சினிமா - 04 -A.
மொழிமாற்றப் படங்கள் [சில பாடல்களும்]
ஹிந்தி -
தமிழ்
முதன் முதலாக அமெரிக்காவில் திரையிடப்பட்ட ஹிந்திப்
படமான 'ராம் ராஜ்ய' வை [1943 ] தமிழில் மொழிமாற்றம் செய்து 1948இல் வெளியிட்டனர் ஏவிஎம் நிறுவனத்தினர். அதில்
எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலில் சீதையாக நடித்த ஷோபனா சமர்த்துக்காக
[நூடனின்தாயார்] ஒலித்த 'ஊஞ்சல் ஊஞ்சல்' ஊஞ்சலில் வேகத்தோடு போட்டியிட்டு இனிமை சேர்த்த ஒரு
பாடல். இசை - ஹிந்தியில் வியாஸ்; தமிழில் சுதர்சனம்.[ராஜேஸ்வரி பாடிய இரண்டடைவது
பாடலது].
சாந்தாராமின் 'ApnaDesh '[1949 ] 'நம் நாடு' என்ற மகுடத்துடன் அதேஆண்டில்[1949]தமிழுக்கு 'டப்பாகி வந்தது.
ஹிந்தியில் புருஷோத்தம் இசையமைத்த பாடல்களைத் தமிழில் மாற்ற கோவிந்தராஜுலுவும்
பி.ஆர்.ராஜகோபால் அய்யரும் துணை நின்றனர்.
1953 இல் நடிகர் ராஜ்கபூர் தயாரித்த 'ஆஹ்' காதல் சித்திரம் 'அவன்' ஆக மொழி மாறி வந்தது. ராஜ்கபூர் நர்கீஸுடன் விஜயலக்ஷ்மியும்
நடித்த படமிது.சங்கர் -ஜெய்கிஷனின் இசையில் ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் பாடிய
அத்தனை பாடல்களுமே கற்கண்டாய் இனித்தன. தமிழ்ப் பாடல் வரிகளின் சொந்தக்காரர்
கம்பதாசன். 'கண் காணாததும்', 'அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே', 'கல்யாண் ஊர்வலம் வரும்', 'ஜலக்கு ஜலக்கு ஜலக்கு ஜலக்கு
தண்டையதன் நாதம்', 'உன் பேரைக் கேட்டேன்', 'ஆஹா நானின்றே அறிந்து கொண்டேன்', 'மின்னல் போலாகும் இந்த' - யாவுமே கேட்கத்
திகட்டிடாத பாடல்கள்.
Robinhood கதையான 'பாதல்'[1951] என்ற படத்தை பக்ஷிராஜா நிறுவனத்தினர் 'புரட்சி வீரன்' என்ற பெயரில் 1952 இல் தமிழில் தந்தனர். பிரேம்நாத்தும் மதுபாலாவும் இணை
சேர்ந்த அப்படத்தில் திருச்சி லோகநாதனும் பி.ஏ. பெரியநாயகியும் இணைந்து இசைத்த 'காதல் பொய்யோ இன்னுமா..'பாடலும் திருச்சி தனியாகப் பாடிய 'மெய்த் தியாகப் புவியிலே வாணாளில்' பாடலும் நினைந்து அசை போட வைப்பவை.
1955 இல் ஹிந்தியில் Uran Khatola [உறான் கத்தோல] வாக திலீப்குமார், நிம்மியின் நடிப்பில் வெற்றி கண்ட திரைப்படம் 1956 இல் 'வானரதம்' ஆகத் தமிழில் பவனி வந்தது. நவ்ஷாத்தின் இசையில் கம்பதாசனின் பாடல்கள் லதா மங்கேஷ்க்கார், T.A .மோதியின் குரல்களில் வானலைகளில் இதமாகத் தவழ்ந்தன.
'இடர் சூழும் காதலின்', 'நீ நீரோடடாதே','என்னுள்ளம் விட் டே ஓடாதே', 'எந்தன் கண்ணாளன் கரை நோக்கிப் போகிறார்', 'என்னைக் கண்டேகுவாய் ''ஓ தியாக யாத்திரைக்காரி' - யாவுமே இனிமையின் ஊர்வலங்கள்.
திலீப்குமாரின்
நடிப்பில் தமிழில் மொழிமாறி வெளியான
நாலாவது திரைப்படம் 'அக்பர்'. அனார்கலி-சலீம் காதல் கதை. ‘மொகல் ஏ ஆஸம்' என 1961 இல் வெளியானது. அனார்கலியாக அழகுப்பதுமை மதுபாலா;
அக்பராக
பண்பட்ட நடிகர் பிருதிவிராஜ்கபூர்.
திலீப்பின் 'ஆன்','வானரதம்' படங்களுக்கு இசையமைத்த நவ்ஷாத்தே மீண்டும். கண்ணதாசன்
உச்சத்தில் இருந்த காலம். ஆயினும்
கம்பதாசனே வெங்கடராமனுடன் மீண்டும்
கைகோத்திருந்தார்.
'கனவு கண்ட காதல்', 'ஆற்றின் கரை தனிலே', 'காதல் கொண்டாலே பயமென்ன?'என பி.சுசிலாவின்
குரல் பாகாய்க் கரைந்துருகியது. ராதா+ஜெயலக்ஷ்மியின் குரலில் 'அழகின் நிலா'
தமிழ்ப் பதிப்புக்காக
SVV யின் இசைஜாலத்தில் விசேடமாக இணைக்கப்பட்ட பாடல்.
1957 இல் வெளியான Qaidi ' எனும் ஹிந்தித் திரைப்படம் தமிழில் 'மகுடம் காத்த மங்கை' என்கிற மகுடத்துடன் அதே ஆண்டில் வெளியானது. பத்மினியுடன் வடநாட்டு நாயகன்
சுரேஷும் ஹெலனும் நடித்திருந்தார்கள். 'ஆஹா என்னைப் பார் மன்னா', 'குறும்பாய் என்னைப் பார்க்காதே', 'உந்தன் காதல் பாதை தனிலே '[மூன்று பாடல்களிலும் குரல் ஜிக்கி] 'ஓ மோகனச் செந்தாமரை' [TA .மோதியும் ஜிக்கியும்] என ஓ.பி.நய்யாரின் இசையில் அமைந்த
இனிய கானங்களுக்கு கே.வி.மகாதேவன் மீண்டும் இசை வழங்கியிருந்தார்.
ஜிம்போவின் வெற்றியைத்
தொடர்ந்து அதே கூட்டணி 1960 இல் எடுத்த படம்’Zimbo comes
to town’. ‘ நகரத்தில் ஜிம்போ'வாக 1961 இல் அது தமிழில் பிரவேசம்
செய்தது.கே.ஜமுனாராணியின் தேன் குரலில் 'மோகம் பிறந்திடாதா', வும் 'நெஞ்சில் நிறைந்த
வீரா'வும் சித்ரகுப்தாவின் துள்ளிசைத் தூறல்கள்.
மகிபால் காமினி கௌசலுடன் சேர்ந்து நடித்த
சாகஸப்படம் Circus Sundari
1958 இல் ஹிந்தியில் வெளியானது. தமிழிலும் அதே ஆண்டில்
அதே பெயரில் 'டப்'பாகி வெளியானது. 'ஜாலியாக யாரோ எந்தன் சொப்பன மயக்கத்தில்..' ராஜா ஜிக்கியின் இணைவில் ஒலித்த ஜாலியான பாடல். 'எழிலின்பப் பெண் கலையின்பம் காணு' கே.ராணி குழுவினரின் குரலில் நல்ல துள்ளிசைப்பாடல்.
இசை-அவினாஷ் வியாஸ்.
மகிபால் அனிதா குகா நடித்த Maya Bazaar[1958] புராணப்படம் 'வீர கடோத்கஜன்’ ஆக தமிழில் 1959 இல் விஜயம் செய்தது.
சித்ரகுப்தாவின் இசையில் ராஜா-பி.சுசிலாவின் குரல் இணைவில் 'எழில் பொங்குமே
பார்த்தாலே', 'எழில் ஓவியம் பார்த்தேனோ' -இரு பாடல்களுமே தென்றலின்
குளுமை
மஹிபால் கிரிஜாவுடன்
இணை சேர்ந்த 'ஹனுமான் பாதாள விஜயம்' 1960 இல் திரைக்கு விஜயம் செய்தது. 'மாறன்தானோ தேரில் ஏறிப் பூங்கா வனமதில் வந்தானோ',
'நெஞ்சில் துள்ளும் உண்மை தெரிந்தாயா'
- எஸ்.ஜானகியின் ஆரம்பகாலக் கொஞ்சும் குரல் கீதங்கள். S.N..திருப்பதியின் இசை;தமிழில் விஜயபாஸ்கர். பாடலாக்கம் குயிலன்.
ரஞ்சன், சித்ரா நடிப்பில்
1959 இல் ஹிந்தியில் வெளியான Madari 'மன்னன் மகள்' ஆக அதே ஆண்டில் தமிழுக்கும் தாவியது. 'கண்ணோடு கண் பேசி உறவாடும் ..' TMS, P.சுசிலா பாடிய இருகுரலிசைகீதம். இசை - கே.ஆனந்த்
வட இந்திய அஜித்துடன்
நளினி ஜெயவந் நடித்து 1954 இல் 'நாஸ்திக்’ ஹிந்தியில் வெளியானது. தமிழில் அதன் இசைத் தட்டுகள் 'நாஸ்திகன்'
என்ற பெயரில்தான் வந்தன. 'மாநில மேல் சில மாந்தர்களால் வரும் மாறுதல் பாரையா' திருச்சி லோகநாதனின் குரலில் சிந்தனையைத் தூண்டும் ஓர் உணர்ச்சிப் பாடல். C. ராமச்சந்திராவின் இசையில் குமாபாவின் வரிகள்.
என்ன காரணமோ தெரியாது 1962 இல்
தான் 'மடாதிபதியின் மகள்'
ஆக அது தமிழில் வெளியானது.
1954 இல் ஹிந்தியில் வெளியான 'சம்ராட்' படத்துக்கும் அதே
கதிதான்.அஜித், ரெஹானா நடித்த அப்படமும் தாமதமாக 1962 இல் தான் 'காதல் பரிசு' என்ற தலைப்பில் ' Dub
ஆகி வந்தது. ஹேமந்தகுமாரின் இசையில் குமாபாவின்
பாடல்கள் T.A.'மோதி, லட்சுமி ஷங்கர் குரல்களில் தவழ்ந்தன. 'காதலாலே சாதல் கூட' , T.A. மோதி குழுவினர் வழங்கிய ‘கஸல்’ பாணிப் பாடல்.
புத்தரின் வாழ்வைப் பின்புலமாகக் கொண்ட கதை 'அங்குலிமாலா'. பாரதபூஷன், நிம்மி நடித்த படம். அனில் பிஸ்வாஸ் இசையில் உருவாகி 'புயலுக்குப் பின்' எனத் தமிழில் 1961 இல் திரை கடந்தது.
[1962 வரையான காலப் பகுதியில் வந்த ஹிந்தி-தமிழ்
மொழிமாற்றப் படங்கள் பற்றி மட்டுமே இக் கட்டுரையில் ஆய்வு செய்யப் பட்டது]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹிந்தி - தமிழ் தழுவல் திரைப்படங்கள்
ரெஹ்மான்,உஷா கிரண் நடிப்பில் 1950 இல் வெளியான ஹிந்திப் படமான 'ராஜ் ராணி' [Raj Rani] தெலுங்கில் 'பரதேசி' எனவும் தமிழில் 'பூங்கோதை' எனவும் அஞ்சலி பிக்ச்சர்ட்ஸின் முதல் சமகாலத் தயாரிப்பாக 1953 இல் வெளியானது.அஞ்சலிதேவியுடன் நாகேஸ்வரராவ் நடித்திருந்தார் பிரதீப், பினாராய் நடிப்பில் 1953 இல் ஹிந்தியில் வெளியான காதல் சித்திரம் 'அனார்கலி'யை அஞ்சலிதேவி, நாகேஸ்வரராவ் நடிக்க சி.ராமச்சந்திராவின் இசையையும் தனதாக்கிக் கொண்டு, அஞ்சலி பிக்சர்ஸ் ஆதி நாராயணராவ் 1955 இல் தெலுங்கு-தமிழ் தயாரிப்பாக அதே பெயரில் வெளியிட்டார்.
மஹிபால், சசிகலா நடிப்பில் 1954 இல் ஹிந்தியில் வெளியான படம் Alibaba & 40 Thives' அதே ஆண்டில் Modern Theatres அதிபர் டி.ஆர்..சுந்தரம் 40 திருடர்களுடன் எஸ்.என்.திருப்பதியின் இசையில் அமைந்த பாடல்களையும் சத்தமின்றித் தமிழாக்கி விட்டார். MGR, பானுமதி நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்' தமிழ்ப் பதிப்புக்கு இசைஎஸ்.தட்ஷணாமூர்த்தி!
ஷியாம்,மதுபாலா நடிப்பில் 1952 இல் வந்த Dulari ஜெமினி, பத்மினி நடிப்பில் சில சிறிய மாற்றங்களுடன் 'ஆசை'யாக 1956 இல் வடிவெடுத்தது. கீதா பாலி நடித்த பாத்திரத்தில் தமிழில் நடித்தவர். ராஜசுலோசனா அசோக்குமார் இரட்டை வேடமற்ற முதல் திரைப்படமான ‘கிஸ்மத்'[ Kismath] 1943 இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்தது. தமிழில் 'பிரேம பாசம்' ஆக ஜெமினி, நம்பியார் நடிப்பில் 13 ஆண்டுகளின் பின் 1956 இல் தான் அது வெளியானது.
அசோக் குமார், மீனாகுமாரி நடிப்பில் 1955 இல் வெளியான Bandish தமிழில் ஜெமினி, சாவித்திரி நடிப்பில் 1957 இல் 'யார் பையன்?' ஆக அவதாரமெடுத்தது ஹிந்தியில் நடித்த [சிறுவன்?] டெய்சி இரானியே தமிழிலும் அசத்தினாள். 1956 இல்
திலீப்குமார், நிம்மி நடிப்பில் 1952 இல் ஹிந்தியில் வெளியான Daag ஆறுதலாக சிவாஜி, பத்மினி நடிப்பில் 1961 இல் தமிழில் 'புனர் ஜென்மம்'எடுத்தது 1958 இல் முதலிடம் பெற்ற- திலீப், வைஜயந்தி நடித்த - பிமல் ராயின் 'மதுமதி'யை கல்யாண்குமார், தேவிகா நடிக்க 'நெஞ்சம் மறப்பதில்லை' எனத் தந்தார் ஸ்ரீதர் 1963 இல்.
பின்னாட்களில் MGR நடித்த பல படங்கள் ஹிந்தி மூலப்படங்களின் தழுவல்களாகவே இருந்தன
அவற்றுட் சில -
‘ Phool Aur Patthar’ [1966] ஜெமினி தயாரிப்பான 'ஒளி விளக்கு’ [1968]
சாந்தாராமின் ' Do Aan Khen Barath Haath’[1957]] ‘பல்லாண்டு வாழ்க’ [1975]
Ayee Milan Ki Bela[1964] ஒரு தாய் மக்கள் [1971]
Talash [1969]
ராமன் தேடிய சீதை [1972] Zanjeer [1973]
சிரித்து வாழ
வேண்டும் [1974]
Yathon Ki Barath [1973] நாளை நமதே 1975]
Sachaa Thutha [1970] நினைத்ததை
முடிப்பவன் [1975]
Hum Shakal [1974] ஊருக்கு உழைப்பவன் 1976]
தமிழ் - ஹிந்தி தழுவல்களும் சில மொழி மாற்றப் படங்களும்
எம்.கே.ராதாவுக்குப் பதிலாக ரஞ்சனை இரட்டைவேடம் புனைய வைத்து’ Nishan’ என்ற பெயரில் தமது 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தை, தமிழில் வெளியான அதே 1949 இலேயேஹிந்தியிலும் வெளியிட்டு வெற்றிகண்டார்.
இரண்டிலும் நாயகி பானுமதிதான்.
TKS சகோதரர்களின் நடிப்பில் 1954 இல் வெற்றி பெற்ற 'ரத்த பாசம்' திரைப்படத்தை அசோக் குமார், கிஷோர்குமார் சகோதரர்கள் நடிப்பில் ஹிந்தியில் 'பாய் பாய்' என 1956 இல் வெளியிடடார்.
அதே சூட்டொடு வங்காள Banga Gara ஜக் 'குலதெய்வம்’மாக்கி[ 1956] ஹிந்தியில் அதையே சகஸ்ரநாமத்துக்குப்
பதிலாக பாலராஜ் சஹானியை, பண்டரிபாயுடன் நடிக்க வைத்து 1957
இல்’Bhabi’ என
வெளியிடடனர் AVM நிறுவனத்தினர்.
AVM இன் 'களத்தூர் கண்ணம்மா' [1960] Main Chap Rahungi’ ஆக 1962 இல் ஹிந்தியில் வெளியானது. ஜெமினியின்
பாத்திரத்தில் சுனில் தத்தும் சாவித்திரியின் வேடத்தில் மீனாகுமாரியும் சிறுவன்
கமலஹாசனிடத்தில் சிறுவன் பப்லுவும் பங்கேற்றார்கள். ஏவிஎம்
தயாரிப்பில் வெளியான மேலும் சில
தமிழ் - ஹிந்தி தழுவல் [Remake]படங்கள்
'மாமியார் மெச்சிய மருமகள்'[1959] [எஸ்.எஸ்.ஆர்.,எம்.என்.ராஜம்] -- Barkha[1960] [ஜெகதீப், நந்தா]
'அன்னை'[1960] [பானுமதி, ரங்காராவ்] –Laadla[1966] [நிருபராக,பால்றாஜ்சஹானி]
'குமுதம்'[எஸ்.எஸ்.ஆர்.,விஜயகுமாரி][1961] –Pooja Ke Phool[1964][தர்மேந்திரா,மாலாசின்ஹா] 'நானும் ஒரு பெண்'[1964] [எஸ்.எஸ்.ஆர்.,விஜயகுமாரி] --Main Bhi Ladki Hoon[1964] [தர்மேந்திரா,மீனாகுமாரி] - இரண்டிலும் ரங்காராவ் பங்கேற்றார். 'குழந்தையும் தெய்வமும்' [1963][ஜெய்ஷ்ங்கர், ஜமுனா] –Do Kalyan[1968] [பிஸ்வஜித், மாலா சின்ஹா] 'சர்வர் சுந்தரம்'[1964][நாகேஷ்,கே.ஆர்.விஜயா]—Main Sundar Hoon [1971] [மெஹ்முட், லீனா சந்தர்வர்கர்]
'அன்னை'[1960] [பானுமதி, ரங்காராவ்] –Laadla[1966] [நிருபராக,பால்றாஜ்சஹானி]
'குமுதம்'[எஸ்.எஸ்.ஆர்.,விஜயகுமாரி][1961] –Pooja Ke Phool[1964][தர்மேந்திரா,மாலாசின்ஹா] 'நானும் ஒரு பெண்'[1964] [எஸ்.எஸ்.ஆர்.,விஜயகுமாரி] --Main Bhi Ladki Hoon[1964] [தர்மேந்திரா,மீனாகுமாரி] - இரண்டிலும் ரங்காராவ் பங்கேற்றார். 'குழந்தையும் தெய்வமும்' [1963][ஜெய்ஷ்ங்கர், ஜமுனா] –Do Kalyan[1968] [பிஸ்வஜித், மாலா சின்ஹா] 'சர்வர் சுந்தரம்'[1964][நாகேஷ்,கே.ஆர்.விஜயா]—Main Sundar Hoon [1971] [மெஹ்முட், லீனா சந்தர்வர்கர்]
ஸ்ரீதரின் 'கல்யாணபரிசு'[1959] ராஜ்குமார், சிவாஜி, பத்மினி நடித்த 'எதிர்பாராதது' [ 1954] ராஜ்கபூர்,மீனாகுமாரி இணைவில்[Sharada] 'சாரதா' எனும் தலைப்பில் ஹிந்தியில் 1957 இல் வெளியானதுவைஜயந்திமாலா நடிப்பில் 'நஸ்ரானா' வாக 1961 இல் ஹிந்தியில் சக்கை போடு போட்ட்து.
அவரது 'நெஞ்சில் ஓர் ஆலயம்'[1961] ‘தில் ஏக் மந்திர்' ஆகி
1963இல் ராஜேந்திரகுமார், மீனாகுமாரி நடிப்பில் வடக்கிலும் கண்ணீர் வெள்ளம் பெருகச் செய்தது.
பானுமதி, என்.டி.ஆர்.
நடிப்பில் அவரது பரணி பிக்சர்ஸ் தயாரிப்பாக தெலுங்கில் இருந்து 'டப்'பாகி வந்த 'சண்டிராணி'அதே தலைப்பில், அது தமிழில் வெளியான அதே 1953 இல் மொழிமாறி ஹிந்திக்கும் சென்றது.
. 'கணவனே கண் கண்ட தெய்வம்' ஜெமினி, பத்மினியுடன் ஹிந்தி நடிகர்கள் பங்கேற்க சமகாலத் தயாரிப்பாக 'தேவதா'வாக தமிழில் வெளியான அதே 1955 இல் ஹிந்திக்கும் சென்றது. லலிதா தமிழில் ஏற்ற வில்லி வேடத்தில் ஹிந்தியில் வைஜயந்திமாலா பிரகாசித்தார் தெலுங்கு-தமிழ் டப்பிங் படமான 'ஜெயசிம்ஹன்'னும் [ 1955] சமகாலத் தயாரிப்பான 'அலாவுதீனும் அற்புத விளக்கும்'[1958] ஹிந்தியிலும் அதே ஆண்டுகளில் மொழி மாற்றம் பெற்று
வெளியாகின.
T.R.ராமச்சந்திரன், அஞ்சலிதேவி நடித்த 'அடுத்த வீட்டுப் பெண்’ [1960]'-Padosan [1968] ஆக ஹிந்தியில் உருமாறியது ரங்காராவ்,ரோஜாரமணி நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற AVM இன் 'பக்த பிரகலாதா'[1967 ] மொழிமாற்றம் பெற்று தமிழ், ஹிந்தி இரண்டிலும் அதே ஆண்டில் வெளியானது
T.R.ராமச்சந்திரன், அஞ்சலிதேவி நடித்த 'அடுத்த வீட்டுப் பெண்’ [1960]'-Padosan [1968] ஆக ஹிந்தியில் உருமாறியது ரங்காராவ்,ரோஜாரமணி நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற AVM இன் 'பக்த பிரகலாதா'[1967 ] மொழிமாற்றம் பெற்று தமிழ், ஹிந்தி இரண்டிலும் அதே ஆண்டில் வெளியானது
கன்னட-தமிழ் சமகாலத் தயாரிப்பான பந்துலுவின் 'எங்க குடும்பம் பெரிசு' கன்னடத்தில் இடம் பெற்றது போலவே 'ஸ்கூல் மாஸ்டர்' என்ற பெயரிலேயே ஹிந்தியிலும் தமிழில் வெளியான அதே 1958இலேயே மொழிமாற்றம் பெற்று வெளியானது
மொழி மாற்றம் பெற்று வெளியான மற்றும் சில படங்கள் -
MGR, அஞ்சலிதேவி நடித்த ‘ மர்மயோகி’ [1951] - Ek Tha Raja [1951]
ஸ்ரீராம்,, வைஜயந்திமாலா நடித்த 'மர்ம வீரன்' [1956] ‘Piyamilan’[1958]
சிவாஜி, பதமினி நடித்த 'ராஜா ராணி' [1956] - Aui Phirse
Bahar’[1960]
சிவாஜி, பத்மினி நடித்த 'உத்தம புத்திரன்'[1958] - Sitamagar[1958]
சிவாஜி, பத்மினி நடித்த 'உத்தம புத்திரன்'[1958] - Sitamagar[1958]
சிவாஜி, ஜமுனா நடித்த
'தங்கமலை ரகசியம்'[1957] - Suhag
[1958]
சிவாஜி, பதமினி நடித்த 'வீர பாண்டிய கட்டபொம்மன்''- ‘Amar Saheed’[1959]
சிவாஜி, சாவித்திரி நடித்த 'காத்தவராயன்' [1958] ‘Amar Prem’[1960]
ரஞ்சன், அஞ்சலிதேவி நடித்த 'நீலமலைத் திருடன்'[1968]-
‘Matuala’[1958]
MGR தயாரித்து நெறியாள்கை செய்து இரட்டை வேடமிட்டு நடித்த வெற்றிப் படைப்பான 'நாடோடி மன்னன்’ [1958] 1962 இல் Heme Bhe Jeene Do என ஹிந்தி ரசிகர்களை வெற்றி கொள்ளச் சென்றது
MGR தயாரித்து நெறியாள்கை செய்து இரட்டை வேடமிட்டு நடித்த வெற்றிப் படைப்பான 'நாடோடி மன்னன்’ [1958] 1962 இல் Heme Bhe Jeene Do என ஹிந்தி ரசிகர்களை வெற்றி கொள்ளச் சென்றது
~~~~********************~~~~