முந்நாளைய பம்பாயைக் களமாகக் கொண்டதால் 'பாலிவுட்'[Bollywood] என வழங்கப்படும் ,இந்தியாவில் அதிகமாகத் தயாரிக்கப்படும் ஹிந்தித்
திரைப்படங்களின் கேந்திர நகரம் மும்பாய், ,தமிழ் , தெலுங்கு திரைப்படங்களை போலவே ஹிந்திப் பேசும்
படங்களும் 1931 இல் தான் 'ஆலம் ஆரா'வுடன் உதயமாயின.
அவர்களின் வாரிசுகளான ரன்தீர்கபூர் , ரிஷிகபூர், ராஜிவ்கபூர், சஞ்சனாகபூர் வழியில் நாலாவது தலைமுறையைச் சேர்ந்த க்ரீஷ்மாகபூர் , கரீனா கபூர், ரன்பீர் கபூர் என கபூரின் சாம்ராஜ்யம் ஹிந்தித் திரையுலகில் பரந்து
வியாபித்து இன்றுவரை புகழுடன் தொடர்கிறது.
அசோக்குமார்
பிருதிவிராஜ்கபூர் நடித்த 30 களிலேயே நடிக்க ஆரம்பித்து அக்காலத்து தேவிகாராணி, லீலா சிட்னிஸ் போன்ற முன்னணி நடிகையருடன் இணை
சேர்ந்து நடித்து, ஹிந்தித் திரையுலகின் முதல் 'சூப்பர் ஸ்டார்' எனும் பெருமையைப் பெற்றவர் நடிகர் அசோக்குமார்.
60 களின் பின் காதல் நாயகனாக நடிப்பதைக் கைவிட்டு குணசித்திர வேடங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி 1997 வரை சுமார் 60 ஆண்டு காலம் சினிமாவைத் தனது உயிர் மூச்சாகச் சுவாசித்து வாழ்ந்தவர் அசோக்குமார். தமிழ் நடிகர் பாலாஜியின் நட்புக்காக அவரது 'அண்ணாவின் ஆசை'[1963] திரைப்படத்தில் மட்டும் ஒரு கெளரவ வேடத்தில் தோன்றினார். 13.10.1911இல் பிறந்த அவர் 10.12.2001 இ]ல் தமது 90 ஆவது வயதில் காலமானார்.
திலீப்குமார்
காதல் நாயகனாக நிம்மியுடன் – Deedar[1951], Daag[1952], Ann[1952], Amar[1954],Uran Kathola[1955] நர்கீஸுடன் – Andaz[1949], Babul[1950]வைஜயந்திமாலாவுடன் – Naya Daur[1957], Mathumathi[1958], Paigam[1959], Ganga Jamna[1961], Leader[1964] ,Sunghursh[1968] 'அனார்கலி' மதுபாலாவுடன் – Mughul E Azam[1960]'பார்வதி' சுசித்ராசென்னின் தேவதாஸாக Devdas[1955] சாகச நாயகன் 'மலைக்கள்ளன்'ஆக மீனாகுமாரியுடன் – Azaad[1955]
மற்றும் Kohinoor[1960] வஹீதா ரஹ்மானுடன் 'எங்க வீட்டுப் பிள்ளை’ MGR ஆக –Ram Aur Shyam[1967] அதே
வஹீதாவுடன் 'ஆலயமணி சிவாஜியாக –Aathmi[1968] என 50, 60 களில் அவர் நடித்த அனைத்துப் படங்களும வெற்றியைக்
குவித்தன.
இந்தியத் திரையுலகில் மிக அதிகளவு விருதுகளை பெற்று
'கின்னஸ்' சாதனை புரிந்தவர்
திலீப்குமார். ஹிந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் பெற்று வந்த படங்களுள்,
'ஆன்'[1952 ],
'வானரதம்'[1956], ‘ பாட்டாளியின் சபதம்'[1957], 'அக்பர்'[1961] முதலியன திலீப்குமார் நாயகனாக நடித்தவை.
ராஜ்கபூர்
இந்திய சார்லி சாப்ளின் ஆக அவரது
அப்பாவித்தனமானநல்லவன் பாத்திர இமேஜை
வரித்துக் கொண்ட ராஜ்கபூரின் நடிப்புப் பாணி அலுத்துப் போய் 70 களில் வரவேற்பிழந்து போக [அதே பாணியைக்கொஞ்சம் கிராமிய மணம் கலந்து
கொடுத்து தமிழில் பாக்யராஜ் வெற்றி
பெற்றது அதே 70 களில் தான்!]
நடிப்பைக் குறைத்துக் கொண்டு தயாரிப்புப் பணியில் முழு மூச்சாக ராஜ்கபூர்
தம்மை ஈடுபடுத்திக் கொள்ளலானார். அவரது அனுசரணையுடன் மகன்மார் ரன்தீர் கபூர்,
ரிஷி கபூர், ராஜிவ் கபூர் மூவரும் படிப்படியாக ஹிந்தித் திரையுலகில்
களமிறங்கினர்.
பத்மினி, வைஜயந்திமாலா, டிம்பிள் கபாடியா போன்ற நடிகைகளின் இளமை அழகை வணிகமாக்கிக் கண்ட வெற்றிச் சூத்திரத்தை அவர் சிக்கெனைப் பிடித்துக் கொண்டார். பின்னைய ஆண்டுகளில் ஒரு தயாரிப்பாளராக கதாநாயக நடிகையரின் கவர்ச்சியை மூலதனமாக்கி அவர் தயாரித்து நெறியாள்கை செய்த சில படங்கள் [Satyam Shivam Sundadam –1978–ஸீனத்அம்மன் /Prem Rog-1982- பத்மினி கோலாப் புரி/ Ram Teri Ganga Maili-1985- மந்தாகினி] பெரும் வெற்றிப்படங்களாக விருதுகளும் பெற்று வசூலிலும் சாதனை புரிந்தமை விந்தைதான்.
50-60 களில் மீனாகுமாரி, மாலா சின்ஹா, வஹீதா ரஹ்மான், சயிராபானு,ஹேமமாலினி, ராஜஸ்ரீ, ஷகிலா, சாதனா, நந்தா எனப் பிரபலமான
நாயகியாருடன் ஒருசில படங்களில் அவர் சேர்ந்து நடித்த போதிலும் அவை ஏனோ வெற்றி
பெறவில்லை. ராஜ்கபூரின் படங்களுள் Aah மட்டும் 'அவன்' என்ற தலைப்பில் 'டப்'பாகி தமிழில் வெளிவந்தது. ஷங்கர்-ஜெய்கிஷனின் இசையில்
உருவான இனிய பாடல்களின் களஞ்சியமாக அப்படம் திகழ்ந்த போதிலும் ஹிந்தியிலும் சரி
தமிழிலும் சரி அது ஏனோ பெரிய வரவேற்பைப் பெறவில்லை!
ராஜ்கபூரின் தயாரிப்புகள் வெற்றிபெற இசையமைப்பாளர்கள் ஷங்கர்-ஜெய்கிஷனின்
இசையும் திரைப் பாடல்களில் அவருக்காகப் பின்னணி பாடிய முகேஷின் குரலும்
உறுதுணையாக அமைந்தன. 1976 இல் முகேஷின்
மறைவின் பின் மன்னாடே அவருக்காகப்
பின்னணி பாடினார்.
ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றிபெற்ற
ராஜ்கபூருக்கு பத்மபூஷன் விருதையும் தாதா சாஹேப் பால்கே விருதையும் பாரத அரசு
வழங்கி கெளரவித்தது. 1988 இல் தமது 64
ஆவது வயதில் அவர் காலமானார்.
தேவ் ஆனந்த்
ராஜ்கபூருக்கும்
ஆனந்துக்குமிடையில் பல ஒற்றுமை வேற்றுமைகளுண்டு. இருவரும் சம வயதினர். ராஜ்கபூர் மதுபாலாவுடன் நாயகனாக நடித்து 1947இல்
வெளியான Neel Kamal ராஜ்கபூருக்கு
விடிவேற்படுத்தியது. தேவ் ஆனந்த் காமினி
கௌசலுடன் நாயகனாக நடித்து 1948இல்
வெளியான ziddi தேவ் ஆனந்துக்கு திரையுலக வாசலைத் திறந்து வைத்தது.
70 களில் ராஜ்
நாயகனாக நடிப்பதில் இருந்து கெளரவமாக விலகிக் கொள்ள, என்றும் இளமை மாறாத மார்க்கண்டேயனாக தனது 60 வயதிலும் கூட தேவானந்த் நாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். 70-80களில் அறிமுகமாகி பிரபலமான ஹேமமாலினி, ஸீனத் அமன், டினா முனிம், மும்தாஜ், Sharmila Tagoor, Yogeeta Baali, Raakhee, Parveen Babi,
Pathmini Kolaapuri, Zarina Wahab, என அவருடன் 70 களின் பின் இணைந்து நடித்த நடிகைகளின் பட்டியல் நீளமானது.
ஆரம்பத்தில்
48-49இல் மதுபாலாவுடன் நடித்த ராஜ் பின்னர்1959 இல் ஒரு படத்தில் மட்டும் [ Do Ustad இல்] சேர்ந்து நடித்தார். வஹீதாவுடன் ஓரிரு படங்களில் மட்டுமே ராஜ் இணை
சேர்ந்தார்.
நூடன், வைஜயந்திமாலா, மாலாசின்ஹா,சாதனா, நந்தா, சயிராபானு போன்ற நடிகையருடன் இருவரும் சமமாகவே ஜோடி
சேர்ந்துள்ளனர். மீனாகுமாரி, கீதாபாலி, நிம்மி போன்ற நடிகையருடன்
ராஜை விட தேவ் கூடின படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். தேவுடன் நடித்த நளினி
ஜெயவந், காமினி கௌஷல், ஆஷா பரேக் போன்றோருடன் ராஜ்கபூர் நடித்ததாகத் தெரியவில்லை.
ஆரம்ப காலத்தில் மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்தும், குடும்பப் பின்னணியைக் களமாகக் கொண்ட சமூகக் கதைகளை ராஜ்கபூர் படமாக்க, ஆவலைத் தூண்டும் துப்பறியும் கதைகளையும் மர்மக்
கதைகளையும் தேவானந்த் தனது படங்களின் கருப் பொருளாக்கினார்.
ராஜ்கபூருக்கு அவரது தந்தையாரான பிருதிவிராஜ்
கபூருடன் தம்பிமார் ஷம்மிகபூர், சஷிகபூர், மகன்களான
ரன்தீர்கபூர், ரிஷிகபூர் எனப் பலரும் நடிப்பு நெறியாள்கை என அவரது
தயாரிப்புகளில் உறுதுணையாக நின்று உதவினார். தேவானத்துக்கு அவரது அண்ணன் சேட்டன்
ஆனந்த் தம்பி விஜய் ஆனந்த்
நண்பர் குரு தத் எனப் பலரும் பக்கத் துணையாக நின்று அவரது படங்களை இயக்கி
வெற்றி பெற உழைத்தனர்.
ஷங்கர்-ஜெய்கிஷனின் இசை ராஜ்கபூரின் படங்களை செழுமைப் படுத்தியதென்றால் R.D.பர்மன் மற்றும் மகன்
S.D.பர்மனின் இசை தேவானந்தின்
படங்களுக்கு குளுமையூட்டியது. முகேஷின் பின்னணிக் குரல் ராஜுக்கு
ஆதாரமாக நண்பர் கிஷோர்குமாரின்
குரல் தேவுக்கு உந்து சக்தியானது. ஏனையவர்களுடனல்லாது இவர்கள் இருவருக்கும்
இடையில் மறைமுகமான ஒரு போட்டி தொடர்ந்து நிலவியமையை உணர முடிகிறது.ராஜ்கபூரின் திரைவாழ் விலும் 1988 இல் அவரது மறைவுடன் திரை விழ தேவானந்தின் பயணம் மேலும் 23 ஆண்டுகள் வெற்றிகரமாகத் தொடர்ந்தது. தனது 65 ஆண்டுகால திரையுலக வரலாற்றில் 19 படங்களை இயக்கியும் 35 படங்களைத் தயாரித்தும் இரு ஆங்கிலப் படங்கள் உட்பட 114 படங்களில் நடித்தும் சாதனை புரிந்த தேவானந்த் மிக அதிகமான[106] ஹிந்திப் படங்களில் கதாநாயகனாக நடித்தவரான ராஜேஸ் கன்னாவுக்கு அடுத்தபடியாக 92 படங்களில் நாயகனாக நடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்த பெருமைக்குரியவராகிறார்.
2001,2002 ஆம் ஆண்டுகளில் முறையே பத்மபூஷன் விருதையும் தாதாசாஹிப் பால்கே விருதையும் பாரத அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.
26.09.1923 இல் பிறந்த தேவானந்த் 03.12.2011 இல் தமது 88ஆவது வயதில் காலமானார். அவரது சுயசரிதையானது Romancing With Life எனும் தலைப்பில்
நூலாக வெளிவந்துள்ளது. The Great
Showman என்பது
ராஜ்கபூரின் வரலாற்றுப் பதிவு.
அசோக்குமார், திலீப்குமார், ராஜ்கபூர், தேவானந்தை விட ஆரம்ப
காலத்தில் நடித்த மற்றும் சில[ கதாநாயக ] நடிகர்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
பிருதிவிராஜ் கபூர்
புராண, சரித்திரக்
கதாபாத்திரங்களில் பிcகாசித்த அவரின் திரை வாழ்வு 1971வரை இடைவிடாது
தொடர்ந்தது. மகன் ராஜ்கபூரின் தயாரிப்பில்
Awaraa[1951] இலும் மகன்மார் பேரன்மாருடன் கடைசியாக Kal Aaj
Aur Kai [1971]இலும் நடித்த அவர் அக்பராகத் தோன்றிய Moghal E
Azam [1960]
தமிழிலும் வெளியான குறிப்பிடத்தக்க ஒரு படம். அவர் நடித்து தமிழில் 'டப்'பாகி வந்த மற்றுமொரு படம்-Anand Math
[1952]
நர்கீஸுடன் பால் ராஜ் சஹானி, பாரத் பூஷன் நடித்த
இந்திய-சோவியத் கூட்டுத் தயாரிப்பான Pardesi [1957] இல் பிருதிவிராஜும் பங்கேற்றார். Thurka Khote
யுடன் ராணாவாக அவர் நடித்த Rajrani Meera[1933] படமும் நினைவு கூரப்படுவது. அவர் பத்மபூஷன் விருது 1951 லும்
தாதா சாஹேப் பால்கே விருது 1971லும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
பாரத்பூஷன்
பால் ராஜ் சஹானி
இயற்கையான நடிப்பை வெளிப்படுத்திய மற்றொரு நடிகரான
பால் ராஜ் சஹானியும் நடிகராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் இருந்தவர். . நாடக மேடையில் இருந்து 1946 இல் திரைக்கு
வந்த அவர் 1973வரை நர்கிஸ், மீனாகுமாரி, வைஜயந்திமாலா, பத்மினி, நூடன் எனப் பிரபலமான நடிகையருடன் இணைந்து
நடித்துள்ளார். . அவர்
நடித்தனவற்றுள் சாந்தாராமின் Do Bigha
Zameen –[1953], ஏவிஎம்மின் Bhabbi-[1957] மற்றும் Seema [1955], . பிமல்ராயின் Kabuliwala-1961], Garam Hawa – [1973] என்பன குறிப்பிடத் தக்கவை.
1934 இல்
ஹிந்தித் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான மோதிலால் 1965 வரையான 31 ஆண்டுகளில் வில்லனுடபடப் பல்வேறு வகையான குணசித்திர
பாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர். பிமல்ராயின் தேவதாஸும்Devadas -[1955], Parakh-[1960] கும் சிறந்த துணை நடிகருக்கான விருதுகளை பெற்றுக் கொடுத்தன. பின்னைய
காலத்தில் ஜெமினியின் Mr.Sampath
-1952], Paigham-[1959] ராஜ்கபூரின் Jakte Raho
–[1956] மற்றும் Anari –[1959], Leader –[1964] போன்ற படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
அவரது அபிமானத்துக்குரிய நதீராவுடனும் பின்னர்
நூடனின் தாயாரான சோபனா சமத்துடனும் இல்வாழ்வைப் பகிர்ந்து கொண்டு ஒரு கனவானைப் போல
வாழ்ந்த மோதிலாலின் வீழ்ச்சிக்கு
சூதாட்டத்திலும் குதிரைப் பந்தயத்திலும் அவருக்கிருந்த ஈடுபாடு பிரதான
காரணியாயிற்று. 1965 இல் தனது 54வது வயதில் ஏதும் இல்லாத ஓட்டாண்டியாக அவர் உயிர் பிரிந்தது.
சந்திரமோகன்
சஹானியைப் போலவே 1934 இல் சாந்தாராமின் கன்னிப் படைப்பான Amrit Manthan மூலம் ஒரு
வில்லனாகத் திரையுலகில் நுழைந்த சந்திரமோகன் கம்பிரமான அவரது குரலுக்கும் இலாகவமான
அவரது வசன வெளிப்பாட்டுக்குமென நினைவுகூரப்படுபவர்.
பிருதிவிராஜ்கபூர், பாரத் பூஷன் போல இவரும் அக்காலச் சரித்திர படங்களில் சாதனை படைத்தவர்.
பதினான்கே ஆண்டுகளில் அவரது திரை வாழ்வு அஸ்தமிக்க அவரது குடியும் சூதாட்ட
நாட்டமும் வழிகோலின. 44 வயதில் மோதிலாலைப் போலவே சந்திரமோகனும் ஏதுமில்லா
ஏழையாக இன்னுயிரைத் துறந்தார்.
K.L.சைகால்
தனது 20
வது வயது இளமைப் பருவத்தில் திரையில்
அவரைக்கண்டு மானஸீகக் காதல் கொண்டாராம் பாடகி லதா மங்கேஷ்க்கார்! அவரை
ஆதர்சமாகக் கொண்டு அவரைப் போலவே ஆரம்பத்தில் பாடியவர்தான் பிரபல பாடகர் முகேஷும்.
தேவதாஸை திரையில் வாழ்ந்து காட்டியவர் அவரைப் போலவே குடியைத் தஞ்சமடைந்து 42 வயதிலேயே மடிய நேரிட்டது விதியின்
விளையாட்டா?
குருதத்
தேவ் ஆனந்துடன் சேர்ந்து சமகாலத்தில் 1944 இல் ஹிந்தித் திரையுலகில் நுழைந்து ஒரு நடன இயக்குனராக,
நடிகராக, நெறியாளராகப் படிப்படியாக உயர்ந்து பின்னர் ஒரு
தயாரிப்பாளராகவும் மாறியவர் குருதத்.
பின்னணிப் பாடகி கீதா தத்தை மண முடித்த அவர்
குடியைத் தஞ்சம் அடைந்ததால் 40 வயதை எட்டு
முன்னரே 1964 இல் சாவைச் சந்திக்க
நேரிட்டது அவலமே. அதுவரை வெளியான சிறந்த நூறு படங்களுள் ஒன்றாக அவரது Pyassa
வும் Time சஞ்சிகையினால் தெரிவு செய்யப் பட்டுள்ளது.
பிரபல நடிகர் அசோக்குமாரின் இளைய சகோதரரான
கிஷோர்குமார் ஒரு நடிகர்-பின்னணிப்
பாடகர்-பாடலாசிரியர்-இசையமைப்பாளர்-திரைக்கதாசிரியர்-நெறியாளர்-தயாரிப்பாளர் என
திரைத் துறையில் பன்முகத் திறமைகளும் கொண்ட ஆளுமை கொண்டவர். நடிகர் என்பதை விட
பின்னணிப் பாடகராக அவரது பங்களிப்பு அபரிமிதமானது. திலீப் குமாரில் இருந்து
அமிதாப் பச்சன் வரை முன்னணிக் கதாநாயகர்கள் பலருக்கும் பின்னணியில் அவர் குரல்
பொருந்தியது. சிறந்த பின்னணிப் பாடகருக்கான
விருதை அதிக தடவைகள் [8 முறை] வென்றவர் கிஷோர்.
நடிப்பைப் பொறுத்த மட்டில் 1948 லேயே காலடி
வைத்தவர், 1951இல் நாயகனாகி விட்டார். நடிப்பில் மிகப்பெரிய ஈடுபாடு
அவருக்கு இருக்கவில்லை. நகைச்சுவை நாயகனாகவே வலம் வந்தவர்
சொந்தவாழ்க்கையில் வினோதமான பழக்க வழக்கங்களைக் கொண்ட ஒரு புரியாத புதிராக விளங்கிய கிஷோர் நால்வரைத் திருமாணம் செய்து கொண்டார்..முன்னணி நடிகை மதுபாலாவை 1960இலும் அழகுத் தாரகை லீனா சந்தர்வர்க்கரை 1980இலும் இடையில் 1976இல் நடிகை யோகித்தாபாலியையும் வங்காள பாடக நடிகையான ரூமாவை 1950இலும் மணமுடித்தார்.
9
மொழிகளில் பாடியவர், 10 படங்களைத் தயாரித்தவர், 06 படங்களை இயக்கியவர், 03 படங்களுக்குத் திரைக்கதை எழுதியவர், 05 படங்களுக்கு இசையமைத்தவர் எனப் பல்வேறு துறைகளிலும்
கரைகண்ட கிஷோர் 04.08.1929 இல் பிறந்தவர்.
தமது 58 ஆவது வயதில் 1987 இல் காலமானார்.
ஷம்மி கபூர்
1957இன் பின் அவர் காட்டில் அடை மழைதான். ஆஷா
பரேக்குடன் Dil Deka Dekho-[1959], Teesri
Manzil-[1966], மாலா சிம்ஹாவுடன் Ujala –[1959], Dil Tera
Diwana-[1962], ஷர்மிளா டாகூருடன்] Kashmir Ki Kali –[1964], An Evening in
Paris-[1967],
வைஜயந்திமாலாவுடன் College Girl –[1960], Prince-[1969], சாயிரா பானுவுடன் Junglee-[1961], Bluff Master-[1963], கல்பனாவுடன் Professor-[1962], ராஜஸ்ரீயுடன் Janwar-[1965], Brahmachaari-[1968], ஷகிலாவுடன் China Town –[1962], சாதனாவுடன் Sachaai-[1969], பத்மினியுடன்Singapore-[1960], சரோஜாதேவியுடன் Pyaar Kiya To Darna Kya –[1963], என முன்னணி நடிகையர் பலருடனும் இணைந்து நடித்த படங்கள்
வெற்றிப் படிக்கட்டுகளாக அமைய 60 களில் அவர் கொடிதான் பறந்தது.
சுனில் தத்
முன்னணி நடிகை நர்கீஸின் மகனாக Mother India-[1957] இல் அறிமுகமான சுனில் தத்
பின்னர் அவ்ரையே மணம் புரிந்து கொண்டார்.
நடிக்க வரு முன் ரேடியோ சிலோன்[Radio Ceylon] ஹிந்தி ஒலிபரப்பில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய சிறப்பு அவருக்குண்டு. நூடனுடன் அவர் நடித்த Khandan-[1965], Milan-[1965] சாதனாவுடன்நடித்த
Sanya-[1966] போன்ற படங்கள் அவரைச் சிறந்த நடிகராக இனம்
காட்டின. 1964 இல் வெளிவந்த அவ்ரது பரிசோதனைத் திரைப்படம் Yaadein. அப்படத்தில் வேறெந்த நடிகர்களுமின்றித் தாமொருவரே
[ Soliloquy பாணியில்] முழுத்திரைப்படத்திலும்
நடித்து ஒரு சாதனை நிகழ்த்தினார். அவரைப் பின்பற்றி அரசியலில் ஈடுபாடு
கொண்ட காரணத்தால் அவரது மகனான சஞ்சய் தத் சிறை புகவும் நேரிட்டது.
ராஜேந்திரகுமார்
1949 இல் Patanga இல் ஒரு சிறிய வேடத்தில் நடித்த
ராஜ்குமாருக்கு 1955 இல் கீதாபாலியுடன்
நடித்த Vachaa மூலம்தான் நாயகனாகும் வாய்ப்புக்
கிட்டியது.பின்னர் 1957 இல்
வெளியான Mother Indiya அவரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. 1959 இல் மாலா சின்ஹாவுடன் நடித்த Dhool Ka
Phool அவரை ஒரு
வெற்றிப்பட நாயகனாக்கி விட்டது. இரட்டைக் கதாநாயகர்களில் ஒருவராகப் பெரும்பாலான படங்களில் பங்கேற்ற போதிலும் 60 களில் அவர் நடித்த படங்கள் பலவும் வெள்ளிவிழாக் கொண்டாடின.
80 களின் பின் தயாரிப்பில் இறங்கி ஆறு படங்களைத் தயாரித்தார்.
அவர் தயாரித்து நெறியாள்கை செய்து தானும் நடித்து மகன் Kumar
Gaurav[குமார் கவர]வையும் அறிமுக நாயகனாகி வெற்றி பெற்ற படம்.Love Story. 1995 வரை ஹிந்தித் திரையுலகில் நல்ல நடிகனாக மட்டுமின்றி நல்லதொரு மனிதராகவும்
பெயரெடுத்த ராஜேந்திர குமாரின் வாழ்நாள் தோழர்களாக சுனில் தத்தும் ராஜ்கபூரும்
விளங்கினார்.
பகவான்
சரித்திர, புராண, மாயாஜாலப் படங்களில் நடித்து வெற்றிகரமான வசூல் நாயகனாக 1942-1983 வரை
சுமார் 40 ஆண்டு காலம் வலம் வந்தவர் மஹிபால். தமிழில் 'டப்'பாகி வந்த படங்களுள், சர்க்கஸ் சுந்தரி-[1958], வீர
கடோதகஜன் -[1959],ஹனுமான் பாதாள விஜயம்-[1960], அரபு நாட்டு அழகி-[1961] எனும் நான்கும் மஹிபால் நாயகனாக நடித்தவை.அலிபாபாவும் 40 திருடர்களும் -1954
-[ஷகிலாவுடன்], அலாவுதீனும் அற்புத
விளக்கும் -1952 [மீனாகுமாரியுடன்], சாந்தாராமின் Navrang-1959 [சந்தியாவுடன்], சம்பூர்ண ராமாயணம்-1961 [அனிதாகுகாவுடன்], Zabak-1961[ஷியாமாவுடன்] மற்றும் நிருபாராய், மாலா சின்ஹா எனப் பிரபலமான நாயகியர் பலருடனும் நடித்துப் புகழ் பெற்றவர்
மகிபால்.
மற்றும் சிலர்
50 களின் பிற்பகுதியில் நடிக்க ஆரம்பித்து 60-70 களில் பிரபலமான நகைச்சுவை நடிகராகப் பெயர் பெற்றவர் Mehmood மெஹமூத். ’சபாஷ்
மீனா' Dil Tera Diwana [1962] ஆக ஹிந்தியில் அவதாரம்
எடுத்த போது சந்திரபாபு நடித்த இரட்டை வேடத்தில் அசத்தியவர் மெஹமுட்தான். ஒரு
நடிகராக மட்டுமன்றி பாடகர் ,
இயக்குனர், தயாரிப்பாளர் எனப் பல்துறை மேதையாக விளங்கியவர்
அவர்.
30-40 களில் ஹோமி வாடியா தயாரித்த சண்டைப் படங்களில் நடிக
வீராங்கனை Fearless Nadia வுடன் நாயகனாக
நடித்த Stunt நடிகர் ஜான் கவாஸ். ஒரு மல்யுத்தவீரரான அவர் நடித்த Tarzan வகையறாப்
படங்களும் அவர் பெயரைத் தக்க வைத்துள்ளன.
தமிழில் இருந்து ஜெமினியின் 'சந்திரலேகா' மூலம் ஹிந்தித் திரையுலகில் நுழைந்த ரஞ்சனும்
ஒரு சாகசப்பட நாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்தான்.
[50 களில் நடிக்க ஆரம்பித்த போதிலும் 60 களுக்குப் பின்னரே நாயக அந்தஸ்த்துப் பெற்ற சஷிகபூர், ராஜ்குமார், மனோஜ்குமார் போன்ற நடிகர்களைப் பற்றியும் 60 களுக்குப் பின் அறிமுகமான நடிகர்களைப் பற்றியும் இக் கட்டுரையில் ஆராயப் படவில்லை.]


