Saturday, 22 April 2017

Related image
சினிமா - 4BImage result for Bollywood movies banner images
ஹிந்தி – [Bollywood] - திரையுலகும்     கலைஞர்களும்
                               முந்நாளைய பம்பாயைக் களமாகக்  கொண்டதால் 'பாலிவுட்'[Bollywood]  என வழங்கப்படும் ,இந்தியாவில்  அதிகமாகத் தயாரிக்கப்படும் ஹிந்தித் திரைப்படங்களின் கேந்திர நகரம் மும்பாய், ,தமிழ் , தெலுங்கு திரைப்படங்களை போலவே ஹிந்திப் பேசும் படங்களும்   1931       இல் தான் 'ஆலம் ஆரா'வுடன் உதயமாயின.
Prithviraj Kapoor portrait 1929.jpg                          ஹிந்தித் திரையுலகின் முதல் தலைமுறை நடிகர்களுள் பிரபலமானவர் பிருத்வி ராஜ்கபூர். அவரது கலையுலக வாரிசுகள் அவரது பெயரைத் தக்க வைக்கக் காரணியாயினர். அவரது புதல்வர்களான ராஜ்கபூர், ஷம்மிகபுர், ஷஷிகபூரைத் தொடர்ந்து
Image result for actress devika rani imagesஅவர்களின் வாரிசுகளான ரன்தீர்கபூர் , ரிஷிகபூர், ராஜிவ்கபூர், சஞ்சனாகபூர் வழியில் நாலாவது  தலைமுறையைச் சேர்ந்த க்ரீஷ்மாகபூர் , கரீனா கபூர், ரன்பீர் கபூர் என கபூரின் சாம்ராஜ்யம் ஹிந்தித் திரையுலகில் பரந்து வியாபித்து இன்றுவரை                                                                புகழுடன் தொடர்கிறது.
Image result for actress noorjahan images30 களில் தேவிகாராணியும் நூர்ஜஹானும் சுரையாவும் சொந்தக் குரலில் பாடி நடித்த பிரபல நடிகைகள். அவர்களின் பாடல்களில் லயித்து நினைந்து பூரிக்கும் பழைய பாடல் பிரியர்கள் இன்றும் பலருளர்.நூடன், தனுஜா சகோதரிகளின் தாயாரான ஷோபனா சமத்தும் குறிப்பிடத்தக்க அந்நாளைய நடிகையருள் ஒருவர்.


அசோக்குமார்
Image result for images of old hindi cinema actors
பிருதிவிராஜ்கபூர் நடித்த 30 களிலேயே நடிக்க ஆரம்பித்து அக்காலத்து தேவிகாராணி, லீலா சிட்னிஸ் போன்ற முன்னணி நடிகையருடன் இணை சேர்ந்து நடித்து, ஹிந்தித் திரையுலகின் முதல் 'சூப்பர் ஸ்டார்' எனும் பெருமையைப் பெற்றவர் நடிகர் அசோக்குமார்.
Image result for images of old hindi cinema actress meenakumariImage result for actress devika rani imagesஅவர் இரட்டை வேடமேற்று  நடித்த 'கிஸ்மத்’[1943] முதன் முதலாக அதிக வசூலைக் குவித்த இந்தியப் படமாகப் பெயர் பெற்றது.50 களில் நளினி ஜெயவந் [Sangram-1950/ Samathi-1950]       மதுபாலா[Mahal-1949/Howra Bridge-1958]     மீனாகுமாரி[Ek hi Rasta]   போன்றோரும் 60 களில் நூடன்[Bandini-1963], நிருபராய்[Gumrah-1963] போன்ற நடிகையரும் அவருடன் சேர்ந்து நடித்து அவரது புகழுக்குத் துணை நின்றனர்.

60 களின் பின் காதல் நாயகனாக நடிப்பதைக் கைவிட்டு குணசித்திர வேடங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி 1997 வரை சுமார் 60 ஆண்டு காலம் சினிமாவைத் தனது உயிர் மூச்சாகச் சுவாசித்து வாழ்ந்தவர் அசோக்குமார். தமிழ் நடிகர் பாலாஜியின் நட்புக்காக அவரது
'அண்ணாவின் ஆசை'[1963]  திரைப்படத்தில் மட்டும் ஒரு கெளரவ வேடத்தில் தோன்றினார்.         13.10.1911இல் பிறந்த அவர் 10.12.2001 இ]ல் தமது 90 ஆவது வயதில் காலமானார்.

திலீப்குமார்
Image result for images of old hindi cinema actors1944 இல் திரையுலகில் நுழைந்து 50 களில் ஜனரஞ்சக நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் திலீப்குமார். ஹிந்தித் திரையுலக MGR சிவாஜி, நாகேஸ்வரராவ் அனைவரும் [ஒரு கால கட்டத்தில்] திலீப் தான். காதல், வீரம், சோகம் முதலான நவரசங்களிலும் சோபிக்கும் நாயகனாக ரசிகர்களால் அவர் அங்கீகரிக்கப்பட்டார். வசூல் நாயகனாக தயாரிப்பாளர்கள் அவரைத்தான் கொண்டாடினர்.
Image result for images of old hindi cinema actress nimmiRelated imageகாதல் நாயகனாக நிம்மியுடன் – Deedar[1951], Daag[1952], Ann[1952], Amar[1954],Uran Kathola[1955] நர்கீஸுடன் – Andaz[1949], Babul[1950]வைஜயந்திமாலாவுடன் – Naya Daur[1957], Mathumathi[1958], Paigam[1959], Ganga Jamna[1961], Leader[1964] ,Sunghursh[1968] 'அனார்கலி' மதுபாலாவுடன் – Mughul E Azam[1960]'பார்வதிசுசித்ராசென்னின் தேவதாஸாக Devdas[1955]    சாகச நாயகன் 'மலைக்கள்ளன்'ஆக மீனாகுமாரியுடன் – Azaad[1955]  மற்றும் Kohinoor[1960] வஹீதா ரஹ்மானுடன்      'எங்க வீட்டுப் பிள்ளை’  MGR ஆக –Ram Aur Shyam[1967] அதே வஹீதாவுடன் 'ஆலயமணி சிவாஜியாக –Aathmi[1968]  என  50, 60 களில் அவர் நடித்த அனைத்துப் படங்களும வெற்றியைக் குவித்தன.
Image result for images of old hindi cinema actors 70களில் சரிவைச் சந்திக்க ஆரம்பித்த திலீப்குமார் சுதாரித்துக் கொண்டு 80 களில் குணசித்திர வேடங்களில் முனைப்புக் காட்டி மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். 1944 இல் ஆரம்பித்த அவரது கலைப் பயணம் 1998  வரை சுமார்  54 ஆண்டுகள் தொடர்ந்தது.
இந்தியத் திரையுலகில் மிக அதிகளவு விருதுகளை பெற்று 'கின்னஸ்' சாதனை புரிந்தவர் திலீப்குமார். ஹிந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் பெற்று வந்த படங்களுள், 'ஆன்'[1952 ],  'வானரதம்'[1956],  ‘ பாட்டாளியின் சபதம்'[1957], 'அக்பர்'[1961]    முதலியன திலீப்குமார் நாயகனாக நடித்தவை.
Image result for saira banu imagesசொந்த வாழ்க்கையில் ஒரு காதல் மன்னனாகத் திகழ்ந்த திலீப்குமாரின் அபிமானத்துக்குரியவர்களாக  Shaheed-(1948) உட்படச் சில படங்களில் திலீப்போடு ஆரம்ப காலத்தில் ஜோடி சேர்ந்து நடித்தவரான  காமினி கௌசல், மதுபாலா, வைஜயந்திமாலா போன்ற நடிகையரின் பெயர்கள் காலத்துக்குக் காலம் கிசுகிசுக்கப் பட்டன. மதுபாலாவுடனான அவரது காதல் முறிவடைய மதம் மூலகாரணமானது.  ஆயினும் அவர் தனது 46 ஆவது வயதில் தன்னிலும் 22   வயது இளையவரான நடிகை சைராபானுவை 1966  இல் மணம் புரிந்து கொண்டார். ராஜ்கபூருக்கு இரண்டு ஆண்டுகள் முன்பாக 11.12.1922 இல் பிறந்த திலீப்குமாருக்கு இப்போது  வயது 94.


ராஜ்கபூர்
Image result for images of old hindi cinema actorsImage result for images of old hindi cinema actors14 .12 .1924 இல் பிறந்த ராஜ்கபூர்  1947  இல் தனது 23 ஆவது வயதில் மதுபாலாவுடன் ' Neel Kamal’ நாயகனாக திரையுலகில் பிரவேசித்தார். அடுத்த ஆண்டிலேயே Aag’[1948] மூலம் தயாரிப்பாளராகவும் நெறியாளராகவும் மாறிவிடடார்.                               Aag ஐத் தொடர்ந்து அடுத்த  எட்டு ஆண்டுகளில் அதில் கதாநாயகியாக நடித்த நர்கீஸுடன் 16 படங்களில் ஜோடி சேர்ந்தார். அவற்றுள் Barsad[1949], Awara[1951],  Aah[1953], Shree 420[1955], Jagte Raho[1956]     எனும் ஆறு படங்களும் அவரது சொந்தத் தயாரிப்புகள். மற்றும் AVM  தயாரிப்பானChori Chori[1955] யும் திலீப்குமாருடன் சேர்ந்து நடித்த மெஹ் பூப்கானின் Andaz [1949] ஸும் கே.ஏ.அப்பாஸின் Anhonee[1952] யும் வெற்றி பெற்ற ஏனைய படங்கள்.
Image result for Jis Desh Mein Ganga Behti Hai Movie images அவர் தயாரிப்பில் உருவாகி  நாட்டியப் பேரொளி பத்மினியுடன் அவர் இணை சேர்ந்த Jis Desh Men Ganga Behti Hai [1960] யும்   அவரது தயாரிப்பு நெறியாள்கையில் அழகுத் தாரகை வைஜயந்திமாலாவுடன் ஜோடி சேர்ந்த[ 'சங்கம்] Sangam [1964] திரைப்படமும் பல''Filmfare விருதுகளை பெற்று அவரது திlரையுலக வாழ்வில் பிரதான மைல் கற்களாயின. நூடனுடன்சேர்ந்து நடித்த  Anari-[1959], Chhalia-[1960]   படங்கள் இரண்டும் வெற்றிபெற்று விருதுகளும் வென்றன.

Image result for Anarkali 1953
Image result for Sangam Movie images1970இல் அவர் தயாரித்து Simi Garewal லுடன் நடித்த Mere Nam Joker  வெற்றி பெறவில்லை.  1971இல்  தந்தையார் பிருதிவிராஜ்கபூர், மகன் ரன்பிர்கபூருடன் தானும் நடித்த குடும்பப் படமானKal Aaj Aur Kal லும் தேறவில்லை. மகன்  ரிஷி கபூருடன் டிம்பிள் கபாடியா புதுமுகமாக அறிமுகமான Bobby[1973]  'பாபிமட்டும் விருதுகள் வென்று அவர்பெயரை மீண்டும் துலங்க வைத்தது.
இந்திய சார்லி சாப்ளின் ஆக அவரது அப்பாவித்தனமானநல்லவன்  பாத்திர இமேஜை வரித்துக் கொண்ட ராஜ்கபூரின் நடிப்புப் பாணி அலுத்துப் போய் 70 களில் வரவேற்பிழந்து போக [அதே பாணியைக்கொஞ்சம் கிராமிய மணம் கலந்து கொடுத்து  தமிழில் பாக்யராஜ் வெற்றி பெற்றது அதே 70 களில் தான்!]    நடிப்பைக் குறைத்துக் கொண்டு தயாரிப்புப் பணியில் முழு மூச்சாக ராஜ்கபூர் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளலானார். அவரது அனுசரணையுடன் மகன்மார் ரன்தீர் கபூர், ரிஷி கபூர், ராஜிவ் கபூர் மூவரும் படிப்படியாக ஹிந்தித் திரையுலகில் களமிறங்கினர்.
Image result for images of old hindi cinema actress dimple kapadiaImage result for images of old hindi cinema actress zeenath aman

 பத்மினி, வைஜயந்திமாலா, டிம்பிள் கபாடியா போன்ற நடிகைகளின் இளமை அழகை வணிகமாக்கிக் கண்ட வெற்றிச் சூத்திரத்தை அவர் சிக்கெனைப் பிடித்துக் கொண்டார். பின்னைய ஆண்டுகளில் ஒரு தயாரிப்பாளராக கதாநாயக நடிகையரின் கவர்ச்சியை மூலதனமாக்கி அவர் தயாரித்து நெறியாள்கை செய்த சில படங்கள்   [Satyam Shivam Sundadam –1978–ஸீனத்அம்மன்   /Prem Rog-1982- பத்மினி கோலாப் புரி/   Ram Teri Ganga Maili-1985- மந்தாகினி]    பெரும் வெற்றிப்படங்களாக விருதுகளும் பெற்று வசூலிலும் சாதனை புரிந்தமை விந்தைதான்.
Image result for images of old hindi cinema actors            50-60 களில் மீனாகுமாரி, மாலா சின்ஹா, வஹீதா ரஹ்மான், சயிராபானு,ஹேமமாலினி, ராஜஸ்ரீ, ஷகிலா, சாதனா, நந்தா எனப் பிரபலமான நாயகியாருடன் ஒருசில படங்களில் அவர் சேர்ந்து நடித்த போதிலும் அவை ஏனோ வெற்றி பெறவில்லை. ராஜ்கபூரின் படங்களுள்  Aah   மட்டும் 'அவன்' என்ற தலைப்பில் 'டப்'பாகி தமிழில் வெளிவந்தது. ஷங்கர்-ஜெய்கிஷனின் இசையில் உருவான இனிய பாடல்களின் களஞ்சியமாக அப்படம் திகழ்ந்த போதிலும் ஹிந்தியிலும் சரி தமிழிலும் சரி அது ஏனோ பெரிய வரவேற்பைப் பெறவில்லை!
           ராஜ்கபூரின் தயாரிப்புகள் வெற்றிபெற இசையமைப்பாளர்கள் ஷங்கர்-ஜெய்கிஷனின் இசையும் திரைப் பாடல்களில் அவருக்காகப் பின்னணி பாடிய முகேஷின் குரலும் உறுதுணையாக அமைந்தன.  1976 இல் முகேஷின் மறைவின் பின் மன்னாடே அவருக்காகப்  பின்னணி பாடினார்.
ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றிபெற்ற ராஜ்கபூருக்கு பத்மபூஷன் விருதையும் தாதா சாஹேப் பால்கே விருதையும் பாரத அரசு வழங்கி கெளரவித்தது. 1988 இல் தமது 64   ஆவது வயதில் அவர் காலமானார்.

தேவ் ஆனந்த்

Image result for images of old hindi cinemaactor dev anandஅசோக்குமார், திலீப்குமார். ராஜ்கபூர் எனும் பொலிவூட் கலையுலக மூவேந்தர்களும் கோலோச்சிக் கொண்டிருந்த 50 களில் அவர்களுடன் போட்டியிட்டு நிலைத்து நின்றவர்தான் தேவ் ஆனந்த்.
ராஜ்கபூருக்கும்  ஆனந்துக்குமிடையில் பல ஒற்றுமை வேற்றுமைகளுண்டு.   இருவரும் சம வயதினர்ராஜ்கபூர் மதுபாலாவுடன் நாயகனாக நடித்து 1947இல் வெளியான Neel  Kamal    ராஜ்கபூருக்கு விடிவேற்படுத்தியது. தேவ் ஆனந்த்   காமினி கௌசலுடன் நாயகனாக நடித்து   1948இல் வெளியான ziddதேவ் ஆனந்துக்கு திரையுலக வாசலைத் திறந்து வைத்தது.
Image result for images of old hindi cinema actress surayaஇருவருமே தயாரிப்பாளர்களாகவும் நெறியாளர்களாகவும் தம்மைத் தகவமைத்துக் கொண்டவர்கள். ராஜ்கபூர் 1948  இல் [Aag] முதல் படத்தைத் தயாரித்தார். தேவ் ஆனந்தின் முதற் தயாரிப்பு [Afsaar] 1950 இல்,ராஜ் நர்கீஸுடன் இணைந்து தொடர் வெற்றிகளைத் தனதாக்கிய 50 களின் ஆரம்பத்தில் தேவ் பிரபலமான பாடக நடிகை சுரையாவின் துணையுடன் வலம் வந்தார்.
Image result for images of old hindi cinema actorsதன்னுடன் 16 படங்களில் இணை சேர்ந்து  நடித்த நர்கீஸுடனான ராஜின் காதல் வெற்றிபெறவில்லை. அவ்வாறே தேவானந்தின் சுரையவுடனான காதலும் மத வேறுபாடடால்  முறிவடைந்த்தது. அனுதாபம் மூலம் காதலைப் பெறும் அப்பாவியான கோமாளி நாயகனாக சார்லி சாப்ளினின்  பிம்பத்தை ராஜ் அணிந்து கொள்ளஆங்கில நடிகர் Gregory Peck ஐ ஆதர்சமாகக் கொண்டு சில Mannerism களுடன் பெண்களைக் கவரும் காதல் மன்னனாக தேவ் தன்னை மாற்றிக் கொண்டார்.  Film Fare  இன் சிறந்த நடிகருக்கான விருதை  1955இல்  நளினி ஜெயவந்துடன் நடித்த  Munninji படத்துக்கும்  1958இல் மதுபாலாவிடன் நடித்த Kala Pani 
Image result for images of old hindi cinema actress waheeda rehmanபடத்துக்கும் தேவானந்த் வென்றார்.  1959 இல்  நூடன்னுடன் நடித்த Anari   க்காக ராஜ்கபூர் வென்றார்.  1960 இல் வஹீதாவுடன் தேவானந்த் நடித்த Kala Bazar  தெரிவான போதிலும் ராஜ் பத்மினியுடன் நடித்த Jis Desh Men Ganga Behti Hai   ராஜுக்கு விருதைப் பெற்றுக் கொடுத்தது.
70 களில் ராஜ்  நாயகனாக நடிப்பதில் இருந்து கெளரவமாக விலகிக் கொள்ளஎன்றும் இளமை மாறாத மார்க்கண்டேயனாக தனது 60 வயதிலும் கூட தேவானந்த்  நாயகனாக நடித்துக் கொண்டிருந்தார்.  70-80களில் அறிமுகமாகி பிரபலமான ஹேமமாலினி, ஸீனத் அமன், டினா முனிம், மும்தாஜ், Sharmila Tagoor, Yogeeta Baali, Raakhee, Parveen Babi, Pathmini Kolaapuri, Zarina Wahab, என அவருடன் 70 களின் பின் இணைந்து நடித்த நடிகைகளின் பட்டியல் நீளமானது.
Image result for images of old hindi cinema actress kalpana kartik1964இல் வைஜயந்திமாலாவுடன் ராஜ் நடித்த Sangam     அவரைச் சிறந்த நடிகராகத் தெரிய வைக்க   1965 இல் வஹீதாவுடன் தேவ் நடித்த Guide   அவருக்கு கைகொடுத்தான். 50களில் [பின்னர் அவரது இல்லறத துணைவியான] கல்பனா கார்த்திக்குடனும் மதுபாலா, வஹீதா ரஹ்மானுடனும் அதிகளவு படங்களில் தேவானந்த் நடித்தார்.
ஆரம்பத்தில்      48-49இல் மதுபாலாவுடன் நடித்த ராஜ் பின்னர்1959 இல் ஒரு படத்தில் மட்டும் [ Do Ustad இல்] சேர்ந்து நடித்தார்.  வஹீதாவுடன் ஓரிரு படங்களில் மட்டுமே ராஜ் இணை சேர்ந்தார்.
Image result for images of old hindi cinema actors
நூடன், வைஜயந்திமாலா, மாலாசின்ஹா,சாதனா, நந்தா, சயிராபானு போன்ற நடிகையருடன் இருவரும் சமமாகவே ஜோடி சேர்ந்துள்ளனர். மீனாகுமாரி, கீதாபாலி, நிம்மி போன்ற நடிகையருடன் ராஜை விட தேவ் கூடின படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். தேவுடன் நடித்த நளினி ஜெயவந், காமினி கௌஷல், ஆஷா பரேக் போன்றோருடன் ராஜ்கபூர் நடித்ததாகத் தெரியவில்லை.
ஆரம்ப காலத்தில் மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்தும், குடும்பப் பின்னணியைக் களமாகக் கொண்ட சமூகக் கதைகளை ராஜ்கபூர் படமாக்கஆவலைத் தூண்டும் துப்பறியும் கதைகளையும் மர்மக் கதைகளையும் தேவானந்த் தனது படங்களின் கருப் பொருளாக்கினார். 
ராஜ்கபூருக்கு அவரது தந்தையாரான பிருதிவிராஜ் கபூருடன் தம்பிமார் ஷம்மிகபூர், சஷிகபூர், மகன்களான ரன்தீர்கபூர், ரிஷிகபூர் எனப் பலரும் நடிப்பு நெறியாள்கை என அவரது தயாரிப்புகளில் உறுதுணையாக நின்று உதவினார். தேவானத்துக்கு அவரது அண்ணன் சேட்டன் ஆனந்த்  தம்பி விஜய் ஆனந்த் நண்பர் குரு தத் எனப் பலரும் பக்கத் துணையாக நின்று அவரது படங்களை இயக்கி வெற்றி பெற உழைத்தனர்.
Related imageஷங்கர்-ஜெய்கிஷனின்   இசை ராஜ்கபூரின் படங்களை செழுமைப் படுத்தியதென்றால் R.D.பர்மன்  மற்றும் மகன் S.D.பர்மனின் இசை தேவானந்தின் படங்களுக்கு குளுமையூட்டியது. முகேஷின் பின்னணிக் குரல் ராஜுக்கு ஆதாரமாக   நண்பர் கிஷோர்குமாரின் குரல் தேவுக்கு உந்து சக்தியானது. ஏனையவர்களுடனல்லாது இவர்கள் இருவருக்கும் இடையில் மறைமுகமான ஒரு போட்டி தொடர்ந்து நிலவியமையை உணர முடிகிறது.

ராஜ்கபூரின் திரைவாழ் விலும் 
1988 இல் அவரது மறைவுடன் திரை விழ தேவானந்தின் பயணம் மேலும் 23 ஆண்டுகள் வெற்றிகரமாகத் தொடர்ந்தது. தனது 65  ஆண்டுகால திரையுலக வரலாற்றில்  19 படங்களை இயக்கியும்  35 படங்களைத் தயாரித்தும்  இரு ஆங்கிலப் படங்கள் உட்பட 114 படங்களில் நடித்தும் சாதனை புரிந்த தேவானந்த் மிக அதிகமான[106] ஹிந்திப் படங்களில் கதாநாயகனாக  நடித்தவரான ராஜேஸ் கன்னாவுக்கு  அடுத்தபடியாக   92 படங்களில் நாயகனாக நடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்த  பெருமைக்குரியவராகிறார்.  
2001,2002 ஆம் ஆண்டுகளில் முறையே பத்மபூஷன் விருதையும் தாதாசாஹிப் பால்கே விருதையும்  பாரத  அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.
 26.09.1923 இல் பிறந்த தேவானந்த்       03.12.2011  இல் தமது   88ஆவது வயதில் காலமானார். அவரது சுயசரிதையானது   Romancing With Life      எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளதுThe Great Showman     என்பது ராஜ்கபூரின் வரலாற்றுப் பதிவு.
           


                                  Image result for Bollywood movies banner images
அசோக்குமார், திலீப்குமார், ராஜ்கபூர், தேவானந்தை விட ஆரம்ப காலத்தில் நடித்த மற்றும் சில[ கதாநாயக ] நடிகர்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

பிருதிவிராஜ் கபூர்
Image result for old hindi actors photos with namesஹிந்தித் திரையுலகின் பிதாமகர் எனப் போற்றப் படும் பிருதிவிராஜ் கபூரின் திரைப் பிரவேசம் முதற் படமான 'ஆலம் ஆரா' வுடன்  1931இல் ஆரம்பமானது. மேடைக் கலைஞராக நடிக்க ஆரம்பித்த அவர் இரு ஊடகங்களிலும் சமமாகப் பயணித்தவர்.
புராண, சரித்திரக் கதாபாத்திரங்களில் பிcகாசித்த அவரின் திரை வாழ்வு 1971வரை இடைவிடாது தொடர்ந்தது. மகன் ராஜ்கபூரின் தயாரிப்பில்  Awaraa[1951] இலும் மகன்மார் பேரன்மாருடன் கடைசியாக Kal Aaj Aur Kai [1971]இலும் நடித்த அவர் அக்பராகத் தோன்றிய Moghal E Azam [1960]  தமிழிலும் வெளியான குறிப்பிடத்தக்க ஒரு படம். அவர் நடித்து தமிழில் 'டப்'பாகி வந்த மற்றுமொரு படம்-Anand Math [1952]
நர்கீஸுடன் பால் ராஜ்  சஹானி, பாரத் பூஷன் நடித்த இந்திய-சோவியத் கூட்டுத் தயாரிப்பான    Pardesi [1957] இல் பிருதிவிராஜும் பங்கேற்றார். Thurka Khote யுடன் ராணாவாக அவர் நடித்த Rajrani Meera[1933] படமும் நினைவு கூரப்படுவது. அவர்  பத்மபூஷன் விருது  1951 லும்  தாதா சாஹேப் பால்கே  விருது  1971லும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
பாரத்பூஷன்
Image result for Baiju Bawra1941 இல் இருந்து சுமார் ஐம்பது ஆண்டு காலம் திரையுலகில் நின்று பிடித்த பாரத் பூஷன் ஒரு எழுத்தாளரும் கூட. சரித்திர, புராணப்பட நடிகராக, இசைக் கலைஞராக பல படங்களில் அவரைக் காண முடிந்தது. மீனாகுமாரியுடன் Baiju Bawra-[1952],   சுரையாவுடன் Mirza -[1954],  நிம்மியுடன் Basant bahar[1956],  மதுபாலாவுடன் Barsat Ki Raat-[1960] என அவர் நடித்த படங்கள் குறிப்பிடத் தக்கவை.
பால் ராஜ் சஹானி
Related image

இயற்கையான நடிப்பை வெளிப்படுத்திய மற்றொரு நடிகரான பால் ராஜ் சஹானியும் நடிகராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் இருந்தவர்.  . நாடக மேடையில் இருந்து 1946 இல் திரைக்கு வந்த அவர்  1973வரை  நர்கிஸ், மீனாகுமாரி, வைஜயந்திமாலா, பத்மினி, நூடன் எனப் பிரபலமான நடிகையருடன் இணைந்து நடித்துள்ளார். .  அவர் நடித்தனவற்றுள்  சாந்தாராமின் Do Bigha Zameen –[1953],    ஏவிஎம்மின் Bhabbi-[1957]   மற்றும் Seema [1955], . பிமல்ராயின் Kabuliwala-1961], Garam Hawa – [1973]   என்பன குறிப்பிடத் தக்கவை.

Image result for Motilalமோதிலால்

  1934 இல் ஹிந்தித் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான மோதிலால் 1965 வரையான   31 ஆண்டுகளில் வில்லனுடபடப் பல்வேறு வகையான குணசித்திர பாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர். பிமல்ராயின் தேவதாஸும்Devadas -[1955],  Parakh-[1960]  கும்    சிறந்த துணை நடிகருக்கான    விருதுகளை பெற்றுக் கொடுத்தன. பின்னைய காலத்தில்  ஜெமினியின் Mr.Sampath -1952], Paigham-[1959]  ராஜ்கபூரின் Jakte Raho –[1956] மற்றும் Anari –[1959], Leader –[1964] போன்ற படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
அவரது அபிமானத்துக்குரிய நதீராவுடனும் பின்னர் நூடனின் தாயாரான சோபனா சமத்துடனும் இல்வாழ்வைப் பகிர்ந்து கொண்டு ஒரு கனவானைப் போல வாழ்ந்த   மோதிலாலின் வீழ்ச்சிக்கு சூதாட்டத்திலும் குதிரைப் பந்தயத்திலும் அவருக்கிருந்த ஈடுபாடு பிரதான காரணியாயிற்று.  1965 இல் தனது   54வது வயதில் ஏதும்  இல்லாத ஓட்டாண்டியாக அவர் உயிர் பிரிந்தது.

சந்திரமோகன்
Image result for old hindi actors photos with names
சஹானியைப் போலவே     1934 இல் சாந்தாராமின் கன்னிப்  படைப்பான Amrit Manthan      மூலம் ஒரு வில்லனாகத் திரையுலகில் நுழைந்த சந்திரமோகன் கம்பிரமான அவரது குரலுக்கும் இலாகவமான அவரது வசன வெளிப்பாட்டுக்குமென நினைவுகூரப்படுபவர்.
பிருதிவிராஜ்கபூர், பாரத் பூஷன் போல இவரும் அக்காலச் சரித்திர படங்களில் சாதனை படைத்தவர். பதினான்கே ஆண்டுகளில் அவரது திரை வாழ்வு அஸ்தமிக்க அவரது குடியும் சூதாட்ட நாட்டமும் வழிகோலின.  44 வயதில்  மோதிலாலைப் போலவே சந்திரமோகனும் ஏதுமில்லா ஏழையாக இன்னுயிரைத் துறந்தார்.
K.L.சைகால்
Image result for Devdas 1936பாடக நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த  30-40களில் ஹிந்தித் திரையுலக முதல் சூப்பர் ஸ்டாராக கருதப் பட்டவர் சைகால். 1932-1947 காலப்பகுதியில் ஒரு தமிழ்ப்படம் உட்பட 28 ஹிந்திப் படங்களும்  07 வங்காள படங்களுமென மொத்தம் 36 படங்களில் பாடி நடித்தவர் சைகால். அவரை நினைவுகூர வைக்கும் படங்களில் முதன்மையானது 'தேவதாஸ்'[1936] [அந்த தேவதாஸில் தாசி சந்திரமதி பாத்திரத்தில் நடித்தவர் தமிழ் நடிகை T.R. ராஜகுமாரி]
தனது  20 வது வயது இளமைப் பருவத்தில் திரையில்  அவரைக்கண்டு மானஸீகக் காதல் கொண்டாராம் பாடகி லதா மங்கேஷ்க்கார்! அவரை ஆதர்சமாகக் கொண்டு அவரைப் போலவே ஆரம்பத்தில் பாடியவர்தான் பிரபல பாடகர் முகேஷும். தேவதாஸை திரையில் வாழ்ந்து காட்டியவர் அவரைப் போலவே குடியைத் தஞ்சமடைந்து   42 வயதிலேயே மடிய நேரிட்டது விதியின் விளையாட்டா?
குருதத்
தேவ் ஆனந்துடன் சேர்ந்து சமகாலத்தில்   1944 இல் ஹிந்தித்   திரையுலகில் நுழைந்து ஒரு நடன இயக்குனராக, நடிகராக, நெறியாளராகப் படிப்படியாக உயர்ந்து பின்னர் ஒரு தயாரிப்பாளராகவும் மாறியவர் குருதத்.
Image result for old hindi actors photos with namesகீதாபாலியுடன் Baaz[1950]      ஷியாமாவுடன் Arr Paar[1954]  மதுபாலாவுடன் Mr. & Mrs.55-[1955]  வஹீதாவுடன் Pyassa-[1957]12 O’Clock –[1958],  Kagaaz Ke Phool –[1959], chaudhvin Ka Chand –[1960]மீனாகுமாரியுடன் Sahib Bibi Aur Ghulam –[1962] எனப் பல வெற்றிகரமான திரைப் படங்களில் நடித்தும் கூடவே தயாரித்து நெறிப்படுத்தியும்   50 களில் பிரபலமான ஒருவராகப் பிரகாசித்த குருதத்துக்கு உந்துசக்தியாக வஹிதாவின் மீதான ஈர்ப்பு இருந்து வந்ததெனக் கூறலாம்.
பின்னணிப் பாடகி கீதா தத்தை மண முடித்த அவர் குடியைத் தஞ்சம் அடைந்ததால் 40  வயதை எட்டு முன்னரே  1964 இல் சாவைச் சந்திக்க நேரிட்டது அவலமே. அதுவரை வெளியான சிறந்த நூறு படங்களுள்  ஒன்றாக அவரது Pyassa  வும் Time சஞ்சிகையினால் தெரிவு செய்யப் பட்டுள்ளது.


Image result for old hindi actors photos with namesகிஷோர் குமார்
பிரபல நடிகர் அசோக்குமாரின் இளைய சகோதரரான கிஷோர்குமார் ஒரு நடிகர்-பின்னணிப் பாடகர்-பாடலாசிரியர்-இசையமைப்பாளர்-திரைக்கதாசிரியர்-நெறியாளர்-தயாரிப்பாளர் என திரைத் துறையில் பன்முகத் திறமைகளும் கொண்ட ஆளுமை கொண்டவர். நடிகர் என்பதை விட பின்னணிப் பாடகராக அவரது பங்களிப்பு அபரிமிதமானது. திலீப் குமாரில் இருந்து அமிதாப் பச்சன் வரை முன்னணிக் கதாநாயகர்கள் பலருக்கும் பின்னணியில் அவர் குரல் பொருந்தியது. சிறந்த பின்னணிப் பாடகருக்கான    விருதை அதிக தடவைகள் [8 முறை] வென்றவர் கிஷோர்.
நடிப்பைப் பொறுத்த மட்டில் 1948 லேயே காலடி வைத்தவர்,    1951இல் நாயகனாகி விட்டார். நடிப்பில் மிகப்பெரிய ஈடுபாடு அவருக்கு இருக்கவில்லை. நகைச்சுவை நாயகனாகவே வலம் வந்தவர்
Image result for kishor kumar imagesநடித்தனவற்றுள் அண்ணன் அசோக்குமாருடன் அவரது தம்பியாக நிம்மியுடன் ஜோடி சேர்ந்து நடித்த Bhai Bhai[1956],   வைஜயந்திமாலாவுடன் நடித்த New Delhi-[1957], Aasha-[1957]சகோதரர்கள் மூவரும் [அசோக்குமார், அனுப்குமார், கிஷோர்குமார்] பின்னர் மனைவியான மதுபாலாவும் சேர்ந்து நடித்த குடும்பப் படமான Chalti ka Nam Gaadi-[1958]  மற்றும் மதுபாலாவுடன் இணைந்து நடித்த Jhumroo-[1961], Half Ticket-[1962]சுனில் தத்துடன்  சேர்ந்து கலக்கிய ['அடுத்த விட்டுப் பெண்'ணின் ஹிந்தி வடிவமான] Padosan-[1968]   பாடல், இசை, இயக்கம், தயாரிப்புடன் மகன் அமித் குமாரும் நடித்த Door Gankan Ki Chhaon  –[1964]  போன்றன குறிப்பிடத் தக்கவை. அவரது பன்முகத் திறமைகளையும்  அவர் வெளிப்படுத்தி அசோக்குமாரும் நடித்து வெற்றி பெற்ற படம் –Door Ka Rahi-[1971]

 
சொந்தவாழ்க்கையில் வினோதமான பழக்க வழக்கங்களைக் கொண்ட ஒரு புரியாத புதிராக விளங்கிய கிஷோர் நால்வரைத் திருமாணம் செய்து கொண்டார்..முன்னணி  நடிகை     மதுபாலாவை  1960இலும்  அழகுத் தாரகை லீனா சந்தர்வர்க்கரை  1980இலும் இடையில்   1976இல் நடிகை யோகித்தாபாலியையும்  வங்காள பாடக நடிகையான ரூமாவை  1950இலும்   மணமுடித்தார்.
  9 மொழிகளில் பாடியவர்10 படங்களைத் தயாரித்தவர்,   06 படங்களை இயக்கியவர்03 படங்களுக்குத் திரைக்கதை எழுதியவர்05 படங்களுக்கு இசையமைத்தவர் எனப் பல்வேறு துறைகளிலும் கரைகண்ட கிஷோர் 04.08.1929  இல் பிறந்தவர்.  தமது  58 ஆவது வயதில் 1987   இல் காலமானார்.
ஷம்மி கபூர்
Image result for shammikapoor imagesராஜ்கபூரின் .சகோதரரான ஷம்மிகபூர்  1948 இலேயே நடிக்க ஆரம்பித்தவர். 1953 இல்            நூடனுடன் நடித்த 'லைலா மஜ்னு' உட்பட 50 களின் ஆரம்பத்தில் பிரபலமாக விளங்கிய சுரையா, மீனாகுமாரி, மதுபாலா, நளினி ஜெயாவந், ஷியாமா போன்ற நடிகையருடன் அவர் சேர்ந்து நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை.  1957இல்  Ameeta  வுடன் இணைந்து நடித்த Tumsa Nehin Dekha  தான் வெற்றி பெற்று அவரது திரை வாழ் வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. உல்லாசமான ஒரு விளையாட்டுப் பிள்ளையாக, கன்னியர் மனம் கவ்ரும் காதல் மன்னனாக அவர் புனைந்து  கொண்ட வேடம் அவருக்கு கச்சிதமாகப் பொருந்தியது.  
1957இன் பின் அவர் காட்டில் அடை மழைதான். ஆஷா பரேக்குடன் Dil Deka Dekho-[1959], Teesri Manzil-[1966], மாலா சிம்ஹாவுடன் Ujala –[1959],  Dil Tera Diwana-[1962], ஷர்மிளா டாகூருடன்] Kashmir Ki Kali –[1964],  An Evening in Paris-[1967]வைஜயந்திமாலாவுடன் College Girl –[1960], Prince-[1969], சாயிரா பானுவுடன் Junglee-[1961], Bluff Master-[1963], கல்பனாவுடன் Professor-[1962]ராஜஸ்ரீயுடன் Janwar-[1965], Brahmachaari-[1968]ஷகிலாவுடன் China Town –[1962]சாதனாவுடன் Sachaai-[1969], பத்மினியுடன்Singapore-[1960], சரோஜாதேவியுடன் Pyaar Kiya To Darna Kya –[1963], என முன்னணி நடிகையர் பலருடனும் இணைந்து நடித்த படங்கள் வெற்றிப் படிக்கட்டுகளாக அமைய 60 களில் அவர் கொடிதான் பறந்தது.
Image result for shammikapoor images
ஒரு Play Boy  ஆக ஹிந்தித் திரைவானின் Elvis Presley ஆக  வலம் வந்த அவர் 79 வயதில் 2011 இல் அவர் இறக்கும் வரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஒரு நடிகராகக்  காலூன்றி நின்றவர். நடிகை கீதாபாலியை மணமுடித்து இல்லறத்தை இனிதே நடத்திய ஒரு நல்ல  நடிகர் ஷம்மிகபூர்.

சுனில் தத்
Image result for old hindi actors photos with names
முன்னணி நடிகை நர்கீஸின் மகனாக  Mother India-[1957]  இல் அறிமுகமான சுனில் தத் பின்னர் அவ்ரையே மணம் புரிந்து கொண்டார்.  நடிக்க வரு முன் ரேடியோ சிலோன்[Radio Ceylon] ஹிந்தி ஒலிபரப்பில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய சிறப்பு அவருக்குண்டு.           நூடனுடன் அவர் நடித்த Khandan-[1965], Milan-[1965]  சாதனாவுடன்நடித்த Sanya-[1966] போன்ற படங்கள் அவரைச் சிறந்த நடிகராக இனம் காட்டின. 1964 இல் வெளிவந்த அவ்ரது பரிசோதனைத் திரைப்படம் Yaadein.  அப்படத்தில் வேறெந்த நடிகர்களுமின்றித் தாமொருவரே [  Soliloquy பாணியில்] முழுத்திரைப்படத்திலும்  நடித்து ஒரு சாதனை நிகழ்த்தினார். அவரைப் பின்பற்றி அரசியலில் ஈடுபாடு கொண்ட காரணத்தால் அவரது மகனான சஞ்சய் தத் சிறை புகவும் நேரிட்டது.
ராஜேந்திரகுமார்
Related image1949 இல் Patanga  இல் ஒரு சிறிய வேடத்தில் நடித்த ராஜ்குமாருக்கு  1955 இல்  கீதாபாலியுடன் நடித்த  Vachaa  மூலம்தான் நாயகனாகும் வாய்ப்புக் கிட்டியது.பின்னர் 1957  இல் வெளியான  Mother Indiya   அவரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. 1959 இல் மாலா சின்ஹாவுடன் நடித்த Dhool Ka Phool   அவரை ஒரு வெற்றிப்பட நாயகனாக்கி விட்டது. இரட்டைக் கதாநாயகர்களில் ஒருவராகப் பெரும்பாலான படங்களில் பங்கேற்ற போதிலும் 60 களில் அவர் நடித்த படங்கள் பலவும் வெள்ளிவிழாக் கொண்டாடின.                  
Image result for rajendrakumar imagesமீனாகுமாரியுடன் Dil Ek Mandir-1963  சாதனாவுடன் Mere Mehboob-1963,  Arzoo-1965, சாயிரா  பானுவுடன்  Ayee Milan Ki Bela-1964, ஷர்மிளா தாகூருடன் Talash-1969, வைஜயந்திமாலாவுடன்Sangam-1964, Zindagi-1964, Suraj-1966, Saathi-1968, Ganwar-1970 என அவர்  நடித்தவை யாவுமே வெற்றியைக் குவித்த போதிலும்  அவருக்கு விருதுகள் எதுவும்  கிட்டவில்லை; யாவும்  கை நழுவித் போயின.
 80 களின் பின்  தயாரிப்பில் இறங்கி ஆறு படங்களைத் தயாரித்தார். அவர் தயாரித்து நெறியாள்கை செய்து தானும் நடித்து மகன் Kumar Gaurav[குமார் கவர]வையும் அறிமுக நாயகனாகி வெற்றி பெற்ற படம்.Love Story. 1995 வரை ஹிந்தித் திரையுலகில் நல்ல நடிகனாக மட்டுமின்றி நல்லதொரு மனிதராகவும் பெயரெடுத்த ராஜேந்திர குமாரின் வாழ்நாள் தோழர்களாக சுனில் தத்தும் ராஜ்கபூரும் விளங்கினார்.

பகவான்
Image result for Albela 1951ஹிந்தித் திரையுலகம் நினைவுகூரும்  ஒரு நகைச்சுவைக் கதாநாயகன் பகவான். மௌனப் படக் காலத்திலேயே திரை நடிப்பால் ஈர்க்கப்பட்டு நடிக்க வந்தவர் பகவான். 1938 - 1949  காலப் பகுதியில் சிறிய பட்ஜெட் சண்டைப் படங்கள் பலவற்றை நெறிப்படுத்தியவர்.  1951 இல் இவர் தயாரித்து இயக்கி கீதாபாலியுடன் நடித்த  Albela வின் பெரு வெற்றிக்கு அவரது நண்பர் சி.ராமச்சந்திராவின் இசை பிரதான காரணியானது.
Image result for Albela 1951மீண்டும் கீதாபாலியுடன் அவர்  இணைந்து நடித்த Jhamela-[1953] வெற்றி பெற்ற போதிலும் அதன் பின்னர் ஏற்பட்ட தொடர் தோல்விகள் அவரது விழ்ச்சிக்கு வழிகோலின. எம்.கே.ராதாவும்  இலங்கைக்குயில் தவமணிதேவியும் நடித்த தமிழ்ப் படமான ‘வனமோகினி’யை 1941  இல் நெறிப்படுத்தியவர் பகவான்! அப்படத்துக்கு இசையமைத்தவர் சி.ராமச்சந்திரா. நகைச்சுவை நடிகனாக  50களில் அவர் நடித்தனவற்றுள்Jhanak Jhanak Payal Baje-[1955] யும் Chori Chori-[[1956]  யும்  குறிப்பிடத் தகுந்தன. பிரபலமான அவரது நடன அசைவுகளை நடிகர் சந்த்திரபாபு அழகாகப் பிரதி பண்ணியுள்ளார். பகவானின் வாழ்க்கை வரலாறு Ekk Albela எனும் மராத்தித் திரைப்படமாக   2016 இல் வெளியானது.
Related imageமஹிபால்
சரித்திர, புராண, மாயாஜாலப் படங்களில் நடித்து வெற்றிகரமான வசூல் நாயகனாக 1942-1983       வரை சுமார்  40 ஆண்டு காலம் வலம் வந்தவர் மஹிபால். தமிழில் 'டப்'பாகி வந்த படங்களுள், சர்க்கஸ் சுந்தரி-[1958],  வீர கடோதகஜன் -[1959],ஹனுமான் பாதாள விஜயம்-[1960], அரபு நாட்டு அழகி-[1961] எனும் நான்கும் மஹிபால் நாயகனாக நடித்தவை.அலிபாபாவும் 40  திருடர்களும் -1954 -[ஷகிலாவுடன்], அலாவுதீனும் அற்புத விளக்கும் -1952 [மீனாகுமாரியுடன்],  சாந்தாராமின் Navrang-1959    [சந்தியாவுடன்], சம்பூர்ண ராமாயணம்-1961 [அனிதாகுகாவுடன்],  Zabak-1961[ஷியாமாவுடன்] மற்றும் நிருபாராய், மாலா சின்ஹா எனப் பிரபலமான நாயகியர் பலருடனும் நடித்துப் புகழ் பெற்றவர் மகிபால்.
மற்றும் சிலர்
Image result for old hindi actors photos with namesஹிந்தி நடிகர்களுள் பால் ராஜ் சஹானியையும் மோதிலாலையும்  யாகூப்பையும் ஹிந்தித் திரையுலகின் மிகச் சிறந்த முதன் மூன்று நடிகர்களாக நஸ்ருதீன் ஷா குறிப்பிடுவார்.  நகைச்சுவை நடிகராக வில்லனாக குணசித்திர வேடதாரியாக பல்வேறுபட்ட பாத்திரங்களிலும் [பாலையாவைப் போல]  சிறப்புறச் சோபித்தவர் யாகூப்.  
Image result for mahipal imagesஆரம்பகால சரித்திரப்பட நாயகர்களாகவும் குணசித்திர வேடங்களிலும் பங்களிப்புச் செய்தவர்களான P. ஜெயராஜும் சொஹ்ராப் மோடியும் பாரத அரசின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை [ முறையே 1980 இலும் 1979 இலும்] பெற்ற மிகச் சில நடிகர்களுள் இருவர். நடிகர்களாக மட்டுமன்றி நெறியாளர்களாகவும் அவர்கள் இருந்துள்ளனர்.வில்லன் நடிகர் பிரானும் விருது வென்ற ஒருவர்தான்.  1940-1947 காலப்பகுதியில் கதாநாயகனாகவும் பின்னர் வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும்  350 படங்கள் வரை நடித்த அவர்   சிறந்த துணை நடிகருக்கான   விருதை  [ 1967, 1969, 1972களில்]மும்முறை வென்றுள்ளார்.
Image result for old hindi actors photos with namesImage result for Agha (actor)ஹிந்தித் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களாக மிளிர்ந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். யாகூப்புடன் சேர்ந்து ஆங்கில Laural & Hardy பாணியில் ஜோடியாக நகைச்சுவை வழங்கிய கோபி[Gope-Patanga-1949]  இந்திய Bophope  என சிலாகிக்கப்பட்ட  Aghaஆகா. [இவர்  1935-1986 காலப்பகுதியில் 300 படங்கள் மட்டில் நடித்துள்ளார்] குருதத்தின் கண்டு  பிடிப்பான  JJohnny Walker ஜானி வாக்கர்.[இவரும்  1951-1997 காலப்பகுதியில் Baazy,Pyassa, CID, Chori Chori  உட்பட 300 படங்கள் மட்டில் நடித்தவர்] Madumathi-[1958] Shikar-[1968]படங்களுக்காக  சிறந்த நகைசுவை நடிகர் விருதும் பெற்றவர்.
Image result for old hindi actors photos with names
50 களின் பிற்பகுதியில் நடிக்க ஆரம்பித்து  60-70 களில் பிரபலமான நகைச்சுவை நடிகராகப் பெயர் பெற்றவர் Mehmood மெஹமூத்.  ’சபாஷ் மீனா' Dil Tera Diwana [1962]  ஆக     ஹிந்தியில்  அவதாரம் எடுத்த போது சந்திரபாபு நடித்த இரட்டை வேடத்தில் அசத்தியவர் மெஹமுட்தான். ஒரு நடிகராக மட்டுமன்றி பாடகர் , இயக்குனர், தயாரிப்பாளர் எனப் பல்துறை மேதையாக விளங்கியவர் அவர்.
30-40 களில் ஹோமி வாடியா தயாரித்த சண்டைப் படங்களில் நடிக வீராங்கனை Fearless Nadia வுடன் நாயகனாக நடித்த   Stunt நடிகர் ஜான் கவாஸ். ஒரு மல்யுத்தவீரரான அவர் நடித்த Tarzan   வகையறாப் படங்களும் அவர் பெயரைத் தக்க வைத்துள்ளன.
தமிழில் இருந்து ஜெமினியின் 'சந்திரலேகா' மூலம் ஹிந்தித் திரையுலகில் நுழைந்த ரஞ்சனும் ஒரு சாகசப்பட நாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்தான்.
Image result for karan dewan images 1941-1979 வரை 70 படங்கள் மட்டில் நடித்தவர்Karan Dewan [கரண் தேவன்].  1944 இல் அவரது நடிப்பில் வெளியான Rattan   உட்ப ட 20 படங்கள் வெற்றிகரமாக ஓடி வெள்ளிவிழாக் கொண்டாடின. தமிழ்  வாழ்க்கை' ஹிந்தியில்Bahar   ஆன போது அதில் T.R. ராமச்சந்திரன் ஏற்ற வேடத்தில் நடித்தவர் கரண் தான்.
Image result for Anarkali 1953Image result for Anarkali 1953வங்காளத்தைச் சேர்ந்த பிரதீப்குமார்  Anand Math -1951 மூலம் ஹிந்தியில் அறிமுகமானவர். கலாபூர்வமான படங்களைத் தெரிந்து நடித்த அவர் பீனாராயுடன் சேர்ந்து நடித்த 'அனார்கலி'- 1953 இல் மகத்தான வெற்றி பெற்றது.அதே கதை மீண்டும் 10  வருடங்களின் பின்பும் 1963 இல் Taj Mahal  ஆக அதே பிரதீப்குமார்-பீனாராய் ஜோடியின்  நடிப்பில் வெற்றி கண்டது.ஜெயஸ்ரீயுடன் Subah Ka Tara-1952,வைஜயந்திமாலாவுடன் Nagin-1954,   மதுபாலாவுடன் Raj Hath-1956 என அவர் நடித்த படங்களைத் திரைக் காவியங்கள் எனக்கூறலாம்.. 1951 இல் இருந்து 1978 வரை ஹிந்தித் திரையுலகிலும் அவர் பணி தொடர்ந்தது.
[50 களில் நடிக்க ஆரம்பித்த போதிலும் 60 களுக்குப் பின்னரே நாயக அந்தஸ்த்துப் பெற்ற சஷிகபூர், ராஜ்குமார், மனோஜ்குமார் போன்ற நடிகர்களைப் பற்றியும்    60 களுக்குப் பின் அறிமுகமான நடிகர்களைப் பற்றியும் இக் கட்டுரையில் ஆராயப் படவில்லை.]
                                    Image result for film roll border