வேதாவின்வானவில்
எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்;
முகப்பு நாடகம் சினிமா திரையிசை வானொலி / TV தமிழ் புனைவு கதம்பம்
தம்பட்டம்
' முசுப்பாத்தி ' எனது வலைப்பூ.
ஈழத்து வடபுலம் எனது பிறப்பு.எழுத்தாளனாகத்
தடம் பதித்துக் காலம் பல கடந்து விட்டது.
நகைச்சுவையும் நையாண்டியும் எனது
எழுத்தின் பலங்கள். நக்கீரத்தனம் எனது பல-வீனம்.
இலங்கை வானொலி (வானம்பாடி,தென்றல்)
அறிவிப்பாளனாக, தொகுப்பாளனாக 'காலத்தால்
அழியாத கானங்கள்' தந்து மகிழ்ந்து-மகிழ்வித்து,
வானலைகளில் வலம் வந்த தொரு காலம்.
ஆசிரியப் பணியிலும் வெள்ளிவிழாக் கண்டு
விடை பெற்றாயிற்று.
அனுபவத்தில் முதியவன்;
வலைப்பதிவில் புதியவன்.
எனது அனுபவங்கள், ஆதங்கங்கள், ஆச்சரியங்கள்-
நான் கண்டவை-கேட்டவை-உண்டவை-உணர்ந்தவை-
கற்றவை-பெற்றவை-மற்றவை எனப் பல தரப்பட்ட(சு)வை
களையும் எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளலாமென
விழைகிறேன்.
உங்கள் மேலான கருத்துககள்/ஆலோசனைகள்/எதிர்வினை
களை வரவேற்கிறேன். ஆதரவு தந்தால் தொடருவேன்; தராவிட்டாலும்விட மாட்டேன்.
என்றும் உங்கள் அன்பின்-
வேதா/மறைமுதல்வன்