்டில் பாடக நடிகர் Talat Mohamed டுடன் ‘Waris’ இல் நடித்தார். 1950 இல் பிரபல நடிகர் அசோக்குமாருடன்
அவர் நடித்த படம் 'Khiladi’ [1950]. ஆனாலும் அப்படங்கள் பெரிய வெற்றியைப்
பெறவில்லை..
பாரத்பூஷனுடன் சுரையா நடித்து 1954 இல் வெளியான ஹிந்தி-உருது வரலாற்றுப் படைப்பான 'Mirza Ghalib’ மகத்தான வெற்றி பெற்று அவ்வாண்டின் மிகச் சிறந்த படமாக தேசிய விருதும்
வென்றது. அமர்நாத்துடன் அவர் நடித்த Natak[1947] ரஹ்மானுடன் நடித்த Pyaar Ki Jeet[1948] மற்றும் Bedi Behen[1949] சுரேஷுடன் நடித்த Diwana[1952]என்பன வெற்றி பெற்று வெள்ளிவிழாக் கொண்டாடிய ஏனைய படங்கள். 1948 இல் Vidya வில் தேவ் ஆனந்துடன்
முதன் முதலாக அவர் இணை சேர்ந்தார்.1951 இல் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த 'Sanam
' ஈறாக ஏழு படங்களில்
[Vidya (1948), Jeet (1949), Shair (1949), Afsar (1950), Nili (1950), Do Sitare (1951) Sanam(1951)] இருவரும் இணை சேர்ந்தனர். படங்களும் வெற்றி கண்டன. ஆனால் அக்காலகட்டத்தில் இருவருக்குமிடையே அரும்பிய
காதல் கனியுமுன்னே மத வேறுபாடு காரணமாகத் தோன்றிய
தடையால் - சுரையாவின்
[தாய்வழிப்]பாட்டியின் கடுமையான எதிர்ப்பால்- முளையிலேயே கருகிப் போய்த் தோல்வி
கண்டது.
1947 இல் இருந்து 1952 வரை சுரையா இரசிகர்களின் மனம் கவர்ந்த முதற்தர நடிகையாக உச்சத்தில் இருந்தார்.
தேவ் ஆனந்தை விட மூன்று மடங்கு ஊதியம் பெறுபவராக முன்னணியில் திகழ்ந்தார். 1963 வரை தொடர்ந்த அவரது நடிப்புப் பயணத்தில் அவர் 67 படங்கள் மட்டில் நடித்து முடித்தார். அவரோடு கதாநாயகர்களாக
நடித்தவர்கள்-K.L.Saigal, Talat Mehmood, Mukesh, Prithviraj
Kapoor, Raj Kapoor, Shammi Kapoor, Dev Anand, , Ashok Kumar, Bharat Bhushan,
Moti Laal, Karan Devan, P.Jeiraj, Rehman, Surendra,Ajit, Shyam (Chopra), Suresh, Amar Nath, Prem Nath, , Naseer
Khan (Dilip Kumar's brother), Vijay Dutt (Guru Dutt's brother),C.H.Atma,
Sheik Muktar, Wasti, Jayant , Nusrat, Kamal kapoor ஆகியோர்.
ஹிந்தித் திரைக்கென மொத்தமாக 338 பாடல்களைப் பாடிய அவர் இசையமைப்பாளர் நௌஷாத்தின்
வேண்டுகோளுக்கிசைந்து நடிகை Mehtab நடித்த நான்கு படங்களில் அவருக்காகப் பின்னணி
பாடினார். அதற்காக அன்று முன்னணியில் நின்ற
பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரை விடப் பத்து மடங்கு பணத்தை ஊதியமாகப் பெற்றார். திருமணம் செய்யாது
கன்னியாகவே வாழ்ந்த சுரையா 2004 இல் தனது 74 ஆவது
வயதில் காலமானார். 2013 இல் அவர் நினைவாக தபால் தலை ஒன்று வெளியிடப்பட்டது.
ஷோபனா சமர்த்தின் தாய்மாமனின் மகள்தான் நளினி ஜெயவந். பாடக நடிகை சுரையாவிலும் மூன்று
வயது மூத்தவரான நளினி அவருக்கு முன்னரே தனது 15 ஆவது வயதில் 1941 இல் மெஹ்பூப்கானின் ‘Bahen’ மூலம் கதாநாயகி ஆகிவிட்டார். அந்நாளைய Superstar
நடிகர் அசோக்குமாருடன் நடித்து 1950 இல் வெளியான ‘Samadi’யும் ‘Sangraam’ மும் தான் நளினியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து
அவர் புகழை ஒங்கச் செய்த திரைப்படங்கள். அவற்றைத் தொடர்ந்து அசோக்குமாரின்
கதாநாயகியாக 1963வரை Jalpari (1952), Kafila (1952), NauBahar (1952), Saloni (1952), Lakeeren (1954), Naaz (1954), Mr. X (1957), Sheroo (1957) Toofan Mein Pyar Kahan (1963) என மேலும் ஒன்பது
படங்களில் நளினி வலம் வந்தார்.1954 இல் அஜித்கானுடன் நடித்த ‘Nastik’ பெற்ற வெற்றியால் 1962 வரை Ajit உடன் ஏழு படங்களில் சேர்ந்து நடித்தார்.[ Nastik 'மடாதிபதி மகள்' எனும் மகுடத்தில்
தமிழில் 'டப்'பாகி 1962 இல் வெளிவந்தது.] தேவ் ஆனந்தும்
மதுபாலாவும் நடித்த Kala
Pani [1958] யில் ஏற்ற
துணைப் பாத்திரம் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றுக் கொடுத்தது.
ஷியாம், கரண் தேவன், பாரத் பூஷன், பிரதீப்குமார், பிரேம்நாத், மகிபால், திரிலோக் கபூர், நசீர் ஹுசைன், ராஜேந்திரகுமார் ஆகியோரும் நளினியுடன் கதாநாயகர்களாக நடித்துள்ளார்கள். 1965 இல் திரையுலகை விட்டு விலகிய நளினி ஜெயவந் மீண்டும் 1983 இல் அவருக்குப்
புகழைத் தேடிக்கொடுத்த 'Nastik’ எனும் பெயரில் வெளியான படத்தில் அமிதாப்பின் தாயாக நடித்தார்.
1926 இல் பம்பாயில் பிறந்த நளினி 2010 இல்
தமது 84 ஆவது வயதில் தாம் பிறந்த அதே பங்களாவில் உயிர்நீத்தார்.
Beauty
Queen & First female Superstar - நசீம்
பானுவும் ஷோபனா சமர்த்தும்
ஷோபனா சமத்தும் நசீம் பானுவும் சம வயதினர். இருவருமே 1916 இல் பிறந்தவர்கள். ஷோபனாவின் தாயார் ரத்தன்பாய் ஒரு
மராத்திய பாடக நடிகை. நஸீம் பானுவின் தாயார் அந்த நாளில் பிரபலமான ஹிந்திப் பாடகி ஷம்ஷாத்
பேகம். 60 களில் முன்னணியில் திகழ்ந்த நூடன்,
தனுஜா சகோதரிகளின் தாயார்
தான் ஷோபனா. 60 களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சாயிரா பானுவின்
தாயார் தான் நசீம் பானு. இருவருமே திரைத்துறையில் நுழைந்தது 1935 இல். கணவர் Kumarsen Samarth முதன் முதலாகத்
தயாரித்த உருது-மராத்திய Nigahen
Nafrat படத்தில் ஷோபனா கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்த இரு
ஆண்டுகளில் நடிகர் மோதிலாலுடன் Do Diwana[1936], Kokila[1937] என இரு
படங்களில் நடித்தார். மோதிலாலுடனான அவரது உறவு நீண்டகாலம் நீடித்தது. ஷோபனா தனது
கணவரை விவாகரத்துச் செய்த பின் ஒரு படத்தில் நூட்டனின் தந்தையாக மோதிலால்
நடித்தார்.
ஷோபனா சமத் சீதையாக நடித்து 1943 இல் வெளியான Ram Rajya முதன் முதலாக USA
இல் திரையிடப்பட்ட இந்தியத் திரைப்படம் எனும் பெருமையையும்
மகாத்மா காந்தி பார்த்த ஒரே திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. அதன் பின் சீதை
என்றால் அது ஷோபனாதான் என முத்திரை குத்தப்பட்ட அவர் 1955 இல் நடித்த ஜெமினியின் Insaniyat இல் [திலீப்பின்] தாயாக நடிக்க ஆரம்பித்து அதன்பின்
1972
வரை அவ்வாறே தொடர்ந்தார்.
1950 இல் ஷோபனா
சமத் மோதிலாலுடன் சேர்ந்து நடித்து நெறிப்படுத்திய படம் Hamari Beti அதில்தான் அவரது மகள்மார் நூட்டனும் தனுஜாவும்
குழந்தை நட்ஷத்திரங்களாக அறிமுகமாயினர். 1960 இல் அவர் Chhabili என்ற படத்தை நெறிப்படுத்தினார். அதில் நூட்டனும்
தனுஜாவும் கதாநாயகியராக நடித்தனர். தனுஜாவைத் தொடர்ந்து கஜோல், தனிஷா முகர்ஜி எனும் அவரது மகள்மாரும் ஹிந்தித் திரையுலகில் வெற்றிகரமாகக் கால் பதித்து வலம் வருகிறார்கள்.
Beauty
Queen, First female Superstarஎனப் புகழப்பட்ட Naseem
Beham ஷேக்ஸ்பியரின் Hamlet ஐத் தழுவி ஹிந்தியில்
எடுக்கப்பட்டKhoon Ka Khoon இல் 1935இல்
கதாநாயகியாக அறிமுகமானார். நூர்ஜஹானாக
1939 இல் Pukar இல் நடித்துப் பெயரெடுத்தார். சரித்திரப்பட
நாயகியாக 1957 வரை அவரது திரையுலகப் பயணம் தொடர்ந்தது.
பிருத்விராஜ் கபூர், அசோக்குமாருட்பட சந்திரமோகன், சுரேந்திரா, ரஹ்மான், ஷியாம் என அவருடன் நாயகர்களாக நடித்தவர்கள் பட்டியல் நீள்கிறது.
அவரது கணவர் 1947 இல் பாகிஸ்தானுக்குப் பிரிந்து சென்றுவிட
தொடர்ந்தும் பம்பாயிலேயே தங்கியிருந்த அவர் தனது மக்களது கல்விக்காக லண்டனில் சில
காலம் கழித்தார். தனது 85 ஆவது வயதில்2002 இல் அவர்
காலமானார்.
15 வயதில் மணமுடித்து
நான்கு குழந்தைகளின் தாயான பின் மணமுறிவு பெற்று அதனால் தனது தாய் மொழியான மராத்தி
நாடகக் குழு நடிகையாக மாறியவர் லீலா சிட்னிஸ். ஆங்கில இலக்கிய
விரிவுரையாளர் ஒருவரின் மகளாகப் பிறந்த லீலா ஒரு பட்டதாரி. படித்த பெண்கள் அரிதான சினிமா உலகில் அவர் ஒரு Stunt நடிகையாக 1937 இல் இடம்பிடித்தார்.
1939 இல் அவர் நடித்த Kangan இன் வெற்றி அவருக்கான ஒரு வரவேற்பை திரையுலகில் ஏற்படுத்த தொடர்ந்து அசோக்குமாருடன் அவர் நடித்த Azad
(Free, 1940), Bandhan (Ties, 1940) Jhoola ("Swing",
1941 முதலான படங்களின்
வெற்றி தேவிகாரணிக்குப் போட்டியாக அவரை மாற்றிவிட்டது. Lux
Soap விளம்பரத்தில் தோன்றிய முதல் இந்திய அழகி
என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டவர் லீலா சிட்னிஸ்.
ஏறுமுகமாக இருந்த அவருடைய சினிமாப் பயணத்தில் 1945 இன் பின் சரிவு ஏற்பட ஆரம்பிக்கவும் சுதாரித்துக் கொண்ட
லீலா நாயக நாயகியரின் தாய் வேடத்துக்குத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டுவிட்டார். 1980 வரை அது தொடர்ந்தது. 1955 இல் அவர்
சொந்தமாக எழுதித் தயாரித்து நெறிப்படுத்திய படம் அஜித்-சித்ரா ஜோடியாக நடித்த Aaj Ki Baat.
Khursheed
Bano/Mehtab/ Durka Khote
மௌனப்படக் காலத்திலேயே
நடிக்க ஆரம்பித்து, ஹிந்தியில் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா' வெளியான 1931 இல் இருந்து இந்தியா சுதந்திரம் பெறும்
வரை பல படங்களில் கதாநாயகியாக
நடித்த பஞ்சாபி உருதுப் பாடகியும்
நடிகையுமான குர்ஷித் பானோவும் இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர். மோதிலால், ஜெயராஜ் போன்ற முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்த இவர் இசை மேதை Saigalலுடன் நடித்த Tansen[1943], Bhakta Surdas [1942] படங்கள் குறிப்பிடத்தக்கவை.
சுலோச்சனா - [Ruby Myers] – Queen
of Romance
பம்பாயை வாழ்விடமாகக்
கொண்ட பாக்தாத் யூத இனத்தவரான ரூபி ஒரு பிரபலமான மௌனப்படக்கால நடிகை. ஹிந்தியில்
பேசும் பட சகாப்தம் உதயமானதும் ரூபியும்
ஹிந்தி பேசப் பழகிக் கொண்டார். தனது பெயரையும் சுலோசனாவாக மாற்றிக்
கொண்டார். அவரது முன்னைய மௌனப் படங்கள் பலவும் ஹிந்தியில் பேச ஆரம்பித்தன. Maduri [1932] Sulochana [1933] Indira M.A.[1934] Anarkali[1935] என அவரது படங்கள் தொடர மிக அதிக
ஊதியம் வாங்கும் நடிகையாக, 1933 -
1939 காலப்பகுதியில் கோலோச்சிய சுலோசனா Queen of Romance ஆக வலம் வந்தார். சொந்தப்
பட நிறுவனமான Ruby
Pictures உதயமானது.
1947 இல் Jungu திரைப்படத்தில் நாயகன் திலீப்பை
தனது அழகால் வசியம் செய்யும்
சாகசக்காரியாக நடித்தவர் 1953 இல் வந்த 'அனார்கலி'யில் திலீப்பின் தாயாக
மாறிப் போனார்.
1973 இல் Dada
Saheb Phalke விருது அவரைத்தேடி
வந்தது. தேவிகாரணிக்குப்பின் அவ்விருதைப் பெற்ற இரண்டாவது நடிகை அவர்தான். தயாரிப்பாளரும் நெறியாளருமான Ismail Merchant தனது Mahatma & tha Bad Boy எனும் ஆங்கில ஆவணப்படத்தை
அவர் நினைவாக சமர்ப்பணம் செய்திருந்தார். ஆங்கிலேயர் காலத்தைய
பம்பாய் கவர்னரை விட அதிகளவு ஊதியம் [ Rs 5000 ] பெற்ற ஒருவர்
யாருமற்ற அனாதையாக - தனியளாக 1983 இல் மரணிக்க நேரிட்டது காலம் செய்த கோலம்தான்.
Fearless Nadia [Mary Ann Evans]
1908 இல் கிழக்கு அவுஸ்ரேலியாவில் பிறந்தவரான மேரி
ஆன் இவான்ஸின் தந்தையார் ஆங்கிலேய
இராணுவத்தின் இந்திய படையணியில் கடமையாற்றியபோது முதலாம் உலகப் போரில் கொல்லப்பட
தனது 20 வயதில்
பம்பாய்க்கு குடிபெயர்ந்த மேரி ஆன் வாழவாதாரத்துக்காக Circus
Company ஒன்றில் சேர்ந்து கொண்டார்.
Homi Wadia தயாரித்த Hunter Wali சண்டைப் படத்தில்
ஒரு Stunt நடிகையாக, சாகசங்கள் புரியும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு
1935 இல் மேரிக்குக் கிடைத்தது. தனது பெயரை Nadia எனத் திரைக்காக மாற்றிக் கொண்ட அவளுக்கு
இரசிகர்களின் பேராதரவை அப்படம் தேடிக் கொடுத்தது. அதன்பின் Homi
Wadia தயாரித்த அத்தகைய சண்டைப்படங்கள் பலவற்றில் John Cawas சுடன் கதாநாயகியாக Nadia என்கிற மேரி ஆன்
நடித்தார். 1961 இல் தயாரிப்பாளர் ஹோமி வாடியாவைத் திருமணம்
செய்து கொண்ட அவர் வாடியா தயாரித்து 1968 இல் வெளியான James Bond வகையறாப்ப படமான Khiladi இல் தனது 60 ஆவது வயதிலும் சாகசம் புரிந்து சாதனை படைத்தார்!
பிரமிளா
30 களில் மற்றும் சிலர்... Shata Apte/ Rattanbai/ Jaddanbai/ Bibbo
மராத்திய நடிகையான சாந்தா
ஆப்தே, 1932 -1958 காலப்பகுதியில் பிரகாசித்தவர். சபிதாதேவியைப்
போலவே இவரும் தமிழ் பேசி நடித்தவர். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி நாரதராகத் தோன்றிய 'சாவித்திரி'[1941] தமிழ்ப்பட நாயகியும் இவர்தான். 1932 இல்
ஹிந்தித் திரையுலகில் நுழைந்த பிராமண
மராத்தியரான சாந்தாஆப்தே, சாந்தாராமின் படங்களில்
அடுத்தடுத்து வாய்ப்பளிக்கப்பட்டு 1934 -1938 க்குள் ஐந்தாறு படங்களில் நடித்தார்.
அவர் பிறந்த அதே 1916 ஆம் ஆண்டில் பிறந்த இசைவாணி எம்.எஸ்.சுப்புலெட்சுமியுடன் ''சாவித்திரி' தமிழ்ப்படத்தில் பாடி
நடித்த சாந்தா ஆப்தே Duhai [1943] படத்தில் பிரபல ஹிந்திப் பாடகியும் நடிகையுமான
நூரஜஹானுடன் கதாநாயகி வேடமேற்றுப் பாடி நடித்தார். யாகூப், ஷாகு மொடாக் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்த
சாந்தா 1958 இல் திரையுலகை விட்டு ஓய்வு பெற்றார்.
ஹிந்தி சினிமாவில்
முதல் பெண் இசையமைப்பாளர் என்ற
பேருக்குரியவர் பாடகியும் நடிகையுமான Bibbo. 1933-1947 காலப்பகுதியில் மோதிலால்,
சுரேந்திரா, சந்திரமோகன் போன்ற பண்பட்ட நடிகர்களுடன் கதாநாயகியாக இணைந்து
நடித்தவர்.
தேவியர் ஐவர் - சபிதாதேவி/
சித்தாராதேவி/ கண்ணன் தேவி/ ரேணுகாதேவி/ நிர்மலாதேவி
மௌனப்படங்களில் நடிக்க ஆரம்பித்து Bibbo வைப் போலவே 1933 - 1947 காலப்பகுதியில் 15 படங்களில் நாயகியாக மோதிலால் [ அவருடன் மட்டும் ஏழு படங்களில் ], சுரேந்திரா உட்பட பிருதிவிராஜுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர்- இந்திய யூத இனத்தவரான Iris Gasper எனும் சபிதாதேவி. இவர் 'பக்த துளசிதாஸ்' [1937 ] எனும் தமிழ்ப் படத்திலும் தமிழ் பேசி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
நடித்த கடைசி ஹிந்திப் படம் '’சந்திரசேகர்'.
முதல் ஹிந்திப் பேசும் படமான 'ஆலம் ஆரா'[1931]வின் கதாநாயகி சுபைதா. குஜராத்தைச் சேர்ந்த
ஒரு முஸ்லீம் இளவரசியான சுபைதா, Phani Sama எனும் வங்காள நடிகருடன் கதாநாயகியாக நடித்து வங்காள - ஹிந்தித் தயாரிப்பாக 1937 இல் வெளியான 'தேவதாஸ்' மகத்தான வெற்றி பெற்றது.
Sardar Aktar
'மதர் இந்தியா' வின் முன்னோட்டமாக மெஹ்பூப்கான் 1940 இல் தயாரித்த Aurat
இல் பின் நாளில் நர்கிஸ் நடித்த தாய்ப் பாத்திரத்தில்
நடித்தவர் Sardar Aktar. சந்திரமோகன், ஜெயராஜ், நசீர் அஹமட் கான், அஷ்ரப்கான் போன்ற நடிகர்களுடனும் கதாநாயகியாக 1945 வரை நடித்தார். 1942 இல் தயாரிப்பாளர்
மெஹ்பூப்கானைக் காதலித்து மணம்புரிந்து கொண்டார்.
சினிமா - 4 C + 1 -[தொடரும்]
